Agricultural Geography | Importance, Scope & Factors Explained


விவசாயப் புவியியல் அறிமுகம் | An Introduction to Agricultural Geography | Importance, Scope & Factors Explained

"உலகிலுள்ள அனைத்து கற்கை துறைகளுக்கும்  புவியியலானது தாய் போன்றது ”Geography is Mother of Science" அதற்கமைய உலகில் தோற்றம் பெற்ற அனைத்து துறைகளையும் புவியியல் தன்னுடன் இணைந்து ஆய்வுக்குட்படுத்துகின்றமையினை எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றது.


இங்கு புவியியலானது மனித நல் வாழ்விற்கு அத்திவாரமாக திகழ்கின்ற உணவு உற்பத்தியினையும் விவசாய நடவடிக்கைகளையும் (Agricultural activities) மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய உற்பத்தி சார் முறைமைகளையும் (Production of food and other associated systems)  ஆராய முற்பட்டதன் விளைவாக புவியியலில் விவசாயப் புவியியல் (Agricultural Geography) என்ற தனித்தொரு கற்கைத் துறை தோற்றம் பெற்றது.

இது விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் புவியியலுடன் இணைந்து ஆராய்கின்றது.அத்தகைய விடயங்களை இனி ஆராய்வோம்.


விவசாயப் புவியியல் என்றால் என்ன? | What is Agricultural Geography?

விவசாயப் புவியியல் அல்லது வேளாண் புவியியல் என்பது ஆங்கிலத்தில் “Geography Of Agriculture” எனப்படுகின்றது. இதுவே, திரிபடைந்து இன்று பொதுமையாக “Agricultural Geography” என அழைக்கப்படுகின்றது.

இது இலத்தின் மொழியில் இருந்து வந்த பதமாகும். இலத்தின் மொழியில் AGRICULTURALஎன்ற சொல் “AGER” என்னும் அடிப்படையில் இடம் அல்லது வயல் என்பதை குறிக்கின்றது. CULTURAL என்பது CULTIVATE” அல்லது பயிரிடுதல் எனும் கருத்தினை தருகின்றது. இவ்விரு பதங்களும் இணைந்து "AGRICULTURAL GEOGRAPHY" என வழங்கப்படுகின்றது.


விவசாயப் புவியியல்- வரைவிலக்கணங்கள்-Definitions of Agricultural geography.

  • சைமன்ஸ்(Symons) 1960 ஆம் ஆண்டு விவசாயப்  பயிர் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய இரண்டினையும் ஒன்றிணைத்து ஆராயும் கலையே விவசாயப் புவியியல் என்கிறார்.
  • பெர்ன் ஹார்ட் (Bern Hard) 1950 உலக விவசாய பிரதேசங்களின் வேறுபாடுகள் அவற்றிற்கான காரணங்கள் என்பனவற்றின் அடிப்படையில் விவசாயத்தினை நோக்குவதையே விவசாயப் புவியியல் குறித்து நிற்கின்றது என்றார்.

agricultural crop production and livestock farming,What is Agricultural Geography,What is Agricultural Geography?

பயிர் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு 

  • விட்டல்சி (Whittlesy) 1936 ஆம் ஆண்டு தாவர மற்றும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு அதன் உற்பத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் மனித முயற்சியும் இணைந்து மேற்கொள்ளும் பயன்பாட்டு முறையினை ஆயாயும் இயல் என்கிறார்.
  • ஆண்ட்ரியா (Andreae) என்பவர் புவி மேற்பரப்பில் எவ்வாறு பிரதேசம், இடம், என்ற வகையில் இயற்கை, பொருளாதாரம், சமூகம் ஆகிய தொடர்புகளால் விவசாய நிலைமைகள் மேற்கொள்கின்றன என்பது பற்றிய விளக்கமே விவசாயப் புவியியல் என்கின்றார்
  • இல்மேன்  (Hillman)  1911  ஆம்  ஆண்டு  விவசாய  புவியியல்  என்பது  நாடுகளுக்கு  இடையேயும்  கண்டங்களுக்கிடையேயும்  விவசாய  பொருள்  உற்பத்தியின்  ஒப்பிட்டினை  ஆய்வு  செய்யும்  ஒரு  துறை  என்கிறார்.
  • ரீட்ஸ் (Reeds) 1964ஆம் ஆண்டு விவசாய உற்பத்திகளின் இயல்புகளையும் குணாதிசயங்களையும் பிரதேச வேறுபாட்டுடனும் இடம் சார்ந்த மாறுபாடுகளின் காரணங்களையும் பகுப்பாய்வு செய்யும் ஒரு நுட்ப முறையே விவசாயப் புவியியல் என்றார்.

விவசாயப் புவியியல் பரப்பில் ரீதியாக விவசாய நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன, அவை பரப்பியல் ரீதியாக இடத்திற்கு இடம் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதனை இடம்(Place), காலம்(Time) மற்றும் பரப்பியல்(Space) அம்சங்களின் ஊடாக ஆராய்கின்றது.


விவசாயப் புவியியலின் வளர்ச்சி.|The evolution of Agricultural Geography.

கிரேக்கஉரோம காலம் முதலே விவசாயப் புவியியலானது வளர்ச்சியடைந்து வந்தாலும் 20 ஆம் நூற்றாண்டில் குறிப்பாக 1930 ஆம் ஆண்டுகளின் பின்னர்தான் இது தனித்துறையாக (As a separate department) வளர்ச்சியடைந்தது. 

விவசாயப் புவியியல் அறிமுகம் | An Introduction to Agricultural Geography | Importance, Scope & Factors Explained,விவசாயப் புவியியலின் வளர்ச்சி.|The evolution of Agricultural Geography.

விவசாயப்
 புவியியலின் வளர்ச்சி|The evolution of Agricultural Geography

1925 களில் விவசாயப் புவியியலின் வளர்ச்சிக்கான உத்வேகம் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமானது. எனினும் இவ் வளர்ச்சிப் போக்கானது ஐக்கிய அமெரிக்காவிலும்ஐரோப்பாவிலும் வேறுபட்டு காணப்பட்டமை குறிப்பிடதக்கது

புவியியலில், விவசாயப் புவியியல் (Agricultural Geography) என்ற  பிரிவானது 1930 களில் இருந்தே வளர்ச்சியடையத் தொடங்கியது. இதனால் 1930 களின் முன்பு விவசாய புவியியல் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணங்கள் கூற யாரும் முன்வரவில்லை.

 விவசாயப் புவியியலானது விவசாயத்துடனும், புவியியலுடனும் இணைகின்ற தன்மையை (The connection between Agriculture and Geography) 1930 களின் பின்னரே தெளிவாக காணமுடிகின்றது.

முதலாம்இரண்டாம் உலக மகாயுத்தங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பலர் விவசாய புவியியல் சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களில் பின்வருவோர் முக்கியமானவர்கள்.

  • Bker (1926-1933) - வட அமெரிக்காவின் விவசாய பிரதேசங்கள்
  • Jonasson (1925-1926) - ஐரோப்பாவின் விவசாயப் பிரதேசங்கள்
  • Janes  (1928-1930) - தென்னமெரிக்காவின் விவசாய பிரதேசங்கள்
  • Van Valkenvurg (1931-1936) - ஆசியாவின் விவசாயப் பிரதேசங்கள்
  • Taylor (1930) - அவுஸ்ரேலியாவின் விவசாயப் பிரதேசங்கள் 


1930 களில் விவசாய புவியியல் சம்பந்தமான மேற்படி ஆய்வுகள் முக்கியம் பெற்றன. 


இந்த காலப்பகுதியில் விவசாய நிலப்பயன்பாடுகள் பற்றி பல அறிஞர்கள் கவனம் செலுத்த முற்ப்பட்டனர்கள். உதாரணமாக Jones And Whittlesey -1932 காலப்பகுதியில் ஆய்வுகளில் ஈடுப்பட்டனர்.

முதலாம், இரண்டாம் உலகமகா யுத்த காலங்களின் போது ஏற்பட்ட உணவுத்தேவையாது மேலும் பல விவசாய உற்பத்திகளை அதிகரிக்க தூண்டியது இது விவசாய ஆராய்ச்சிகளின் தேவைகளையும் அதிகரித்தன. 

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் தகவல்கள் கிடைப்பனவு அதிகரித்ததனால் புதிய அணுகுமுறைகள் பலவற்றினை பயன்படுத்தும் வாய்ப்புக்கள் ஏற்ப்பட்டன. 

இக்காலப் பகுதியின் பின்னர் ஏற்ப்பட்ட கைத்தொழில் புரட்சியும் , விமானம் மற்றும் மோட்டார் வாகனப் பயன்பாடுகளும் விவசாயம் சம்பந்தமான ஏராளமான தகவல்களைப் பெற்றுக் கொள்ள உதவின. இவை இக்காலப் பகுதியில் விவசாய புவியியலின் வளர்ச்சியை துரிதப்படுத்தின. 

உலங்கு வானூர்திகளின் துணையுடன் சென்றடைய முடியாத இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை பெற முடிந்தது, இந்தவகையில் ஐரோப்பாவிலும் விவசாய புவியியல் சார்ந்த நூல்கள், விவசாய தேசப்பட தொகுதிகள் வெளியிடப்பட்டன. உதாரணம் World Atlas Of Agriculture .

இத்தகைய சந்தர்ப்பத்தில் தனது அரசினையும்நாட்டு மக்களினையும் பஞ்சம்பட்டினிசாவு என்பனவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மெக்சிகோ நாடானது விவசாயம் மீதான ஓர் புரட்சிக்கு தன்னை தயார்படுத்தியது. குறிப்பாக தனது நாட்டின் அதிகரித்த சனத்தொகைக்கான   கோதுமை உற்பத்தியினை தானே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் மெக்சிகோ அரசு தீவிரம் காட்டியது.

இத்தகை புரட்சியினை மேற்கொள்வதற்காக மெக்சிகோ அரசு 1943ஆம் ஆண்டு முதல் விவசாய ஆய்வுகளில் தீவிர போக்கினை கடைபிடிக்க தொடங்கியது.

இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாகவும் நோர்மன் போர்லக்  (Norman Borlaug) என்பவரின் இடைவிடாத ஆய்வுகளின் பலனாகவும் 1943 இல் பசுமை புரட்சி (Green revolution) உலகிற்கு அறிமுகமாகியது.


நோர்மன் போர்லக் (1914-2009)-  பசுமைப்புரட்சியின் தந்தை'

நோர்மன் போர்லக் (1914-2009)-  பசுமைப்புரட்சியின் தந்தை

எனவேதான் பசுமைப்புரட்சியின் தந்தையாக நோர்மன் போர்லக் (Norman Borluck, the father of the Green Revolution) ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

மிகவும் அண்மைக் காலங்களில் விண்வெளிப் பயணங்கள்செய்மதிப் பயன்பாடுகள்(Satellite applications)தானியங்கி தொழிநுட்ப்பம் ( Automotive technology) மற்றும் மரபணு தொழில்நுட்பம்( Genetic engineering) மற்றும் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligenceஎன்பவற்றின் மூலம் விவசாயப் புவியியல் தொடர்பான ஆய்வுகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்ப்பட்டன. 


விவசாயப் புவியியலின் முக்கியத்துவம்|Importance of Agricultural Geography

விவசாயப் புவியியலின் முக்கியத்துவத்தினை(Importance of Agricultural Geography) புவியியலாளர்கள் மற்றும் அறிஞர்கள் பின்வருமாறு முன்வைக்கின்றனர் அவையாவன.


    Importance of Agricultural Geography,விவசாயப் புவியியல் அறிமுகம் | An Introduction to Agricultural Geography | Importance, Scope & Factors Explained,விவசாயப் புவியியலின் வளர்ச்சி.|The evolution of Agricultural Geography.

    • விவசாய பயிர்கள் மற்றும் கால்நடைகளின் இடப்பரவலினை(Distribution of agricultural crops and livestock) ஆய்வு செய்தலும் விவசாய நடவடிக்கைகள்,பயிர் செய்தல் வடிவங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பின் பரவலை ஆய்வு செய்தலும்.
    • விவசாய உற்பத்திகளின் இடம் சார்ந்த  அடர்த்தியினை (Spatial Density)  கண்டறிதல்  இங்கு  செரிவு  மற்றும் ஐது என்ற அடிப்படையில்  இடம் சார்ந்த அடர்த்திகள் ஆய்வு செய்ய  முற்படுகிறது.
    • பயிர் உற்பத்திகளின் செயல்திறன்(Performance of crop production) தொடர்பான ஆய்வுகளில்  ஈடுபடுகிறது இது  பிராந்தியங்களுக்கு இடையே உள்  மற்றும் வெளித்தொடர்பினை உருவாக்கி  விவசாயத்தில் உற்பத்தி விளைச்சலுக்கு காரணமான பண்புகளை ஆராய்கின்றது.
    • விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு பொருத்தமான உத்திகளை முன் வைத்தல் இதன் மூலம் விளிம்பு நிலை விவசாயத் துறையினையும் மற்றும் உற்பத்தி குன்றிய பிரதேசங்களின் அபிவிருத்தியையும் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.
    • விவசாயம் வணிக நிலை நோக்கத்தில் முன்னெடுக்கப்படுவதனால் அதன் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்திய தன்மைகளை புவியியலாளர்கள் அடையாளப்படுத்தி அதன் தடைகளை தகர்த்து விவசாய தொழில் சார் உற்பத்திகளை ஊக்கிவிக்கவும் முனைகின்றது.


    விவசாயப் புவியியலின் நோக்கம் |Objective of Agricultural Geography

    20 ஆம் நூற்றாண்டில் புவியியலில் வளர்ந்த பல உபபிரிவுகளில் ஒன்றாக விவசாயப் புவியியலும் உள்ளது இங்கு விவசாயப் புவியியல் பின்வரும் நோக்கங்களை அடைவதனை பிரதானமாக கொண்டுள்ளது. 

    • விவசாயப் புவியியலை ஆராயும் புவியியலாளர்கள் காலமாற்றங்களுக்கு ஏற்ப விஞ்ஞான தொழிநுட்ப விடயங்களையும் அவதானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். 
    • விவசாய புவியியலானது நிலப்பயன்பாட்டுத் திட்டமிடல்அபிவிருத்தித் திட்டமிடல் (Land use planning, development planning) போன்ற துறைகளுக்கு பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது. 

    விவசாயப் புவியியலானது மூன்று பிரதான தொடர்புகள் பற்றி அடிப்படையில் நோக்குகின்றது. 

    1. பௌதீக சூழலுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் இடையே காணப்படும் தொடர்பு. (The Relationship Between The Physical Environment And Agricultural Activities)
    2. சமூகத்திற்கும் விசாய நடவடிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்பு.( The Relationship Between Society And Agricultural Activities )
    3. ஏனைய கலாசாரசமூகபொருளாதாரஉயிரியல்உயிர்ச் சூழல் விவசாய நிலப்பயன்பாடு(Cultural, social, economic, biological, ecological, agricultural land useபோன்றவற்றுடனான தொடர்புகள். 

    • விவசாயமானது, பொருளாதார நடவடிக்கையாக காணப்படுவதனால் விவசாயப் புவியியலாளர்கள் உற்ப்பத்தி நடவடிக்கையில் மாத்திரம் அன்றி விற்பனை அல்லது சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளிலும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர்
    • திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் (Planning and development activities) என்பவற்றில் தீர்மானங்கள் மேற்கொள்பவர்களும்விவசாய ஆராய்ச்சியாளர்களும்விவசாய நடவடிக்கைகளில் பொருத்தமான மாற்றங்களை ஏற்ப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர். 
    • விவசாய உற்ப்பத்தி அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு முனைபவர்களும் நவீன நீர்ப்பாசன வசதிகளை மேற்கொண்டு வருகின்ற பொறியியலாளர்களும்குடித்தொகை திட்டமிடலாளர்களும் பிரதேச ரீதியிலான ஏனைய விவசாயத் துறையுடன் தொடர்புப்பட்ட நிபுணர்களும் விவசாயப் புவியியல் சம்பந்தமான விடயங்களை அறிய முற்பட்டனர்
    • விவசாயப் புவியியலானது விவசாய விஞ்ஞானத்துடன்(Agricultural Science) மட்டுமன்றி விவசாயப் பொருளாதாரத்துடனும்(Agricultural Economics) தொடர்புப்பட்டுள்ளது. எனவே பின்வரும் அம்சங்களை அறிந்து கொள்வதும் விவசாயப் புவியியலின் நோக்கமாக இருக்கலாம். 
    • உற்பத்தி திறன் வேறுபாடுகள்குறைந்த உற்பத்தி திறனுக்கான காரணங்கள்
    • விவசாய வளங்களை எவ்வாறு உச்ச அளவில் பயன்படுத்துதல்
    • விவசாய உற்ப்பத்திகள் மூலம் எவ்வாறு வறுமையை கட்டுப்படுத்துவது.
    •  பொருளாதார அபிவிருத்தியில் விவசாயப் பங்களிப்பினை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது. 
    • விவசாய நடவடிக்கையால் ஏற்ப்படக் கூடிய விளைவுகளை கண்டறிந்து மற்றும் அவற்றிக்கான மாற்று வழிகளை முன்வைப்பது. உதாரணமாக குறிப்பிடுகையில் உரப்பாவனை சூழல் மாசடைதலை ஏற்ப்படுத்துவதால் இயற்கையான உரப்பாவனையை ஊக்குவித்தல். 

    மேற்   குறிப்பிட்ட   இலக்குகளை   அடைந்து   கொள்வதினை   பிரதானமாக   விவசாயப்   புவியியல்   கொண்டுள்ளது.   அத்துடன்   காலத்திற்கு   காலம்   உலகளாவிய   ரீதியில்   மக்கள்   சந்திக்கும்   விவசாய   மற்றும்   உணவு   நெருக்கடியை   தீர்ப்பதற்கு   ஏற்ற   வகையிலும்   விவசாயப்   புவியியல்   இசைவாக்கம்   அடைந்து   வருவதனை   காணக்கூடியதாகவும்   உள்ளது.


    முடிவுரை

    புவியியலானது விவசாய துறையுடன் மிக நெருக்கமாக இணைந்து பயணிக்கின்றது(Geography is closely intertwined with the agricultural sector). காலத்திற்கு காலம் விவசாயத் துறையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றத்திற்கு புவியியலும் ஒரு அடிப்படை காரணியாக அமைந்துள்ளது.

    உலகில் அதிகரித்து வருகின்ற சனத்தொகைக்கேற்பவும் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பரபியல் ரீதியான தகவல்களை வழங்கி உணவு உற்பத்தி பெருக்கத்திற்கும் விவசாயப் புவியியல் துணை நிற்கின்றது.

    இருப்பினும் விவசாயப் புவியலும் பல்வேறு வகையான இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமையினை நாம் மறக்கவியலாது. இருப்பினும் காலம் மாற்றத்திற்கு ஏற்ப புதுமைகளை உள்வாங்கிக் கொள்ளும் புவியியல் அத்தகைய தடைகளை தகர்த்து இன்று மிகப் பிரதான துறையாக எழுச்சி பெற்று வருகிறது.

    Post By:Puvitips


    Post a Comment

    புதியது பழையவை