Distance Between Earth and Sun: Understanding Aphelion & Perihelion,பூமிக்கும் சூரியனுக்குமான தூரத்தை


பூமிக்கும் சூரியனுக்குமான தூரத்தை விளக்கும்  அபெலியன் - பெரிஹேலியன் தோற்றப்பாடுகள்| Distance Between Earth and Sun: Understanding Aphelion & Perihelion

புவியியல் கற்கையானது நாம் வாழும் புவி கோளத்தின் உள்ளக அமைப்புகளையும், மேற்பரப்பு அம்சங்களையும் (The Earth's surface features and its interior) ஆராயும் அதே சமயம் புவிக்கு அப்பால் உள்ள விண்வெளி விடயங்களையும் ஆய்வு செய்வதில் (space exploration) புவியியல்  கவனம் செலுத்துகிறது.


இது நட்சத்திரம் [stars], வளிமண்டலம் [atmosphere], சூரியக் குடும்பம் [solar system], பால்வீதி [Galaxy -Milky Way] என அதன் ஆய்வு பேரண்டம் [universe] வரை விரிந்துக் கொண்டுச் செல்கிறது என்றால் அது மிகையில்லை.

அதற்கேற்ற வகையில் ஆரம்பத்தில் சந்திரனை [Moon] ஆய்வு செய்து அதில் தரையிறங்கிய மனிதன் இன்று சூரியனையும்[Sun] தன் ஆய்வுப் பொருளாக்கி அதனை ஆராய்வதற்கு பல்வேறு திட்டங்களை முன் வைத்துள்ளான்.

அந்த வகையில் சூரிய ஆய்வு தொடர்பாக முன்வைத்த - புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தினையும் [The distance between the Sun and our Earth] அது தொடர்பான அபெலியன் - பெரிஹேலியன் தோற்றப்பாடு முன்வைப்புகளையும்|Understanding Aphelion & Perihelion ஆராய்வதாக  இப்பதிவு அமையவுள்ளது.


சூரியன் என்றால் என்ன? |  What is Sun?

புவியில் உயிர் வாழ்விற்கு மிகவும் அவசியமான சக்தியாக சூரியன் உள்ளது.மனிதன் மாத்திரமின்றி தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும் [For life and plant reproduction] சூரியன் முதன்மையான இயற்கை சக்தியாக உள்ளது.

சூரியன் பிளாஸ்மா[Plasma] நிலையில் உள்ள மிக மிக வெப்பமான வாயுக்களை கொண்டுள்ளதோடு, அதன் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500 பாகை செல்சியஸிற்கும் [The surface temperature is over 5,500 degrees Celsius.] அதிகமாகும். இங்கு அதிக அளவில் ஹைட்ரஜன் [Hydrogen] மற்றும் ஹீலியம் [Helium] ஆகிய வாயுக்கள் காணப்படுகின்றன.

சூரியனானது நாம் வாழும் புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்கு பெரியதாகும்[The Sun's diameter is about 109 times that of Earth] மேலும் இதன் விட்டம் 14 லட்சம் கிலோ மீட்டர்கள் [Sun's diameter Approximately -1,391,000  kilometers] ஆகும்.

சூரியனின் ஈர்ப்பு சக்தியானது புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். இதன் ஈர்ப்பு சக்தியின் [Gravitational force] மூலமாக சூரிய மண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

சூரியனில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்காந்த அலைகள் [Electromagnetic waves] காரணமாக அவை சூரிய கதிர்களை உருவாக்கி பரவல் அடைய செய்கிறது. இவற்றில் 200 கோடியில் ஒரு பங்கு மாத்திரமே பூமியை வந்தடைகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவை பல்வேறு அலைநீளங்களில்[Wavelengths] இடம்பெறுகின்றன இவற்றை அகச்சிவப்பு கதிர்கள்,மைக்ரோ கதிர்கள் ,ரேடியோ கதிர்கள் என வகைப்படுத்துகிறோம்[radio waves, microwaves, infrared, visible light, ultraviolet, X-rays, and gamma rays] இவையே சூரியனின் நிறத்திற்கும் காரணமாகும்.


Sun and Earth,The Sun's actual color,Distance Between Earth and Sun: Understanding Aphelion & Perihelion,பூமிக்கும் சூரியனுக்குமான தூரத்தை
The Sun's actual color

 பொதுவாக சூரியனின் நிறத்தினை சிவப்பு[Red] ,மஞ்சள்[Yellow ] மற்றும் இளஞ்சிவப்பு[Orange ] என நாம் உருவகித்தாலும் சூரியனின் உண்மையான நிறம் வெள்ளையே [The Sun's actual color is white] ஆகும்.


சூரியனின் நெருப்பும் புகையும்- Fire and Smoke In The Sun

சூரியனில் உண்மையாகவே நெருப்பு காணப்படவில்லை என்றே அறிஞர்கள் கூறுகின்றார்கள் சூரியனில் உள்ள அணுக்களின் சங்கமம் (Nuclear Fusion) மற்றும் ரசாயன எரிப்பு (chemical burning) காரணமாகவே அத்தகைய ஒரு நெருப்புக் குழம்பு போல் எமக்கு காட்சியளிக்கின்றது. அத்துடன் ஹைட்ரஜன் (H)  அணுக்கள் மற்றும் ஹீலியம் (He) அணுக்கள் போன்றன ஒன்றிணையும்  போது பிரகாசமான ஒளி மற்றும் வெப்ப ஆற்றல் வெளியாகுவதாக குறிப்பிடுகின்றார்கள்.

ஏதாவது ஒரு பொருள் எரியும்போது அதில் காணப்படும் அணுக்கள் முழுமையாக ஒக்சிசனுடன்(O2) சேராமல் இருந்தால் அப்பொருளிலிருந்து தூசு துகள்கள், காபன் துகள்கள் போன்றவை உருவாகும் அதுவே புகையாக காட்சியளிக்கும்.

ஆனால் சூரியனில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் மற்றும் அங்கு இடம்பெறும் அணு சங்கமத்தில்(Nuclear Fusion)  எவ்விதமான ஆக்சிஜன்(Oxygen) எரிப்பும் நடைப்பெறவில்லை. அங்கு ஹைட்ரஜன்(Hydrogen)ஹூலியம்(Helium) மற்றும் அணுசங்கமமே(Nuclear Fusion)  நடக்கின்றது.  அதனால் சூரியனில்  புகை வாயுக்கள் உருவாகவில்லை.


Fire and Smoke In The Sun,If the Sun is burning, why is there no smoke and fire?
Fire and Smoke In The Sun


சூரியனில் இடம்பெறும் அணு சங்கமும் அதனால் வெளியிடப்படும் வெப்பம் மற்றும் ஒளி ஆகியனவே எமக்கு புகை போன்றதாக தோற்றமளிக்கின்றது ஆகவே அங்கு எந்த ஒரு புகை மண்டலமும் மற்றும் புகை வாயுக்களும் உருவாகவில்லை.

சூரியனும் புவியும் | Sun and Earth

புவி சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் ஒன்றாகும்[Earth is one of the eight planets that revolve around the Sun.]. சூரிய குடும்பத்தில், சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன்[Mercury], பின்னர் வெள்ளி[Venus] அதற்குப் பிறகாக புவி[Earth] அமைந்துள்ளது.அதன் பின்னர் செவ்வாய்[Mars] -வியாழன்[Jupiter] -சனி[Saturn]யுரேனஸ்[Uranus]-நெப்டியூன்[Neptune] ஆகியனவும் வரிசையாக மையம் கொண்டுள்ளன.


Solar-System - சூரியக் குடும்பம்,சூரியனும் புவியும் | Sun and Earth,Sun and Earth,The Sun's actual color,Distance Between Earth and Sun: Understanding Aphelion & Perihelion,பூமிக்கும் சூரியனுக்குமான தூரத்தை
Solar-System - சூரியக் குடும்பம்


பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தினை அளவிடும் முதல் முயற்சிகள் | Who first measured the distance from the Earth to the Sun?

நாம் வாழும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தினை பல நூற்றாண்டுகளாக விண்ணியல் ஆய்வாளர்களும், புவியியலாளர்களும், கணித மேதைகளும் ஆய்வுக்கூட்படுத்தி உள்ளனர் அந்த வகையில் முதலாவதாக புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தினை கிறிஸ்துக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் சேர்ந்த அரிஸ்டாட்டர்காசால் (Aristarchus of Samos in the 3rd century BC) ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இவர் கி.மு 3ஆம் நூற்றாண்டில் (சுமார் கிமு 310–230) வாழ்ந்த ஒரு கிரேக்க வானியலாளர். இவர் பலதரப்பட்ட வானியல் கோட்பாடுகளை |Astronomical principles எமக்கு வழங்கி உள்ளார் .


ஹீலியோசென்ட்ரிக் கோட்பாடு (Heliocentric Model)

இந்த கோட்பாடானது சூரியன் மையத்தில் உள்ள ஒரு மாபெரும் சக்தியாகும் அதனை சுற்றி பூமியும் ஏனைய கோள்களும் சுழல்கிறன என்று கூறி இதற்கு ”சூரிய மைய முறை” என்றார் பிற்காலத்தில் கொப்பணிக்கள்| Copernicus,கலிலியோ| Galileo மற்றும் கெப்லர்| Kepler ஆகியோர் இதனை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.


புவி-சூரியன் தூரம் அளவிட முயற்சி | Distance from the Earth to the Sun

அரிஸ்டார்கஸ் |Aristarchus சந்திர கிரகணத்தின்| lunar eclipse போது நிலா மற்றும் சூரியனுக்கு இடையில் ஏற்படும் கோணங்களை ஆய்வுக்குட்படுத்தி சூரியன் புவியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதனை கணித்தார். 


Aristarchus,Solar-System - சூரியக் குடும்பம்,சூரியனும் புவியும் | Sun and Earth,Sun and Earth,The Sun's actual color,Distance Between Earth and Sun: Understanding Aphelion & Perihelion,பூமிக்கும் சூரியனுக்குமான தூரத்தை

Aristarchus' Distance from the Earth to the Sun model


எனினும் அக்காலத்தில் போதிய உபகரணங்களும் கருவிகளும் இல்லாததினால் இவரால் துல்லியமாக கூற முடியவில்லை.


புவிக்கும்-சூரியனுக்குமான தூரம் என்ன? | What is the distance between Earth and Sun?

சூரியனுக்கும் நாம் வாழும் பூமிக்கும் இடையிலான சராசரி தூரம்,[The average Earth-Sun distance] 149 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள்|Million square kilometers ஆகும் (93 - மில்லியன் மைல்கள்.) இதனை விண்வெளி ஆய்வாளர்கள் AU| Astronomical Unit அளவில் குறிப்பிடுகின்றனர்.

The average Earth-Sun distance,Aristarchus,Solar-System - சூரியக் குடும்பம்,சூரியனும் புவியும் | Sun and Earth,Sun and Earth,The Sun's actual color,Distance Between Earth and Sun: Understanding Aphelion & Perihelion,பூமிக்கும் சூரியனுக்குமான தூரத்தை

The average Earth-Sun distance



அஸ்டோனொமிக்கல் யூனிட் | AU| Astronomical Unit

அஸ்டோனொமிக்கல்| Astronomical Unit அளவிடானது வானவியலில் அதிக பயன்பாடுடையதாகும், இது பூமி மற்றும் சூரியனுக் கிடையிலான சராசரி தூரத்தை கணிப்பதற்காக அமைந்துள்ளது அத்துடன் சூரியனிலிருந்து ஏனைய கோள்கள் எவ்வாறான தூரத்தில் அமைந்துள்ளன| measuring distances within the Solar System or around other stars.  என்பதனையும் இது கணக்கிட  பயன்படுகின்றது.

1 AU = 149,597,870.7 கிலோமீட்டர் (அல்லது = 1.496 × 10 km)
மைல் அளவில்
= 92,955,807 மைல்


புவிக்கும்-சூரியனுக்குமான தூரம் மாறுபடுமா? | Is the distance between Earth and sun changing?

ஆம்,புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் எப்பொழுதும் ஒரே அளவிலாதாக காணப்படாது புவி நீள் வட்ட பாதையில் | Elliptical  சூரியனை சுற்றிக்கொண்டிருப்பதனால் அந்த நீள் வட்ட பாதையின் தூரத்திற்கு ஏற்ப இவ்விடைவெளி மாறுபட்டதாக காணப்படும். இவை மாதங்களுக்கு மாதம் மாறுப்படுவதனை கீழ்வரும் அட்டவணை சுட்டி நிற்கின்றது.


The distance between Earth and Sun ,The average Earth-Sun distance,Aristarchus,Solar-System - சூரியக் குடும்பம்,சூரியனும் புவியும் | Sun and Earth,Sun and Earth,The Sun's actual color,Distance Between Earth and Sun: Understanding Aphelion & Perihelion,பூமிக்கும் சூரியனுக்குமான தூரத்தை

The distance between Earth and Sun 


இவ்வாறு  புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூர இடைவெளியினை அடிப்படையாகக் கொண்டு 

  • பேரி ஹீலியம் [Perihelion
  • அப்ஹிலியம் [Aphelion என்ற தோற்றப்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

பேரி ஹீலியம் மற்றும் அப்ஹிலியம் | What is perihelion and aphelion


பேரி ஹீலியம்[ perihelion] :சூரிய-புவி தூர அளவானது பூமியின் சுற்றுப்பாதைக்கேற்ற வகையில் மாறுபடுகின்றது அத்தன்மையில் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதனை பேரி ஹீலியம்-perihelion என்கிறார்கள். அப்பொழுது சராசரி தூர அளவானது 147 மில்லியன் கிலோமீட்டர்கள் (147.5 million kilometres.) ஆகும் இது ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 5-ம் தேதி வரை காணப்படும் .



பேரி ஹீலியம் மற்றும் அப்ஹிலியம்,perihelion and aphelion
பேரி ஹீலியம் மற்றும் அப்ஹிலியம்| Perihelion and Aphelion


அப்ஹிலியம்[Aphelion] : பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் அதிகரிப்பதனை அப்ஹிலியம்- Aphelion என்பர். இதன் போது சூரியனிலிருந்து புவி 152 மில்லியன் கிலோமீட்டர்(152 million kilometers.)  தூர இடைவெளிக்கு செல்லும்.

இங்கு புவி சூரியனை நீள்வட்ட பாதையில் (Elliptical சூரியனிலிருந்து ஐந்து மில்லியன் கிலோ மீட்டர் தூரம் வழமையானதை விட தொலைவில்அமைவிடம் கொண்டிருக்கும்.

அப்ஹிலியமானது ஜூலை மாதத்தில் அதிகரிக்கும் குறிப்பாக ஜூலை 3 தொடக்கம் 5 வகையான காலப்பகுதியில் புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரமானது மிகவும் அதிகமாக காணப்படும்.


அப்ஹிலியம்  மற்றும்  பேரி ஹீலிய  விளைவுகள்| What are the effects of aphelion and perihelion?

பேரி ஹீலிய விளைவுகள்- Effects of perihelion

சூரிய ஒளி [Sunlight] : புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருக்கும் இக்காலப்பகுதியில் சூரிய ஒளி சற்று அதிகமாக வரும், குறிப்பாக சூரியனிலிருந்து வரும் ஒளியின் தீவிரம் சுமார் 3–4% அதிகரித்து காணப்படும்.

சுழற்சி வேகம் [Rotation speed]: கெப்லரின் இரண்டாம் விதிப்படி (Kepler’s 2nd Law): “பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் போது அதின் சுழற்சி வேகம் அதிகமாகும்.” இதனால் ஜனவரி மாதத்தில் பூமி சிறிது வேகமாகச் சுழல்வதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

வானிலை வேறுபாடுகள்[Weather differences]:  வானிலை தோற்றப்பாடுகளில் சிறிதளவான வேறுபாடுகளை காணக்கூடியதாக இருக்கும். இங்கு வெப்பநிலை அதிகமாக இருப்பது போல தோன்றினாலும்,பருவங்கள் சூரிய தூரத்தால் தீர்மானிக்கப்படு வதில்லை மாறாக பூமியின் சாய்வே (axial tilt) பருவங்களை தீர்மானிக்கின்றன.


அப்ஹிலியம் விளைவுகள்- Effects of aphelion

வெப்ப நிலை விளைவுகள்[Temperature effects] : சூரியனிலிருந்து புவி தூரத்தில் உள்ளதினால் இக்கால பகுதி சற்று வெப்பம் குறைந்ததாக காணப்படும் ஆனாலும் இது காலநிலையில் எவ்வித பாரிய தாக்கத்தினையும். ஏற்படுத்தாது.

கதிர்களின் தாக்கம்[Solar radiation] :பூமி சூரியனிலிருந்து தூரத்தில் உள்ளதனால் சூரிய கதிர்களின் இக்காலப் பகுதியில் சற்று தளர்ந்ததாக காணப்படுவதுடன் சூரிய ஒளியின் அளவும் சற்று வீரியம் குறைந்ததாக காணப்படும். குறிப்பாக சூரியனின் தோற்றப் பரப்பளவு சுமார் மூன்று சதவீதம் குறைவது இக்காலப் பகுதியில் அவதானிக்கப்படுகின்றது.

சுழற்சி வேகம் [Rotation speed]: புவி மற்றும் சூரியனின் இந்தத் தூரத்தின் காரணமாக புவியின் சுழற்சி வேகம் சற்று  குறைவடைகிறது இதனால் வடக்கு கோலத்தின் கோடைக்காலம் சிறிது நீள்கிறது சுமார் நான்கு தொடக்கம் ஐந்து நாட்கள் இதன் போது அதிகரிக்கிறது, இதனால்  வருடத்தின் நீளமும் அதிகரிக்கிறது.

காலநிலை விளைவுகள்[Climate effects]: இதன் போது பாரிய அளவிலான காலநிலை சீர்கேட்டு விளைவுகள் ஏற்படுவதில்லை எனினும் தெற்கு கோளத்தில் குளிர்காலம் நீண்டதாகவும் அதே சமயம் சூரிய வெளிச்சம் குறைவாக கிடைப்பதினால் சிறிது குளிராகவும் காணப்படும்

Post by: Puvitips


Post a Comment

புதியது பழையவை