அரட்டை செயலி ஓர் பார்வை|A look at the Arattai Chat and Calling app
தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய புதிய கருவிகளும், மென்பொருள்களும் மக்களிடையே பிரபல்யமடைந்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய நாட்களில் சமூக வலைத்தளங்களிலும் ,Tech உலகிலும் அனைவராலும் பேசப்படும் ஒரு அம்சமாக ”அரட்டை” செயலி (Arattai Messenger
- Apps) மாறியுள்ளது.
இந்த "அரட்டை" செயலி (Arattai - Apps) தமிழ் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றானதும் தமிழ் மொழியின் முதல் உயிர் எழுத்துமாகிய அகரத்தினை
மையமாக கொண்டு "அரட்டை-
Arattai"என
இதற்கு தூயத் தமிழில் பெயரிட்டுள்ளனர்.
மேலும் இந்த ”அரட்டை செயலினை- Arattai Chat and Calling app” உருவாக்கியதும் ஓர் தமிழர் தான் சோகோ (Zoho
Corporation) என்ற மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் இந்த
அரட்டை செயலியினை உருவாக்கியுள்ளார்.
சோகோ நிறுவனம் ஓர் பார்வை| Zoho Corporation
1996-ல் தொடங்கப்பட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம்தான் சோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) ஆகும் .இது ஓர் இந்திய மென்பொருள் மேம்பாட்டு கட்டமைப்பு நிறுவனமாகும்-Zoho | Cloud Software Suite for Businesses, இது பிரதானமாக மென்பொருளியல், இணைய அடிப்படையிலான வணிக கருவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அதிகளவு கவனம் செலுத்துகிறது.
சோகோ நிறுவனமானது (Zoho Corporation) இந்தியாவின், சென்னையினை (Chennai, India,) தலைமையிடமாகக் கொண்டு செயற்படுகின்றது , இதனுடைய நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் (Thanjavur state of Tamil Nadu) ஒரு கிராமத்தில் பிறந்த தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]() |
Sridhar Vembu, founder and CEO of Zoho Corporation |
ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) இந்தியா உட்பட பல நாடுகளுக்கு IT சார்ந்த தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறார். இவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ள Microsoft நிறுவனத்தின் உபகரணங்களுக்கு போட்டியாகவும் பல்வேறு வகையான தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவரால் 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செட்டிங் செயலியே இந்த "அரட்டை (Arattai Messenger - Apps)" ஆகும்.
அரட்டை செயலியும் பூகோள அரசியலும் | Arattai App and
Geopolitics
”அரட்டை செயலி [Arattai Messenger]” பிரபலியம் அடைவதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் சார்ந்த நகர்வுகள்[Political moves] என்றால் அது மிகையில்லை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப்(Donald Trump ,President of the United States) தான் பொறுப்பேற்றவுடன் பல்வேறு வகையான வரச் சுமைகளை உலக நாடுகளின் மீது சுமத்தினார்.
அதற்கிணங்க Donald Trump இந்தியாவின் மீது 50 சதவீத வரி விதிப்பை விதித்ததுடன் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கும் பல்வேறு வகையான விதிகளை ஏற்படுத்தினார்.
அதிபர் Donald Trump, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, இந்தியப் பொருட்கள் மீது 25% வரி விதித்தார். இதைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் மாதம் இந்தியப் பொருட்கள் மீது மேலும் கூடுதலாக 25% வரியையும் சேர்த்து மொத்தம் 50% வரி விதித்தார்.
இவ்வாறான டொனால்ட் டிரம் இன் முன்னெடுப்பு காரணமாக இந்திய அமெரிக்க உறவிலும்
,வர்த்தகத்திலும் ,அரசியல் மற்றும் ராணுவ ரீதியான நெருக்கத்திலும் அதிகளவான விரிசல்
ஏற்பட தொடங்கியது. அமெரிக்கா அதிபர் நேரடியாகவே இந்தியாவினை விமர்சித்து இருந்தமையும் குறிப்பிடதக்கது.
இந்திய பொருளாதாரத்தை அழிந்து போன பொருளாதாரம் என்றும், இந்தியா, பாகிஸ்தானிடமிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இந்தியா மீதான அவமதிப்பை டிரம் வெளிப்படுத்தியுள்ளார். இவை புவிசார் அரசியல் விளைவினை (Geopolitical consequences) ஏற்படுத்தியுள்ளன .
இத்தகைய காரணங்களினால் இந்தியா தனது சுதேசிய மற்றும் உள்ளூர் தயாரிப்புகளை(Indigenous and local products) ஊக்குவிக்க வேண்டும் மற்றும் அமெரிக்க போன்ற மேலைத்தேய நாடுகளின் தாயாரிப்புகளுக்கான மாற்றீடுகளை முன்வைத்தல்(Alternatives products) என்ற கருப்பொருளில் பாரத நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி (The prime minister of india Shri Narendra Modi) வலியுறுத்ததின் விளைவாக அது தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் (Technology and Software) சார் நடவடிக்கைகளிலும் அது தாக்கம் செலுத்த தொடங்கியது.
இத்தகைய கருத்தின் விளைவாக இந்திய நிறுவனமான ஜோகோவின் அரட்டை செயலியினை இந்திய அரசியல் பிரமுகர்கள் பலரும் பயன்படுத்தி அதனை ஏனையவர்களும் பயன்படுத்த வலியுறுத்தினர் பின்னர் இது தொடர்பாடல் உலகின் ஜாம்பவானான வட்சப்க்கு Whatsapp மாற்றீடாக இந்தியாவில் எழுச்சிப்பெறத் தொடங்கியது.
எனவே இச் செயலி பயன்பாட்டில் அரசியலும் அறிவியலும் கலந்துள்ளதனை நாம் அனைவரும்
ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
அரட்டை செயலியின் திடீர் பிரபல்யம்|Why is Arattai Chat so insanely popular among everyone
2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Made in India- மேட் இன் இந்தியா வின் உருவாக்கமே அரட்டை செயலியாகும்.
2021 ஆம் ஆண்டு சில ஆயிரம் டவுன்லோட்களை மாத்திரமே கொண்டிருந்த நிலையில் இன்று நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் அதனை google play store and apple app store மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி ஒரு பாரிய மென்பொருள் புரட்சிக்கு வழிவகுத்துள்ளனர் எனலாம்.
Download here:
2021 இல் வேம்பு அவர்கள் இந்த அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினாலும் இது மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையவில்லை இருப்பினும் இன்று அமெரிக்காவின் அழுத்தமும், இந்திய பிரதமரினால் உள்நாட்டு உற்பத்தியும் உள்நாட்டு பொருட்களின் பாவனையையும் அதிகப்படுத்த வேண்டும் என்ற கருப்பொருளே இது பிரபல்யமடைய பிரதான காரணமாகும்.
அரட்டை செயலியின் பொதுவான பயன்கள் |General features in Arattai Chat
ஏனைய சமூக வலைத்தளங்கள் மற்றும் Chatting அப்ளிகேஷன் போலவே அரட்டையிலும் மிகப் பிரதானமாக,
- வாய்ஸ் கோலிங் | Voice Calling
- வீடியோ காலிங் |Video Calling
- ஸ்டேட்டஸ் | Status
- டெக்ஸ்ட் மெசேஜ் | Text Message
- வாய்ஸ் மெசேஜ் | Voice Message
- பிரைவசி வசதிகளும் | Privacy Features
- லாஸ்ட் சீன்| Last Seen,
- குரூப் காலிங்| Group Calling
- ஸ்டோரி |Storyபோன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் இந்த அப்ளிகேஷன் கொண்டுள்ளது.
அரட்டை செயலியின் புதிய அம்சங்கள்| New features in Arattai Chat
லிங்க்[Link] : பயனர் ஒருவர் தனது அரட்டை கணக்கினை ஐந்து சாதனங்களுடன் லிங்க்[Link] செய்து கொள்ள முடியும் இது ஏனைய வாட்ஸ் அப் சாதனங்களில் இல்லாத ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது.
பொக்கட் [ Pocket]: அரட்டை செயலி பொக்கட் [ Pocket]என்னும் கிளவுட் சேவையினை வழங்குகிறது, ஏனைய அப்பிளிக்கேஷனில் நாம் நமக்கு அவசியமான மற்றும் அடிக்கடி உபயோகப்படும் மெசேஜ்களை தங்களுடைய எண்ணுக்கு மெசேஜ் செய்து கொள்வார்கள் ஆனால் இங்கு பொக்கட் அதற்கு மாற்றீடாக அமைத்துள்ளது.
இதன் மூலம் எமக்குத் தேவையான நோட்ஸ் ,மெசேஜ், வீடியோ, ஆடியோ, pdf மற்றும் E-Mail போன்றவற்றை இலகுவாக சேவ் செய்து வேண்டிய
நேரத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
மீட்டிங் [Meeting] : என்ற ஆப்ஷன் மூலமாக நாம் நேரடியாக அரட்டை செயலில் இருந்தபடியே எங்களுடைய Schedule -meetings.செய்யவும் மீட்டிங்கில் இணைந்து கொள்ளவும் அதனை திட்டமிட்டுக் கொள்ளவும்
முடியும்.
குறியாக்கம் செய்யப்பட்டது[Encrypted]: நம்முடைய வீடியோ மற்றும் ஆடியோ தகவல்களை Encrypted சேவை
மூலமாக ஏனைய மூன்றாம் நபர்கள் ரகசியமாக பார்ப்பதனையும் அதில் ஊடுருவதையும் இது தடுக்கிறது.
Group Chatting: அரட்டை செயலியில் Group Chatting வசதியில் ஆயிரம் பயனர்கள் வரை இணைந்துக் கொள்ள
முடியும்.
File capacity : ஒரு GB வரையிலான பைல்களை அரட்டையின் மூலமாக அனுப்ப முடியும்.
Mention Tag : மூலமாக எமக்கு மென்ஷன் டெக் செய்யப்பட்ட மெசேஜ்களை தவறவிடாமல் பார்வையிட்டுக் கொள்ள முடியும்.
User Name : பயனர்கள் தம்முடைய தொலைபேசி எண்ணை பாவிப்பதுடன் நமக்கு உரித்தான பிரத்தியோகமான
User Name உம் பயன்படுத்தி லொகின் செய்து கொள்ள முடிவதுடன் அதனை மற்றவர்களுக்கு Share செய்யவும் முடியும்.
Export : whatsapp செயலியில் நாம் பயன்படுத்திய சேட்டை முழுமையாக எக்ஸ்போர்ட் செய்து
அரட்டையில் அதனை பயன்படுத்த முடியும்.
Data Storage: அரட்டையின் Data Storage இந்தியாவிலேயே அமைக்கப்பட்டுள்ளமை, அதிகளவான பாதுகாப்பிற்கு உறுதியளிக்கின்றது.
அரட்டை செயலியின் குறைகள்| Weakness of arattai chat
Storage capacity: அரட்டை செயலியில் தற்போது Storage capacity மிகவும் குறைந்தளவாகவே உள்ளது. இதனால் அதிகளவான பயனர்கள் பயன்படுத்தும் போது சில அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
Lack of end-to-end
encryption :Encrypted சேவையானது Text
message service க்கு இன்னும் வழங்கப்படவில்லை.
மேற்போன்ற பலதரப்பட்ட குறைபாடுகள் இந்த செயலியில் காணப்பட்டாலும் இன்னும் ஓரிரு மாதங்களில் அவற்றினை சீர் செய்து முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றுவதற்கு சோகோ நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் வேம்பு உறுதியளித்துள்ளார்.
மேலும் இன்று உலகளாவிய ரீதியில் WhatsApp ,Telegram, Instagram ,Facebook Messenger, Viber என பல்வேறு chatting அப்ளிகேஷன்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை தவிர்த்து அரட்டை செயலியும் பயணிப்பதற்கு பல்வேறு வகையான தடைகளை தகர்க்க வேண்டிய கட்டாயம் அதன் முன்பு உள்ளது.
இவற்றுக்கு மேலாக இச்செயலியானது ஒரு தமிழரினால் உருவாக்கப்பட்டுள்ளதும் சுதேசிய
மென்பொருளாகும் என்ற வகையில் இதனை பயன்படுத்த வேண்டியதும் அதனை ஊக்கப்படுத்த வேண்டிய
கட்டாயமும் எம்மிடம் உள்ளது.





கருத்துரையிடுக