ArcGIS மென்பொருளின் பயனர் இடைமுகம் அறிமுகம் | ArcGIS User Interface Components – Introduction & Features
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மென்பொருளும் (Software) பல்வேறு வகையான மற்றும் வித்தியாசமான பயர் இடைமுகங்களை (User Interface) கொண்டுள்ளன.
அவ்வாறான இடைமுகங்களை (User Interface) சரியான முறையில் விளங்கிக் கொள்வதுடன் அதன் பயன்பாட்டினையும் (Usages) தெளிவாக விளங்கிக் கொண்டால் மாத்திரமே அம்மென்பொருட்கள் மூலமாக துல்லியமான,சிறந்த முடிவுகளையும் மற்றும் வெளியீடுகளையும் (We Can Obtain Accurate Results And
Outputs) எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கேற்ற வகையில் ArcMap மென்பொருளின் பயனர் இடைமுகமானது பல்வேறுபட்ட நவீன நுட்பங்களையும் (Modern techniques),ஆய்வு கருவிகளையும் (Research tools / Diagnostic tools),பகுப்பாய்வு கருவிகளையும் (Analytical tools) மற்றும் இலகுவாக கையாளக்கூடிய பயனர் இடைமுகத்தினையும் (Easy-to-use user Interface) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான பயனர் இடைமுகத்தின் (User Interface) முக்கிய அம்சங்களையும் அவற்றின் பண்புகளையும் (Key features and their
Characteristics) இங்கு நாம் அவதானிக்கவுள்ளோம்.
ArcMap மென்பொருளின் பயனர் இடைமுகத் தோற்றம் - User interface appearance of ArcGIS software
ArcMap மென்பொருளானது (ArcMap Software) அதன் பயனர் இடைமுகத்தில் பிரதானமாக பின்வரும் அம்சங்களினை உள்ளடக்கியுள்ளது.
- மெனு பார் (Menu Bar )
- ஸ்டேட்டஸ் பார் (Status Bar)
- டூல் பார் (Tool Bar)
- பட்டன் பார் (Button Bar)
- டேட்டா வியூ (Data view)
- டேபில் ஆஃப் கன்டென்ஸ் (Table of Contents)
- ஆர்க் டூல் (Arc toolbox)
- ஆர்க் கெட்லொக் (Arc Catalog) என்பனவற்றை கொண்டுள்ளது
|
|
பைல் - File
பைல் (File) மெனுவில் புதிய ஆக்கங்களை உருவாக்குவதற்கும் (New) நாம் முன்னதாக செய்த கோப்புக்களை திறப்பதற்கும் (Open),ஆக்கங்களை சேமிப்பதற்கும்(Save/Save
As) புதிய தகவல்களை உள்ளீடு செய்வதற்கும் (Add
Data) நமது வரைபடத்தினை பிரதிகள்(Print) மூலமாக வெளியிட்டு கொள்வதற்குமான அம்சங்கள் உள்ளன.
![]() |
User interface appearance of ArcMap software-பைல் File |
எடிட் -Edit
எடிட் (Edit) என்ற அமைப்பில் நாம் எம்முடைய ஆக்கங்களில் மேற்கொண்ட திருத்தங்களின் முந்தைய நிலை மற்றும் பழைய நிலையை மீட்டிக் கொள்ளலாம்(Undo, Redo) அது போல் கொப்பி,பேஸ்ட்(Copy and Paste) ஆகியவற்றையும் செய்துக் கொள்ள முடியும்.
வியூ -View
இப்பகுதியில் வரைப்படங்களையும் அதன் புற அமைப்பு தோற்றத்தினையும் (Data
View) பார்த்துக் கொள்வதற்கும் வரைப்படத்தினை வெளியீடு செய்து கொள்வதற்கு முன் அதன் இறுதி அமைப்பு எவ்வாறு காணப்பட வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்களையும் படத்தின் அளவினையும் இங்கே எம்மால் தேர்வு செய்துக்கொள்ள முடியும்.
![]() |
| ArcMap interface- VIEW |
இன்செட் -Insert
இன்செட்(Insert) என்ற பகுதியில் எம்மால் கணணியில் வரையப்பட்ட வரைபடத்திற்கான டேட்டா ஆப் பிரேம் அது போல் எமது படத்திற்கான அளவீடு, படத்தின் தலைப்பு, குறியீட்டு விளக்கங்கள், நிறம் போன்ற பல்வேறு வகையான அம்சங்களை இன்சர்ட் என்ற பகுதியின் மூலமாக எம்மால் செய்துக்கொள்ள முடியும்.
செலக்சன் - Selection
எம்மால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வரைப்படங்களில் குறித்த பகுதியினை தேர்வுசெய்துக்கொள்வதற்கும்,தேர்வு செய்தவையினை நீக்கி கொள்ளவும் (Select By Attributes,Select By
Location,Select By Graphics,Zoom To Selected Features,Pan To Selected
Features) அதில் நிறப்பயன்பாடுகளை மேற்கொள்வதற்கும் செலக்சன் என்ற பகுதியில் பலதரப்பட்ட வசதிகள் உள்ளன.
ஜியோப்ரோசஸிங் -Geoprocessing
மெனுபாரில் ஜியோ ப்ரோசிஸிங் (Geoprocessing) மிகவும் பிரதானமானதும் மற்றும் அதிகளவான செயற்பாட்டினையும் வழங்குகின்றது. வரைபடங்களை எமது தேவைக்கேற்ப மாற்றவும் அவற்றில் செய்ய வேண்டிய நுட்பமான செயற்பாடுகளையும் இது வரையறுக்கின்றது.
![]() |
| ArcMap interface ஜியோப்ரோசஸிங் (Geoprocessing) |
- Buffer
- Clip
- Intersect
- Union
- Merge
- Dissolve
- Search For Tools
- Arc Toolbox
- Environments
- Results
- Model Builder
- Python
- Geoprocessing
Options
போன்ற பிரதான அமைப்புக்கள் இங்குள்ளன. இதன் மூலம் படங்களை இணைப்பதற்கும் அதில் எமக்கு தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கும் புதிய பகுதிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தனிப்பகுதிகள் ஆக்குவதற்கான அம்சங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கஸ்டமைஸ் -Customize
கஸ்டமைஸ் (Customize) தொகுப்பில் நாம் எமது கணணியில் ArcMap ற்காக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துகின்ற டூல் பாக்ஸ், Extensions,Add-ln Manager போன்றவற்றினை கையாளக்கூடிய வசதிகளையும் ArcMap இல் அவற்றினை இணைத்துக் கொள்வதற்கான வசதிகளையும் வழங்குகின்றது.
டூல் பார் -Tool Bar
டூல் பார் (Tool Bar) இல் பலதரப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை நமது தேவைக்கருதி
உள்ளிடவும் அவற்றினை நீக்கிக் கொள்வதற்குமான வசதியை இது வழங்குகின்றது.
குறிப்பிட்ட இடத்தில் ரைட் கிளிக் செய்வதன் மூலம் நாம் பல்வேறு வகையான டூல் பார் முகவர்களை இங்கு இணைத்துக் கொள்ளலாம் இங்கு பிரதானமாக,
- ப்ரோ எடிட்டர்
- ஜியோ ரேபெரன்சிங்
- இமேஜ் கிளாஸ்சிகேசன்
- லே-அவுட்
- நெட்வொர்க் அனாலிடிக்கல்
போன்ற அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.மேலும் படவரைக் கலையினை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் இங்கு வசதிகள் உள்ளதுடன் எமது படத்தின் மிக முக்கியமான ஜியோ ப்ரோசசிஸிங் (Geoprocessing) செய்வதற்கான அமைப்பும் இங்கேயே உள்ளது.
பட்டன் பார் -Button Bar
பட்டன் பாரில் நமது வரைப்படங்களை நமது தேவைக்கேற்ப பெரிதாக்கவும்
(Zoom in), சிறிதாகவும் (Zoom out) நமக்கு வேண்டிய இடத்தில்
வரைப்படங்களை நிலையாக ஒழுங்கமைத்து கொள்வதற்கும்
வரைப்படத்தினை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்கும்
வாய்ப்பளிக்கிறது.
டேபிள்ஸ் ஒப் கன்டென்ஸ் - Table Of Contents
டேபிள்ஸ் ஒப் கன்டென்ஸ் (Table
Of Contents) இல் எங்களுடைய படத்தின் விவரங்களையும் நாம் படத்தில் மேற்கொள்ளும் உள்ளீடுகளையும் வரிசைப்படுத்தி எமக்கு தெளிவாக காட்டும்.
உதாரணமாக படத்தின் பெயர், படத்தின் வகை ,படத்தில் நாம் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் தொடர்பான விளக்கத்தை டேபிள்ஸ் ஒப் கன்டென்ஸ் (Table
Of Contents) அறிக்கைப்படுத்தும்.
![]() |
டேபிள்ஸ் ஒப் கன்டென்ஸ் (Table Of Contents) |
டேட்டா வியூ - Data View
டேட்டா வியூ (Data View) என்ற பகுதியே பிரதான வேர்க் பிளேஸ் ஆகும் இதில் எமது வரைப்படம் காட்சிப்படுத்தப்படும். இதன் மூலமாக எமது தேவைக்கேற்ப வரைப்படங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் அத்துடன் இதில் அமைந்துள்ள டேடா ஆப் பிரேம் மூலமாக படத்தின் இறுதி காட்சி உருவையும் எம்மால் வடிவமைத்துக் கொள்ள முடியும்.
ஆர்க் கேட்லோக் -Catalog
ஆர்க் கேட்லோக் (Catalog) என்ற பகுதி ஆக்மெப்பில் பிரதானமானது இதில் நாம் மேற்கொள்ளும் படங்களின் உள்ளீடுகளை தெரிந்து கொள்வதற்கும் அதன் வகைகளை அறிந்து கொள்வதற்கும் உதவும் எங்களுடைய படத்தை சிறந்த முறையில் நிர்வகித்துக் கொள்ள இது உதவி புரியும்.
![]() |
| ArcMap interface-ஆர்க் கேட்லோக் (Catalog) |
ஆர்க் டூல் பாக்ஸ் -Arc Toolbox
ஆக்மெப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மிக மிக முக்கியமான துணைப்பகுதி தான் இந்த ஆக் டூல் பாக்ஸ்(Arc
Toolbox) இதில் படங்களை எடிட் செய்வதற்கும் ஜி கோடிங் ஜியோ,பேசியல் எனினாலிட்டிகள்,நெட்வொர்க் அனாலிடிகல் டூல்ஸ் போன்ற பல்வேறு வகையான பகுதிகளில் உள்ளன.
![]() |
ஆக்
டூல் பாக்ஸ் (Arc Toolbox) |
மேற்போன்ற பலதரப்பட்ட விடயங்களை ஆக்மெப்(ArcMap) தன்னுள் உள்ளடக்கியுள்ளது. அவற்றை எமது தேவைக்கேட்ப உபயோகிப்பதற்கு தகுந்த முறையில் தெரிவு செய்து அதனை பயன்படுத்துவதன் மூலமாக எமது வரைப்பட வெளியீடு மிகவும் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் மற்றும் ஏனையவர்கள் மிகவும் இலகுவாக விளங்கிக்கொள்ள கூடியதாகவும் அமையும்.




.png)
.png)

.png)
கருத்துரையிடுக