பசுமை கான்கிரீட் என்றால் என்ன? | What is Green Concrete?
மனித நாகரிகத்தின் பரிணாமத்துடனும் புதிய கண்டுபிடிப்புகள் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, நகரமயமாக்கம், குடித்தொகை பெருக்கம் (New inventions, Industrial Revolution, urbanization, population growth) போன்ற பல்வேறு வகையான காரணிகளினால் புவியின் மீதும் அதன் இயற்கை அம்சங்களின் மீதும் மனிதன் பாரிய தாக்கத்தினை செலுத்த தொடங்கினான்.
புவியின் இயற்கை அம்சங்களின் மீது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட பாதக விளைவுகளிலிருந்து, புவியினை பாதுகாத்துக் கொள்ளவும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு வளமிகு புவியினை ஒப்படைப்பதற்கும் (To protect the Earth and hand over a fertile planet to future generations) பல்வேறு வகையான மாற்றீடுகள் சூழலியல்வாதிகளினால் முன் வைக்கப்பட்டு வந்தன.
அதில் உலகின் அனைத்து நாடுகளினாலும் மிகவும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சித்தாந்தமாக நிலைப்பேன் அபிவிருத்தி (Sustainable Development) காணப்படுகின்றது.
நிலைப்பேன் அபிவிருத்தி (Sustainable Development), புவியில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் (Development Projects On Earth) போது இயற்கை சூழலுக்கு பாதகமான சேதங்கள் விளைவிக்காமலும்,இயற்கை வளங்களை மிகுதியாக சுரண்டுவதை தடுப்பதுடன் இவற்றுக்கு மாறாக இயற்கைக்கு மிகவும் பொருத்தமான,சிநேகபூர்வமான மற்றும் நட்புமிகு அபிவிருத்திணையும் கண்டுபிடிப்புகளையும் (Development and innovation that is most suitable for nature friendly) இது ஊக்குவிக்கிறது.
கைத்தொழில் மயமாக்கத்தின்(Industrialization Revolution) பின்னர் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளும் அபிவிருத்தியும்(Innovations and Development) அதிகளவு புவியினை மாசுபடுத்தி வருகின்றது.
- வெப்பமயமாக்கம்(Global warming),
- நகரவெப்பத்தீவுகளின் உருவாக்கம்(Urban heat islands),
- காலநிலை மாற்றம்(Climate change),
- கார்பன் வெளியேற்றம்(Carbon Emissions),
- காபன் தடம்(Carbon Footprint) மற்றும்
- காபன் உமிழ்வு(Carbon Emissions) போன்ற பல்வேறு புவிமாசாக்க செயற்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
இத்தகைய விளைவுகளுக்கு துணைச் செய்யும் காரணிகளில் ஒன்றாக அதிகரித்த கொங்ரீட் உற்பத்தியும் அதன் பயன்பாடும் (Increased concrete production and its use) காணப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் அதிகளவான சூழல் மாசுபாட்டுக்கு (For Environmental Pollution) இது ஒரு பிரதான ஏதுவாக அமைகின்றது.
ஆகவே இத்தகைய சூழல் மாசக்கத்திலிருந்து மனித குலத்தையும் புவியினையும் காக்கும் பொருட்டு நிலைப்பேன் தன்மையிலான பசுமை கொங்ரீட் அல்லது கிரீன் கொங்ரீட்(Green Concrete) என்ற புதிய தொழில்நுட்பம் உருவாக்கம் பெற்றுள்ளது.
அந்த வகையில் இப்பதிவில் பசுமை கொங்ரீட் அல்லது கிரீன் கொங்ரீட்(Green Concrete) என்றால் என்ன அதன் உருவாக்கம் அதன் முக்கியத்துவம் என்பன ஆராயப்படவுள்ளது.
பசுமை கொங்ரீட்டின் உருவாக்கம்-What is the process of making green concrete?
நாம் இயல்பாக உபயோகிக்கும் சீமந்து பொருட்களிலிருந்து அதிகளவான சூழல் மாசுக்கள் வெளியிடப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின் உருவாக்கம் பெற்றதே இந்த பசுமை கான்கிரீட் அல்லது சூழல் நேய கான்கிரீட் ஆகும்.
இது முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டினை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டபிள்யு ஜி (Dr. WG from Denmark) என்பவரின் ஆராய்ச்சியின் பலனாக பசுமை கான்கிரீட்(Green Concrete) உலகிற்கு அறிமுகமாகியது.
1998 ஆம் ஆண்டு முதல் முதலாக இது உபயோகத்துக்கு வந்தது.இது சாதாரண சீமெந்து கான்க்ரீட்டினை பார்க்கிலும் மிகக் குறைந்த அளவிலான காபன் உமிழ்(Carbon Emissions) வினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவை மீள் உற்பத்தி பொருட்களை(Recycled materials) பயன்படுத்தி உருவாக்கப்படுவதனால் சூழலுக்கு நேசமானதாகவும் அதிகளவான கழிவு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதாகவும்(control excessive waste) அமைந்துள்ளது.
இன்று கட்டுமான உலகில்(world of construction) பசுமை கொங்ரீட் ஒரு புரட்சிகரமான உற்பத்தியாக மாற்றமடைந்து வருகிறது. இங்கு கட்டிடக்கலை, பொறியியல் ,கட்டுமானம் (Architecture, engineering, and construction (AEC)) போன்ற பல்வேறு திட்டங்களுக்கு பாரம்பரிய மூலப் பொருளுக்கு மாற்றாக(alternative to a traditional material staple) இவ் பசுமை காங்கிரீட்(Green Concrete) அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் அபிவிருத்தி திட்டங்களில் சூழல் நலன் பேணுகையையும், சூழல் நேச செயற்பாடுகளையும்(Eco- Friendly conscious),நிலைப்பேன் அபிவிருத்தி இலக்குகளை(sustainability goals) அடைந்து கொள்வதனையும் மற்றும் நவீன சுற்றுச்சூழல் வடிவமைப்பை மேம்படுத்தவும் கிரீன் காங்கிரீட் அறிமுகமாகியது.
பசுமை கொங்ரீட் பொருட்கள்- Composition Green concrete?
பெயருக்கு ஏற்றால் போல் பசுமை காங்கிரீட்(Green Concrete) பாரம்பரிய மூலப் பொருட்களை குறைத்து அல்லது தவிர்த்து சூழல் நேயப் பொருட்களையும், கழிவு பொருட்களையும்(Eco-friendly Materials and Waste Materials) அதிகமாக உபயோகித்து தயாரிக்கப்படுகின்றது.
குறிப்பாக இங்கு கார்பன் உமிழ்வு(Carbon Emissions) பொருட்களை மிக குறைவாக உபயோகித்து நாம் இயலவே பயன்படுத்திய சீமந்து,கான்கிரீட்,உடைந்த கண்ணாடிகள்,சாம்பல் துகள்கள் மற்றும் கழிவுநீர் போன்றுவற்றை மீள்சுழற்சிக்குட்படுத்தி(Recycle) இந்த கலவை தயாரிக்கப்படுகிறது.
![]() |
| Composition Green concrete |
Fly Ash: சாம்பல் கழிவுகள் குறிப்பாக மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி எரிப்பின் மூலமாக உருவாக்கப்படும் சாம்பல் கலவைகள் பசுமை கொங்ரீட்டின் ஒரு பகுதியாக உபயோகிக்கப்படுகின்றது.
Slag: இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் இருந்து பெறப்பட்ட கசடு பொருட்கள் பசுமை காங்கிரெட்டில் சீமென்டுக்கு வலிமையையும் கழிவு குறைப்பினையும் வழங்குகின்றது.
Recycled Aggregates: மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் குறிப்பாக இங்கு கான்கிரீட் கழிவுகள் மற்றும் ஏனைய குடியிருப்பு கட்டுமானங்களில் இருந்து பெறப்பட்ட கழிவுப்பொருட்கள் என்பனவற்றினை கொண்டு பசுமை காங்கிரீட் உருவாக்குவதற்கு பயன்படுகிறது .
குறிப்பாக இங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் சுற்றுச்சூழலில் இருந்து பெறப்படும் கழிவுகளை அதிகமாக கொண்டுள்ளன, குறைந்தளவிளான CO2 வெளியீட்டினையும் மிகவும் குறைவளவான சூழல் மாசுபாட்டையும் குறைக்கும் தன்மையினையும் இவ்வுற்பத்தி பொருட்கள் கொண்டுள்ளன.
பசுமை கொங்ரீட்டின் நன்மைகள்: Advantages of Green Concrete
சுற்றுச்சூழலுக்கு உகந்தது (Eco-friendly): பசுமை கான்கிரீட் குறைந்தளவான கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகின்றது(Emits less carbon dioxide) மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப் பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறது, இவற்றின் காரணமாக சூழல் மாசடைவு வெகுவாக குறைவடைகின்றது அத்துடன் இது சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்த்கவும் உள்ளது.
![]() |
| Eco-friendly-Advantages of Green Concrete |
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள்(Recycled Materials:): சாம்பல் மற்றும் கசடு உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் இங்கு பயன் படுத்தப்படுகின்றன. இத்தகைய கழிவு பொட்கள் புவிச் சூழலின் நிலப்பரப்புகளில் பரம்பியுள்ள கழிவுகளை குறைவடையச்செய்து கழிவு வெளியேற்றத்தனை தடுக்கின்றது.
ஆற்றல் சேமிப்பு(Energy Saving): வழக்கமான கான்கிரீட்டை உருவாக்குவதை விட பச்சை கான்கிரீட்டை உற்பத்தி செய்ய குறைந்த ஆற்றல் தேவைப்படுகிறது.இதன் மூலமாக புவியின் வளம் பாதுகாக்கப்படுவதுடன் ஆற்றல் சேமிப்புக்கும் துணையாகின்றது.
செயல்திறன்(Performance): இது சாதாரண கான்கிரீட்டைப் போலவே அதிக வலிமை மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது.
காபன் உமிழ்வு(Emits less carbon dioxide):
பசுமை கொங்ரீட் குறைபாடுகள்: Disadvantages of Green Concrete
செலவு அதிகம்(Expense): பசுமை கான்கிரீட் விலை அதிகமாக இருக்கும், ஏனெனில் அதற்கு சிறப்பு பொருட்கள் தேவைப்படலாம்.
பசுமை கான்கிரீட் உற்பத்தி செய்வதற்கு அதிகளவான புதிய உபகரணங்களும் தொழிலாளர் வளமும் தேவைப்படுவதனால் அதன் உற்பத்தி செலவீனங்கள் அதிகமாக உள்ளன. மேலும் அவற்றினை உற்பத்தி செய்வதற்கான ஆய்வுக்கூடங்கள் தொழிற்சாலைகளும் அதனை அமைப்பதற்கான செலவினங்களும் அதிகமாக உள்ளன.
மேலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் இது கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளமையினால் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மாத்திரமே இதன் உற்பத்தின் நடவடிக்கைகளும்,விநியோக முறைமைகளும் காணப்படுகின்றன.இத்தகைய காரணங்களினால் அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் குறைவிருத்தி நாடுகளின் இதன் உபயோகம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.
பொருள் கிடைக்கும் தன்மை குறைவாக உள்ளது(Material Availability is Limited): உலகின் அனைத்து பகுதிகளிலும் பசுமை கான்கிரீட்டிற்குத் தேவையான பொருட்களின் புவியியல் பற்றாக்குறை சில பகுதிகளில் பசுமை கான்கிரீட்டை அணுகுவதை கடினமாக்குகிறது.
பசுமை காங்ரீட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் கிடைப்பனவு மிகவும் குறைவாக உள்ளமை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.
போதுமான அறிவு இல்லை(Lack of Awareness): பசுமை கான்கிரீட் மிகவும் புதியது என்பதால், அனைத்து கட்டுமான நிறுவனங்களும் அதை திறம்பட பயன்படுத்துவதற்கான மிகவும் உகந்த வழிகளைப் பற்றி இன்னும் மக்கள் அறிந்திருக்கவில்லை.
பசுமை கான்கிரீட் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.இன்றும் உலகளாவிய ரீதியில் பழமையான காங்ரீட் சீமெந்து பாவணையே உள்ளது.
பசுமை கான்கிரீட் தொடர்பான விழிப்புணர்வும் அதன் நன்மைகளும் மக்கள் மத்தியில் இன்னும் பிரபல்யம் அடையவில்லை அது தொடர்பான அறிவும் விழிப்புணர்வும் மிகவும் மந்தகதியிலேயே உள்ளமை ஒரு பாரிய குறைப்பாடாக உள்ளது.
முடிவுரை-Conclusion
உலகளாவிய கட்டுமான தொழில்துறையில் புரட்சிகரமான மாற்றத்தினையும் அதே சந்தர்ப்பத்தில் நிலைப்பேண் அபிவிருத்தியினை தூண்டக்கூடிய ஒரு விடயமாக பசுமை கான்கிரீட் அவதானிக்கப்படுகின்றது.
மிகக் குறைந்தளவான காபன் வெளியேற்றத்தையும் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படுவதனால் இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக காணப்படுகின்றது.
அந்த வகையில் அபிவிருத்தியினையும் சூழல் பாதுகாப்பினையும் உறுதி செய்யும் அமைப்பில் இது ஒரு முன்னேற்றகரமான கண்டுபிடிப்பாக அவதானிக்கப்படுகின்றது.
மறுபுறம் இதன் விலை மற்றும் இதற்கான மூலப் பொருள்கொள்வனவு என்பன எமக்கு மிகவும் குறைவாகவே கிடைப்பதினால் இதனுடைய பாவனையை உலகளாவிய ரீதியில் பரவலடைய செய்ய தாமதமாகின்றது, எனினும் எதிர்காலத்தில் இதன் பாவனை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் ஊடுருவும் என்பதில் ஐயமில்லை.




கருத்துரையிடுக