புவியியல் கற்கையில் நகர ஆய்வின் முக்கியத்துவம்| Importance of the Urban Study
புவியின் அனைத்து விடயங்களையும் ஆராயும் கற்கை |Geography as a study that explores everything என்ற வகையில் புவியியல் நகர செயற்பாடுகளையும் அவற்றுடன் இணைந்து அவற்றுக்கும் இயற்கை சூழலுக்கும் இடையிலான இடைத் தொடர்புகளையும் |Urban Activities And The Natural Environment ஆராய்ந்து அங்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் சாத்தியமான ஆலோசனைகளையும் |Solutions to problems முன் வைக்கின்றது.
புவியியலின் கற்கையின் ஆரம்பக் காலந் தொடக்கம் நகரங்களின் உருவாக்கம் , அவற்றின் செயற்பாடுகள் மற்றும் அதன் வடிவமைப்பு என்பன தொடர்பாக|Regarding the formation of cities
and their functions பல்வேறு வகையிலான ஆய்வு முயற்சிகளும் கோட்பாட்டு விளக்கங்களும் முன்வைக்கப்பட்ட வண்ணமே உள்ளன.
இத்தகைய ஆய்வுகளின் பலனாக புவியியல் கற்கையில் நகரப் புவியியல்|Urban Geography என்ற தனித்ததொரு கற்கைநெறி உருவாக்கம் பெற்று பாரிய வளர்ச்சியடைந்ததுடன் உலகின் அனைத்து கற்கை மையங்களிலும் இது உள்ளீர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே இக்கட்டுரை நகர புவியியல் என்றால்| What
is the field of urban geography? என்ன அதன் உள்ளடக்க அம்சங்கள்| Features என்ன மற்றும் நகர புவியியலின் வளர்ச்சி கட்டங்கள்|
stages
of development என்பனவற்றினை
ஆராய்வதாக அமைக்கப்பட்டுள்ளது.
நகரப் புவியியலின் தோற்றம் | The Origins of Urban Geography – History, Evolution & Key Concepts
விவசாய மற்றும் கால்நடை தொழிலுடன் ஆரம்பமாகிய மனித சமுதாயம் பின்னாளில் பண்டமாற்று முறை அதன் பினனரானபணப்புழக்கம் சந்தை உற்பத்தி போன்ற காரணிகளின் விளைவுகளுடன் அதிகரித்த மக்கள் தொகையும் ஒன்றிணைந்து நகர செயல்பாடுகளை(urban activities) ஊக்குவித்தன எனலாம்.
தாவரங்களையும் விலங்குகளையும் வளர்ப்பதுடன் பல புதிய விவசாய கருவிகளையும் கண்டுபிடித்ததுடன் நவீன மயமாக்கல் (Modernization) மக்கள் சமூகத்துடன் ஒன்றிணைய தொடங்கிய காலகட்டமாக அது இருந்தது.
நவீன மயமாக்கள்(Modernization) விருத்தியின் காரணமாக விவசாய அமைப்பிலிருந்து விலகி சிறப்புத் தொழில்களை உருவாக்க மக்கள் முனைந்தனர் (People tended to create specialized industries) இதன் காரணமாக விவசாயமல்லாத தொழில் முனைவுகள்(Non-agricultural enterprises) சமூகத்தில் எழுச்சியடைய தொடங்கின.
இத்தகைய விளைவுகளின் காரணமாக மக்கள் கிராமத்திலிருந்து விலகி தனியான குடியிருப்புகளையும் அக்குடியிருப்புக்களுக்கிடையே தொடர்புகளை உருவாக்கியதன் காரணமாக சுமார் கிறிஸ்த்துக்கு முன் 4000 ஆண்டளவில் நகர் சார் குடியிருப்புகள்(Urban settlements) அதிகமாக உருவாகத் தொடங்கின.
![]() |
| Ancient-Town |
இவ்வாறு தோற்றம் பெற்ற நகர அமைப்புகள் அதிகளவான மக்கள் அடர்த்தியினையும், சிக்கலான குடியிருப்பு கோலங்களையும்(Population density and complex residential areas), மக்களுக்கு தேவையான சிறப்பு தொழில்களையும் அத்துடன் சேவைகளையும் (Specialized industries and services) வழங்கும் மையங்களாக விரிவாக்கமடைந்தன.
ஒரு நகரத்தை சுற்றி இடம்பெறும் வர்த்தக செயற்பாடுகள் மற்றும் ஏனைய ஈர்ப்பு விசை காரணிகள் என்பன நகர மையங்களை நோக்கி மக்களை உள்வாங்குகின்றன.
பல கிராமங்கள் ஒன்றிணைந்து நகரப் பகுதிகளாக மாற்றமடைவதுடன் கிராமங்களின் வர்த்தக செயற்பாடுகள் நகரங்களை நோக்கி ஒருங்கிணைக்கப்படுகின்றன.அத்துடன் நகர மையப் பகுதியில் இருந்து சேவைகளும் உற்பத்தியும் ஏனைய பகுதிகளுக்கு சென்றடைய கூடியனவாக நகர அமைப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நகரங்கள் வர்த்தகம்,வணிகம்,தொழில்நுட்பம்,கண்டுபிடிப்பு அரசியல்,கல்வி,மதம் மற்றும் கலாச்சார மையங்களாக (Cities develop as centers of trade, commerce, technology, invention, politics, education, religion, and culture) உருவாக்கமடைகின்றன.
பின்னர் 18 ஆம் நூற்றாண்டுகளில் உலகம் முழுதும் இடம்பெற்ற தொழில்மயமாக்கம் (Industrialization), இயந்திர மயமாக்கம் (mechanization) மற்றும் நகரமயமாக்கம் (urbanization) என்பன இணைந்து செயற்பட்டதன் காரணமாக நகரப்புற வாசிகளின் மக்கள் தொகை உலக அளவில் பாரிய விருத்தியினை கண்டது.
இதனை தொடர்ந்து தொழிலாளர் சந்தை உற்பத்தி துறையில் இருந்து சேவைகள் மற்றும் தகவல் துறைகளுக்கு (Services And Information Sectors) மாற்றமடைந்த காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது.
மேலும் இங்கு செயற்பாடுகள் அனைத்தும் நகரங்களை நோக்கி மையம் கொண்டதுடன் கிராமப்புறத்தில் இருந்து நகர்ப்புற இடப்பெயர்வையும்(Urban migration) இவை துரிதப்படுத்தின எனாலம்.
வரலாற்றின் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து நகர உருவாக்கம்(City formation), நகர விருத்தி(Urban development), நகர உட்கட்டமைப்பு(City infrastructure) என்பனவற்றுக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றாலும் நவீன நகர செயற்பாட்டினை 18 ஆம் நூற்றாண்டின் கைத்தொழில் புரட்சிக்கு(Industrial Revolution) பின்னரே தெளிவாக அடையாளப்படுத்த முடியும்.
![]() |
| Historical Context of Urban Development |
இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் மில்லியன் நகரங்களின்(Million Cities) எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துவருகின்றன. அத்துடன் இன்னும் சில தசாப்தங்களில் ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் நகர சனத்தொகையிலும் துரித அதிகரிப்பு ஏற்படும் என ஐக்கிய நாடுகளின் உலக நகராக்கள் மீளாய்வில்(The United Nations Global Cities Review) கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு நகர செயற்பாடுகள் அதிகரித்ததன் விளைவாக நகரம் தொடர்பான ஆய்வுகள் புவியியலில் அறிமுகப்படுத்த தொடங்கின.பின்னர் நகரங்கள் சமபந்தமாகவும் அதன் உள்ளடக்கங்கள் சம்பந்தமாகவும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆக்கங்கள் எழுதப்பட்டன.
இவ்வாறாக வளர்ச்சியடைந்த நகர சம்பந்தமான கற்கைநெறி 1960 களுக்கு பின்பு புவியியல் சிந்தனையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு நகரப்புவியியல்|Urban Geography என்ற தனித்தொரு கற்கை உருவாக்கமடைய காரணமாகியது.
நகர்ப்புற புவியியல் என்பது புவியியலின் ஒரு துணைப் பிரிவாக விருத்திப் பெற்றது, இது நகரங்கள் மற்றும் நகர்ப்புற செயல்முறைகள் பற்றிய ஆய்வில் கவனம் செலுத்துகிறது(It focuses on the study of cities and urban processes.). நகரங்களின் இடஞ்சார்ந்த அமைப்பு, அவற்றின் வளர்ச்சி மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் மனித மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆராய்கிறது.
நகரப் புவியியல் வரைவிளக்கணங்கள் | Definition of Urban Geography – Meaning, Scope & Key Concepts
உலகில் நகர பகுப்பாய்வின் ஆரம்ப கட்டங்கள் கிரேக்க நாகரீக காலத்தில் அவதானிக்க கூடியதாக உள்ளது அங்கு வாழ்ந்த தத்துவஞானிகளான| philosophers பிளேட்டோ அரிஸ்டோட்டில்( Plato and Aristotle) என்பவர்கள் நகர வடிவம் நகர அரசுகள்[city-states] மற்றும் மக்கள் தொகைக்கும் அதன் இடம் சார்ந்த அமைப்புகளுக்கிடையிலான உறவுகளை[Relationship between Population and urban structure] தங்களுடைய கருத்தின் மூலமாக முன் வைத்துள்ளனர்.
ஸ்ராபோ(Srabo) என்ற புவியியலாளர் நகரங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
1793 ம் ஆண்டு வில்லியம் பிடெறிஜ் மார்ச்ஜா என்பவர் லண்டக் நகரம் பற்றியும் பிறிஸ்ரல் நகரம் அதன் குடித்தொகை அளவு பருமன் போன்றன சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்டார்.
நகரப் புவியியல் என்பது புவியின் மேற்பரப்பில் நகர்ப்புற செயற்பாடுகள் எவ்வாறு புவியியல் அம்சங்களுடன் தொடர்புப் படுகின்றன என்பதை பற்றிய கற்கையாகும்- ராபர்ட்எரிக் டிக்கின்சன் (1960)- Robert Eric Dickinson (1960)
நகரப் புவியியல் என்பது நகர குடியிருப்பின் வேறுபாடுகளை ஆராயும் தனித்துவமான உட் பிரிவுகளைக் கொண்ட மிகவும் சிக்கலான ஆய்வுத்துறையாகும். சி.எஃப். கோன் (1954) C.F. Kohn (1954)
நகரங்களின் தளம்,பரிணாமம்,அமைப்பு மற்றும் அவற்றின் வகைப்பாடு என்பவனவற்றை உள்ளடக்கிய கற்கை நெறி. -ஜி.டெய்லர் G. Taylor
நகர்ப்புற புவியியல் என்பது உண்மையில் நகரங்கள் மற்றும் அதன் அனைத்து புவியியல் அம்சங்களின் வளர்ச்சி பற்றிய தீவிர ஆய்வாகும்- எல்.டி. ஸ்டாம்ப்- L.D. Stamp
நகரங்களின் வடிவங்கள் மற்றும் அவற்றுக்கிடையிலான உறவுகளை விளக்குவதுடன் மறுபுறம் நகரங்கள் மற்றும் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளுக்கு எவ்வாறு சேவை செய்கின்றன என்ற உறவினை விலக்குகின்றது- ஹரோல்ட் எம். மேயர் (1967) Harold M. Mayer (1967)
நகரப் புவியியலின் நோக்கம்- Scope of Urban Geography
நகர்ப்புற புவியியலின் நோக்கம் பரந்த அளவில் உள்ளது மற்றும் பல முக்கிய அம்சங்களையும் அது உள்ளடக்கியது:![]() |
| Scope of Urban Geography |
- நகரப் புவியியல், நகரங்கள் மற்றும் நகரங்களின் பரவலையும், அவற்றுக்கிடையிலான சமூக-இடஞ்சார்ந்த ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை விளக்க முயல்கிறது (The spread of cities and towns, and the socio-spatial similarities and differences between them.).
- நகரங்களின் தளம் பரிணாமம் அமைப்பு மற்றும் அவற்றின் வகைப்பாடு என்பவனவற்றை உள்ளடக்கி ஆராய்கின்றது.(Site evolution structure and their classification)
- நகரங்கள் மற்றும் அவற்றின் புவியியல்(Cities and their geographical features) அம்சங்களுக்கிடையிலான இடைத்தொடர்பினை ஆராய்கின்றது.
- நகரப் புவியியல் ஆனது ஒருபுறம் நகர வடிவங்கள் மற்றும் அவற்றுக்கிடையிலான உறவுகளை விளக்குவதுடன் மறுபுறம் நகரங்கள் மற்றும் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளுக்கு நகரங்கள் எவ்வாறு சேவை செய்கின்றன என்ற உறவினை தெளிவாக்குகின்றது.
- நகரப் பகுதிகள் மையங்களாகப் பரிணமித்து தன்னை சுற்றியுள்ள பகுதிகளுக்கான சேவை மையங்களாக (Service Centers) மாறும் தன்மையினை ஆராய்கின்றது.
- நகரங்களின் உருவாக்கம் மற்றும் நகரங்களின் பரவல் அவற்றிற்கிடையிலான சமூக மற்றும் இடம் சார்ந்த ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளையும் விளக்க முயல்கிறது.
- நகரப் புவியியல் நகரங்களின் தோற்றம்,இருப்பிடம்,வளர்ச்சி மற்றும் அவற்றின் செயற்பாடு என்பனவற்றினை ஆராய்வதுடன் அவற்றிற்கு வெளியேயான தொடர்புகளையும் இணைப்பு விழிகளையும் ஆராய முற்படுகிறது.
- இது நகர நிலப் பயன்பாடு,மனித ஆக்கிரமிப்பு மற்றும் சூழல் அம்சங்கள் எவ்வாறு நகர்ப்புற நடவடிக்கைகளை வரையறுக்கிறன என்பதையும் வெளிக்கொணர முயற்சிக்கிறது
- புவியியல் பரப்பில் நகர வளர்ச்சியினதும் மற்றும் நகரமயமாக்களின் அளவினையும் நகரப் புவியியல் பகுப்பாய்வு செய்கிறது.
- நகர மற்றும் உபநகர பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட கலாச்சார அம்சங்களுக்கும் இயற்கை சூழலுக்கும் இடையிலான இடைத்தொடர்புகளை நகர புவியியல் ஆராய்கின்றது.
- நகரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் மனித வாழ்க்கையை பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான துறையாகும்.
- நிலையான நகர்ப்புற சூழல்களைத் திட்டமிடுவதிலும்(sustainable urban environments), நவீன நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்களை(Challenges facing modern cities) தீர்பதற்கும் இது முக்கிய பங்கு வகிக்கிறது
நகரப் புவியியலின் முக்கியத்துவம்- The importance of urban geography.
- நகரமயமாக்கல் மற்றும் நகர வளர்ச்சி| Urbanization and urban development என்பனவற்றினை ஆராய முனைகின்றது. இங்கு நகரங்களின் வளர்ச்சி முறைகள் அவற்றின் விரிவாக்கம் என்பனவற்றுடன் வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளின் நகராக்கப் போக்குகளை மதிப்பீடு செய்கிறது.
![]() |
| நகரங்களின் வளர்ச்சி முறைகள் |
- நகர்ப்புற அமைப்பு|Urban structure மற்றும் அவற்றின் நில பயன்பாட்டு மாதிரிகளை பகுப்பாய்வு செய்தல்.
- நகரத் தோற்றப்பாடுடன் தொடர்புடைய மாதிரி அமைப்பு முறைகளையும் குடியிருப்பு|Residential,வணிக தொழில்துறை மண்டலங்களையும் |commercial and industrial zone,நில பயன்பாட்டு முறைகளின் மாற்றத்தினையும்|changes in land use patterns ஆராய்தல்.
- நகர்ப்புற மக்கள் தொகை,மக்கள் தொகை அடர்த்தி,இடப்பெயர்வு மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் பிரச்சனைகள்(Urban population, population density, migration and problems caused by population growth) முறைசாரா குடியேற்றங்கள்(சேரி) மற்றும் நகரங்களுக்குள் இடம்பெறும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அடையாளப்படுத்துகின்றது.
- நகர்ப்புற பொருளாதாரம்,பொருளாதார வளர்ச்சி(Urban economy, economic development) மற்றும் உலகமயமாக்களின்(Globalization) செல்வாக்கினை ஆராய்கின்றது.
- நகரப்புறங்களில் தொழில்மயமாக்கல்,சேவைத்துறை மற்றும் வேலை பகிர்வு(Industrialization, service sector and job sharing) என்பனவற்றின் தன்மைகள்.
- உட்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளின் மேம்பாடு(Development of infrastructure and urban transport systems) பொதுப் போக்குவரத்து|Public transport,
- நெடுஞ்சாலைகள்|highways,
- நகர்ப்புற இயக்கம்|urban mobility மற்றும்
- போக்குவரத்து தொடர்பான சவால்கள்| transportation-related challenges
- நகர உட்கட்டமைப்பு|Urban infrastructure போன்றவற்றினை ஆராய்தல்.
- நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நவீன ஸ்மார்ட் நகரங்களின்|Urban planning and modern smart cities தேவைப்பாட்டினை உலக நாடுகளுக்கு அமுல்படுத்துதல்.
- நகர அபிவிருத்தியில் அரசின் பங்களிப்பு மற்றும் அரசியல் நிலைத்தன்மையினை உறுதிப்படுத்துதல்.
- நகர்ப்புறங்களில் தொழில்மயமாக்கல் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்(Environmental problems) குறிப்பாக நில,நீர்,காற்று மாசுபாடுகளை குறைப்பதற்கான ஏதுக்களை முன்வைத்தல்(Proposing measures to reduce land, water and air pollution.).
- நகரங்களில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் தோற்றுவிக்கப்படும் வெப்பத்தீவுகள்(Heat islands caused by climate change) போன்றவற்றின் பிரச்சினைகளையும் சுற்றுச்சூழல் சீரழிவை குறைப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களையும் இது முன் வைக்கின்றது.
- நகர்ப்புற சூழலில் சமூக மற்றும் கலாச்சார அம்சங்கள் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சமூகத் தொடர்புகள் பற்றிய ஆய்வினை மேற்கொள்கின்றது.
- சமூக சார் பிரச்சினைகள்,சமூக நோய்கள்,வறுமை மற்றும் சமத்துவமின்மை(Social problems, social diseases, poverty and inequality) போன்ற பிரச்சனைகளையும் எடுத்துக்காட்டுகின்றது.
- நகர்ப்புற புவியலின் எதிர்கால அம்சங்களான ஸ்மார்ட் சிட்டி மற்றும் தொழில்நுட்ப நகரங்கள்(Smart cities and technology cities) என்பனவற்றுடன் உலகமயமாக்கலிணையும் ஒன்றிணைத்து ஆராய முற்படுகின்றது.
- காலநிலை மாற்றம்,இயற்கை இடர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் குற்ற செயற்பாடுகள் பயங்கரவாதம் போன்றவற்றிலிருந்து நகரங்களை பாதுகாத்துக் கொள்வதனையும் இது பிரதானமாக கருதுகின்றது(Protecting cities from climate change, natural hazards and disasters, criminal activities, terrorism, etc.).
முடிவுரை
இன்றைய நூற்றாண்டில் அதிகரித்துள்ள பூகோளமயமாக்கம் அதனுடன் இணைந்த நகரமயமாக்கல் திட்டங்களின் விளைவாக அதிகளவான மக்கள் நகரை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் உலகளாவிய ரீதியில் மில்லியன் நகரங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன இவற்றின் காரணமாக இயற்கை சூழல் பல்வேறு வகையான மாறுதலுக்குள்ளாகி வருகின்றன ஆகவே நகரமயமாக்கலினை முழுவதுமாக விடுத்து சூழலை மாத்திரம் கவனத்தில் கொள்ள முடியாத ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
ஆகவே நகரம்,நகர செய்யப்பாடுகள்,நகர வளர்ச்சி,நகரமயமாக்கல் என்பன எவ்வாறு சூழல் நிலைப்பேன் தன்மைகளுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனையும் இயற்கை சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் நகராக்க செயற்பாடுகள் நிலைப்பேண் தன்மையில்(sustainable development) அமையப்பட வேண்டும் என்பதனையும் நகர புவியியல் அடிப்படையாக கொண்டுள்ளது.
நாம் இங்கு நகரப் புவியியல் என்றால் என்ன? என்பதனையும் அதனுடைய முக்கியத்துவம், நோக்கங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளோம் எதிர்வரும் பதிவுகளில் நகர புவியலுடன் தொடர்பான தலைப்புகளையும் நாம் ஆராய உள்ளோம்.





கருத்துரையிடுக