உலகில் மாறிவருகின்ற நிலத்தோற்ற பாங்குகள்(The Changing Global Landscape)
அறிமுகம்
புவியின் மேற்பரப்பின் உருவாக்கமானது திடமான
அல்லது உறுதியான(Solid or firm) பாறைகளைக் கொண்டும் நீரினைக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நிலமானது புறவிசை கருவிகளினால்(External force ) தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருவதனை
அவதானிக்கலாம். நதி நீர் பாய்ச்சல் அல்லது சமுத்திர நீர் ஆகியன பருபொருட்களை அரித்து, அவ்வாறு அரித்த பருபொருட்களைக் கொண்டு சமவெளி (Valleys)நீர்த்தடாகம் (lakes), கடற்கரையோர
மணல் சார்ந்த நிலங்கள்(coast) போன்றனவற்றினை உருவாக்கிவிடுகின்றன.
இதேபோல் காற்று(Wind), தரைகீழ் நீர்(Groundwater) மற்றும் பனி(Ice) அகியன அவ்வவ் பிரதேசத்தினுடைய
புவிமேற்பரப்பினை(Earth's surface) மாற்றியமைப்பதில் பங்களிப்பு
செய்கின்றன.
பௌதீக செயன்முறையால்(Physical
process)
உருவாகியிருக்கின்ற புவிமேற்பரப்பின் தன்மையானது, பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கைக்கும் புதிய உயிரினங்களின்
தோற்றத்திற்கும் வழிவகுக்கின்றது. இவை சூழலியல் நிலத்தோற்றம் (Ecology
Landscape) என்றவொரு
புதிய நிலத்தோற்றத்தினை உருவாக்குவதற்கு வழிவகுத்திருக்கின்றது.
பின்னர் உயிரின வாழ்க்கையில் மனிதனும் ஒரு பகுதியாக அமைந்துவிடுகின்றான். மனிதனின் இவ்வமைவானது, புவிமேற்பரப்பில் ஒரு பதிய வகையான பண்பாட்டுச் சார் நிலத்தோற்றங்களின்(Cultural landscapes) உருவாக்கத்திற்கு வழிவகுத்து விடுகின்றது.
இவ்வாறாக பௌதீக, சூழலியல் மற்றும் பண்பாடுச் சார் நிலத்தோற்றங்களின்(Physical, ecological and cultural landscapes) உருவாக்கம் புவிமேற்பரப்பில் அமைந்திருக்கின்ற அதேவேளை, இவை காலத்திற்குக் காலம் மாற்றமுற்றும், மாற்றப்பட்டும் வருகின்றமையை அறிய முடிகின்றது.
அதனடிப்படையில் உலகின் நிலத்தோற்றங்கள்
உருவாக்கத்தினை நோக்குகின்றபோது, பௌதீக
செயன்முறைகள் மற்றும் மானிட காரணிகள் பங்கு கொள்கின்றன. இந்தவகையில் நிலத்தோற்ற
அபிவிருத்தியில் பௌதீக செயன்முறையின் பங்களிப்பினை பின்வருமாறு அவதானிக்கலாம்.
நிலத்தோற்ற அபிவிருத்தியில் இயற்கையின் பங்கு-The role of nature in landscape development
பௌதீக நிலத்தோற்றங்களின் உருவாக்கமே புவியில்
முதலில் தோன்றியதெனலாம். அவ்வகையில் இந்த நிலத்தோற்றத்தின் உருவாக்கத்திலும் அதன்
அபிவிருத்தியிலும் பங்களிப்பு செய்கின்ற காரணியாக இயற்கை செயன்முறை
விளக்குகின்றது. இந்த இயற்கை செயன்முறைகளாக, பின்வருவனவற்றை
அடையாளப்படுத்தலாம்.
- புவிவெளியுருவவியல் (Geomorphology)
- உயிரோடு நிலையிலுள்ள உருவங்களினை தாபித்தல் (Establishment
of Life Forms)
- மண் உருவாக்கம் (Soil Formation)
- இயற்கையின் குழப்பம் (Natural
Disturbance) ஆகியன
விளங்குகின்றன.
புவிவெளியுருவவியல் (Geomorphology)
நிலத்தோற்ற உருவாக்கத்தில் புவிவெளியுருவவியலே ஆரம்பமாக காணப்படுகின்றது. அவ்வகையில் இந்த புவிவெளியுருவவியலின் அடிப்படையில் பின்வருவன நிலத்தோற்றத்தினை உருவாக்குகின்றன.
![]() |
| நதித்தொகுதிகள் (River system) |
- நதித்தொகுதிகள் (River
system)
- வண்டல் படிந்த பாறை, காலநிலை மற்றும் சமநிலையிலுள்ள விசைகளின் செயற்பாடுகள் (Bedrock,
Climate, and Static Processes)
- மாறுப்பட்ட காலநிலைக்கு கீழான புவிவெளியுருவவியல்
செயன்முறைகள் (Geomorphology Process under
Different Climates)
பவிவெளியுருவியலின் அமைப்பானது மிக நீண்ட கால அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற ஒன்றாகும். (Ruhe, 1975) அதேவேளை புவிவெளியுருவவியல் உருவாக்கத்தில் காலநிலையும் பங்கு கொள்கின்றது. எனவேதான் புவிவெளியுருவியலை காலநிலையுடன் தொடர்புப்படுத்தி அவதானிக்க வேண்டியுள்ளது.
நிலவுருவங்களும் அதனுடைய உருவாக்க காரணிகளும்.
மிகவும் முக்கியமான 4 செயன்முறைகள் புவிமேற்பரப்பினுடைய
இயற்கை புவிவெளியுருவவியல் அம்சங்களை(Geomorphological features) உருவாக்குகின்றன. அதனடிப்படையில்
01.அகவிசைகளின் தொழிற்பாடு (internal waves)
அகவிசைகளின் தொழிற்பாடு (Plate Tectonics) தகட்டோட்டசைவுக்கும்(Plate Tectonics and Continental Drift), புவிமேற்பரப்பில் மடிப்பு மலைகள் உருவாக்குவதற்கும், குறைகள் மற்றும் எரிமலைகள் தோற்றுவிப்பதற்கும் காரணமாக அமைகின்றது. மேலும் மடிப்பு மலை தொடர்களையும் ஏனைய நில உருவங்குளையும் உருவாக்குகின்றது.
![]() |
Plate Tectonics |
02.அரித்தல் (Erosion)
இரண்டாவது முக்கிய செயன்முறையாக அரித்தல் (Erosion) அமைகின்றது. அதனடிப்படையில் தின்னட்
கருவிகள் (ஆறு, காற்று) என்பனவற்றின் செயற்பாடுகளினால் வெவ்வேறு வகையான நிலமேற்பரப்பு அம்சங்கள்
அரிப்புக்குள்ளாகுகின்றன.
03.படிதல்(Lapping)
மூன்றாவது செயன்முறையானது, அரிப்புக்குள்ளான பொருட்கள்
படிவுக்குள்ளாதல். குறிப்பாக தாழ்வான நிலங்களை நோக்கியதாக இப்பொருட்களின் படிவு
அமைகின்றது.
அரித்தலின் விளைவாக மென்மையான நிலத்தோற்றங்களின்
உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்றது.
04.பனியரிப்பு(Periglacial Processes & Landforms)
அடுத்தப்படியாக நான்காவது செயன்முறையாக, பனியரிப்பு(Periglacial Processes & Landforms) அமைந்து விடுகின்றது. இவை நிலத்தோற்றங்களை
மென்மைப்படுத்தவும் உருமாற்றத்திற்கு உட்படுத்துவதாகவும் காணப்படுகின்றது.
நிலத்தோற்ற உருவாக்கத்தில் காலநிலையின் பங்களிப்பு(The contribution of climate in the formation of landforms)
நிலத்தோற்றத்தினை அபிவிருத்தி
செய்வதில் மாறுப்பட்ட காலநிலைக்கு கீழான புவிவெளியுருவவியல் செயன்முறைகள்
பங்களிப்பு செய்கின்றன. அவற்றினை பின்வருமாறு நோக்கலாம்.
பூமத்தியகோட்டு புவிவெளியுருவவியல் (Equatorial Geomorphology)
பூமத்தியகோட்டு காலநிலையானது, அந்த பிரதேசத்தினுடைய நிலவுருவத்தில் தாக்கத்தினை செலுத்துகின்றது. இங்கு வெப்பநிலையானது, எப்போதும் குறையாத வகையிலும் இரசாயன மாற்றம் அதிகளவு நடக்கின்ற பகுதியாகவும் பாறைகள் அதிகளவு வானிலையாலழிதலுக்கு உட்படுகின்ற வகையில் அமைந்துள்ளன.
இங்கு மார்ச் 21 (March) மற்றும்
செப்டம்பர் (September 21) காலப்பகுதியிலேயே சூரிய வெப்பம் அதிகரிக்கின்ற காலப்பகுதியாக
கருதப்படுகின்றது. இந்த காலநிலையானது, இப்பிரதேசத்திலுள்ள தாவர போர்வைகளின் செரிவை
அதிகரிக்கச் செய்துள்ளது. இத்தாவர போர்வையானது வண்டல் படிந்த பாறைகளை மூடியதாக
காணப்படுகின்றது.
அயன காலநிலையில் புவிவெளியுருவவியல் (Geomorphology
in Tropical Climates)
அயனவலய காலநிலையானது பூமத்திய ரேகைக்கு தெற்கே 23.5° மற்றும் வடக்கே 23.5° இடையே அமைந்துள்ளது.இருப்பினும் வடக்கு
தெற்கு 23½ பாகையில் அமைந்த காலநிலையின்
புவிவெளியுருவவியல் தன்மையே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக
அயனவலயத்தினுடைய நிலவுருவங்களின் தோற்றத்தில் பின்வரும் முக்கிய இரண்டு காலநிலை
அம்சங்கள் பங்கு கொள்கின்றன.
1.வரண்ட காலநிலை
2.மழைவீழ்ச்சி
1.வரண்ட
காலநிலை – தொடர்ச்சியாக அதிகரிக்கின்ற வரண்ட காலநிலையை இங்கு காணலாம். இதனால்
இக்காலநிலையுள்ள அயன பிரதேசங்களில் இருக்கின்ற காடுகள் திறந்த அமைப்பில்
காணப்படும். மேலும் மண் போர்வை பாதுகாக்கப்படுவது குறைவதோடு, நீரரிப்பு செயன்முறை குறைந்து
காணப்படும்.
2.மழை
– குறிப்பிட்ட சில காலப்பகுதியில் மாத்திரம் மழைவீழ்ச்சியின் தன்மை காணப்படும்.
இந்த மழையானது, அரித்தல் செயன்முறைக்கு உந்து சக்தியாக
காணப்படுகின்றது. அத்தோடு மழைகாலத்தின் போது கழுவு நீரானது மேற்பரப்பின் மீது
செல்வதோடு இவை 30% அல்லது 50% வரை மண்ணரித்தல் செயன்முறையை
செய்விக்கின்றது. இவ்வாறான அரித்தல் செயன்முறையானது அப்பிரதேசத்திலுள்ள மேற்பரப்பு
தரையை ஆழப்படுத்துவதோடு தாழ்வான இடங்களில் அடையல்களை படியவைக்கின்றது.
பாலைவன புவிவெளியுருவவியல்(Desert landforms)
புவியில் மிகவும் வேறுப்பட்ட இடமாக பாலைவனம் காணப்படுகின்றது. தாவர போர்வை மிகவும் குறைந்த வகையிலும் குறைந்த ஈரப்பதனை கொண்டதாகவும் காணப்படுகின்றது. இருப்பினும் பாலைவன பிரதேசத்தின் நிலத்தோற்றமானது வேறுப்பட்டு காணப்படுகின்றது. குறிப்பாக
- மணல் பாலைவனம் (Sandy Desert),
- பாறைகள் நிறைந்த பாலைவனம் (Rocky Desert)
- குளிர் பாலைவனம் (Cold Desert)
- சமதரையான பாலைவனம் (Flat Deserts)
- மலை பாலைவனம் (Mountain Deserts) இன்னும் மேலதிகமான பாலைவனங்களை குறிப்பிடலாம்.
![]() |
| Desert landforms |
பாலைவன பிரதேசத்தினை பொருத்தமட்டில் மழைகிடைப்பது அபூர்வமாகும். பாலைவனத்தினுடைய மிகவும் முக்கியமான தனிப்பட்ட வித்தியாசங்களில் ஒன்றாக காணப்படுவது உப்பு ஏரி அல்லது மட்டமான ஏரியாகும். இது அடிக்கடி கண் கூசும்படி பிரகாசமானதாக காணப்படுகின்றது.
மற்றொரு பாலைவனப் பகுதி காற்றரிப்பினால் உட்குழிவுள்ள மணல் பாறைகளையும் தோற்றுவிக்கின்றது. எடுத்துக்காட்டாக தேன்கூட்டுப்பாறையை குறிப்பிடலாம்.
முடிவாக பாலைவன பிரதேசத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக தெளிவாக பேதம் காட்டுகின்ற பாலைவனச்சோலை அல்லது பாலைவனத்தின் பசுந்தரை அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவை பொதுவாக துண்டுகள் (Patches) போன்ற அமைப்பில் காணப்படுவதோடு. இவை ஒன்றில் ஒன்று நடைபாதைகள் (Corridors) மூலம் தொடர்பை ஏற்படுத்துகின்றது.
மெடிட்டேரியன் காலநிலையின் புவிவெளியுருவவியல் (Geomorphology in the Mediterranean Climate)
மெடிட்டேரியன் (Mediterranean) வகையான காலநிலை தெற்கு கலிபோனியா (Southern California), தென்மேற்கு அவுஸ்த்திரேலியா(South West Australia), மற்றும் தென் ஆப்பிரிக்கா(South Africa) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவையே புவியில் முக்கியமான காலநிலை வலயமாக உள்ளடக்கப்படுகின்றது.
குளிர்காலப்பகுதியில் படிவு வீழ்ச்சியானது அதிகரிக்கின்றது. மழைகாலத்தில் (Winter) இங்குள்ள பெருமளவான வீடுகள் மண்சரிவால் வேகமாக அடித்துச் செல்லப்படுகின்றது.
கோடைக்காலத்தில் (Summer) வீடுகள் தீப்பிடித்தலுக்கு உள்ளாகுகின்றமையும் நோக்கலாம். ஏனென்றால் சிறிய கடுமையான வெப்ப கோடையில் மெடிட்டேரியன் (Mediterranean) வகையான தாவர போர்வைகள் முழுமையாக போர்த்தப்பட்ட வடிவமைப்பை பெறவில்லை. நீரரிப்பின் செயன்முறையானது குறித்த நிலத்தோற்றத்தில் அதிகரித்து காணப்படுகின்றது. மறுபுறத்தில் கணியங்களின் உடைவால் நிலத்தினை வளமாக்கும் தாவர மக்குகள் உருவாகுகின்றன. மண் உருவாக்கம் குறைந்த வகையில் காணப்படுகின்றது.
மிதமண்டல வலயத்தினுடைய புவிவெளியுருவவியல் (Geomorphology of Temperate Zones)
இங்கு கோடைக்காலமே மழை நிறைந்த காலமாக விளங்குகின்றது. இந்த காலநிலைக்குள் உள்ளடங்கும் நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கியம் பெறுகின்றன.
சில மிதமண்டல பிரதேசங்கள் தொடர் மற்றும் தாழ்வான நிலப்பரப்பானது வேறுப்பட்ட அடையற் படிவுகளை கொண்டிருக்கின்றது. அத்தோடு சமதரையான நிலத்தோற்ற அமைப்புடையதாகவும் இவை தாவர போர்வையினால் மூடப்பட்டதாகவும் காணப்படுகின்றது.
மேலும் நிலத்தோற்றத்தின் மேற்பரப்பானது, அதிகளவு
அமிலத்தன்மை குறைந்த வளமுடையதாகவும் காணப்படுகின்றது. இதனை வாசிங்டன் (Washington) ஆகிய பகுதிகளில் காணலாம். இவ்வாறான காலநிலை பிரதேசங்களோடு, குளிர்வலய பிரதேசமும் (Cold Regions) புவிவெளியுருவவியலுடன் இணைந்து நிலவுருவங்களை
தோற்றுவிக்கின்றன.
இதனடிப்படையில்
நிலத்தோற்ற உருவாக்கத்தில் புவிவெளியுருவவியல் காரணிகளான, நிலவுருவங்களும்
அதனுடைய தாக்கங்களும் (Lands
forms and their effects) வண்டல் படிந்த பாறை, காலநிலை மற்றும்
சமநிலையிலுள்ள விசைகளின் செயற்பாடுகளும் (Bedrock, Climate, and Static Processes), மாறுப்பட்ட
காலநிலைக்கு கீழான புவிவெளியுருவவியல் செயன்முறைகள் (Geomorphology Process under Different
Climates.) போன்ற காரணிகள் முக்கியத்துவம்
பெறுவதையும், இதனுடன் இணைந்த, நதித்தொகுதிகள்
(River system) முக்கியமான நிலத்தோற்றத்தினை உருவாக்குகின்ற புவிவெளியுருவவியல்
தன்மையாகவும் அடையாளப்படுத்த முடிகின்றது.




கருத்துரையிடுக