உச்ச நிலைத்தகு அறுவடைக் கொள்கை என்றால் என்ன? | What is Optimum Sustainable Yield Policy?
உச்ச நிலைத்தகு அறுவடைக் கொள்கையானது (Optimum Sustainable Yield
Policy) உலகில் உள்ள இயற்கை வளங்களின் (மீன்வளம், காடுகள், மண், நீர்) நீடித்த பயன்பாட்டை உறுதி செய்வதற்கான ஒரு மேலாண்மை தங்கிய கொள்கையாகும்.
எடுத்துக்காட்டாக மீன்வள மேலாண்மையில், ஆண்டுதோறும் மிக அதிகமான மீன்களைப் பிடிப்பதனால் அதன் இருப்பு குறைவடைகின்றது,எனவே அத்தகைய வளத்தினை நீண்டகாலமாக தக்கவைக்கும் நோக்கில் பொதுமான அளவிலேயே அதனை அறுவடை செய்வது இந்தக் கொள்கையின் உதாரணமாகும்.
உச்ச நிலைத்தகு அறுவடைக் கொள்கை (Optimum sustainable Yield Policy) என்பதனை இலகுவாக விளங்கிக் கொள்வது எனில் புவியின் இயற்கை வளங்களை(Natural resources) மனிதன் அதிக நன்மை தரும் அளவில் பயன்படுத்தும் அதே சந்தர்ப்பத்தில் அதில் குறைவு ஏற்படாமலும் நீண்ட காலம்(A long time) அவ்வளத்தின் மூலம் பயன்களை பெற்றுக் கொள்வதினையும் விளக்கி நிற்கின்றது.
இது புவியியல் மற்றும் பொருளியல்,பொருளாதாரம்(Geography and Economics,Economics) என்பனவற்றில் அதிக தாக்கம் செலுத்துவதாக உள்ளது.
ஒரு நாட்டின் அபிவிருத்தியானது அந்நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை நிலைத்திருக்ககூடிய வகையில் பயன்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. இதன்மூலமே பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியினைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லமுடியும். எனவே ஒவ்வொரு நாடும் கிடைக்ககூடிய வளங்களின் பேண்தகு மட்டத்தினைக் கவனத்திற் கொள்வதோடு அவற்றினைச் சிறந்த முறையில் பயன்படுத்தி உச்ச அறுவடையினை பெறமுயற்சிக்க வேண்டும். இதனை விளக்கும் கோட்பாடே உச்ச நிலைத்தகு அறுவடைக் கோட்பாடாகும்.
இயற்கை வளங்கள் அனைத்தும் ஒரே தன்மை வாய்ந்தவையல்ல. அவற்றின் தன்மை அடிப்படையில் இயற்கை வளங்களைப் புதுப்பிக்ககூடிய வளங்கள், புதுப்பிக்கமுடியாத வளங்கள் என இரண்டாகப் பிரிக்கமுடியும். பூமிக்கு அடியில் இருந்து பெறப்படும் வளங்கள் புதுப்பிக்கமுடியாத வளங்களாகும் (உதாரணம்: கனிப்பொருள்).
இவற்றின் உற்பத்தி நிலையானதாகக் காணப்படும். ஆகவே இவ்வளங்களைப் பயன்படுத்தும் அளவு அதிகரிக்கும்போது வள இருப்புக் குறைவடையும்.
ஆனால் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்பது பூமியின் மேற்பரப்பில் காணப்படும் வளங்களாகும் (உதாரணம்: மீன்வளம், காட்டுவளம்). இவற்றின் இருப்புக்கள் நிலையானதல்ல. மாறக்கூடியவையாகும். எனவே இவற்றைப் பயன்படுத்தும்போது இவற்றின் அளவு அதிகரிக்கலாம் அல்லது குறைவடையலாம்.
ஆனால் அவற்றின் அதிகரிப்புக்கு ஒரு உச்ச மட்டமும், குறைவடைவதற்கு ஒரு இழிவு மட்டமும் காணப்படும். மேலும் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் சூழல் தன்மைக்கேற்ப நிலைமாறும் தன்மை கொண்டதாகக் காணப்படும்.
எனவே புதுப்பிக்கக்கூடிய நிலைத்தகு அபிவிருத்தியைப் பேனுவதற்கு உச்சநிலைத்தகு அறுவடையினைப் பின்பற்ற வேண்டும்.
உச்ச நிலைத்தகு அறுவடைக் கொள்கையின் -Important of Optimum sustainable Yield Policy
முக்கிய அம்சங்கள்:
- உலகின் இயற்கை வளங்களின் மீள்பிறப்புத் திறனை கருத்தில் கொள்கிறது.
- சூழல் சமநிலையைப் பேணுவதற்கு உதவுதல்.
- நீண்டகால பொருளாதார லாபத்தை உறுதிசெய்கின்றது.
- சமூக மற்றும் சுற்றுச்சூழல் நலன்களை ஒருங்கிணைக்கிறது.
![]() |
| Optimum Sustainable Yield Policy |
உச்சநிலைத்தகு அறுவடையினை எவ்வாறு பின்பற்ற வேண்டும்.
கனிய வளம் : புவியில் உள்ள அனைத்து கனிய வளங்களையும் அகழ்ந்தெடுக்காது, எதிர்கால தேவைகளுக்காகவும் அதே சந்தர்ப்பத்தில் நிகழ்காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிலான வளங்களையும் பெற்றுக் கொள்ளுதல்.
வேளாண்மை: இங்கு ஒரே நிலத்தில் ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடாமல் அந்நிலத்திற்கு சிறிது ஓய்வு கொடுத்து அதற்கு தேவையான கனியங்களை வழங்கி மீண்டும் வேளாண்மையினை ஆரம்பித்தல் இதன் போது நிலத்தின் வளம் குறைவடையாது.
மீன் வளம்: ஒரே நேரத்தில் அதிகளவான மீன்களையும் அதே சந்தர்ப்பத்தில் மீன்களின் கர்ப்ப காலத்தில் அதிக மீன்பிடியிணையும் மேற்கொள்ளாமல் நமக்குத் தேவையான மீன்களை மாத்திரம் பிடித்து அதன் இயற்கை உற்பத்திக்கு இடம் கொடுத்தால் மீன் உற்பத்தி வளம் பாதுகாக்கப்படும்.
வனம்: வனவளத்தை நோக்கினால் இன்று மனிதனுக்கு மரங்களும் அதன் உற்பத்தி பொருட்களும் பல்வேறு வகையான தேவைகளுக்கு பயன்படுகிறன. மருத்துவம்,தளபாடம்,கட்டிடம் மற்றும் போக்குவரத்து என பல துறைகளிலும் உபயோகப்படுகிறது எனவே ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டாது நமது தேவைக்கேற்ப மாத்திரம் வெட்டுவதுடன் மீள் வளர்ப்பு,மீள்காடாக்கும் போன்றவற்றை ஊக்கிவித்தல் வேண்டும் .
வளங்களின் உச்ச இருப்பினைப் பாதுகாக்கக்கூடிய வகையில் வளங்களை அறுவடை செய்தல் உச்ச இயல்தகு அறுவடையாகும். இதன் மூலம் நிலையான அடிப்படையில் வளங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது உத்தம வளப்பயன்பாட்டினைத் தரக்கூடியதாக இருக்கும்.
புதுப்பிக்கக்கூடிய எந்தவொரு வளங்களும் அதனிருப்பில் இருந்து தற்போது நிலவுகின்ற சூழலியல் நிலைமைகளில் அதிஉச்ச பேண்தகு விளைச்சல் தொடர்ந்து நிலவும் இயலளவுக் கருத்துடன் தொடர்பைக் கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய உணவு வளங்களைப் பொறுத்து இருப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
மீள்புதுப்பிக்கக்கூடிய வளங்களைப் பொறுத்தவரை உத்தமநிலை அறுவடை என்பதை வரையரை செய்வது கடினம். ஏனெனில் உயிரியல் உத்தமம் என்பது பொருளியலைவிட வித்தியாசமானது.
இலாப உச்சப்படுத்தல் தீர்மானம், உத்தம வளப்பயன்பாட்டுத் தீர்மானம் என்பவை சொத்துரிமை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். இங்கு சொத்துரிமையானது மூன்று வகைப்படும்.
தனியார் சொத்துரிமை-Private property rights
இதற்கு உதாரணமாக நீர்த் தடாகங்களில் மீன் வளர்த்தலினை நோக்கலாம். தனிநபர் எனின் அவரின் நோக்கம் இலாப உச்சப்படுத்தலாக இருக்கும். அதனால் அறுவடை மட்டமும் , முயற்சி மட்டமும் அதிகமாகக் காணப்படும்.
திறந்த சொத்துரிமை-Open ownership
இங்கு வளமானது அனைவருக்கும் சொந்தமாக இருப்பதனால் வளவீண்விரயம் அதிகமாகக் காணப்படும். இங்கு இருப்பின் அளவு இலாப உச்சப்படுத்தலின் தீர்வைவிடக் குறைவாக இருக்கும். மேலும் இலாப உச்சப்படுத்தலைவிட அறுவடை வீதம் குறைவாக இருக்கும். இதனால் இதன் தீர்வு உச்சநிலைத்தகு அறுவடையினை ஒத்திருக்காது. உதாரணம் ஆழ்கடல் மீன்பிடித்தொழில் ஆகும்.
பொதுச் சொத்துரிமை-Common property rights
இங்கு வளங்கள் குறித்தவொரு சமூகத்திற்குச் சொந்தமாக இருப்பதனால் இங்கு வளப்பயன்பாடு தனிநபர் சொத்துரிமைக்கும் திறந்த சொத்துரிமைக்கும் இடைப்பட்டதாகக் காணப்படும்.
சமனிலை தொடர்பான கருத்துக்கள்-Concepts related to balance
துரித வளப்பாவனையினை கட்டுப்படுத்தாவிட்டால் வளமானது வளமானது விரைவாக குறைவடையும் அதேவேளை வள அழிவிற்கும் இட்டுச்செல்லும்.
இலாப உச்சப்படுத்தற் சமனிலையானது உச்சநிலைத்தகு அறுவடையினை ஒத்திருக்காது. அதனைவிடக் குறைவாகவே இருக்கும். அதாவது வெளிவாரி விளைவுகள் இல்லாத நிலையில் இலாபம் அல்லது செலவு இவ்வாறே அளவிடப்படும். எனவே உச்சநிலைத்தகு அறுவடையானது சமூகரீதியாக விரும்பத்தக்கது அல்ல.
முயற்சிக்கான கூலி உயர்வாக இருப்பின் இலாப உச்சப்படுத்தல் தீர்மானம் உச்ச இருப்பிற்கு அண்மியதாக இருக்கும். இதனால் கூடியளவான வளப்பயன்பாடு இடம்பெறும்.
வள இருப்பினைப் பாதுகாப்பதற்கு வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கு உரிய அடகையினை ஒழுங்குபடுத்தல் வேண்டும்.
முடிவுரை
உச்ச நிலைத்தகு அறுவடைக் கொள்கை (Optimum Sustainable Yield Policy) என்பது இயற்கை வளங்களை நீடித்த மற்றும் சமநிலையான முறையில் பயன்படுத்துவதற்கான முக்கியமான சூழலியல் மேலாண்மை கொள்கையாகும்.




கருத்துரையிடுக