GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

01. படவரைக்கலை என்றால் என்ன?

எமது உலகில்  முப்பரிமாணத் தன்மையில் (3D-Three dimensional)    காணப்படும்  பௌதீக  மற்றும்  பண்பாட்டு  அம்சங்களை (Physical  and  Cultural)  பொருத்தமான  அளவீடுகள்(Measurements), குறியீடுகள்(Symbols), நிறங்கள்(Colors),  இலக்கங்கள்(Numbers)  மற்றும்  எழுத்துக்கள்(Letters)  என்பனவற்றினை  பயன்படுத்தி  இரு  பரிமாண(Two  dimensional)  முறையில்  தட்டையான  பரப்பில்  வரையப்படும்  தொழிற்பாடே படவரைக்கலை (Map)  என்கின்றோம்.

02. படவரைக்கலையின் பிரதான வளர்ச்சி(Evolution) கட்டங்கள் எவை?

  1. கையின் மூலமாக வரையப்பட்ட படங்கள்(Manual)
  2. ஒளியினை பயன்படுத்தி வரையப்பட்ட படங்கள் (Optical-Mechanical)
  3. இரசாயன புகைப்பட கருவியின் உருவாக்கம் (Photo -Chemical)
  4. நவீன மின்னியல் முறைமை (Electronically)

03. படங்கள் கொண்டிருக்கும் தன்மையின் அடிப்படையில் அவற்றின் பிரதான வகைகள் எவை?

  1. கருபொருட் படங்கள் |Thematic Maps
  2. இடவிளக்கவியல் படங்கள் |Topographic Maps

04. கருபொருட் படங்கள் என்றால் என்ன?| What is the thematic map?

கருப்பொருட்படங்கள்(Thematic   Maps)   என்பவை   ஒரு   நாட்டின்   அல்லது   ஒரு   பிரதேசத்தின்   குறிப்பிட்ட   ஒரு   தகவலினை   மாத்திரம்   முன்வைப்பதற்கு   பயன்படுத்தும்   படங்களாகும்.   இவைதனித்து   ஒரே   ஒரு   முக்கிய   கருப்பொருளினை   மாத்திரம்   அடிப்படையாகக்   கொண்டு   வரையப்பட்டிருக்கும்.

GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

உதாரணம்:-

  • உலகின் நதி வலைப்பின்னல் (River network)
  • உலகின் போக்குவரத்து பாதைகள் (Transportation routes of the world)
  • உலகின் விவசாய நிலங்கள் (Agricultural lands of the world)
  • உலகின் சுற்றுலாத் தலங்கள் (World tourist destinations)
  • ஆசியாவின் சனத்தொகைப்பரம்பல் (Population distribution of Asia)
  • இலங்கையின் ஆறுகள் (Rivers of Sri Lanka)
  • சனத்தொகை அடர்த்தி (Population Density)
  • காலநிலை (Climate,)

05.கருப்பொருட்படங்களில் (Thematic    Maps)  உள்ளடக்கப்பட்டுள்ள    நுட்பமுறைகள்    எவை?

  1. இடக்கணியப்படங்கள் | Choropleth Maps
  2. புள்ளிப்படங்கள் | Dot Maps
  3. சமகணியப்படங்கள் | Isopleth Maps

06.சம கணியக் கோட்டுப் படங்கள் என்பவை என்ன? |What is the Isopleth Maps ?

  • சமமான பெறுமதியுடைய இடங்களைத் தெரிந்து அவ்விடங்களுாடாக வரையப்படுகின்ற கோடுகள் மூலம் காட்டும் படங்களே சம கணியப் படங்களாகும்.

உதாரணம்:-

  • சமவுயரக்கோடு
  • சமவெப்பக் கோடு
  • சம மழைவீழ்ச்சிக் கோடு
  • சம அமுக்கக் கோடு
  • சம ஆழக்கோடு.

சம கணியக் கோட்டுப் படங்கள்,GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

சம கணியக் கோட்டுப் படங்கள்

07. கருபொருட் படங்களின் பிரதான பண்புகள் யாவை?

  • ஒரு கருப்பொருள் மாத்திரம் தெரிவு செய்யப்படுவதால் தகவலை இலகுவாக இனங்காண முடியும்.
  • ஒரே ஒரு அம்சத்தை குறித்து காண்பிப்பதனால் விளங்கிக் கொள்ளுதல் என்பது இலகுவானதாகும்.
  • பல படங்கள் மூலம் கால ரீதியான மாற்றங்களை சிறப்பாக எடுத்துக் காட்டலாம்.
  • பல்வேறு பட்ட தகவல்களை இலகுவாக ஒப்பிட்டு நோக்க முடியும்.
  • படங்களைப் பல்வேறு அளவுத்திட்டங்களில் எடுத்துக் காட்டலாம்.
  • ஒரு பிரதேசத்தின் திட்டமிடல் நடவடிக்கைகளுக்கும் அபிவிருத்தி செயற்பாட்டுக்கும் மிகவும் பொருத்தமானதாக காணப்படும்.
  • விசேட கருப்பொருளின் கீழ் உப கருப் பொருளைப் படமாக அமைக்கலாம்.
  • இப்படங்களை உருவாக்குவது மிகவும் இலகுவானது.

08. கருபொருட் படங்களின் குறைப்பாடுகள் எவை?

  • கருப்பொருட்படங்கள் குறித்த ஒரு தேவைக்கு மாத்திரம் வரையப்பட்டிருப்பதனால் அவற்றின் பயன்பாடுகள் ஒப்பிட்டளவில் குறைவாகும்.
  • பல்வேறு வகையான தகவல்களை இனம் கண்டு கொள்வதற்கு ஏற்புடையதன்று.
  • குறிப்பிட்ட தகவல்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதனால் குறித்த பிரதேசத்தின் ஏனைய பண்புகளை அறிந்து கொள்ளுதல் கடினமாகும்.
  • தகவல்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும்.
  • தங்களுடைய தேவை கருதி வெவ்வேறு வகையான தனிப் படங்களை அமைப்பது செலவினையும் காலவிரயத்தினையும் தோற்றுவிக்கும்.
  • கருப்பொருட்படங்கள் உண்மையான தரவுகளையும் எண் தரவினையும் வெளிக்கொண்டு வருவதில் இடரினை கொண்டுள்ளன.
  • பல்வேறு விடயங்கள் பற்றிய படங்களின் தேவை காணப்படும் போது பல்வேறு தனிதனிப படங்களை வரைய வேண்டியேற்படும்.

09. இடவிளக்கவியல்  படங்கள் என்றால் என்ன?| what's the topographic map?

உலகில்    அடையாளப்படுத்தப்பட்ட    குறித்த    ஒரு    பிரதேசத்தில்    அமைந்துள்ள    இயற்கை    அம்சங்களினையும்    மானிட    தலையிட்டினால்    உருவாக்கப்பட்ட    பௌதீக    கலாச்சார    அம்சங்களையும்    (Physical    and    Cultural)    ஒன்றிணைத்து    அங்கீகரிக்கப்பட்ட    குறியீடுகள்(Symbols),    பொருத்தமான    அளவு    திட்டங்கள்(Measurements),    ஏற்றுக்கொள்ளப்பட்ட    நிறங்கள்(Colors)    என்பனவற்றினை    பயன்படுத்தி    வரையப்படும்    படங்கள்    இடவிளக்கவியல்    படங்கள்    ஆகும்.

10. இடவிளக்கவியல் படங்களின் நன்மைகள் என்ன? | What are the advantages of topographic map?

  • இடவிளக்கவியல் படங்களை நேரடியாக களத்திற்கு சென்று நவீன விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி வரைகின்றனர்.
  • இடமொன்றின் சார்பளவிலான அமைவிடத்தினை இனங்காண்பதற்கான திறனைக் இப்படங்கள் கொண்டுள்ளது.
  • இடவிளக்கவியல் அம்சங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்அத்துடன் அவற்றுக்கிடையிலான தொடர்புகளையும் விளங்கிக் கொள்ள முடியும்.
  • இடவிளக்கவியல் படங்கள் பல்வேறு வகையான அளவுத் திட்டத்தில் அமைக்கப்படுவதனால் எம்மால் இலகுவாக சிறிய,பெரிய மற்றும் நடுத்தர அளவுகளில் அமைந்த படங்களை எமது தேவை கருதி பயன்படுத்த முடியும்.
  • பிரதேசமொன்றின் வடிகால் பாங்குகளையும்பௌதீக அம்சங்களுக்கிடையிலான தொடர்பினையும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.
  • பிரதேசமொன்றின் பௌதிக அம்சங்களுக்கும் மானிட நடவடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பினை விளங்கிக் கொள்ள முடியும்.
  • நிர்வாக எல்லைகளை இனங்காண முடியும்.
  • பிரதானமாக இப்படங்களை பயன்படுத்தி பௌதிகமானிடச் சூழலை சிறப்பாக  விளங்கிக் கொள்ள முடியும்.

11. இடவிளக்கவியல் படங்களின் குறைகள்? | What are the disadvantages of topographic map?

  • அதிக தரவுகளை கொண்டுள்ளமையினால் விளங்கிக்கொள்ளுதல் சிரமம்.
  • சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு இவற்றினை பயன்படுத்த முடியாது.
  • இடவிளக்கப்படங்களில் வீதிகள்,கட்டிடங்கள் என்பன உண்மையான அளவுதிட்டத்தில் வரையப்பட்டிருக்காமை.

12. இலங்கையில் இடவிளக்கப்படங்கள் எத்தனையாம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

  • இலங்கையில் மெற்றிக் (Metric) அளவவீட்டினை பயன்படுத்தி வரையப்படும் படங்கள் 1980 ஆம் ஆண்டு முதல்  நடைமுறைக்கு வந்தன.இதனை இலங்கை நில அளவீட்டு (Survey Department) திணைக்களம் அங்கீகரித்து வெளியிட்டது.

13. இலங்கையின் வரையப்படும் இடவிளக்கப்படங்களின் அளவுத்திட்டம் என்ன?

  • 1:50,000 (ஒன்றுக்கு ஐம்பதினாயிரம்)

1:50,000,Topographic Maps, சம கணியக் கோட்டுப் படங்கள்,GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்
1:50,000 -Topographic Maps

14. இலங்கையில் 1:50.000 இடவிளக்கப்படத்தினை வரைவதற்கு பயன்படும் எறியம்?

  • மேற்கற்றோ எறியம்| Mercator projection

மேற்கற்றோ எறியம்| Mercator projection,1:50,000,Topographic Maps, சம கணியக் கோட்டுப் படங்கள்,GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

மேற்கற்றோ எறியம்| Mercator projection

15.இலங்கையின் 1:50.000 இடவிளக்கப் படங்களில் காணப்படும் தேசிய வலைப்பின்னல் முறைமையை அடித்தளமாகக் கொள்வதற்குத் தெரிவுசெய்யப்பட்ட திரிகோணகணிதப் புள்ளி.

பீதுறுத்தலாகல(Pidurutalagala) மலையின் உச்சி

16. இலங்கையின் 1:50000 இடவிளக்கப் படங்களின் நெய்யரி குறிப்பு பெறுமானங்கள் ஆரம்பிப்பது?

  • பீதுறுதாலகலவுக்கு (Pidurutalagala)மேற்காக 200km மற்றும் தெற்காக 200 km புள்ளியில்
மேற்கற்றோ எறியம்| Mercator projection,1:50,000,Topographic Maps, சம கணியக் கோட்டுப் படங்கள்,GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

17.1:50 000 இடவிளக்கப் படத்தில் 10 cm ஆகக் காட்டப்படும் ஆறு ஒன்றின் உண்மையான நீளம் எவ்வளவாக இருக்கும்?

  • 5 Km

18. நெய்யரிப் படத்தின்Metric Mapபடி இலங்கையின் மொத்த நிலப் பகுதியை 1:50.000 அளவுத்திட்டத்தில்  உள்ளடக்க எத்தனை இடவிளக்கவியல் கட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன?

  • 92

மேற்கற்றோ எறியம்| Mercator projection,1:50,000,Topographic Maps, சம கணியக் கோட்டுப் படங்கள்,GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

19. இலங்கையில் ஒருங்கிணைக்கபட்ட நெய்யரிப்Metric Map  படத்தாள்கள் எவை?

  1. எண் 57 மற்றும் 58
  2. எண் 64 மற்றும் 65 
  3. எண் 71 மற்றும் 72 

மேற்குறிப்பிட்ட   பிரதேசங்கள் இணைக்கப்பட்டு ஒரு படத்தாளாக அச்சிடப்பட்டுள்ளன,எனவே 89 படங்கள்.

20. நெய்யரிப் படத்தில்| Metric Map ( 92 படத்தாள்களில்உள்ளடக்கப்படும் ஒரு பாடத்தாளின் பட முகப்பின் நீளமும் அகலமும் என்ன?

  • நீளம்              - 40 KM
  • அகலம்         - 25 KM

நெய்யரிப் படத்தில் ( 92 படத்தாள்களில்) உள்ளடக்கப்படும் ஒரு பாடத்தாளின் பட முகப்பின் நீளமும் அகலமும் என்ன

நெய்யரிப் படம்| Metric Map 

21.1:50000 அளவுத்திட்டத்திற்கு ஏற்ப படமாக்கப்பட்ட பின்னர் குறித்த இடவிளக்கப்படத்தின் நீள அகலம் என்ன?

  • நீளம்             - 40km x 2 =  80cm
  • அகலம்        - 25km x 2 = 50cm

22.1:50.000 இடவிளக்கப்படத்தில் உள்ளடக்கப்படும் பிரதான அம்சங்கள்?

  • பொருத்தமான அளவுதிட்டம்(Appropriate scale)
  • அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள்(Approved Codes)
  • ஏற்றுக்காள்ளப்பட்ட நிறங்கள்(Accepted colors)
  • திசை(Direction)
  • அமைவிடம்(location)

23. 1:50,000 இடவிளக்கப்படத்தில் பயன்படுத்தப்படும் அளவுத்திட்டங்கள் எவை?

  1.  நேர்கோட்டு அளவுத்திட்டம்.
  2.  வகைக் குறிப்பின்ன அளவுத்திட்டம்.

மேற்கற்றோ எறியம்| Mercator projection,1:50,000,Topographic Maps, சம கணியக் கோட்டுப் படங்கள்,GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

24.1: 50000 இடவிளக்கப்படத்தின் முகப்பிலுள்ள தகவல்கள் எவை?

மேற்கற்றோ எறியம்| Mercator projection,1:50,000,Topographic Maps, சம கணியக் கோட்டுப் படங்கள்,GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

  • நிலவுருவங்கள் (landforms)
  • இயற்கை தாவரங்கள்(Natural plants)
  • பாறை வெளியரும்பு (Rock ore)
  • நிர்வாக எல்லைகள் (Administrative boundaries)
  • குடியிருப்புகள்(Residences)
  • பயிர் செய்கை நிலங்கள்(Cultivated lands)
  • அரசாங்கக் கட்டிடங்கள்(Government buildings)
  • பாதைகள்(Roads)

25. 1: 50000 இடவிளக்கப்படத்தின்புற எல்லைத் தகவல்கள் எவை?

மேற்கற்றோ எறியம்| Mercator projection,1:50,000,Topographic Maps, சம கணியக் கோட்டுப் படங்கள்,GIS and Cartographic Skills,  Fundamentals of Cartography,  Cartography Techniques,  Basics of Map Making, Topographic Mapping படவரைகலையியல் நுட்ப முறைகள், வரைபட உருவாக்க நுட்பங்கள்,புவியியல் வரைபடம்  ,வரைபட வடிவமைப்பு அடிப்படைகள்,புவியியல் தரவு வரைபடம் , நவீன வரைபட தொழில்நுட்பம் ,ஜிஐஎஸ் வரைபட நுட்பம்

  • இடவிளக்கப்படத்தின் வகை  (Type of map)
  • இடவிளக்கப்படத்தின் பெயர்     (The name of the map)
  • படத்தின் அளவுத்திட்டம்  (Image scaling)
  • திசை  (Direction)
  • குறியீட்டு விளக்கம் (Symbol Description)

Post by: Puvitips

Post a Comment

புதியது பழையவை