பெண்களின் அபிவிருத்தி அணுகுமுறை   Women In Development Approach

பெண்களின் அபிவிருத்தி அணுகுமுறை அறிமுகம்  (Women In Development Approach)

1970 களில் பெண்களின் அபிவிருத்தி அணுகுமுறை(Approach to Women's Development) எனும் பதமானது முதலில் வொஷிங்டன் பெண்கள் அமைப்பினால் National Organization for Women (NOW) ஆரம்பித்து வைக்கப்பட்டது'. அபிவிருத்திக் கொள்கையாளர்களும்திட்டமிடலாளர்களும் ஆண்களை அபிவிருத்தியின் முகவர்களாகவும் (Agent) நாயகர்களாகவும் (Actor) பார்த்ததுடன் பெண்களை அவ்வாறான ஒரு நிலையில் தோற்றமளிப்பதாகக் கருதவில்லை.


சமூகத்தில் குடும்பம் என்ற அலகினுள் ஆண்களும் பெண்களும் அங்கத்துவம் வகிக்கின்ற போதிலும் இவ்வணுகுமுறை பெண்களை மாத்திரம் பெருமளவில் உள்வாங்கியதுடன் ஆண்களுடன் சமத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெண்களை ஒருமுகப்படுத்தும் ஒரு வழிமுறையாகவும் காணப்பட்டது (Martinussen, 1997:305). 

இவ்வணுகுமுறையைத் தொடர்ந்து,

  • 1970 களில் சமத்துவ அணுகுமுறையின் (Equity Approach) உருவாக்கம்.
  • 1980 களின் நடுப்பகுதியில் வறுமைக்கு எதிரான அணுகுமுறையின் (Anti-Poverty Approach) உருவாக்கம். ஆகியன முக்கியம் பெறுகின்றன.

வறுமைக்கு எதிரான கொள்கையானது 1970 களில் உருவாகிய அடிப்படைத் தேவைகள் அணுகுமுறையைப் பூரணப்படுத்துவதாக அமைந்ததுடன் அதன் தீர்வுகள் பெண்களின் வருமான உபாயங்களையும்இயலுமை விருத்தியையும் உள்ளடக்கியதாகக் காணப்பட்டது (Moser, 1993). உதாரணமாக பெண்களுக்கான பயிற்சிகளும் வருமான அதிகரிப்பும் ஏற்படுத்தப்படும்போது அபிவிருத்தி மற்றும் வறுமைக்கு எதிரான அணுகுமுறை என்பவற்றுக்கு இடையில் வேறுபாடும் உறவுநிலையும் பேணப்படும்.

1980 களின் பின்னர் இயலுமை அணுகுமுறை (Efficiency) தோற்றம் பெற்றது. இயலுமை விருத்தி அணுகுமுறையானது 1980 களில் வளர்ச்சியடைந்ததுடன் இது பெண்களின் அபிவிருத்தி அணுகுமுறையை ஏற்றுக் கொள்வதாகக் காணப்பட்டது (Gardner and Lewis, 1996; Bradotti et.al, 1994). உதாரணமாக சமூகத்தில் பெண்களின் இயலுமை விருத்தி செய்யப்படும் போது பெண்களுக்கான வளக்கிடைப்பனவும் உற்பத்திச் செயன்முறையும் அதிகரிப்பதுடன் பெண்களது தொழிற்படையினூடாக பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. 


பெண்ணியல் அபிவிருத்தி அணுகுமுறையின்  முக்கியத்துவம் (The Importance of of the feminist development approach)


The objectives of the feminist development approach

  • பொருளாதார ரீதியில் பெண்கள் வறுமையிலும் வறியவர்களாக" இருப்பதன் காரணமாக பெண்களும் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

 

உதாரணம்:பெண்களுக்கு வளங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறைகளை அடையாளப்படுத்துகின்ற போது (அறிவுபயிற்சிசிறியளவில் வருமானம் ஈட்டலுக்கான வழிமுறைகள் ) அதனூடாக அபிவிருத்திக்கான பங்களிப்பினைக் குடும்பத்திலும் சமூகத்திலும் சிறப்பாக அவதானிக்க முடிவதுடன் ஆண்களுடன் சேர்ந்து பொருளாதார வருவாயைத் தேடுவதில் முழுப்பங்கினை வகிக்கக் கூடிய நிலைமைகள் ஏற்படும்.

  • பெண்கள் பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

வருமானம் தரக்கூடிய உற்பத்திகளில் பெண்கள் பால்நிலை பாரபட்சமின்றி பொதுவான வரையறையின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் போதுதான் அபிவிருத்தி என்பதன் கருப்பொருள் உணரப்படுவதுடன் ஆண்களை மட்டும் என்பதனை முதன்மைப்படுத்தி அடையாளப்படுத்துவது அபிவிருத்தியாகாது என்பதனை இவ்வணுகுமுறை சுட்டிக்காட்டுகின்றது (Catherine V. Scott, 1995)

இக்காலப்பகுதியில் Esther Boserup என்பவரால் வெளியிடப்பட்ட பொருளாதார அபிவிருத்தியில் பெண்களது நடிபங்கு (Women's Role in Economic Development) எனும் நுாலானதுபுவியியல் ரீதியாக அபிவிருத்தியில் பின்னடைந்த பிராந்தியங்களான உபசஹாராஇலத்தீன் அமெரிக்காஆசியாஆபிரிக்கா போன்ற நாடுகளில் பெண்களின் பொருளாதார அபிவிருத்தியினையும் அதன் விளைவுகளையும் அடையாளப்படுத்துவதாக அமைந்திருந்தது.

 இதில் பெண்களின் உற்பத்தி வகிபங்கானது அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது'. இவ்வணுகுமுறையின் தாக்கத்தைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை 1975 -1980 ஆம் ஆண்டு காலப் பகுதியைப் பெண்கள் தசாப்தமாகப் பிரகடனம் செய்ததுடன் அதிகமான தேசிய அரசுகள் பெண்கள் தொடர்பான அமைச்சுக்களையும் உருவாக்கி. எனினும் இவ்வணுகுமுறை எதிர்பார்த்த வெற்றியை. அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


பெண்களும் அபிவிருத்தி அணுகுமுறையின் நோக்கங்கள் (Women And Development Approach)

பெண்களின் அபிவிருத்தி அணுகுமுறையின் விமர்சனமாக இவ்வணுகுமுறை தோற்றம் பெற்றது. இவ்வணுகுமுறையின் பிரதான நோக்கங்களாக பின்வருவன முக்கியம் பெறுகின்றன.

  • பெண்கள் அபிவிருத்தியில் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டினையும் ஏன் அவர்கள் உள்வாங்கப்படுவதில்லை என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.                                                                                                    
  •   பிவிருத்தி திட்டங்களில் பெண்களின் ஒன்றிணைவு தவிர்க்கப்படக் கூடாது என்பதுடன் பெயரளவில் பெண்கள் அபிவிருத்தி செயன்முறைகளில் சேர்த்துக் கொள்ளப்படும் நிலையைத் தவிர்த்து அபிவிருத்திப் படிமுறைகளின் ஊடாக அவர்களின் பங்குபற்றுதல்கள் சுட்டிக்காட்டுகின்றது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சுட்டிகாட்டுகின்றது.
  •  அபிவிருத்திக் கொள்கைகளிலும்நிகழ்ச்சித் திட்டங்களிலும் 1940, 1950, 1960 காலப்பகுதிகளில் குடும்பம் எனும் சமூக நிறுவனத்திற்குள் பெண்கள் தாயாகவும்,மனைவியாகவும் மாத்திரமே நோக்கப்பட்டனர்.
  • அவர்களுடைய பொருளாதார நடவடிக்கைகள்பங்குபற்றுதல்கள் என்பன சகல துறைகளிலும் மறைக்கப்பட்டதுடன் பெறுமதியற்றனவாகக் கருதப்பட்டன. இந்நிலையை மாற்றியமைத்து பெண்கள் சார் அபிவிருத்தியை அடையாளப்படுத்தவும்சமூக அமைப்பில் முக்கிய பொருளாதார பங்களிப்பாளராக ஏற்றுக்கொள்ளவும் கூடிய வகையில் இவ்வணுகுமுறை அமைந்திருந்தது.

இவ்வணுகுமுறையில் அபிவிருத்திச் செயன்முறைகளின் போது பெண்களின் ஒன்றிணைவான உபாயம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றதே அன்றி பெண்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதன்காரணமாக பால்நிலைப் புவியியலில் இவ்வணுகுமுறையும் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.

முடிவுரை

பால்நிலைப் புவியியலின் அபிவிருத்தி அணுகுமுறைகளின் வளர்ச்சியானது அபிவிருத்தியில் பெண்களைப் பிரதான பங்காளராக இனங்காண்பதுடன் பால்நிலை சமத்துவம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் காலத்துக்குக் காலம் பல்வேறு அணுகுமுறைகளைக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது.

இந்த அடிப்படையில் 1970 காலப்பகுதியில் அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பானது அதிகரித்துக் காணப்பட்ட போதும் இன்று பெண்களின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையாததுடன் அது புவியியல் ரீதியில் அதாவது ஆசியஆபிரிக்க மற்றும் மேற்கத்தேய பெண்களிடையே வேறுபட்ட தன்மையைக் கொண்டும் காணப்படுகின்றது.

ஆகையினால் எதிர்காலத்தில் மேலும் பல அணுகுமுறைகள் அபிவிருத்தியையும் பால்நிலை சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே ஆண்களையும் பெண்களையும் மையப்படுத்திய வகையில் கொள்கைகள் விருத்தி செய்யப்படும் போதே அவை சமூகத்தில் காத்திரமான பலாபலன்களை அடையத்தக்கதாக இருப்பதுடன் புவியியல் ரீதியான ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.











Post a Comment

புதியது பழையவை