உலக சனத்தொகை பரம்பலில் செல்வாக்கு செலுத்தும் பௌதீக காரணிகள் :Physical factors influencing world population growth
உலக சனத்தொகை பரம்பல் அறிமுகம்
யாதாயினும் ஒரு நாட்டின் சனத்தொகையானது அதன் மொத்தபரப்பில் பரம்பிக் காணப்படும் முறையினை சனத்தொகைப் பரம்பல் எனப்படும். சனத்தொகை அடர்த்தி எனும் போது ஒரு அலகு நிலப்பரப்பில் வாழும்
மக்களின் எண்ணிக்கையினை குறிக்கும்.
சனத்தொகை
அடர்த்தியானது குறிப்பிட்ட நிலப்பரப்பு ,அங்கு வாழும் மக்கள் தொகையின் அளவு என்பன கவனத்தில்
கொள்ளப்படுகின்றது.
புவி மேற்பரப்பில் மிகச் சிறிய அளவிலான நிலப்பரப்பே மனித வாழ்வுக்கு ஏற்றதாக உள்ளது. இதனால் சிறிய நிலப்பரப்பினுள் அதிகளவான மக்கள்தொகை பரம்பிக் காணப்படுகின்றது.
அதே போன்று பெரிய நிலப்பரப்பினுள் குறைந்தளவான சனத்தொகையும்,சில
பரப்புக்களில் சனத்தொகை அற்றும் காணப்படுகின்றன.
குறிப்பாக
இத்தகைய சனத்தொகை சமனற்ற பரம்பலுக்கு பல்வேறு வகையான பௌதீக மற்றும் மானிடக் காரணிகளின் செல்வாக்கினை
பட்டியலிட முடியும்.
அதனடிப்படையில் உலகில் சனத்தொகை பரம்பலானது ,செறிவாகக் கொண்ட பிரதேசங்களும் மறுபுறம் சனத்தொகை ஐதான பிரதேசங்களுமாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
உலக சனத்தொகையானது சமமற்ற முறையில் பரவியுள்ள விதத்தினை பின்வரும் பிரதான 03 மட்டங்களின் ஊடாக அடையாளப்படுத்த முடியும்.அவையாவன.
சனத்தொகை கூடிய வலயம் -
- கிழக்கு ஆசியா
- தென் ஆசியா
- தென்கிழக்கு ஆசியா
- மேற்கு ஐரோப்பா
சனத்தொகை மத்திம வலயம் -
- ஐக்கிய அமெரிக்காவின் மத்திய வலயம்
- ரஸ்யா
- வடகிழக்குப் பிரேசில்
- மெக்ஸிகோ
- சிலி
சனத்தொகை சூனிய வலயம் -
உலகில்
சனத்தொகை சமனற்று காணப்படுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்- Major Factors Affecting Population Inequality Globally
உலகில் ஒரு பிரதேசத்தில் அதிகளவான மக்கள் தொகையும் மறுபுறம் குறைந்தளவான மக்கள் தொகையும் பரம்பலடைந்து காணப்படுவதற்கு பிரதானமான இரு காரணங்களாவன
- பௌதீக/இயற்கை காரணிகள்- Physical/Natural Factors
- பண்பாட்டு/மானிட காரணிகள்- Cultural/Human Factors.
இக்கட்டுரையில் பௌதீக/இயற்கை காரணிகள்-Physical/Natural Factors உலக நிலப்பரப்பின் சனத்தொகை அடர்த்தியினை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பது தொடர்பாக ஆராய்வோம்.
பௌதீக காரணிகள்-Physical/Natural Factors
இங்கு காலநிலை(Climate) ,மண்வளம்(soil), நீர் வளம்( water resources), இயற்கை வளங்கள்(natural resources),தாவரங்கள்(vegetation), தரைத்தோற்ற பாங்குகள்(landforms)மற்றும் வடிகால் அமைப்பு(drainage system) போன்றவற்றினை நாம் சில எடுத்துக்காட்டுகளாக குறிப்பிடலாம்.
![]() |
பௌதீக காரணிகள்-Physical/Natural Factors |
இவை பல்வேறு வகையிலான உப பிரிவுகளையும் கொண்டுள்ளன , எடுத்துக்காட்டாக காலநிலை(Climate ) என்னும் போது வெப்பநிலை(temperature),மழை வீழ்ச்சி(rainfall),வறட்சி(drought) மற்றும் சூறாவளி(cyclones) போன்றவற்றினை குறிப்பிடலாம் .
இயற்கை வளங்கள்(Natural resources) என்னும் போது நீர்வளம்(water resources), நிலக்கரி(coal), தங்கம்(gold),தாது(minerals),மீன்வளம் (fisheries)போன்றவற்றை குறிப்பிடலாம் .
இத்தகைய
பௌதீக அம்சங்கள் புவியின் மக்கள் தொகை பரம்பலினை நிர்ணயிக்கும்
காரணிகளாக உள்ளன.
இது
மக்கள் தொகை அடர்த்தி ,பரம்பல்
,இடப்பெயர்வு போன்ற பல்வேறு காரணிகளுக்கு வழி வகுக்கின்றன.
இனி இத்தகைய பௌதீக அம்சங்கள் எவ்வாறு சனத்தொகை பரம்பலில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதனை தனித்தனியாக நோக்குவோம்.
காலநிலை(Climate)
சனத்தொகை
பரம்பலை தீர்மானிப்பதில் காலநிலை அம்சங்கள் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. மனித வாழ்க்கைக்கு
உவப்பான மற்றும் வாழ்வதற்கு ஏற்ற பிரதேசங்களில் அதிகமான சனத்தொகைப் பரவலையும் அதன்
அடர்த்தியையும் காணமுடிகின்றது.
எமது உலகில், இடை வெப்ப வலயங்களில் அதிகளவு சனத்தொகைப் பரம்பலை காணமுடிவதுடன் முனைவுப் பிரதேசங்களில் மிகக் குறைவான சனத்தொகை பரவல் கொண்டிருப்பதனை எம்மால் அடையாளப்படுத்த முடியும்.
வெப்பம், குளிர், மழை வீழ்ச்சி போன்றன உலகின் அயன, இடைவெப்ப, முனைவு வலயங்களில் வேறுபட்டு அமைந்திருப்பதால் சனத்தொகை பரம்பலில் இத்தகைய மாறுபாடுகள் தோன்றியுள்ளன.
மேலும் பாலை நிலங்கள் (வெப்பம்), உயர் மலைப் பகுதிகள் (குளிர்,பனி),முனைவு பகுதிகள்மறைப் பெறுமான குளிர்,பனி) போன்றனவற்றில் சனத்தொகை குறைவாக உள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
துருவப் பகுதிகள்
- Polar
Regions
- அண்டார்டிகா Antarctica - -1,100 - அடர்த்தி: -0.0001
- ஆர்க்டிக் (கிரீன்லாந்து, வடக்கு கனடா, சைபீரியா)
ஆஸ்திரேலியா Australia – பாலைவனம் மற்றும் அரை வறண்ட மண்டலங்கள்.
ஆப்பிரிக்கா- Africa
• சஹாரா
பாலைவனம் (லிபியா, மவுரித்தேனியா, நைஜர், சாட், மாலி,அல்ஜீரியா) – Sahara
Desert (Libya, Mauritania, Niger, Chad, Mali, Algeria)
தரைத்தோற்ற வேறுபாடுகள்- Terrain Differences
உலகில்
சமவெளிப் பகுதிகளில் அதிகமான சனத்தொகைப் பரம்பலை அடையாளப்படுத்த முடியும். மேலும் கரையோரச்
சமவெளி, நதிச் சமவெளிகளை எடுத்துக்காட்டலாம்.
அத்துடன்
உயர்மலைப் பகுதிகள்,பள்ளத்தாக்குகள்மற்றும் சமதரையற்ற பகுதிகளில் அதிக சனத்தொகையை காணமுடியாமைக்குக்
காரணம் தரைத்தோற்ற வேறுபாடுகளாகும்.
உதாரணமாக உலகில் அதிக சனத்தொகை பரம்பல் காணப்படும் தரைத்தோற்ற அம்சங்களை பின்வருமாறு அடையாளப்படுத்த முடியும்.
நதி பள்ளத்தாக்குகள் மற்றும் கழிமுகங்கள்(River Valleys & Deltas)
- கங்கை-பிரம்மபுத்ரா கழிமுகம்(Ganges-Brahmaputra Delta)
- வங்காளதேசம் மற்றும் இந்தியா
- நைல்
கழிமுகம்(Nile Delta) (எகிப்து)
- கடலோர சமவெளிகள்(Coastal Plains)
- கிழக்கு சீனா (ஷாங்காய், குவாங்சோ, ஹாங்காங்).
- ஜப்பான் (டோக்கியோ-ஒசாகா நடைபாதை) → மலைகளுக்கு இடையே தட்டையான கடற்கரைப் பகுதிகள்.
- வட இந்தியாவின்(North India) இந்தோ-கங்கை சமவெளி - தட்டையான நிலப்பரப்பு.
- ஐரோப்பிய
தாழ்நிலங்கள்(European Lowlands)
(நெதர்லாந்து, பெல்ஜியம்,இங்கிலாந்து.
- இமயமலை(Himalayas)
- ஆண்டிஸ்(Andes)
- ஆல்ப்ஸ்(Alps)
- ராக்கிஸ்(Rockies) - அதிக பள்ளத்தாக்குகள் மற்றும் செங்குத்தான சரிவுகள் என்பன காணப்படுதல்)
பாலைவனங்கள்(Deserts)
- சஹாரா(Sahara)
- அரேபியன்(Arabian)
- கோபி(Gobi)
- அட்டகாமா(Atacama)
- ஆஸ்திரேலிய அவுட்பேக்(Australian Outback)
அடர்ந்த காடுகள்(Dense Forests)
- அமேசான்(Amazon)
- காங்கோ (Congo Basin)
- பப்புவா நியூ கினியா(Papua New Guinea) அரிதான பழங்குடியினர் மாத்திரமே இப்பகுதியில் வசிக்கின்றனர்.
துருவப்பகுதிகள் மற்றும் துந்ரா (Polar & Tundra)
- கிரீன்லாந்து (Greenland) இ
- அண்டார்டிகா(Antarctica)இ
- ஆர்க்டிக் (Arctic )
- ரஷ்யா(Russia ) ரூ
கனடா(Canada) → உறைபனி மற்றும் நிரந்தர உறைபனி என்பன மக்கள்தொகை பரப்பலினை கட்டுபடுத்தியுள்ளன.
இயற்கை வளம்(Natural resource)
நீர்வளம்(Water resources), மண்வளம்(soil resources), கனிய வளம் (mineral resources), சமுத்திர வளம்(marine resources), பாறைகள் (rocks) என்பன சனத்தொகைப் பரம்பலைத் தீர்மானிக்கின்றன. ஆவை பற்றாக்குறையான இடங்களில் குறைவாளன சனத்தொகைப் பரம்பலைக் காணமுடியும்.மற்றும் வளமிகு இடங்களில் அதிக சனத்தொகை பரம்பலை அடையாளப்படுத்த முடியும்.
![]() |
| இயற்கை வளம்(Natural resource) |
நீர்
வசதி (Water resources)
மனிதனின் அடிப்படை தேவைகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும்(For basic needs and economic activities) நீர் இன்றியமையாதததாகின்றது. விவசாயம்(Agriculture), மீன்பிடி(fishing), கைத்தொழில்(industry) நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து(Transportation) அம்சங்கள் போன்றவற்றுக்கு நீர் அடிப்படையாக உள்ளதுடன் அது ஒரு பிரதேசத்தின் மக்கள் பரம்பலினையும் தீர்மானிக்கின்றது.
மேலும்
உலகில் தோன்றிய நாகரீகங்கள் அனைத்தும் நீர்வளத்தை மையமாகக் கொண்டு தோன்றியதால் அப்பகுதியில் அதிகளவு
சனத்தொகைப் பரம்பலைக் காணமுடிகின்றது.
உலகில் சிந்து,குவாங்கோ மற்றும் மொசப்பத்தேமிய நாகரீகங்களை எடுத்துக்காட்ட
முடியும். உலகின் பாலைவனப்பகுதிகளில் சனத்தொகைப்பரம்பல் மிகக் குறைவாக காணப்படுகின்றமைக்கு
காரணம் நீர்வளப் பற்றாக்குறையேயாகும்.
மண் வளம் - Soil Resources and Human Population Distribution
உலக சனத்தொகை பரம்பலை தீர்மானிப்பதில் மண்வளம் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது பொதுவாகவே மக்கள் வளமான மற்றும்
விவசாயத்திற்கு ஏற்ற மண் அமைப்பினை கொண்ட பகுதிகளை நோக்கியே நகர்கின்றனர், மற்றும்
அப்பகுதிகளிலேயே தங்களுடைய நிலையான குடியிருப்புகளையும் அமைத்துக் கொள்கின்றனர்.
அதை தவிர்த்து வளமற்ற மற்றும் மனித பாவனைக்குதவாத மண் தொகுதிகளில் மிகவும் அரிதாகவே மக்கள் பரம்பல் அமைந்து காணப்படுகிறது.
![]() |
| உலகின் மண் பரம்பல் |
குறிப்பாக விவசாயம்,சந்தைபடுத்தல்,கைத்தொழில்,கட்டுமானம், அபிவிருத்தி,குடியிருப்பு
மற்றும்
விவசாய மற்றும் மிருக வளர்ப்பு போன்றவற்றிற்கு மண்வளம் பிரதானமானதாக உள்ளது.
மணல், பாறை, மற்றும் குறைந்த அல்லது ஊட்டச்சத்து இல்லாத மண் உள்ள பகுதிகள் விவசாயத்தை ஆதரிக்க முடியாத பகுதிகளில் மக்கள் பரம்பல் மிக மிக அரிதாகவே காணப்படும்.
வளமான மண் கொண்ட பகுதிகள் : அதிக மக்கள் தொகை பரம்பல் உலகில் பின்வரும் பகுதிகளை அடையாளப்படுத்த முடியும்.
வண்டல், எரிமலை மற்றும் களிமண் மண்(alluvial, volcanic, or loamy soils)-தெற்காசியா (இந்தோ-கங்கை சமவெளி, பங்களாதேஷ், பாகிஸ்தான் பஞ்சாப்)
ஆறுகளால் படிந்த வளமான வண்டல் மண்.-கிழக்கு ஆசியா (சீனாவின் வட சீன சமவெளி, சிச்சுவான் படுகை, கடலோர நதி டெல்டாக்கள்)
வளமான மண் மற்றும் வண்டல் மண்.(Alluvial soils)
நைல் பள்ளத்தாக்கு Nile Valley & Delta (Egypt)
ஐரோப்பா (வடக்கு ஐரோப்பிய சமவெளி: ஜெர்மனி, போலந்து, உக்ரைன்) Europe (Northern European Plain:
Germany, Poland, Ukraine)
செர்னோசெம் (Chernozem (black soil) (கருப்பு மண்) மற்றும் வளமான களிமண்.
லத்தீன் அமெரிக்கா (மத்திய மெக்சிகோ, ஆண்டியன் பள்ளத்தாக்குகள், தெற்கு பிரேசில்) (Latin America (Central
Mexico, Andean valleys, Southern Brazil)
வளமற்ற மண் கொண்ட பகுதிகள்
வளமற்ற மண் கொண்ட பகுதிகள் ,குறைந்த மக்கள் தொகையினை கொண்டுள்ளன உலகில் பின்வரும் பகுதிகளை அடையாளப்படுத்த முடியும்.
- பாலைவனங்கள் (சஹாரா,அரேபியா, கோபி, ஆஸ்திரேலிய அவுட்பேக்)
- துருவம் மற்றும் துந்திரா (கிரீன்லாந்து, ஆர்க்டிக், அண்டார்டிகா)
- வெப்பமண்டல மழைக்காடுகள் (அமேசான், காங்கோ படுகை, பப்புவா நியூ கினியா)
- மலைப் பகுதிகள் (இமயமலை, ஆண்டிஸ், ராக்கிஸ், ஆல்ப்ஸ்)
கனிமங்கள் மற்றும் எரிசக்தி வளங்கள்(Minerals & Energy Resources)
எண்ணெய்(Oil)
மத்திய கிழக்கு - துபாய், ரியாத் போன்ற வளைகுடா நகரங்கள்). Middle East (oil - Gulf cities like
Dubai, Riyadh).
தங்கம், வைரம்(Gold and Dimond)
தென்னாப்பிரிக்கா - ஜோகன்னஸ்பர்க்). South Africa (gold, diamond →
Johannesburg).
![]() |
| உலகில் தங்கம் அதிகம் காணப்படும் பிரதேசங்கள் |
நிலக்கரி(Coal)
ரூர் பள்ளத்தாக்கு (ஜெர்மனி, நிலக்கரி மற்றும் எஃகு தொழில்). Ruhr Valley (Germany, coal & steel
industry).
அப்பலாச்சியன் பிராந்தியம் (அமெரிக்கா நிலக்கரி). Appalachian Region (USA coal).
வன வளங்கள் (Forest Resources)
மரம்(timber), உணவு(food), மருத்துவ(medicinal) தாவரங்களை(plants) வழங்குதல்.
மத்திய ஆப்பிரிக்கா(Central
Africa), அமேசான் விளிம்புகள்(Amazon
edges), தென்கிழக்கு ஆசியா(SE
Asia).
கடல் மற்றும் கடலோர வளங்கள்(Marine & Coastal Resources)
வளமான மீன்பிடி மற்றும் அதிக வர்த்தக வாய்ப்புகள் கொண்ட கடற்கரைகள்.
ஜப்பான், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், மேற்கு ஐரோப்பா, அமெரிக்க கிழக்கு கடற்கரை .
உலக
மக்கள்தொகையில் 40சதவீதமானவர்கள் கடற்கரையிலிருந்து 100 கி.மீ.க்குள் வாழ்கின்றமை
குறிப்பிடதக்கது.
இயற்கைத் தாவரப் பரம்பல் (Natural plant inheritance)
காடுகள், புல்நிலங்கள் போன்றன இயற்கைத்தாவரங்களாகும். அவை அதிகளவு பரம்பிக் காணப்படும் பிரதேசங்களில் சனத்தொகை ஐதான நிலையினையும் சனத்தொகை மிகக் குறைவான நிலையினையும் கொண்டிருப்பதனை காணமுடியும் எடுத்துக்காட்டாக,
வெப்பமண்டல மழைக்காடுகள்
- ஆமசான் பள்ளத்தாக்கு (தென் அமெரிக்கா),
- கொங்கோ பள்ளத்தாக்கு (ஆப்பிரிக்கா),
- தென்கிழக்கு ஆசியா.
வெப்பமண்டல புல்வெளிகள் (சவானா)
- ஆப்பிரிக்கா,
- பிரேசில்,
- ஆஸ்திரேலியா.
பாலைவன தாவரங்கள் (Desert
Vegetation)
- சஹாரா
- அரேபிய தீபகற்பம்
- ராஜஸ்தான்
- ஆஸ்திரேலிய ஆவுட்பேக். போன்றவற்றில் மிகக் குறைவான மக்கள் அடர்த்தி காணப்படுகின்றது.
குளிர் மண்டல காடுகள் (Coniferous Forests
/ Taiga)
கனடா, சைபீரியா, வட ஐரோப்பா.
துந்ரா தாவரங்கள் (Tundra)
ஆர்க்டிக், கிரீன்லாந்து, அலாஸ்கா.
இயற்கை அனர்த்தங்கள்(Natural Disasters)
சனத்தொகை பரம்பலை தீர்மானிக்கும் மற்றொரு பௌதீக
காரணியாக இயற்கை அனர்த்தங்கள் காணப்படுகின்றன. புவியில் இயற்கை அனர்த்தங்கள் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் நிகழும் பகுதிகளில் மக்கள் குடியேறுவதில்லை. அத்தகைய உந்துவிசை காரணிகள் மக்களை ஏனைய பகுதிகளினை நோக்கிய இடப்பெயர்வுக்கும் வழி வகுக்கின்றன.
இருப்பினும்,
உலகில் சில நாடுகளில் மக்கள் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெரும் இடங்களில் வாழுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக இந்தோனேசியா ஜப்பான் போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.
இதை தவிர்த்து அதிகளவான உயிரிழப்பை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்கள் நிகழும் பகுதிகளில் மக்கள் சனத்தொகை பரம்பல் மிகவும் அரிதாகவே உள்ளது அதனை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
நிலநடுக்கம் (Earthquake)
- பசிபிக் “Ring of Fire” (ஜப்பான்,
- இந்தோனேஷியா,
- பிலிப்பைன்ஸ்,
- சிலி,
- ஹிமாலயப் பகுதிகள் (இந்தியா, நேபாளம்).
எரிமலை வெடிப்பு (Volcano)
- இத்தாலி (வெசூவியஸ்)
- இந்தோனேஷியா (க்ரகடோவா)
- பிலிப்பைன்ஸ் (பினடுபோ).
![]() |
| உலகின் பிரதான எரிமலைகள் |
வெள்ளம்
(Flood)
- இந்தியா,
- பாகிஸ்தான்,
- பங்களாதேஷ் (கங்கை–பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு).
- சீனா (யாங்க்சி, ஹுவாங் ஹே)
வறட்சி (Drought)
- ஆப்பிரிக்கா (சஹேல் பகுதி),
- ஆஸ்திரேலியா,
- இந்தியாவின் தெற்கு & மத்திய பகுதிகள்.
சூறாவளி
(Cyclone, Hurricane, Typhoon)
- பங்களாதேஷ்,
- இந்தியா (கிழக்கு கரை),
- கரீபியன் தீவுகள்,
- பிலிப்பைன்ஸ்,
- ஜப்பான்,
- அமெரிக்காவின் கடற்கரை.
பனிச்சரிவு
& நிலச்சரிவு
(Landslide, Avalanche)
- ஹிமாலய மலைப்பகுதி,
- ஆண்டிஸ் மலை,
- ஆல்ப்ஸ்,
- ஜப்பான்









கருத்துரையிடுக