படவரை கலையியல் அறிமுகம்-Introduction of Map
படவரை கலையியல்(Map) என்பது புவியியலின் தொடக்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை அதன் மையப் பகுதியாக அடையாளப்படுத்தப்படுகின்றது.இதன்
புவியியல் கற்கையின் பரினாம வளர்சியினை அவதானிப்பின் வரலாற்றின் ஆரம்ப காலகட்டத்தில் தரைகளிலும்,களிமண் தட்டுகளிலும் (Drawing pictures on floors and
clay plates) பின் எரியங்களின்(Projection) உதவியுடனும் ஒளியின்(Light) துணைக்கொண்டும் வரைப்படமாக்கம் இடம்பெற்றுள்ளன.
எனினும் இத்தகைய மரபு வழி வரைப்படவாக்கத்தில் பல்வேறு வகையான
குறைப்பாடுகளும்,பயன்பாட்டு சிக்கலும் தொடர்ச்சியாக அவதானிக்க கூடியதாக
இருந்தன.
மேலும் இத்தகைய
வரைப்படங்களை உருவாக்குவதும் அதனை உபயோகிப்பதும்,மீள் பயன்படுத்துவதும்(Creating Map, using
it and reusing)
சிரமமானதாக
காணப்பட்டது.எனவே இத்தகைய
இடர்களை
தவிர்த்து
வரைப்படங்களை நவீன விஞ்ஞான முறைமைக்கேற்ப
கணினியின் துணைக்கொண்டு படமாக்கும்
நவீன படமாக்கல் இன்று
புவியியல் துறையில் பிரசித்திப் பெற்று வருகின்றது.
செய்மதி சாதனங்களின் உதவியுடன் விஞ்ஞான முறைப்படுத்தப்பட்ட (Modern
scientific systematic) படவரையாக்கம் இன்று வரையப்படுகின்றன. இதற்காக பல்வேறு வகையான சாதனங்களும் கருவிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடதக்கது.
கணினியில் புவியியல் தகவல் முறைமை | Geographical Information
System
இன்று படவாக்கமானது கணினியின் துணைக்கொண்டு பல்வேறு
வகையான உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு சாதனங்களின்(Input and Output devices)
துணையுடன் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது.
![]() |
| Data input techniques - GIS |
மேலும் இன்று கணினியில்
புவியியல் வரைப்படங்களினை(Geographical Maps) உருவாக்குவதற்கு நூற்றுக்கணக்கான மென்பொருட்கள்(Softwires) பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இத்தகைய
மென்பொருட்களை கட்டணம் செலுத்தி பயன்படுத்துபவை(Paid Version) மற்றும்
கட்டணமின்றி திறந்த தொகுதியாக(Open Source) அனைவரும் பயன்படுப்படுத்தும்
வகையிலும் இலவச மென்பொருட்களாகவும்
(Free Version) கிடைக்கப்பெறுகின்றன.
இலவச GIS மென்பொருட்கள்-Free GIS Software
பணம் கொடுத்து பயன்படுத்தும் மென்பொருட்களை விடவும் இலவசமாக கிடைக்கும் என் பொருட்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர் அந்த வகையில் இப்பதிவில் அனைவருக்கும்
இலவசமாக கிடைக்கப்பெறும் GIS மென்பொருட்களையும் அதன் உபயோகங்களையும் மற்றும்
அதன் முக்கியத்துவத்தினையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமையவுள்ளது.
GeoDa -ஜியோடா
![]() |
| GeoDa |
GIS-படவரை கலையியலில் பயன்படுத்தப்படும் இலவச மென்பொருட்களில் ஒன்றாக ஜியோடா மென்பொருள்|GeoDa GIS Software காணப்படுகின்றது.இது
டாக்டர் லூக் அன்சலின் மற்றும் அவரது குழுவினரால்
உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
GeoDa GIS Software இடம் சார்ந்த பகுப்பாய்வுகளுக்கு(spatial autocorrelation) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,ஆதலால் படவரைக்கலையியல் அறிஞர்களின்(cartographers) தரவு சார்ந்த தரவுகளையும்,புள்ளி விபரங்களையும் பகுப்பாய்வு செய்வதற்கும்,இடம் சார்ந்த தரவுகளுக்கு இடையிலான ஆய்வுகளுக்கும்(Exploratory data analysis
and Spatial regression) இம்மென்பொருள் மிகவும் பயனுடையதாக காணப்படுகின்றது.
ஜியோடா-GeoDa GIS
Software மென்பொருளின் பயனர் இடைமுகமானது(User interface) ஏனைய ஜி ஐ எஸ் மென்பொருள்களை(GIS Software) விடவும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பணம் செலுத்தி பயன்படுத்தும் மென்பொருட்களை விடவும் இதன் பயனர் இடைமுகம்(User
interface) இலகுவாக கையாள கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இதன்
முக்கிய சிறப்பாகும்.
Ilwiz -இல்விஸ்
Integrated Land and Water Information System (ILWIS) -ஆரம்பத்தில் வணிக நோக்கத்திற்காக விற்பனை(Commercial sales) செய்யப்பட்ட இல்விஸ் மென்பொருள் தற்பொழுது இலவச பதிப்பாக(Free Version) பயனர்களுக்கு வழங்கப்படுகின்றது.
![]() |
| Integrated Land and Water Information System (ILWIS) |
தற்போது இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய திறந்த ஜிஐஎஸ் மென்பொருளாக (Open Source
Software) இணையத்தில் கிடைக்கின்றது.
ரிமோட் சென்சிங் தரவுகளை(Remote Sensing Data) கையாளுவதிலும் சிக்கலான ராஸ்டர் தரவுகளை(complex raster data) இலகுவாக கையாண்டு வரைபடங்களை உருவாக்குவதிலும் இடம் சார்ந்த தரவுகளை பகுப்பாய்வு(spatial modeling) செய்வதற்கும் இது அதிக பயனுடையதாக உள்ளது.
Key features of -Ilwiz
- Works with both raster and vector data
- Can import and export many common data formats
- Allows digitizing directly on screen or with a tablet
- Includes a complete set of image editing and processing tools
- Supports orthophotos, georeferencing, image transformation, and mosaicking
- Offers advanced spatial analysis and modeling tools
- Provides 3D views with interactive editing for better visualization
- Has a large collection of map projections and coordinate systems
- Includes DEM/DTM operations and hydrological analysis tools
இல்விஸ் மென்பொருளானது நிலப் பகுப்பாய்வு மற்றும் நீரியல் முகாமைத்துவ செயல்பாடுகளில்(terrain analysis and
hydrological management) அதிக தேவைப்பாடுடைய மென்பொருளாக உள்ளது.
இம்மென்பொருளில் 3D படவரை கலை நுட்பம் மற்றும் பைத்தான் மென்பொருள்(3D mapping and
python) உபயோகங்கள் என்பன பயனர்களுக்கு மிகவும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை இலகுவாக கையாள கூடிய வசதியினையும் சுலபமாக பயன்டுத்தக்கூடிய பயனர் இடைமுகமும் கொண்டுள்ளது.
SAGA GIS-சாகா ஜிஐஎஸ்
இலவச GIS மென்பொருள்களில் SAGA
GIS-System
for Automated Geoscientific Analyzes) மிகவும் வினைத்திறனானதும் பயனுடையதாகவும் உள்ளது.
SAGA GIS-System for Automated Geoscientific Analyzes மென்பொருளானது ஆரம்பத்தில் நிலப்பரப்பு பகுப்பாய்விற்காகவே பயனர்களுக்கு வழங்கப்பட்டது.
![]() |
| SAGA GIS |
இது மலைப்பகுதி,நீர்நிலை,வடிநில தொகுதி என்பனவற்றினை பகுப்பாய்வு(terrain analysis, hill shading, watershed extraction and visibility analysis) செய்வதாக வடிவமைக்கப்பட்டதெனினும் பின்னர் வழங்கப்பட்ட இற்றைப்படுத்தலில்|Updates இது மானிட பரம்பலையும் அதன் இடைத்தொடர்புகளையும் ஆராயும் வகையில் மேம்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பகுப்பாய்வுகளையும்,வரைபடங்களையும்,மற்றும் இடைத்தொடர்பு நுட்பங்களை மேற்கொள்வதற்காக பல்வேறு வகையான இடைமுகங்களை(multiple windows) இது வழங்குகின்றது.
அதுபோல இது பயனர் நட்பு முறையினையும் சிறப்பான GUI மற்றும் AP ஐ தொழில்நுட்பங்களையும் |User-friendly GUI and AP இலகுவாக கையாள உதவுகின்றது.
ராஸ்டர் தரவு தொகுதிகளில் உள்ள இடைவெளிகளை(raster data sets) கண்டறிந்து அவற்றினை மேம்படுத்துவதுவதற்கும் நிலப்பரப்பு தொடர்புகளை இனங்கண்டு அவற்றினை ஒருங்கிணைப்பதிலும் SAGA GIS
இல் உள்ள கருவிகள்(Tools) தனித்துவமாக செயல்படுகின்றன.
இம்மென்பொருளானது மிகவும் விரைவான இயக்கத்துடனும்,நம்பகமான தரவுகளை வழங்குவதிலும்,துல்லியமான தன்மையுடனும்-Quick, reliable and
accurate) சுற்றுச்சூழல் படங்களை (Environmental
modeling) ஆக்குவதில் சிறப்பு பண்புடையதாகவுள்ளது.
இவற்றுடன் 3D மற்றும் அனாக்லிஃப் மேப்பிங்கை வழங்குவதிலும் (3D and anaglyph mapping) SAGA GIS சிறப்பிடம் கொண்டுள்ளது.
Grass GIS-கிராஸ் ஜிஐஎஸ்
Grass GIS கிராஸ் ஜி ஐ எஸ் எனப்படும் திறந்த மென்பொருளானது 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவின் இராணுவ பிரிவு பொறியியலாளர்களினால்(US Army Corps of
Engineers) உருவாக்கப்பட்டதாகும்.
![]() |
| Grass GIS |
Grass GIS மென்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ள லீடர் கருவிகளின் உதவியின் காரணமாக நேர்த்தியான படவரைக்கலை நுட்பத்தினை எமக்கு வழங்குகின்றது(image processing and
lidar).
இது துல்லியமான முப்பரிமாண தன்மையினையும் விரைவான இயக்கத் திறனையும் கொண்டுள்ளதால் படமாக்கள் மிகவும் இலகுவாகின்றது.அத்துடன் இது
- லாஸ்ட் தரவுகளை கையாளுவதிலும்
- வரைப்பட வடிவமைப்பிலும்
- பகுப்பாய்வு திட்டங்களுக்கும்
- சிறந்த டிஜிட்டல் மையப்படுத்துதல்
- நிலப்பரப்புகளுக்கு இடையிலான தொடர்பினை விவரித்தல்
- தரவுகளை கையாளுதல்
- புள்ளிவிபரங்களை வழங்குதல்
- தரவுகளுக்கு இடையிலான கணிப்பீட்டினை விளக்குதல்
Whitebox GAT-வைட்பாக்ஸ் GAT
![]() |
| Whitebox GAT |
Whitebox GAT-வைட்பாக்ஸ் GAT (Geospatial Analysis
Toolbox) இலவசமாக படவரைக்கலையியல்(Mapping) மேற்கொள்வோருக்கு இம்மென்பொருளும் பல்வேறு வகையான புதிய அம்சங்களை தருகின்றது.
Whitebox GAT என்பது நிலப்பரப்பு பகுப்பாய்வில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளமையினை மறுக்க இயலாது அத்துடன் இது நீரியல் வலை பின்னலில்(hydrology) புதுமையான பல நுட்பங்களையும் எமக்கு வழங்குகின்றது.
அது மாத்திரமன்றி ஜிஐஎஸ் மற்றும் ரிமோட் சென்ஸிங் மென்பொருளுக்கு இடையிலே இது நேர்த்தியான வலை பின்னலை கொண்டு பயனர்களுக்கு தகவல்களை வழங்குகின்றது.
இது புவியியல் ரீதியான தகவல்களை கிளிப் செய்யவும் பகுப்பாய்வு செய்யவும் அதனை நிர்வகிக்கவும் தகவல்களை இற்றைப்படுத்தவும் திருத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது(clip, convert, analyze,
manage, buffer and extract geospatial information).அதுமாத்திரமன்றி இம்மென்பொருள் நானூறுக்கும் மேற்பட்ட பகுப்பாய்வு கருவிகளை கொண்டுள்ளமை
இதன் சிறப்பாகும்.
இம்மென்பொருளின் பாராட்டுத்தக்க கூடிய ஒரு விடயம் என்னவெனில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பல அம்சங்கள்
இங்கு இலவசமாகவே கிடைக்கின்றன.
QGIS-Q ஜிஐஎஸ்
இப்போது பாவனையிலுள்ள இலவச Geographic Information System மென்பொருட்களில் அதிகளவான பயனாளர்களை கவர்ந்துள்ளதும் அதிகப்படியான நவீன வசதிகளை வழங்கும் மென்பொருளாகவும் QGIS- Quantum Geographic Information System உள்ளது.
குறிப்பாக கூறுவது என்றால் கட்டணம் செலுத்தி நாம் பயன்படுத்தும் மென்பொருட்களை பார்க்கிலும் அதிகளவான வசதிகளையும் நுட்பங்களையும் இம்மென்பொருள் வழங்குகின்றது.
![]() |
| QGIS (Quantum Geographic Information System) |
குறிப்பாக இன்று அதிகமானவர்கள் பயன்படுத்தப்படும் ஆர்க் ஜி எஸ் மற்றும் ஆர்க் ஜி எஸ் ப்ரோ(Arcgis and Arcgis
pro) போன்ற மென்பொருள்களுக்கு இணையான போட்டியாளராக QGIS
(Quantum Geographic Information System) மென்பொருள் சந்தையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேம்பட்ட பகுப்பாய்வு,தரவு மேலாண்மை கருவிகள்,சிறந்த பயனர் இடைமுகம் மற்றும் இலவச திறந்த மூலகங்கள்(Wide range of tools,plugins. advanced
analytics, data management tools,great user interface and free open source) என பல்வேறு வகையான அம்சங்களையும் எமக்கு இலகுவாக கையாளக்கூடிய வகையில் இது தருகின்றது.
மேம்படுத்தப்பட்ட முப்பரிமாண படவாக்கம்,நவீன காட்சிப்படுத்துதல், கருப்பொருள் படங்கள் உருவாக்கம்,புவியியல் முறைப்படுத்துதல் என்பனவற்றில் நவீன நுட்பங்களை இது கொண்டுள்ளது.
ஏனைய இலவச மென்பொருட்களை காட்டிலும் Qgis மென்பொருள் மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முடிவுரை-conclusion
மேலே நாம் நோக்கியவாறு பலதரப்பட்ட இலவச மென்பொருட்கள் புவியியலின் படவாக்க உருவாக்கத்திலும் தரவு பகுப்பாய்விலும் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் நாளாந்தம் புதிய வகையான மென்பொருட்களும் இணையத்தில் அறிமுகமாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இம்மென்பொருட்கள் அவற்றின் உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் இயக்கத்திலும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்ட பண்பினை கொண்டுள்ளன, எனவே படவரை கலை நுட்பத்தை பயன்படுத்தும் நாம் அவற்றின் தன்மை அறிந்தும் அவற்றின் உபயோகம் கருதியும் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் அவற்றிலிருந்து முழுமையான பயனை பெற்றுக் கொள்ள முடியும்.








கருத்துரையிடுக