Understanding Carbon Credits and Their Key Characteristics,கார்பன் வரவு (Carbon Credits)

கார்பன் வரவு (Carbon Credits) – அதன் முக்கிய அம்சங்கள் -Understanding Carbon Credits and Their Key Characteristics


பூகோள ரீதியாக இன்று நாம் அனுபவித்து வரும் சூழல் பிரச்சனைகளில் முதன்மையானதாக வும் பிரதானமானதாகவும் அடையாளப்படுத்தப்படுவது, புவி வெப்பமாதலும் அதனுடன் இணைந்த அதன் இடர்பாடுகளுமே(The most pressing environmental issue is global warming and its risks.) ஆகும்.


பூகோள வெப்பமாதலுக்கு(Global warmingஉலகில் உள்ள அனைத்து பிரதேசங்களும் நாடுகள்(Countries),பிராந்தியங்கள்(regions),கண்டங்கள் (continents) மற்றும் சமுத்திரங்கள்(oceans) என எத்தகைய வேறுபாடுகளுமின்றி அதன் தாக்கத்தினை அனுபவித்து வருகின்றன.

உலகலாவிய ரீதியில்  அதிகரித்து வரும் வெப்பமாதலுக்கு பிரதான காரணியாக  பச்சை  வீட்டு வாயுக்களின்   வெளியேற்றமும் அதன் அதிகரித்த  உற்பத்தியும் (Emissions  of  greenhouse gases and  their rising )   அடிப்படையாக  அமைந்துள்ளன.

இக்காரணத்தினால்,புவியில்  பச்சை  வீட்டு  வாயுக்களின்  உற்பத்தியினை  குறைத்தும்  அதன்  பாவனை  மற்றும்  வெளியேற்றத்தினை  தடுத்து  புவியின்  சராசரி  வெப்பநிலையினை  கைத்தொழிற்  புரட்சிக்கு  முன்(Before  the  Industrial  Revolution)  இருந்ததினைப்  போன்று  மாற்றுவதற்காக  பச்சை  வீட்டு  வாயுக்களில்  முதன்மையானதான  கார்பன்(Carbon)  வாயுவினை  மையப்படுத்தி  பல்வேறு  வகையான  தடுப்பு  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன.


கார்பன் தடுப்பு நடவடிக்கைகள்:Top Carbon Sequestration Strategies for a Sustainable Future

எடுத்துக்காட்டாக இன்று பின்வரும் அம்சங்கள் அதிக முக்கியத்துமுடையதாக நோக்கப்படுகின்றன,

  • காபன் அடிச்சுவடு(Carbon Footprints), 
  • கார்பன் நியூட்ராலிட்டி(Carbon Neutrality) என்பனவற்றுடன் 
  • கார்பன் கிரெடிட்(Carbon Credit) என்ற அம்சமும் இன்று அனைவராலும் அதிக முக்கியத்துவமுடையதாக நோக்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட அம்சங்கள் வொவ்வொன்றினையும்  அறிந்துக்கொள்வதன் வாயிலாக எமது புவிவெப்பமடைவதனை  எம்மால் குறைத்துக்கொள்ள முடியும்,அவ்வகையில் இன்று  நாம்  கார்பன்   கிரெடிட்(Carbon  Credit)  என்றால் என்ன அதன் பண்புகள் என்ன   என்பனவற்றினை அவதானிக்க  உள்ளோம்.


கார்பன் வரவு / கிரெடிட் தோற்றம்-Origin of carbon credit

கார்பன்    கிரெடிட்    (Carbon    Credit)    எண்ணக்கருவானது    முதல்    முதலாக    1997    ஆம்    ஆண்டு    ஜப்பான்    நாட்டின்    கியோட்டோ(Kyoto,    Japan)    நகரத்தில்    இடம்    பெற்ற    புவி    வெப்பமாதலை    தடுக்கும்    உச்சி    மாநாட்டின்    போது    முன்மொழியப்பட்டது.


Kyoto,    Japan


இவ்வொப்பந்தம் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் (GHG)  உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும்( limit and reduce greenhouse gases (GHG) emissionsபல்வேறு வகையான நுட்பமுறைகளை  முன்வைத்தது எடுத்துக்காட்டாக,

1.செறிவு வர்த்தகம் – தி கார்பன் மார்க்கெட் (International Emissions Trading)

2. கீளின் டெவலப்மெண்ட் மெக்கனீசம் (Clean Development Mechanism (CDM)

3. கூட்டு செயல்பாடு Joint Implementation (JI)

இம்மாநாட்டில்    கார்பன்    உமிழ்வை(Carbon    emissions)    குறைப்பதற்கு    உலக    நாடுகள்    மேற்கொள்ள    வேண்டிய    நடைமுறைகளை    விளக்கியதுடன்    அந்த    ஒப்பந்தங்களில்    உலக    நாடுகளை    கைச்சாத்திடவும்    செய்தது.    அதன்    ஒரு    கட்டமாகவே    கார்பன்    கிரெடிட்(Carbon    Credit)    என்ற    வரைவு    அங்கீகரிக்கப்பட்டு    நடைமுறைக்கு    வந்தது.


இவற்றின் ஊடாக,

வளர்ந்த நாடுகள் கரிம வாயு உமிழ்வுகளை(To control Green gas emissions) கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன.

அத்துடன்     "Cap-and-Trade"     முறை     உருவானது     அதாவது     ஒரு     நாடு     குறிப்பிட்ட     அளவுக்கு     மேல்     கிரீன்ஹவுஸ்     வாயுக்களின்     உமிழ்வுகளை     வெளியேற்ற     முடியாது.(Cap-and-trade     is     a     market-based     approach     to     reduce     emissions.)     


Cap-and-Trade,-Kyoto,    Japan,Carbon Neutrality,Carbon Footprints,What is Carbon Credit, Carbon Footprint,Carbon Sequestration,Carbon Trading,Carbon Disclosure,Carbon Market
Cap-and-Trade

இதனை     ஐக்கிய     நாடுகளின்     பருவநிலை     மாறுபாடு     மாநாடு     (United     Nations     Climate     Change     Conference)     அங்கீகரித்ததுடன்     உலக     நாடுகளையும்     இனைத்துக்     கொண்டது


கார்பன்வரவு / கார்பன் கிரெடிட் என்றால் என்ன-What is Carbon Credits?

கியோட்டோ   ஒப்பந்தத்தில் (Kyoto  Protocol)   நிர்னயிக்கப்பட்ட   கார்பன்  வரம்பின்  எல்லையினை  விட    ஒரு  நாடு  அதிகமாக       கார்பனை(Carbon)   உபயோகிக்கும் பட்சத்தில் அது  சுற்றுச்சூழலை       பாதிக்கும்  செயல்பாடாகின்றது.

எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் வெளியிடும் கார்பன் வரம்பின் எல்லையை விட குறைந்த அளவு கார்பன் வாயுவினை வெளியேற்றிய நாட்டிடமிருந்து தான் மேலதிகமாக வெளியிட்ட கார்பனின் பெருமதியினை அந் நாடு வாங்கிக் கொள்ளும் இதுவே கார்பன் கிரெடிட்(Carbon credits) / கார்பன் வர்த்தகம் (Carbon trading) எனப்படுகின்றது.

கார்பன் கிரெடிட் என்பது ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வழங்கப்படும் காசோலை உரிமம் போன்றதாகும்இது ஒரு டன் (1 ton) கார்பன் டைஆக்ஸைடு (CO₂) அல்லது இதற்குச் சமமான உமிழ்வுகளை குறைக்க அல்லது வெளிப்படாமல் தடுப்பதைக் குறிக்கிறது.


What is Carbon Credits
What is Carbon Credits 


கார்பன் கிரெடிட்டின் புரிதலை எளிமையாக புரிந்துக்கொள்ளஉதாரணமாக என்ற நாட்டின் காபன் வெளியிட்டு எல்லையானது 100 தொன் என எடுத்துக் கொள்வோம் ஆனால் அது தனது உற்பத்தியின் காரணமாக 120 தொன் என்ற அடைவினை அடைந்து விட்டதுஇங்கு அதற்கு நிர்ணயிக்கப்பட்ட அடைவை விட 20 வீதம் கூடுதலாக கார்பனை உற்பத்தி செய்துள்ளது. 

மறுபுறம் என்ற நாட்டுக்கு கார்பன் வெளியீடு எல்லை 100  தொன் என நிர்ணயித்துள்ளது எனினும் அது 80 சதவீதமான கார்பனேயே வெளியிட்டுள்ளது அங்கு அதற்கு 20 சதவீதம் மிகுதியாக உள்ளது 

இந்த சந்தர்ப்பத்தில் தான் மேலதிகமாக வெளியிட்ட கார்பனை ஈடு செய்வதற்காக B இடமிருந்து 20 சதவீத கார்பனை வாங்கிக் கொள்ளும் இதுவே  கார்பன் கிரெடிட்(Carbon Credit)   அல்லது கார்பன் வர்த்தகம்(Carbon trading)  ஆகும்.

ங்கு கார்பன் ஒரு வர்த்தக பொருள்(Trade material) போல பயன்படுத்தப்படுகிறது: கார்பன் எமிஷன்(Carbon emission) அதிகமாக இருக்கும் நிறுவனங்கள் கார்பன் கிரெடிட்யை(Carbon credits) வாங்கி தங்களின் அடைவினை சமநிலைக்கு கொண்டுவருகிறார்கள்.

இங்கு ஒரு நாடு  தன்  வைப்பில் உள்ள  கார்பனை ஒரு  நாட்டுக்கு       விற்கவோ அல்லது  ஒரு  நாட்டிடமிருந்து  கார்பனை  வாங்கிக்  கொள்வதனையோ  (Sell  ​or  buy)   காபன் வரவு,வர்த்தகம்  அல்லது  கார்பன்  கிரெடிட்   என அடையாளப்படுத்த முடியும்.


கார்பன் கிரெடிட் நோக்கம் – Purpose of Carbon Credits in Reducing Carbon Emissions

கியோட்டோ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 1997 ஆம் ஆண்டினை அடிப்படையாக கொண்டு உலக நாடுகள் தாம் வெளியிட்ட கார்பனின் அளவினை அல்லதுபச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தினை 10 ஆண்டுகளுக்குள் 20 வீதத்தால் குறைக்க வேண்டும் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது.


-What is Carbon Credit, Carbon Footprint,Carbon Sequestration,Carbon Trading,Carbon Disclosure,Carbon Market


கார்பன் கிரெடிட்(Carbon Credit) அல்லது  கார்பன் வர்த்தகம்(Carbon       trading)  என்பதின் பிரதான நோக்கமாக உலக   நாடுகள்  தாம்   வெளியிடும்  கார்பனின் அளவினை  அல்லது  பச்சை  வீட்டு  வாயுக்களின் வெளியேற்றத்தினை கட்டுப்படுத்த அல்லது தடைசெய்ய எடுக்க வேண்டிய நுட்பங்களை   எடுத்துக்காட்டுகின்றது.அத்துடன்,

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதிசெய்தல்
  • காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முறைசார் அமைப்பினை கட்டமைத்தல்.
  • அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தங்கள் கரிம எரிபொருள் உமிழ்வுகளை கட்டுப்படுத்த முறைசார் நடவடிக்க்ளை முன்வைத்தல்.
  • குளோபல் வார்மிங் எனப்படும் புவி வெப்பமாதலை தடுத்தல்.
  • நிலைப்பேண்தன்மையினை (Sustainability) அடைய ஊக்குவித்தல்.
  • கார்பன் நியூட்ரல் (Carbon Neutral) நிலையை அடைதல்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental protection)
  • பொருளாதார ஊக்குவிப்பு  (Economic promotion)
  • உலகளாவிய ஒத்துழைப்பு  (Global cooperation)
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி  (Renewable energy development)

மேற்போன்றவற்றினை கார்பன் கிரெடிட் தனது நோக்கங்களாக கொண்டுள்ளது.


உலக நாடுகளுக்கான கார்பன் வெளியீட்டு எல்லை Carbon emission limits for world’s countries

கார்பன்  கிரெடிட்(Carbon   credits) எண்ணக்கருவின் கீழ் 1997 ஆம்  ஆண்டு  கியோட்டோ   உடன்படிக்கையின்(Kyoto  Protocol)  போது  உலக நாடுகள்  எத்தகைய அளவில்  கார்பன்  வெளியேற்றத்தினை  வெளியிட  வேண்டும் என  நிர்ணயிக்கப்பட்டு.அதற்கான எல்லையினை  வகுக்கப்பட்டது.

.நா வின்  மேற்பார்வையில்(Under  the  supervision  of  the  UN)  கீழ்  நாடுகளின்  மொத்த  கார்பன்  உமிழ்வின் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய காபன்  உமிழ்வின்  வரையறையை  உலக  நாடுகளின்       தன்மைக்கேற்ப  வகைப்படுத்தியுள்ளனர்.அதனை பின்வருமாறு  நோக்க       முடியும்.

  1. Annex I
  2. Annex II
  3. Annex B
  4. LCD
  5. Non Annex I


What is Carbon Credits


அனெக்ஸ் நாடுகள்-Annex I 

  • ஐக்கிய நாடுகளின் காலநிலை ஒப்பந்த்தின் (UNFCCC) படி வளர்ந்த (developed) மற்றும் பொருளாதார விருத்திப்பெற்ற நாடுகள் Annex I என்ற வகைக்குள் அடங்குகின்றன.
  • இத்தகைய Annex I நாடுகள்  கடுமையான கார்பன் உமிழ்வுக் குறைப்பு இலக்குகளையும் (emission reduction targets) கட்டுப்பாடுகளையும் பெற்றுள்ளன.

உதாரணம்: ஜெர்மனி, அமெரிக்காஜப்பான்


அனெக்ஸ் நாடுகள்-Annex II 

  • அனெக்ஸ் 2 (Annex II) நாடுகள்  வளர்ச்சியடைந்த நவீன தொழில்நுட்பமும் மற்றும் பொருளாதார வளமும் கொண்ட நாடுகளாகும்.
  • இவை வளர்ந்து வரும் நாடுகளுக்கு (Non-Annex I) நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப (Technology) உதவிகளை வழங்க வேண்டிய கடமையுடன் செயற்படுகின்றன.
  • உதாரணம்: கனடா(Canada)இங்கிலாந்து(Englandநார்வே(Norway),ஆஸ்திரேலியா (Australia),நியூசிலாந்து (New Zealand) 

 அனெக்ஸ் BAnnex B

  • கியோட்டோ (Kyoto Protocol) உடன்படிக்கையின் ஊடாக வரையறை செய்யப்பட்ட நாடுகள் இதனுல் அடங்கும்.
  • 1990 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கார்பன் உமிழ்வு  குறைப்பு  இலக்குகளை (specific emission reduction targets)  இந்நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
  • இவை பெரும்பாலும் அனெக்ஸ் 1 (Annex I) நாடுகளாக உள்ளனஎனினும் அனைத்து அனெக்ஸ் நாடுகளும் அனெக்ஸ் பி-யில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • எடுத்துக்காட்டாக:  கனடா (Canada),ஐரோப்பிய யூனியன் நாடுகள் (EU),ஜப்பான் (Japan),ரஷியா (Russia),நார்வே (Norway),நியூசிலாந்து (New Zealand)

    குறைவிருத்தி நாடுகள் -LCD (Least Developed Countries) 

    • உலகலாவிய ரீதியில் மிகவும் பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகள் இவையாகும். இவை பின்னோக்கிய பொருளாதாரம்குறைந்த எழுத்தறிவு வீதம்சுகாதார வசதிகளின்மை மற்றும் உலக வர்த்தகத்தில் பங்கீடு குறைவாக உள்ள நாடுகளாக இவை உள்ளன.
    • இவை மிகவும் குறைந்தளவான கார்பன் வெளியேற்றத்தினை கொண்டுள்ளன.
    • நேபாளம் ,எத்தியோப்பியா (Ethiopia ),ஹைதி (Haiti),மியன்மார் (Myanmar),பங்களாதேஷ் (Bangladesh ) போன்ற நாடுகள் இவற்றுல் அடங்கும்.

     நொன்-அனெக்ஸ் நாடுகள்-Non-Annex I 

    • வளர்ந்து வரும் அல்லது குறைந்த வளர்ச்சி கொண்ட நாடுகள் (Developing or Underdeveloped Countries) இவையாகும்
    • கடும் கார்பன் குறைப்பு இலக்குகள் இவற்றுக்கு இல்லை. காலநிலை மாற்றத்துடன் போராடும் நாடுகளாகவும் இவை உள்ளன.
    • உதாரணம்:  இந்தியா (India ),சீனா (China),தென்னாப்பிரிக்கா (South Africa),பிரேசில் (Brazil ),எகிப்து (Egypt ),அர்ஜென்டினா (Argentina ),சவுதி அரேபியா (Saudi Arabia ), மொரோக்கோ 


    கார்பன் வரவு  ஒரு நாட்டுக்கு அல்லது நிறுவனத்திற்கு  எவ்வாறு கிடைக்கும்.- How to access carbon credits?

    கார்பன் வரவு

    • .நா பருவநிலை மாநாட்டினால்(United Nations Climate Change Conference) நிர்ணயிக்கப்பட்ட கார்பன் வெளியீட்டின் அளவைவிட ஒரு நாடு குறைவாக வெளியிடும் பட்சத்தில் மிகுதியான கார்பனை விற்கலாம்.
    • கார்பன் உமிழ்வு நடவடிக்கைகளினை கைவிட்டு,அதிகளவான கார்பனினை அகத்துறிஞ்சும் சந்தர்ப்பத்தில் தம்மிடம் இருக்கும் மேலதிக கார்பன் கிரெடிட்னை விற்க முடியும்.
    • தம்மிடம் இருக்கும் தொழில்நுட்பங்களையும் வளங்களையும் பயன்படுத்தி காபன் வெளியீட்டினை கட்டுப்படுத்துவதன் மூலம் சேகரித்த மேலதிக கார்பனை வர்த்தக நோக்கத்திற்காக விற்கலாம்.
    • அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்களுடைய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் குறைந்த கார்பன் வெளியீட்டினை மேற்கொள்ளும் நாடுகளிடம் முதலீடு செய்து , அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின்  கார்பனை தன்னுடைய கணக்கில் வைப்பிலிட்டுக் கொள்ளும் இதன் மூலம் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்களுடைய கார்பன் வெளியீட்டு அளவினை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.

    உலகில் அதிகமான கார்பன் கிரெட்டினை வாங்கிக்கொள்ளும் நாடுகள்-Which country is the largest buyer of carbon credits?

    உலக நாடுகளில் அதிகளவான கார்பன் கிரெடிட்னை வாங்கிக் கொள்ளும் நாடுகளாக ஐரோப்பிய நாடுகளே உள்ளன. இவற்றை தவிர்த்து உலகின் பெரும் நிறுவனங்களும் கார்பன்  கிரெடிட்டினை கொள்வனவு செய்து கொள்கின்றன அந்த வகையில் 

    • டிஸ்னி(Disney),
    • அமேசான்(Amazon) ,
    • மைக்ரோசாப்ட்(Microsoft) போன்ற நிறுவனங்கள் உள்ளன.

    உலகில் அதிகமான கார்பன் வரவுவினை விற்கும் நாடுகள்-Which country is the largest seller of carbon credits?

    கார்பன்  கிரெடிட்டினை அதிகளவு விற்கும் நாடுகளாக  இந்தியாவும்        சீனாவும்(India  and  China) உள்ளன.இதுவே உலக நாடுகளில் அதிகளவான        காபனினை   அபிவிருத்தி  அடைந்த  நாடுகளுக்கு விற்று வருவாயை        ஈட்டி  கொள்கின்றதன.

     

    கார்பன்  வரவுவினை அதிகம் கொண்டுள்ள நாடுகள்- Which country has the most carbon credits?

    உலக நாடுகளின் அடிப்படையில் அதிகளவான கார்பன் கிரெடிட்னை கைவசம் வைத்திருக்கும் நாடுகளாக 

    • நியூசிலாந்து(New Zealand
    • ஜப்பான்(Japan)
    • ஆஸ்திரேலியா(Australia)
    • அமெரிக்கா( USA)
    • சவுத் கொரியா(South Korea)
    • மேக்சிகோ(Mexico)
    • இந்தியா(India)
    • சீனா(China)
    • தாய்லாந்து(Thailand)
    • வியட்நாம்(Vietnam) போன்றவை உள்ளன.

    தங்களிடமுள்ள கார்பன் கிரடிட்டினை தங்களதுதேவைக்காக பயன்படுத்தும் அதே வேலை இந்தியா மற்றும் சீனா போன்றவை தங்களிடமுள்ள மேலதிக கார்பனை வர்த்தக நோக்கத்திற்காக வியாபாரமும் செய்கின்றன.


    கார்பன் கரன்சியினது பெறுமதி- How much is a Carbon currency worth?

    கார்பன் கரன்சியானது(Carbon currency) ஒரு டன் கார்பன் கையிருப்பின் அளவினை மதிப்பீடு செய்து டாலர்களில் வெளியிடுவதாகும் எனினும் இதனை வரையறை செய்வது சிக்கலானதாக உள்ளது.


    Carbon currency
    Carbon currency

    இவற்றிற்கு நிலையான பெறுமதி  வகுக்கப்படவில்லை காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் போதே இவற்றிற்கான பணப்பெறுமதி தீர்மானிக்கப்படுகின்றது.

    இன்றைய தினத்தில் ஒரு கார்பன் கிரெடிட்டிங் பெறுமதியானது அமெரிக்க டாலரில் 0.1824 தொகையாக உள்ளது Convert Carbon Credit to US Dollar (CCT to USD)


    கார்பன் வரவுவின்  மூலமாக கிடைக்கப்பெறும் நன்மைகள்-Benefits of Carbon Credit


    What is Carbon Credits ,Cap-and-Trade,-Kyoto,    Japan,Carbon Neutrality,Carbon Footprints,What is Carbon Credit, Carbon Footprint,Carbon Sequestration,Carbon Trading,Carbon Disclosure,Carbon Market

    • உலகின் ஒவ்வொரு நாடும் தாம் வெளியிடும் கார்பனின் அளவை நிர்ணயித்துக் கொள்ள முடியும்.
    • அளவுக்கு அதிகமான கார்பன் வெளியேற்றத்தினை தடுத்துக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
    • சுற்றுச்சூழலுக்கு பாதகமான முறையில் கார்பன் வெளியேறுவதனை தடுக்க முடியும்.
    • காலநிலை பாதிப்பினை தடுத்துக்கொள்ள முடியும்(Climate change can be prevented).
    • புவி வெப்பமடைவதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும்(Global warming and its consequences) குறைத்துக் கொள்ள முடியும்.
    • நிர்ணயிக்கப்பட்ட கார்பனை விட அதிகமான கார்பனை வெளியேற்றும் பட்சத்தில் அதற்கான மாற்றீடுகளையும் அதன் விளைவுகளையும் குறித்த நாடும் ,நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் என இதனால் சூழல் சீரழிவு தடுக்கப்படுகின்றது.
    • கார்பன் உமிழ்வினை(Carbon emission) தடுத்து கார்பன் அகத்துறிஞ்சல் செயற்பாடுகளை மேம்படுத்த முடியும்.
    • கார்பன் அகத்துறிஞ்சல்(carbon absorption) செயற்பாட்டிற்கான வாய்ப்புக்கள் ஊக்குவிக்கப்படும்.
    • புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களுக்கான(renewable energy resources) தேவை அதிகரிக்கப்படுதல்.
    • அபிவிருத்தியடைந்த வரும் நாடுகள் காபன் வர்த்தகத்தின் மூலம் அந்நிய செலாவணியை(Foreign exchange) பெற்றுக் கொள்ள முடியும்.


    கார்பன் கிரெடிட்டின் குறைப்பாடுகள்- Disadvantages of carbon credit

    • முதலாம் மண்டல நாடுகள் தங்களுடைய விருப்பிற்கேற்ப கார்பனை அதிகளவு வெளியீடு செய்கின்றன.
    • அபிவிருத்தி அடைந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு தாங்கள் வெளியிடும் கார்பனின் வரம்பை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    • நாடுகளும் பல்தேசிய நிறுவனங்களும் மறைமுகமாக கார்பன் உமிழ்வு நடவடிக்கைகள் ஈடுபடுகின்றமை இது ஒப்பந்தத்தினை தகர்க்கின்ற வழிமுறையாகும்.
    • உலக நாடுகளுக்கான கார்பன் வெளியீட்டு எல்லை நிர்ணயிக்கப்பட்டாலும் வல்லரசு நாடுகள் இதற்கு விதிவிலக்காகின்றன.
    • அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் குறைவிருத்தி நாடுகளின் அபிவிருத்தி தடைபடுதல்.
    • காபன் வர்த்தகம் என்ற போர்வையில் வல்லரசு நாடுகள் மூன்றாம் மண்டல நாடுகளை மறைமுகமாக அடிமைப்படுத்துகின்றமை.
    • வல்லரசு நாடுகள்  ஒப்பந்தத்தில் இருந்து தம்மை விலக்கிக் கொள்கின்றமை ,எடுத்துக்காட்டாக கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து விலகிய கனடாவினை குறிப்பிடலாம்.
    • கார்பன் கிரெடிட்டானது ஏட்டளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளதாக குற்றச்சாட்டப்படுகின்றது.

    முடிவுரை -Conclusion

    உலகில் கார்பன் வெளியேற்றமின்றி எந்த ஒரு தொழில் நடவடிக்கைகளையும்முயற்சிகளையும்  மேற்கொள்ள முடியாதென்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

    எம்முடைய ஒவ்வொரு செயற்பாட்டிலும் கார்பன் உமிழ்வு கணக்கெடுக்கப்படுகின்றது ஆகவே அதன் வெளியீடின்றி எம்மால் இயங்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அதேவேளை  எமது புவியினை காப்பதும் அதன் நிலைப்பேண் தன்மைக்கும் நாம் உறுதிப்பூண்ட வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் கார்பன் கிரெடிட் என்ற எண்ணக்கரு சூழல் நிலைப்பேன் தன்மைக்கும் சூழல் சீரழிவு தடுப்பிற்கும் சிறந்த ஒரு நடைமுறை நுட்பமாகும்.

    கார்பன் கிரெடிட் இன் சாதகத் தன்மையை அறிந்து முறையான விதத்தில் அதனை நடைமுறைப்படுத்தும் சந்தர்பத்தில் அதன் மூலமாக எமது புவியினை காப்பதுடன் காலநிலை மாற்றத்தின் சடுதியான விளைவுகளிலிருந்தும் எம்மை விடுவித்துக்கொள்ள முடியும்.

    Post by: Puvitips



    Post a Comment

    புதியது பழையவை