01.ஹியோகோ செயல் திட்டம் அல்லது ஹியோகோ ஃபிரேம்வொர்க் என்றால் என்ன? What is the hyogo framework?
ஹியோகோ செயல் திட்டம் ஐ.நா. பொதுச் சபையால் தாபிக்கப்பட்ட இடர் மேலாண்மை திட்ட முன்மொழிவாகும்.
ஹியோகோ ஃபிரேம்வொர்க் (The Hyogo Framework for Action) (HFA) என்பது 2005-2015 க்கு இடையில் உலகலாவிய ரீதியில் இடம் பெறும் பேரழிவு அபாயத்தைக் குறைக்கும் முயற்சிகளுக்கான உலகளாவிய திட்ட முன்மொழிவாகும்.
02.ஹியோகோ செயல் திட்டம் எவ்வாண்டு எங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டது? When was Hyogo framework adopted?
ஹியோகோ செயல் திட்டம் (HFA ) 2005 ஜனவரி 18 முதல் 22 வரை ஜப்பானின் கோபி, ஹியோகோவில்(Kobe, Hyogo,Japan) நடைபெற்ற பேரிடர் குறைப்புக்கான உலக மாநாட்டில், ஏற்றுக்கொள்ளப்பட்டது.
03. ஹியோகோ செயல் திட்டத்தினை எத்தனை நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன? How many countries adopted the Hyogo framework?
ஐக்கிய நாடுகள் சபையின் 168 உறுப்பு நாடுகளால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
04.ஹியோகோ செயல் திட்டத்தின் பிரதான நோக்கங்கள் எவை? What is the Main purpose of the Hyogo Conference?
05.ஹியோகோ கட்டமைப்பின் பிரதான 5 முன்னொழிவுகள் எவை? What are the 5 priorities for action presented in the Hyogo framework of action?
01.பேரிடர் அபாயக் குறைப்பு (DRR) - தேசிய மற்றும் உள்ளூர் ரீதியில் பேரிடர் ஆபாயக் குறைப்பு செயற்படுவதனை உறுதிசெய்து, செயல்படுத்துவதற்கான வலுவான அமைப்பினை ஏற்படுத்துதல்-Make disaster risk reduction (DRR) a priority.
02.பேரிடர் அபாயங்களைக் கண்டறிந்து அவற்றினை மதிப்பீடு செய்து, கண்காணித்து, முன்னெச்சரிக்கையை மேம்படுத்துதல்.-risks and take action.
03.அறிவு, புதுமை மற்றும் கல்வியைப் பயன்படுத்தி ஆபாத்தினை குறைபப்தற்கான முறைமையினை உருவாக்குதல்.-Build understanding and awareness.
04.பேரழிவு ஆபத்திற்கான அடிப்படை காரணிகளின் செயற்பாட்டினை குறைத்தல்.-Reduce risk.
05.அனைத்து மட்டங்களிலும் முறையான மற்றும் வலுவான பேரிடர் தயார் நிலையை கட்டமைத்தல்.-Be prepared and ready to act.
06. இப் ஃபிரேம்வொர்க் இன் முக்கியத்துவம் என்ன? What is the significance of Hyogo framework?
இயற்கை பேரழிவுகளில் இருந்து நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் இழப்புகளைக் குறைப்பதற்காக ஹியோகோ ஃபிரேம்வொர்க் HFA உருவாக்கப்பட்டது (UNISDR, 2005). இது பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான முதலாவது சர்வதேச திட்டம் என்ற தன்மையில் முக்கியத்துவமாகின்றது.
07. ஹியோகோ ஃபிரேம்வொர்க் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் ஹியோகோ கட்டமைபினை செயல்படுத்துவதற்கான பங்குபற்றுனர்கள்?
- உறுப்பு நாடுகள்(Member States)
- மாநிலங்கள்(States)
- பிராந்திய அமைப்புகள்(Regional organizations)
- உள்ளுர் நிறுவனங்கள்(Local organizations)
- சர்வதேச நிறுவனங்கள்(International Organizations)
- தனியார் துறை(Private Sector)
- தன்னார்வலர்கள் (Volunteers)
- சிவில் சமூகம்(Civil society)
- சமூக அமைப்புகள்(Community-based organizations)
- ஊடகங்கள் (Media)
08.பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான பிரதான 4 தூண்கள் யாவை?What are the 4 pillars of disaster risk reduction?
- தணிப்பு(Mitigation)
- தயார்நிலை(Preparedness.)
- துலங்கல்(Response)
- மீட்பு(Recovery)
09. ஹியோகோ ஃபிரேம்வொர்க் எவ்வாறு நாடுகளில் செயற்படுத்தப்படுகின்றது?
- 121 நாடுகள் பேரிடர் அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
- பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய வரவுசெலவுத்திட்டம் உருவாக்கப்பட்டமை.
- நாடுகளில் சிறந்த முன்னறிவிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளமை.
- காலநிலை மாற்றத்தின் நிச்சயமற்ற தன்மையைச் சமாளிக்க விவசாயிகளுக்கு உதவுகிறமை.
- குழந்தைகள் முதல் முதியவர் வரை மில்லியன் கணக்கான மக்கள் பேரழிவு அபாய கல்வியினை கற்றுள்ளனர்.
- பேரழிவுகளுக்கு எதிராக மிகவும் நெகிழ்ச்சியுடன் இருக்க உலகை ஊக்கப்படுத்தியுள்ளது.
10.ஹியோகோ கட்டமைப்பு வெற்றிகரமானதா? Was the Hyogo framework successful?
- இடர் மேலாண்மை முகாமைத்துவத்தில் முதலாவது உடன்படிக்கை என்ற தன்மையில் இதன் செயற்பாடுகள் முக்கியத்துவமானதே.
- உலகளவில் பேரிடர் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் பின்னடைவை ஊக்குவிப்பதில் HFA வெற்றிகரமாக உள்ளது,
- பல நாடுகள் தேசிய மற்றும் உள்ளூர் DRR திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் இக்கட்டமைப்பின் முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கேற்ப பின்பற்றுகின்றன.
11.ஹியோகோ செயற்றிட்டம் முகங்கொடுத்த சவால்கள் எவை ? Challenges faced by Hyogo framework?
- பேரழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான திட்ட முன்மொழிவு அனைத்து நாடுகளிலும் முறையாக பின்பற்றாமை.
- அனர்த்தங்களை குறைப்பதற்கு பதிலாக புதிய வகையான அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கம் பெற்றமை.
- ஏட்டளவில் மாத்திரமே இத்திட்டத்தின் எடுகோள்கள் சக்தி மிக்கதாக இருந்தது தவிர நடைமுறை சாத்தியப்பாடுகள் குறைவாக இருந்தமை.
12. ஹியோகோ ஃபிரேம்வொர்க் பின் பேரழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக முன்வைக்கப்பட்ட உடன்படிக்கை என்ன?
செண்டாய் உடன்படிக்கை(Sendai Framework)


.webp)
கருத்துரையிடுக