இயற்கை அனர்த்தங்கள் | Major Natural Disasters and Their Impacts

உலகின் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் | Major Natural Disasters and Their Impacts on Earth

புவியின்  உருவாக்க  காலத்திலிருந்து  இன்று  வரை  உலகின்  ஒவ்வொரு  நொடிக்கும்  இயற்கை  அனர்த்தங்களும்(natural  disaster)  அதனால்  உருவாகும்  விளைவுகளையும்(impacts)  நாம்  அன்றாடம்  அவதானித்துக்  கொண்டே  இருக்கின்றோம்.


குறிப்பாக  புவியியல்  அறிஞர்கள்  நாம்  வாழும்  இவ்வுலகமும்  இயற்கை  அனர்தத்தின்  விளைவாகவே  தோற்றம்  பெற்றது  என்கின்றனர். பெரு  வெடிப்புக்  கொள்கை(Big  bang  theory)  மூலமாக  பால்வெளியில்  சுமார்  20  பில்லியன்  ஆண்டுகளுக்கு  முன்  வெடித்து  சிதறிய  துகள்களின்  மூலமாகவே  சூரிய  குடும்பமும்  அதன்  கோள்களும்  (Solar  system  and  planets)  உருவாக்கம்  அடைந்தன  என்கின்றனர்.இதன்  அடிப்படையில்  இயற்கை  அனர்த்தங்கள்  எத்தகைய  விளைவுகளை  ஏற்படுத்தும்  என்பதனை  இலகுவாக  அறிந்துக்  கொள்ள  முடியும்.

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் (Scientific  developments)  இன்று  நாம் வாழ்ந்துக்கொண்டிருந்தாலும் இயற்கை அனர்தத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதும் அதற்கு முகங்கொடுப்பதும் பாரிய சவாலாகவே  உள்ளது.   

அந்த  வகையில் இன்று இயற்கை அனர்த்தங்கள் என்றால் என்ன,அதன் பண்புகள் என்ன,அவை தோற்றம் பெறுவதற்கான காரணங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதனை நாம் ஆராய உள்ளோம்.


இயற்கை இடர்கள் என்றால் என்ன?  What is a Natural Hazard?

இயற்கை  இடர்கள்  (Natural Hazard) என்னும் போது மனித  தலையீடுகள் எதுவுமின்றி (Without any human interventions) இயற்கை சக்திகள் மூலமாக (Natural)  தோற்றம் பெறும் செயற்பாடுகளை இயற்கை இடர்கள் என்கின்றோம்.

புவியின் இயற்கை சக்திகளால் (Natural Forces) ஏற்படுத்தப்படும் அழிவுகள் அல்லது பாதிப்புகள் இவையாகும்.


Natural Hazard,What is a Natural Hazard?,natural hazards according to their origin,இயற்கை அனர்த்தங்கள்-The biggest 10 natural disasters

Natural Hazard


மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை இடர்கள் மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும், சொத்துகளுக்கும், சூழலுக்கும் (Natural hazards are natural events that threaten lives, property and other assets)சேதங்களை ஏற்படுத்தும் பல்வேறு வகையான இயற்கை வெளிப்பாடுகளின் ஒன்றிணைந்த  செயற்பாடாக அமைந்துள்ளன.

 எனினும் இன்றைய  காலகட்டத்தில் இயற்கை சக்திகள் மாத்திரமின்றி மனித  நடத்தைகளின்  விளைவாகவும்(Due to human  interventions  and  as  a result   of  human  behaviors)   இயற்கை இடர்கள்  தோற்றுவிக்கப்படுகின்றன என்பதும் காணக்கூடியதாகவுள்ளது.


இயற்கை அனர்த்தம் என்றால் என்ன?  What is a Natural Disasters?

இயற்கை அனர்த்தம் (Natural disaster) என்னும் போது இயற்கை  தோற்றப்பாடுகளினால் உருவாக்கம் பெறுகின்ற நிகழ்வுகளின் விளைவாக மானிட சூழல் மற்றும் உயிரியல் சூழல் என்பனவற்றுடன் சொத்துக்கள் உடைமைகள் என்பனவற்றிற்கு எதிர்பாராத மற்றும் அதிகளவான பேரழிவை ஏற்படுத்தும் போது அது அனர்த்தம் எனப்படுகின்றது(an event that is caused by the natural forces of the Earth where great damage and, sometimes, loss of life occurs).

இயற்கை இடர்கள் இடம் பெற்று அவை அளவில் பெரியதாகவும் மக்களால் எதிர்கொள்ள முடியாததாகவும் மாற்றம் பெற்று உயிரினங்களுக்கும் உடைமைகளுக்கும் அசௌகரியம் ஏற்பட்டு அதன் மூலமாக அழிவுகள் மற்றும் இழப்புக்கள் ஏற்படும் நிலை அனர்த்தம் (Natural Disasters) எனப்படும்.

இயற்கை அனர்த்தின் போது மனிதர்கள், விலங்குகள், நிலம், கட்டிடங்கள் மற்றும் பொருளாதார அம்சங்கள் போன்றவை கடுமையாக சேதமடைகின்றன.

இவை சமூக,பொருளாதார,உயிரியல் மற்றும் மானிட உயிர் வாழ்க்கைக்கும்(Socio economic, biology and human life) அதன் நிலைப்பேன் தன்மைக்கும் பாரிய சவாலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை சடுதியாகவோ அல்லது மெதுவாகவோ(Fast or slow) ஏற்படக்கூடியனவாகும், மேலும்  இவை புவியின் உட்பகுதியில் ,வளிமண்டல பகுதிகளில்  மற்றும் சமுத்திர பரப்பிலிருந்தோ தோற்றுவிக்கப்படலாம். (Earth's interior or in atmospheric regions and ocean surfaces.).


உலகின் இயற்கை அனர்த்தங்கள் - Natural hazards in the world

உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான இயற்கை அனர்த்தங்கள் தோற்றம் பெற்று ஆபத்துக்களை விளைவிக்கின்றன, அத்தகைய இயற்கை அனர்த்தங்களை உலகின் தேசிய ஆபத்துக் குறிகாட்டி (National Risk Index of FEMA) 18 பிரதான வகையினதாக பாகுபடுத்தியுள்ளது. அத்தகைய பிரதான இயற்கை அனர்த்தங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

  1. பனிச்சரிவு | Avalanche
  2. கடலோர வெள்ளம் Coastal flooding
  3. குளிர் அலை Cold wave
  4. வறட்சி Drought
  5. பூகம்பம் Earthquake
  6. ஆலங்கட்டி மழை Hail
  7. வெப்ப அலை  Heat wave)
  8. வெப்பமண்டல சூறாவளி Tropical cyclone
  9. பனிப்புயல் Ice storm
  10. நிலச்சரிவு Landslide
  11. மின்னல் Lightning
  12. ஆற்றங்கரை வெள்ளம் Riverine flooding
  13. வலுவான காற்று Strong wind
  14. சூறாவளிTornado
  15. சுனாமி Tsunami)
  16. எரிமலை செயல்பாடு Volcanic activity
  17. காட்டுத்தீ Wildfire
  18. குளிர்கால வானிலை Winter weather
Natural hazards in the world-உலகின் இயற்கை அனர்த்தங்கள்,பனிச்சரிவு | Avalanche கடலோர வெள்ளம் | Coastal flooding குளிர் அலை | Cold wave வறட்சி | Drought பூகம்பம் | Earthquake ஆலங்கட்டி மழை | Hail வெப்ப அலை |  Heat wave) வெப்பமண்டல சூறாவளி | Tropical cyclone பனிப்புயல் | Ice storm நிலச்சரிவு | Landslide மின்னல் | Lightning ஆற்றங்கரை வெள்ளம் | Riverine flooding வலுவான காற்று | Strong wind சூறாவளி| Tornado சுனாமி | Tsunami) எரிமலை செயல்பாடு | Volcanic activity காட்டுத்தீ | Wildfire குளிர்கால வானிலை | Winter weather
Natural hazards in the world-உலகின் இயற்கை அனர்த்தங்கள்

இங்கு நாம் அடையாளப்படுத்திய 18 இயற்கை இடர்களும் புவியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு நொடியிலும் இயங்கிக் கொண்டிருப்பவையாகவும், மனித மற்றும் இயற்கை சூழலுக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடியனவாகவும் உள்ளன.


தோற்ற அடிப்படையில் இயற்கை அனர்த்தங்களின் வகைப்பாடு - Major Classification of natural hazards according to their origin

இயற்கை அனர்த்தங்கள் உலகில் பல வழிகளில் தோற்றம் பெறுகின்றன அத்தகையவற்றினை பின்வரும் பிரதான வகைப்பாட்டுக்குள் புவியியலாளர்கள் உள்ளடக்குகின்றனர்.


natural hazards according to their origin,பனிச்சரிவு | Avalanche கடலோர வெள்ளம் | Coastal flooding குளிர் அலை | Cold wave வறட்சி | Drought பூகம்பம் | Earthquake ஆலங்கட்டி மழை | Hail வெப்ப அலை |  Heat wave) வெப்பமண்டல சூறாவளி | Tropical cyclone பனிப்புயல் | Ice storm நிலச்சரிவு | Landslide மின்னல் | Lightning ஆற்றங்கரை வெள்ளம் | Riverine flooding வலுவான காற்று | Strong wind சூறாவளி| Tornado சுனாமி | Tsunami) எரிமலை செயல்பாடு | Volcanic activity காட்டுத்தீ | Wildfire குளிர்கால வானிலை | Winter weather,இயற்கை அனர்த்தங்களின்
Natural hazards according to their origin


  1. காலநிலையியல் அனர்த்தம்-Meteorological disasters
  2. வளிமண்டலவியல் அனர்த்தம் -Atmospheric disaster
  3. உயிரியல் அனர்த்தம்-Biological disaster
  4. நீரியல் அனர்த்தம் -Hydrological disasters
  5. புவிவெளிக்காரணி அனர்த்தங்கள் -Earth disasters
  6. புவிப்பௌதிகவியல் அனர்த்தம்- Geophysical disaster

அனர்த்தங்கள் தோன்றுவதற்கான  காரணிகள்- Causes of Disasters

இயற்கை காரணிகள்-Natural factors

  • காலநிலை மாற்றம்-Climate change
  • சடுதியான மற்றும் திடீர் காலநிலை மாற்றங்கள்-Sudden and abrupt climate changes
  • நிலநடுக்கங்கள்-Earthquakes
  • எரிமலை கக்குகை-Volcanic eruption  
  • பூகோள வெப்ப நிலை அதிகரிப்பு-Global warming
  • சூறாவளி டொனேடோஸ் -Hurricane Donados
  • வெள்ளம்-Flood
  • நிலச்சரிவு -Landslide
  • இடி மின்னல் தாக்கம் -Thunder and lightning
  • வறட்சி- Drought

மானிட காரணிகள்-Human factors

  • அதிகரித்த நகராக்கம் -Increased urbanization
  • அகழ்வு மற்றும் சுரங்க கைத்தொழில்கள்-Quarrying and mining industries
  • தனிமனித காபன்சுவட்டு  வெளியீடு-Carbon footprint
  • நிலைப்பேண் தன்மையற்ற அபிவிருத்தி திட்டங்கள்-unsustainable development
  • பொருத்தமற்ற விவசாய பயன்பாடு-Inappropriate agricultural practices
  • திட்டமடப்பாத வீடமைப்பு திட்டங்கள் -Unplanned housing projects
  • தீவிர காடழிப்பு -Extreme deforestation
  • பொருத்மற்ற உட் கட்டுமான அபிவிருத்திகள்-Improper construction developments
  • பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றும்-Emission of greenhouse gases
  • தனிமனித காபன்சுவட்டு  வெளியீடு-Carbon footprint
  • நிலைப்பேண் தன்மையற்ற அபிவிருத்தி திட்டங்கள்-unsustainable development

மேற் போன்ற மானிட மற்றும் இயற்கை காரணிகளின் விளைவாக உலகில் அனர்த்தங்கள் தோற்றம் பெறுவதற்கும் மேலும் அவை தீவிரமாக்கப்படுகின்ற நிலைக்கும் காரணமாகின்றன.


உலகில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தங்கள்-The biggest 10 natural disasters

எமது புவி தோன்றிய காலம் முதல் இன்று வரை பல்வேறு வகையான இயற்கை அனர்த்தங்களுக்கு நாம் முகம் கொடுத்து வந்துள்ளோம்.அத்தகைய அனர்த்தங்களின் தீவிரத்தினையும் அதன் அளவினையும் அது ஏற்படுத்திய உயிரிழப்புக்களின் அடிப்படையில் வகைப்படுத்தி நோக்குகின்றனர்.

அதனடிப்படையில் உலகில் அதிகளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்திய முதல் 10 இயற்கை அனர்த்தங்களாக பின்வருவனவற்றினை அடையாளப்படுத்த முடியும்.


What is a Natural Hazard?,natural hazards according to their origin,இயற்கை அனர்த்தங்கள்-The biggest 10 natural disasters
The Biggest 10 Natural Disasters

இயற்கை அனர்தத்தினால் ஏற்படும் விளைவுகள்-Effects of natural disasters

  • உயிரிழப்புக்கள் ஏற்படுதல்- Loss of life
  • உடல் அங்கவீனம் ஆகுதல்- Disability
  • மானிட மற்றும் ஏனைய உயிரினங்களின் வாழிடங்கள் அழிக்கப்படல்-Destruction of human and other habitats.
  • சொத்துக்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுதல்-property damage
  • பயிர்கள் அழிவடைதல் -Destruction of crops
  • விவசாய நிலங்கள் அழிவடைதல்- Destruction of agricultural land
  • உட்கட்டுமான அமைப்புகள் மற்றும் குடியிருப்புகள் என்பன சேதமடைதல்- Damage to infrastructure and residences
  • மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பாதிப்படைதல் (குடிநீர்,மின்சாரம்  மருத்துவம் ,போக்குவரத்து)-Affecting basic needs of people (drinking water, electricity, medical, transport)
  • மக்களின் இடப்பெயர்வு மற்றும் அதனால் ஏற்படும் இடையூறுகள்- Migration of people
  • தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதார மையங்கள் பாதிப்படைதல்- Damage to factories and economic centers
  • அனர்த்தத்தின் காரணமாக நோய் தொற்று பரவல் ஏற்படுதல்- Spread of disease
  • பசி,பட்டினி மற்றும் வறுமை நிலை தோற்றுவிக்கப்படல்-Hunger, starvation and poverty
  • மன அழுத்தம் ஏற்படுததல்- Depression
  • பொருளாதார நெருக்கடிகள் தோற்றுவிக்கப்படல்- economic crises

  • சட்ட விரோத செயற்பாடுகள்(திருட்டு,கொலை)-Illegal activities (theft, murder)

முடிவுரை- Conclusion

மேற்போன்ற தன்மையில் உலகின் இயற்கை அனர்த்தங்களும் அவற்றின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. இவை ஒவ்வொரு நொடிக்கும் உலகின் எங்கோ ஓர் பாகத்தில் தன்னுடைய செயற்பாட்டினை நடாத்திக் கொண்டே தான் இருக்கின்றன.

மேலும் அத்தகைய செயற்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்த கூடியவனாக உள்ளபோது அவற்றிலிருந்து எம்மையும் எமது சூழலையும் பாதுகாத்துக் கொள்வது காலத்தின் தேவைப்படாக உள்ளது.

அதற்காக பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை உலக அரசுகளும் சர்வதேச அமைப்புக்களும் மேற்கொண்டு வருவதனை நாம் காணக்கூடியதாக உள்ளது.அவ்வாறான விடயங்களை எதிர்வரும் பதிவுகளில் அவதானிப்போம்.

Post a Comment

புதியது பழையவை