01. ரெட் டேட்டா புக் அல்லது சிவப்பு தரவு புத்தகம் என்றால் என்ன? What is Red Data Book?
உலகளாவிய ரீதியில் ஒரு நாட்டின் எல்லைக்குள்ளோ அல்லது ஒரு பிரதேசத்திலோ மிக வேகமாக அழிவுக்கு முகம் கொடுத்து வரும் மற்றும் விரைவாக அருகி வரும் உயிரினங்கள்,தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளை (Rare and endangered species of animals, plants and fungi) ஆவணப்படுத்தும் ஒரு தரவு புத்தகமே ரெட் டேட்டா புக் அல்லது சிவப்பு தரவு புத்தகம் - (Red Data Book) ஆகும்.
02.செந்தரவு புத்தகத்தினை (ரெட் டேட்டா புக்- Red Data Book) பதிப்பிட்டு வெளியிடும் நிறுவனம் எது? Who launched the Red Data Book?
செந்தரவு அல்லது சிவப்பு தரவு புத்தகத்தனை, 1964 முதல் இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச ஒன்றிய - International Union For The Conservation Of Nature And Natural Resources
(IUCN) அமைப்பு
வெளியிடுகின்றது.
03.அழிவுக்குள்ளாக இனங்களை வகைப்படுத்தி தரவுகளை வெளியிட சிவப்பு தரவு பட்டியலில் பயன்படுத்தப்படும் மைய தரவுத்தளம் எது?
Species Information Service (SIS) is the central database SIS)
04.இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச ஒன்றியத்தின்(IUCN) தலைமையகம் எங்குள்ளது? Where is IUCN headquarters?
சுவிட்சர்லாந்து,கிலாண்ட்(Gland, Switzerland) என்னும் இடத்தில் உள்ளது
![]() |
IUCN headquarters-Gland, Switzerland |
05.சிவப்பு தரவு புத்தகத்தின் பிரதான உள்ளடக்கங்கள் எவை? What are the main contents of Red Data Book?
- உலகில் இயற்கை காரணிகளினாலும் மற்றும் மனிட செயற்பாடுகளினாலும்(Due to natural factors and human activities) அழிவிற்கு முகங்கொடுத்துள்ள விலங்குள், தாவரங்கள் மற்றும் பூஞ்சை இனங்களை(species of animals, plants and fungi) கணக்கெடுத்தல்.
- உலக உயிரினங்களை அச்சுறுத்தல்களின் அடிப்படையில் வகைப்படுத்தி,
- குறித்த விலங்கு மற்றும் தாவரங்கள் தொடர்பில் கூடிய கவனமெடுத்தல்
- குறித்த இனங்கள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பனவற்றை முன்வைப்பதே அதன் பிரதான உள்ளடக்கமாகவுள்ளது.
06.IUCN சிவப்பு தரவு புத்தகத்தில் உலக உயிரினங்களை எத்தனை வகையாக வகைபடுத்தியுள்ளது? How many categories of the IUCN Red List?
உயிரினங்களை ஆய்வுக்குட்படுத்தி அவற்றினை பிரதானமாக ஒன்பது வகைப்பாடுக்குள் உள்ளடக்கியுள்ளது.
07.IUCN சிவப்பு தரவு புத்தகத்தில் உலக உயிரினங்களை எவ்வாறு வகைப்படுத்தியுள்ளது? What are the categories of the IUCN Red List?
01.அழிவடைந்த இனம் Extinct (EX) -குறிப்பிட்ட இனம் தற்போது பூமியில் இல்லை.இதன் மொத்த எண்ணிக்கையும் அழிவுக்குட்பட்டு விட்டன.
02.காடுகளில் அழிவுற்ற இனம் Extinct in the Wild (EW)-இவ்வினம் காடுகளில் முற்றாக அழிவடைந்ளதுள்ளன.எனினும் இவை ஏதாவது சரணாலயங்களிலோ,தேசியப் பூங்காக்களிலோ அல்லது பாதுகாக்கப்பட்ட ஒதுக்குகள் போன்றவற்றில் ஒன்று அல்லது இரண்டு உயிருடன் காணப்படும்.
03.இன்னும் கொஞ்ச நாட்களில் அழிவடைந்து விடும் உயிரினங்கள்-Critically Endangered (CR)-
இவ்வுயிரினங்கள் உலகில் மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளன என்பதுடன் எதிர்வரும் சில ஆண்டுகளில் அவ்வண்ணிகையும் இவ்வுலகில் பூஜ்ஜிய நிலைக்கு சென்று விடும் தன்மை கொண்டன இவ்வகைக்குள் உள்ளடங்கும்.
04.அழிவடையக்கூடிய மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகியவை-Endangered (EN)-அழிந்து வரும் இனம் இத்தகைய உயிரினங்கள் காடுகளில் அழிவை எதிர்நோக்கி உள்ளன.
05.இலகுவில் ஆபத்துக்குள்ளாகக்கூடிய இனங்கள்-Vulnerable Species (VU)-இலகுவில் பாதிப்படைய கூடிய உயிரினங்கள் இத்தகைய உயிரினங்களாகும் இவை தாங்கள் வாழும் பிரதேசங்கள் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை இடர்பாடுகள் என்பனவற்றினால் இலகுவில் அழிவுடையும் தன்மையை கொண்டுள்ளன.
06.அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய இனங்கள் Near Threatened (NT)-இதனுடைய எண்ணிக்கையானது முன்னர் இருந்த தொகையை விட இப்பொழுது வெகுவாக குறைவடைந்துள்ளது அத்துடன் இதன் அழிவு வேகம் அதிகமாகவுள்ளது.பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாது விடுமிடத்து முற்றாக அழிவடையக் கூடும்.
07.குறைந்த அச்சுறுத்தல்கள் கொண்டவை-Least Concern (LC)-குறிப்பிட்ட வகையான உயிரினங்கள் அல்லது தாவரங்கள்பரவலாக,ஏராளமாக உள்ளன இவற்றின் பெருக்கம் காரணமாக இவற்றுக்கு அழிவின் அச்சுறுத்தல்கள் இல்லை.
08.தரவுகள் தேவைப்படக்கூடியவை-Data Deficient (DD)-குறித்த அங்கிகளையும் தாவரங்களையும் பற்றிய தகவல்களும் தரவுகளும் மிக குறைந்தளவே உள்ளன எனவே அவைதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
09.இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதவை-Not Evaluated (NE)-குறிப்பிட்ட இனம் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் இன்னும் சேகரிக்க ஆரம்பிக்கப்படவில்லை அத்துடன் இதுவரை குறித்த இனங்கள் தொடர்பான எவ்வித கற்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இனிமேல் தான் அவை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன.
08.ரெட் டேட்டா புத்தகம் உலக உயிரினங்களை எவ்வாறு அடையாளப்படுத்தியுள்ளது?
- அருகி வரும் தாவர மற்றும் விலங்கினங்களின் மொத்த எண்ணிக்கை
- அவை வாழும் புவியியல் பிரதேசங்கள்
- குறிப்பிட்ட இனங்கள் அழிவடைவதற்கான காரணங்கள்
- அழிவடையும் உயிரினங்களை காப்பதற்கான காப்பு முறைகள்
09.சிவப்பு தரவு புத்தகத்தில் உயிரினங்களின் வகையினை குறிப்பதற்காக பயன்படும் நிறங்கள் எவை? What are the color list of endangered species?
- கருப்பு-(Black): அழிந்துபோன இனங்கள்(Extinct species)
- சிவப்பு-(Red): மிகவும் ஆபத்தான உயிரினங்கள்(Critically Endangered Species)
- ஆரஞ்சு-(Orange): அழிந்து வரும் இனங்கள்(Endangered species)
- அம்பர்- (Amber): பாதிக்கப்படக்கூடிய இனங்கள்(Vulnerable Species)
- வெள்ளை-(White): அரிதான இனங்கள்(Rare species)
- பச்சை-(Green): ஆபத்தான இனங்கள்(Out of Danger species)
- சாம்பல்(Grey): அழிந்து வரும், பாதிக்கப்படக்கூடிய மற்றும் போதுமான தகவல் இல்லாத இனங்கள்(Species that are “endangered, vulnerable or rare)
![]() |
list of endangered species |
10.உலக உயிரினங்களை பாதுகாப்பதில் செந்தரவு புத்தகத்தின் தேவைப்பாடு என்ன? Why do we need Red Data Book?
- அழிந்து வரும் உயிரினங்கள் தொடர்பான தகவல்களை வழங்குதல்.
- அரிய வகை உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளுதல்.
- அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது குறிப்பிட்ட உயிரினங்களுக்கு பாதுகாப்பினை வழங்குதல்.
- அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை மீட்டெடுத்து அவற்றினை பாதுகாத்தல்.
11.உலகலாவிய ரீதியில் தற்போது எத்தனை உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக கணக்கடுக்கப்பட்டுள்ளது? How many species are currently considered critically endangered?
2024 ஆம் ஆண்டு அறிக்கை இன் படி உலகலாவிய ரீதியில்
- 27,150 ஆயிரம் வனவிலங்குகள்,
- 40% ஈரூடக வாழிகள்,
- 25 சதவீத பாலூட்டிகள்,
- 34 சதவீத தாவரங்கள்,
- 14 சதவீத பறவைகள்
- 31%,கடல்வாழ் உயிரினங்கள்,
- 33 சதவீத பவளப்பாறைகள் என்பன அழிவின் விளிம்பில் உள்ளன.
12.2024 ஆம் ஆண்டிற்கிணங்க உலகின் மிகவும் ஆபத்தான முதல் 5 இடங்களில் உள்ள உயிரினங்கள் எவை? What is the 05 most endangered animals?
- அமூர் சிறுத்தை-Amur Leopard
- கறுப்பு காண்டாமிருகம்-Jvan Rhinos
- போர்னியன் ஒரங்குட்டான்-Tapanuli Orangutan
- க்ராஸ் ரிவர் கொரில்லாக்கள் -Mountain Gorillas
- சுமத்ரன் யானை -Forest Elephant
![]() |
05 most endangered animals in the World |
13. எதிர்வரும் 2100 ஆம் ஆண்டுக்குள் உலகிலிருந்து முற்றாக அழிந்து போகும் விலங்கு இனங்கள் எவை? What Animals Will Be Extinct By 2100?
- காண்டாமிருகம்(Rhinoceros)
- பூனை பா லங்கூர்(Cat Ba Langur).
- பேரரசர் பெங்குவின்(Emperor Penguins).
- வாகிடா டால்பின்(Vaquita Dolphin).
- போர்னியன் ஒராங்குட்டான்(Bornean Orangutan).
- அமுர் சிறுத்தை(Amur Leopard).
- சுமத்ரா யானைகள்(Sumatran Elephants).
14. இலங்கையில் அழிந்து வரும் உயிரினங்கள் சிவப்பு தரவு புத்தகத்தின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன? How many endangered
species are there in
Sri Lanka?
- 526 பறவைகள் (Birds)
- 123 பாலூட்டிகள் (Mammals)
- 104 வகையான பல்லிகள்(Lizards)
- 104 பாம்பு வகைகள்(snake species)
- 09 ஆமைகள் (Turtles and Tortoises)
- 2 வகையான மானிட்டர்கள்(Monitors)
- 2 வகையான முதலைகள் (crocodiles)
15.இலங்கையில் மிகவும் ஆபத்தான அழிவை நோக்கியுள்ள உயிரினங்கள் எவை? Critically Endangered Animals Of Sri Lanka
- Purple faced leaf lunger - western subspecies (trachypithecus vetulus)
- Nellu rat (rattus montanus)
- Black necked stork (ephippiorhynchus asasticus)
- Painted francolin (francolinus pictus)
- Jungle bush quail (perdicula asiatica)
16.இந்தியாவில் எத்தனை வகையான இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன? How many species are extincting in India?
4850 வனவிலங்குகளும் மற்றும் 2119 தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ளன அத்துடன்,
- ஊர்வன (Reptiles and amphibians) -43
- பறவைகள்(Birds)- 20
- பாலூட்டிகள்(Mammals) -12
- அராக்னிட்ஸ்(Arachnids ) -4
- சினிடாரியா(Cnidaria) -4
- ஓட்டுமீன் (Crustacean)-2
- அராக்னிட்ஸ்(Arachnids) -2
- பூச்சிகள் (Insects )-2
17.இந்தியாவில் வேகமாக அழிந்து வரும் முதல் 5 தாவர இனங்கள் எவை? What are 5 critically endangered plants in India?
- மலபார் மஹோகனி(Malabar )
- முஸ்லி (Musli)
- சிவப்பு சந்தனம் (Red Sandalwood)
- அசாம் கேட்கின் யூ(Assam Catkin Yew)
- கருங்காலி (Ebony)
18.இந்தியா எந்த ஆண்டு இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச ஒன்றியத்தில் இணைந்தது ?When was India signed in IUCN ?
1969 ஆம் ஆண்டு
19.இந்தியாவில் IUCN இன் தலைமையகம் எந்த ஆண்டு எந்த நகரில் நிறுவப்பட்டது?
Where is the headquarter of IUCN
in India?
2007 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நிறுவப்பட்டது
20.செந்தரவு புத்தகத்தின் குறைப்பாடுகள் எவை?
- தகவல்கள் பற்றாக்குறையாக உள்ளன.
- தரவு சேகரிப்பிற்கான செலவு அதிகமாக உள்ளமை.
- சிவப்பு தரவு புத்தகத்தில் உள்ள தகவல்கள் முழுமைப் படுத்தப்படாதவையாக உள்ளன.
- உலகளாவிய ரீதியில் உள்ள சிற்றினங்கள் பற்றிய தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை.
- பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகள் பற்றிய தகவல்கள் போதியளவு இன்மை.



.webp)
கருத்துரையிடுக