Research Methodology and Techniques

Geography Research Methodology and Techniques | புவியியல் ஆய்வு முறையியல் மற்றும் நுட்பங்கள்.


புவியியல் ஓர் அறிமுகம்- Introduction of Geography

புவியியல் கற்கைத்துறையானது புவியின் பௌதீக (Physical) மற்றும் பண்பாட்டு (cultural) சூழலின் இடைத்தொடர்பினை ஆராய்வதுடன், மனிதன் தனது வேறுப்பட்ட செயற்பாடுகளின் மூலமாக புவியினை ,


  • எங்கே (Where)
  • ஏன் (Why),
  • எப்பொழுது (When)
  • எவ்வாறு (How)  மாற்றியமைக்கிறான் என்பதனை காலரீதியாகவும் (Time) ,இடரீதியாகவும் (Place) ஆராய்கின்றது.


What is Geography
What is Geography


புவியியல்,குறிப்பிட்ட பிரதேசங்கள் எந்த அளவுகளில் (Quantity), எவ்வகையான அடிப்படையில் மாற்றமடைகின்றன என்பது பற்றியும் அப்பிரதேசத்தில் ஏற்படும் பரப்பியல் (Spatial variations)  மாற்றங்கள் தொடர்பாகவும்  ஆராய்கின்றது.


புவியியல் கற்கை நெறியானது தனக்கென அமைந்த தனித்துவமான ஆய்வு முறைகளையும்(research methods) ஆய்வு நுட்பங்களையும்(research techniques) கொண்டு தனது ய்வியல் முறைகளை(Research methods) முன்னெடுக்கின்றன.

அந்த வகையில் புவியியல் கற்கை நெறியானது(Geography ) மனித மற்றும் சூழலியல் (Human and ecological) ஆகிய இரு பெரும் அம்சங்களை தன்னுள் உள்ளடக்கி அவற்றுள் தோற்றம் பெறும் பிரச்சனைகளுக்கு தகுந்த முறையிலான விஞ்ஞான நுட்ப முறைக்குட்பட்ட தீர்வுகளையும் ஆலோசனைகளையும் (Scientific and Technical framework.) வழங்குகின்றது.


புவியியல் ஆய்வு முறையியல் (Method of Geography Research)

எமது புவியில் காலத்திற்கு காலம் தோற்றம் பெரும் பௌதீக மற்றும் மானிடவியல் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான சிறந்த நடைமுறைசார் தீர்வுகளை முன்வைப்பதாக புவியியல் ஆய்வின்   அடிப்படைப் பண்பு(Basic characteristic of geographical Research) அமைந்துள்ளது.

இதற்காக புவியியல் கற்கையானது  பல்வேறுவகையான   ஆய்வு முறைகளையும் (Research Methods) மற்றும் ஆய்வு  நுட்பங்களையும் (Research Techniques)  அறிமுகப்படுத்தி அதன் மூலமாக புவிசார் சவால்களுக்கு முறையான தீர்வினை முன்வைக்கின்றது.


புவியியல் ஆய்வு முறை (Method of Geography Research)

புவியியல் ஆய்வு முறை (Method of Geography Research)

நாம் வாழும் புவியில் காலத்திற்கு காலம் தோற்றம் பெரும் பௌதீக மற்றும் மானிடவியல் பிரச்சினைகளை (Physical and anthropological problems) அடையாளப்படுத்தி அதற்கு தீர்வினை முன் வைக்க சிறந்த ஆய்வு திட்டத்தினை எவ்வாறான முறையில் முன் வைப்பது என்பது தொடர்பாகவும் அதற்காக ஓர் ஆய்வாளன்(Researchers) கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமையவுள்ளது.


புவியியல் ஆய்வுப் பின்னணி (Background of the Research Study in Geography)

வரலாற்றின் ஆரம்பக்கட்டத்தில்  மனிதனுக்கும் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான உறவானது (Human and Environmental Relationships) மிகவும் நேசமான முறையில் (Environmental Friendly) காணப்பட்டதுஅக்காலப்பகுதியில் மனிதனால் சூழலுக்கு ஏற்படுத்தப்படும் பாதக விளைவுகள் (Negative impacts) மிகக் குறைவேஎனினும் இந்நிலைமை நீண்ட காலம் நீடித்திருக்கவில்லை.

புதியகண்டுபிடிப்புகளும் தொழிற்துறை வளர்சியும் மற்றும் மனித நகாரீக விருத்தி(New inventions, industrial development, and the human civilization) என்பன ஒன்றிணைந்த காரணத்தினால் சூழலுக்கு எதிரான மனித ஆக்கிரமிப்புக்களின்(Human encroachments) அதிகரிப்பு மற்றும் இயற்கை அனர்த்தங்கள்(Natural Disasters) போன்றன இயற்கை சூழலில் மாற்றத்தினை ஏற்படுத்தியதுடன்  பாரிய எதிர் விளைவுகளையும் தோற்றுவித்தன.

இத்தகைய காரணத்தினால் எமது புவியில்  சமூக,அரசியல்  பொருளாதார மற்றும் சூழலியல்(Social, political, economic,and ecological) ரீதியிலான பிரச்சினைகள் தோற்றம் பெறத்தொடங்கின.

இங்கு புவியியல் ஆய்வில் ஆய்வாளன் என்பவன் மேற்குறிப்பிட்ட அம்சங்களை குறித்த ஆய்வு பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதனை அடையாப்படுத்த வேண்டும் .

அத்துடன் “மானிட மற்றும் இயற்கை செயற்பாடுகளினல் (Human & Natural activity) தெரிவுசெய்யப்பட்ட பிரதேசமானது குறுகிய மற்றும் நீண்ட கால(Short and Long Periods) அடிப்படையில் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளது” என ஆய்வாளனினால் அடையாளப்படுத்த வேண்டும்.


 ஆய்வின் முக்கியத்துவம் (Importance of the Research in Geography)

ஆய்வாளனால்(By the researcher) ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட பிரதேசத்தில் மானிட மற்றும் சூழலியல் பிரச்சினைகளை (Human and environment problem) அடையாளப்படுத்த வேண்டியது முதன்மையானதாகும்.

அவ்வாறு அடையாளப்படுத்திய பிரச்சினைகளின் காரணமாக குறித்த பிரதேசம் அதிக சவால்களுக்கும்  பரப்பியல் மாற்றங்களுக்கும் (Challenges and changes) முகங்கொடுத்து வந்துள்ளமையினையும்இந்நிலை நீடித்தால் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மேலும் அதிகப்படியான பிரச்சினைகளை அது தோன்றச்செய்யும் (It will cause more problems in the present and in the future).

எனவே  தற்காலத்தில்  மட்டுன்றி  எதிர்  காலத்திலும்  இது  தொடர்கின்ற  பிரச்சினையாக  உள்ளமையினால்  அதனைப்பற்றிய  ஆய்வுகளை( Research)  மேற்கொண்டு  அதற்கான  தீர்வுகளை(solutions)  முன்வைக்கும்  ஆய்வு  அவசியமானதொன்றாகும்  என்ற  அடிப்படையில்  ஆயிவின்  முக்கியத்துவம் (Importance  of  the  Research)  அமைய  வேண்டும்.


ஆய்வுப் பிரச்சினை (Research Problems in Geography Studies)

குறித்த ஆய்வுப் பிரச்சினையானது ஆய்வின் கருப்பொருளை (The theme of the study) தெளிவாகவும்உறுதியாகவும்நியாயமான முறையிலும் வெளிப்படுத்துவதற்கு துணைப்புரிகின்றது.

எடுத்துக்காட்டாக தற்காலத்தில் அபிவிருத்தி (Development) என்பது அவசியமாகும்.எனினும் அவை இயற்கை சூழலுக்கு(Natural Environment) எவ்வித பாதகமும் அற்ற நிலைப்பேண் அபிவிருத்தியாக (Sustainable Development) அமைய வேண்டும்.

நிலைப்பேண்   தன்மையற்ற   அபிவிருத்தி   செயற்பாடுகள் (Unsustainable development)   முன்னெடுத்துச்   செல்கையில்   அது   எதிர்காலத்தில்   பாரிய   இடர்களுக்கு   வழிவகுக்கும்   (It  will Create major risks in the future),  எனவே   குறித்த   பிரதேசத்தில்   மேற்கொள்ளப்படுகின்ற   அபிவிருத்தியின்   சாதக,பாதக   விளைவுகள்   ஆராயப்படவேண்டியது   முக்கிய   அம்சமாக   உள்ளது (It   is   important   to   examine   the   positive   and   negative   effects   of   development)   எனவே   இதனை   ஆய்வுப்பிரச்சனையாக   கொண்டு   குறித்த   ஆய்வினை   ஒழுங்கமைக்க   வேண்டியுள்ளது 


ஆய்வின் நோக்கம் (Research Objectives in Geography)

ஆய்வினை திறம்பட  மேற்கொள்ள பலதரப்பட்ட நோக்கங்கள் காணப்படுகின்றன (Multiple objects)அந்நோக்கங்களை முழுமையாக அடைந்துக் கொள்வதிலேயே சிறந்த ஓர் ஆய்வின் வெற்றி தங்கியுள்ளது (success of a study). எந்தவொரு ஆய்வும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் 2 நோக்கங்களை கொண்டுள்ளன.

  • பிரதான நோக்கம் (Main Objective)
  • துணை நோக்கம் (Support Objectives) 

பிரதான நோக்ககம்- The main Objective

பிரதான நோக்மானது(Main Objective)  குறித்த ஆய்வு பிரதேசத்தின் பிரச்சினைகளை (Changes or Problemsஇனங்கண்டு அவற்றினை அடையாளப்படுத்தி அதன் விளைவுகளை மதிப்பிடல்(Evaluating outcomesவேண்டும்.

அத்தகைய பிரச்சினைகளில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான பிரச்சினைகளே  ஆய்வின் பிரதான நோக்கமாக அமைத்தல் வேண்டும்.


துணை நோக்கம்- The Second Objective

ஒரு ஆய்வு பிரதான நோக்கத்தினையும் (Main Objective)  பல உப நோக்கங்களையும் (Second Objective) கொண்டிருக்கும்,அவை ஆய்வினை மேலும் உறுதிபடுத்த உதவும்.எடுத்துக்காட்டாக பின்வறுவனவற்றினை துணை நோக்கங்களாக அடையாளப்படுத்த முடியும்.

  • பிரச்சினைகளுக்கான துணைக் காரணங்களை அடையாளப்படுத்தல்.
  • வரலாற்று ரீதியாக இடம் பெற்று வந்த மாற்றங்களைக் கூறுதல்.
  • கலாசார மற்றும் பொருளாதார விளைவுகளை அடையாளப்படுத்துதல்.
  • எதிர் காலத்தில் ஏற்ப்படப்போகும் மாற்றங்களையும்,அதனால் ஏற்ப்படப்போகின்ற விளைவுகளையும் எதிர்வுகூறல்.
  • இப்பிரச்சினையினை தீர்ப்பதற்கான ஆலோசணைகளையும் தீர்வு முன்வைப்புக்களையும் வழங்குதல்.

ஆய்வு வினாக்கள் (Research Questions in Geography Research)

ஆய்வுப் பிரச்சினையினை தெளிவாக்குவதற்கு ஆய்வு தொடர்பான வினாக்கள்(Research Questions) அடிப்படையாகின்றன.

எடுத்துக்காட்டாக குறித்த ஆய்வுபிரதேசத்தில் பரப்பியல் ரீதியிலான மாற்றங்களை (Spatial changes) தொடர்சியாக அடையாளப்படுத்தியிருப்பின் ஆய்வு வினாக்களை கீழ்கண்டவாறு வடிவமைக்க முடியும்.

1.குறித்த ஆய்வு பிரதேசத்தில் பரப்பியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதா?- Are there any geographical changes occurring in the study area?


2.எத்தகைய செயற்பாடுகளினால் குறித்த ஆய்வு பிரதேசத்தில் பரப்பியல்சார் மாற்றங்கள் ஏற்படுகின்றனWhat activities are causing geographical changes in the study area?


3.குறித்த ஆய்வு பிரதேசத்தில் பரப்பியல் ரீதியான மாற்றங்களின் விளைவாக மானிட மற்றும் சூழலியல் தாக்கங்கள் ஏற்படுகின்றதா?- Are there human and ecological impacts resulting from geographical changes in the study area?


4.பரப்பியல் ரீதியான மாற்றத்தினை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சாத்தியமான ஆலோசனைகள் எவை?- What are the possible suggestions to be made to reduce geographical change?

Research Questions
ஆய்வு வினாக்கள்- Research Questions


மேற்போன்ற வினாக்களை தொடுப்பதன் மூலம் குறித்த ஆய்வினை சிறப்பானமுறையில் வடிவமைக்க முடியும்.


ஆய்வின் கருதுகோள் (Geography Hypothesis and Assumptions)

ஆய்வின்கருதுகோள் (Hypothesis)   என்பது   இரண்டு   மாறிகளுக்கிடையிலான   தொடர்பு   எவ்வாறு   காணப்படலாம்   என   எதிர்ப்பார்க்கப்பட்டு   அதன் பொதுமைப்படுத்தப்பட்ட   கருத்தாகும்.  ஆய்வொன்றினை   ஆரம்பிப்பதற்கு   முன் அது   சார்ந்ந   அனுமானங்கள்(Inference) சில   ஏற்படும்அந்த   அனுமானங்களே   கருதுகோள்கள்   என   குறிப்பிடப்படுகின்றது.   இது ஒரு   ஆய்விற்கான   வழிகாட்டியாக   அமைந்துள்ளன.

 

தரவு சேகரிக்கும் முறை-Data Collection Methods

ஓர் ஆய்வின் வெற்றிக்கு  முக்கிய காரணியாக தரவு சேகரிப்பு முறைமை (Data Collection) அமைந்துள்ளதுஇத்தரவுகள் பிரதானமாக ,

·         1.முதலாம் நிலைத்தரவுகள் (Primary Data)


 2.இரண்டாம் நிலைத்தரவுகள் (Secondary Data) என இரு வகைப்படுகின்றன
.

 

முதலாம் நிலைத்தரவுகள் -Primary Data

முதலாம் நிலைத்தரவானது ஓர் ஆய்வாளன் நேரடியாக களத்திற்குச் சென்று தரவுகளைச் சேகரிப்பதாகும்.அதனடிப்படையில் பின்வருவன முதலாம் நிலைத்தரவுகளில் உள்ளடங்குகின்றன.

  • நேர்காணல் (Interview)
  • நேரடி அவதானிப்பு (Observations)
  • வினாக்கொத்து (Questionnaires)
  • பங்குபற்றல் (Participation)
  • புகைப்படங்களைப் பயன்படுத்துதல் (Photography)

முதலாம் நிலைத்தரவுகள் -Primary Data,முதலாம் நிலைத்தரவுகள் -Primary Data Research Questions புவியியல் ஆய்வு முறை (Method of Geography Research) Introduction to Geography புவியியல் ஆய்வு முறையியல் முறைகளும் நுட்பங்களும் - Geography Research methodology and techniques
முதலாம் நிலைத்தரவுகள் -Primary Data


இரண்டாம் நிலைத்தரவுகள்- Secondary Data

ஓர் ஆய்வாளன் தனது ஆய்வுக்கான தகவல்களை சேகரிக்க முற்படும்போது முன்னதாகவே தன் ஆய்வு தலைப்புடன் தொடர்புடைய உபகரணங்களையும் தகவல்களையும் ஏனைய ஆவணங்களையும் தேர்வு செய்து அதனை தன் ஆய்விற்காக பயன்படுத்தும் போது அவை இரண்டாம் நிலைத் தரவுகள் எனப்படுகின்றன.

இங்கு ஆய்வாளன் தனது ஆய்விற்கான தரவுகளை நேரடியாகச் சேகரிக்காது முன்கூட்டியே பல்வேறு நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்விற்காக பயன்படுத்தும் போது அவை துணைத்தரவுகள் அல்லது இரண்டாம் நிலைத் தரவுகளாகின்றன.எடுத்துக்காட்டாக,

  • ஆவணங்கள் (Documents)
  • இதழ்கள்,சஞ்சிகைகள்(Magazines)
  • ஆய்வுக் கட்டுரைகள் (Research Papers)
  • இனையத்தரவுகள்(Internet Data)
  • பத்திரிகை செய்திகள் (News Paper)
  • அரச அறிக்கை(Government report)
  • அரச சார்பற்ற அறிககைகள்( NGOs Reports)

Secondary Data,Method of Geography Research
Secondary Data


தரவு பகுப்பாய்வு- Data Analysis

ஆய்வு அறிக்கை முன்மொழிவின் முக்கிய அம்சமாக தரவு பகுப்பாய்வு (Data Analysis) அமைந்துள்ளது. எம்மால் சேகரிக்கப்பட்ட தரவுகள் (Data) முறையான வகையில் தொகுக்கப்பட்ட, அவை தரவு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

எம்மால் சேகரிக்கப்பட்ட தரவுகள் தேவைகளின் அடிப்படையில் பண்பு சார்(Quality), மற்றும் அளவு சார்(Quantity) முறைகளில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன

  • பண்பு சார் தரவுகள் (Quality)- விபரண ரீதியிலான முறை
  • அளவு சார் தரவுகள் (Quantity) - எளிய புள்ளிவிபர முறை

திரட்டப்பட்ட தரவுகள் எளிய புள்ளிவிபரண ரீதியான அட்டவணைகள்(Simple statistical tables), வரைபடங்கள்(graphs), சில்லு வரைபடங்கள்(pie charts), சலாகை வரைபடங்கள் வாயிலாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.


ஆய்வு ஒழுக்கவியல்- Research Ethics

ஆய்வினை மேற்கொள்ளும் போது ஆய்வு ஒழுக்கவியல் என்பது முக்கியவிடத்தினை வகிக்கின்றது.ஆய்வினை மேற்கொள்ளும் போது ஆய்வின் எல்லை மீறப்படாமலும் அதன் வரைறைக்குட்பட்ட வகையிலும் மேற்கொள்வது கட்டாயமாகும்.

ஆய்வொன்றினை செயல்படுத்தும் போது நாம் ஆய்வு ஒழுக்கவியலையும் ஆய்வு ஒழுக்க நெறிகளையும் பின்பற்றுவது இன்று கட்டாயமாகும்

குறிப்பாக தரவுகள் யாவும் தகவல் தருணர்களுக்கு (Informerஎந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் இரகசியமாக பேணப்படும். வகையில் ஆய்வுஒழுக்கவியல் அமைய வேண்டும் அத்துடன் தகவல்களை மிகைப்படுத்தியோ அல்லது உறுதிபடுத்தாமலோ பயன்படுத்துவதனை தவிர்க வேண்டும்தேவை கருதிய புகைப்பட உபயோகம்.இன மத சார்பினை தவிர்த்தல் போன்ற அடிப்படை ஒழுக்க அம்சங்களினை பின்பற்ற வேண்டும்.


அத்தியாய முடிவுரை-Research Conclusion

இவ்வத்தியாயத்தில் ஆய்வு தொடர்பான அறிமுக விடயங்களான, 

  • ஆய்வின் அறிமுகம்(introductory  study), 
  • பின்னணி(background), 
  • முக்கியத்துவம்(significance), 
  • இலக்கிய மீளாய்வு(literacy review),
  • ஆய்வு பிரச்சினைகள்(research problems), 
  • ஆய்வின் நோக்கம்(purpose of the study), 
  • ஆய்வு வினாக்கள்(research questions மற்றும் 
  • கருதுகோள்(hypothesisபோன்றன ஆய்வின் படிமுறை ஒழுங்கினை பின்பற்றி ஆய்வினை மேற்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகள் அமைக்கப்பட்டுள்ளன
Geography Research Methodology and Techniques
Geography Research Methodology and Techniques


எனவே இவற்றின் நோக்கத்தினை அடைந்துக் கொள்ளும் பொருட்டு குறித்த ஆய்வு அமையப்பெற வேண்டும்.

Post by: Puvitips





Post a Comment

புதியது பழையவை