Starlink,Starlink in Sri Lanka:  Pricing and availability details


அறிமுகம்:இலங்கையின் இணைய சேவையில் ஸ்டார்லிங்க் - Starlink service and sri lanka

மனித வாழ்வின் உணவு,உடை,உறையுல் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கிடையில் இன்று இணையமும் இணைந்துள்ளதே எனலாம்

தற்காலத்தில் இணையம் மனித வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் ஆக்கிரமிக்கும் சக்தியாக மாறியுள்ளது. இணையத்தின் உபயோகமின்றி மனிதனின் தனது அன்றாட வாழ்வினை நடாத்த முடியாதளவிற்கு இணையம் மாறியுள்ளமையினை மறுக்க முடியாது.


அதற்கு ஏற்றால் போல இணைய வசதியினை வழங்கும் நிறுவனங்களும் நாளுக்கு நாள்  4G, 5G,6G மற்றும் fiber optic cable அமைப்பிலான இணையவசதிகளையும் வழங்கி வழங்குகின்றன.

இன்று இவற்றின் மற்றொரு புரட்சியாக இணைய வசதியானது நேரடியாக செய்மதியின்(Set light) துணைக்கொண்டு இணையத்தை பயன்படுத்தும் ஸ்டார்லிங் செய்மதி(STARLINK) இணைய வசதியினை உலகின் முதன்மையான பணக்காரரான எலன் மாஸ்க்((Elon Reeve Musk) தனது ஸ்டார்லிங்க் செய்மதி(STARLINK)  தொழினுட்ப சேவையினூடாக உலகலாவிய ரீதியில் அதிவேக இணைய தள பயன்பாட்டை உலகில் உள்ள அனைவருக்கும் வழங்கி வருகின்றார்.

அத்தன்மையில் இன்று ஸ்டார்லிங் செய்மதி இணைய சேவையில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளமை பாரிய பேச்சு பொருளாக மாறியுள்ளது.

புவியியல் அனைத்து பகுதிகளையும் ஆராயும் இயல்(Geography is Everything) என்ற வகையில் ஸ்டார்லிங் செய்மதி இணைய சேவை என்றால் என்ன அதன் உள்ளடக்கங்கள் அதன் உபயோகங்கள் இலங்கையில் அதன் பிரவேசம் என்ன என்பதனையும் இங்கு நாம் ஆராய உள்ளோம்.


ஸ்டார்லிங்க் வரலாறு (History of Starlink)

புவியில் உள்ள அனைத்து பிரதேசங்களையும் இணைப்பதற்கும் மற்றும்   அங்குள்ள மக்களுக்கு துரிதமான,தங்கு தடையற்ற மற்றும் அதிவிரைவான இணைய சேவையினை வழங்க வேண்டும் என்ற உலக கோடிஸ்வரரான எலன் மாஸ்கின்(Elon Reeve Musk) திட்டமே ஸ்டார்லிங்க் செய்மதி  இணைய சேவையின் தொடக்க புள்ளியாகும்.

History of Starlink

  • இவர்  2015  ஆம்  ஆண்டு  செய்மதியின்  ஊடாக  இணைய  சேவையினை  உலகத்தாருக்கு  வழங்கும்  திட்டத்தினை  முன்  வைக்கிறார்.  அத்துடன்  அத்திட்டத்தினை  நடைமுறைப்படுத்த  அமெரிக்காவின்  பெடரல்  கம்யூனிகேஷன்  கமிஷன்  எப்சி (The Federal Communications Commission is an independent agency of the United States government) என்ற  அமைப்பிடம்  வேண்டுகோள்  விடுத்தார்.
  • 2018 இல் ஸ்டார்லிங்க்கான உரிப்புரிமையினை எலன் மாஸ்க் பெற்றுக் கொள்கிறார்.
  • The Federal Communications Commission is an independent agency of the United States government  இரண்டு கட்ட பரிந்துரைக்கு பின்னர் பன்னிரெண்டாயிரம் ஸ்டார்லிங் செய்மதிகளை உபயோகப்படுத்த முடியும் என அனுமதி தருகின்றனர்.
  • அதற்குப்பின் 30000 ஸ்டார்லிங் செய்மதிகளை நிலை நிறுத்திக் கொள்வதற்கான அனுமதியினை எலன் மாஸ்க் பெற்றுக் கொள்கின்றார்.
  • மொத்தமாக 42 ஆயிரம் ஸ்டார்லிங் இணைய செய்மதிகளை  பூமியை சுற்றிய விண்வெளியில் நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியினை இவர் பெற்றுக் கொள்கின்றனர்.
  • 2019 ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி  60 ஸ்டார்லிங் செய்மதிகள் முதல் முதலாக ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) என்ற எலன் மாஸ்கின் விண்வெளி ஓடத்திலிருந்து பெல்கோன் நைன் ரொக்கட்("SpaceX Pelican 9 Rocket") மூலமாக விண்வெளியில் Low Earth Orbit இல் நிலை நிறுத்தப்பட்டன.
  • பின் 2020 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட நகர்வாக டார்க் செட்(Dark Set) என்ற கடுமையான நிறத்தில் அமைந்த செய்மதியினையும் விண்வெளியில்  நிலைநிறுத்தினர்.
  • 2024  இல் சுமார் 6281 ஸ்டார்லிங் செய்மதிகளை ஸ்பேஸ் விண்வெளி ஓடத்தின் மூலமாக விண்ணில் நிலை நிறுத்தியுள்ளனர்.
  • இன்று உலகலாவிய ரீதியில் 110க்கு மேலான நாடுகளில் ஸ்டார்லிங்க் தனது இணைய சேவையை வழங்கி வருகின்றது.
  • இன்று நாம் பயன்படுத்தும் இணைய சேவையானது பெரும்பாலும் வயர்,வயர்லெஸ் மற்றும் பைபர் ஆப்டிக்கல்  மூலமே எமக்கு கிடைக்கப்பெறுகின்றன.ஆனால் ஸ்டார்லிங்க் வலையமைப்பானது விண்வெளியில் சுமார் 42,000 க்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவி அதன் மூலமாக உலகின் அனைத்து பகுதிகளுக்கும் இணையத்தினை வழங்க முன்வந்துள்ளது.
  • புவியிலிருந்து ஸ்டார்லிங்க் செய்மதியானது 550 கிலோமீட்டர் தூரத்தில் Low Earth Orbit இல்  தொடர் இணைப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
  • ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ஆனது வானில் ஒன்றுக்கொன்று நெருக்கமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இவை லேசர் தொழில்நுட்பத்தின் மூலமாக ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளும் திறன் கொண்டவை.
  • ஸ்டார்லிங்கின் ஒரு செய்மதியானது புவியில் ஆயிரம் கிலோமீட்டரை உள்ளடக்கி செயற்படும் பண்பினை கொண்டது.
  • இதன் ஆரம்ப வேகமானது 150 mbps ஆக உள்ளதுடன் எதிர்காலத்தில் 300 mbps வரை வழங்குவதற்கும் எலன் மாஸ்க் தீர்மானித்துள்ளார்.


ஸ்டார்லிங்க் இணையத்தின் நன்மைகள்-Benefits of Starlink Internet

  • ஸ்டார்லிங்க் இன்று நாம் பயன்படுத்தும் அணைத்து இணைய தொழிநுட்பத்தை விடவும் அதிகமான வேகத்தை கொண்டுள்ளது.
  • தங்கு தடையற்ற இணைய இணைப்பினை வழங்குதல்.
  • பேரிடர் அபாய காலங்களில் இதன் பங்களிப்பு முதன்மையானதாக காணப்படும்.
  • இயற்கை அனர்த்த நிகழ்வுகளின் போது துண்டிப்பற்ற இணைய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
  • யுத்த காலங்களில் நாட்டு மக்கள் தங்கு தடையின்றி இனணய வசதியை உபயோகிக்க முடியும் (ரஷ்ய உக்கிரேன் யுத்தத்தின் போது உக்கிரேன் நாட்டின் தன்மையை வெளிக்கொணர இது மிகவும் உதவியது)
  • ஜிபிஎஸ் மற்றும் மேப்பிங் தொழில்நுட்பங்களை மிகவும் துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும்.
  • செய்மிதியின் மூலம் கட்டுப்படுத்தப்படுவதனால் கடல் மற்றுமு் சமுத்திர பரப்புகளிலும் இணைய பயன்பாட்டினை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.
  • ஆன்லைன் கல்வி மற்றும் வர்த்தகத்தினை  மிகவும் விரைவாகவும்,தடையின்றியும் பெற்றுக் கொள்ள முடியும்.
  • இதனை ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு மிகவும் இலகுவாக நகர்த்தி செல்ல முடியும் எனவே நாம் இதனை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் உபயோகப்படுத்த முடியும்.


ஸ்டார்லிங்க் இணையத்தின் தீமைகள்-Disadvantages of Starlink Internet

  • ஸ்டார் லிங்கைக் கொள்வனவு செய்வதற்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளமை.
  • இன்று உள்ளூர் மட்டத்திலேயே அதிகளவான 4ஜி,5ஜி,பைபர் மற்றும் ஆப்டிகல் இணைய சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
  • ஸ்டார்லிங்க்கின் முகவர் அமைப்புகள் மிகவும் குறைவாக உள்ளதுடன் அதனை அணுகுவதும் கடினமாக உள்ளமை.
  • ஸ்டார்லிங்க் செயற்பாட்டின் அதீத வெளிச்சம் காரணமாக விண்வெளியில் இடையூறுகள் ஏற்படுதல்.
  • இயற்கையான இரவின் தன்மைகள் பாதிப்படைதல்.
  • அதிகளவான செய்மதிகளின் பாவனை(42,000) காரணமாக விண்வெளி ஆராய்ச்சிகள் மட்டும் விண்வெளி உட்கட்டுமானங்கள் பாதிப்படைதல்.
  • ஸ்டார்லிங்க் வானில்  செயலிழக்கும் சந்தர்பங்களில் விண்ணியல் மாசு ஏற்படுதல்.
  • ஸ்டார்லிங்  நகர்வின் காரணமாக ஏற்கனவே இயக்கத்தில் உள்ள செய்மதிகளின் இயக்கம் பாதிப்படைதல்.

மேற்போன்ற தன்மையில் ஸ்டார்லிங்க் இணைய அமைப்பின் நன்மை தீமைகள் உள்ளன


இலங்கையில் ஸ்டார்லிங்க்-Starlink in Sri Lanka

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்(Ranil Wickremesinghe Former President of Sri Lanka) டெஸ்லா அமைப்பின் நிறுவனர் எலன் மாக்ஸ் இடையில் 19.5.2024 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி(Bali, Indonesia) நகரில் இடம் பெற்ற உலக நீர் மாநாட்டின்(World Water Conference) போது  இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கையில் ஸ்ரார்லிங் இணைய சேவையின் தேவை குறித்து முதல்முறை கலந்துரையாடப்பட்டது.

Starlink in Sri Lanka

பின்னர் 12.08.2024 ஆம் திகதி இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (Telecommunications Regulatory Commission of Sri Lanka) 1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 17B பிரிவின் கீழ் Starlink Lanka (Private) Limited நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியது.


இலங்கையில் Starlink இன் பிரவேசம்-Elon Musk Launches Starlink in Sri Lanka

Elon Musk Launches Starlink in Sri Lanka


இலங்கையில் 07.04.2025 தொடக்கம் ஸ்டார்லிங்க் செய்மதி இணைய சேவையினை உத்தியோகபூர்வமாக வழங்குவதாக எலன் தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்அத்துடன் இலங்கையில் உள்ள பயனாளர்கள் எத்தகைய அமைப்பிலான இணைய சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Starlink இன் கட்டணம்-Starlink in Sri Lanka:  Pricing and availability details

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைப்பை பெறுவதற்கு சுமார் 400 தொடக்கம் 600 டாலர் வரையிலான பணத்தினை கட்டணமாக செலுத்த வேண்டும் இது இலங்கை மதிப்பில்  சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கின்றது என இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையானது தனது பயனாளர்களுக்கு பின்வரும் அடிப்படையில்  இணைய சேவைக்கான விலைப்பட்டியலை நிர்ணயத்துள்ளது.


Starlink   Pricing and availability details


Residential Users

  • Residential Lite Plan : Rs. 12,000/month
  • Residential Plan : Rs. 15,000/month
  • Hardware (Starlink Standard Kit) : Rs. 118,000
  • -Total Initial Cost:
  • Lite : Rs. 130,000 (approx.)
  • Regular : Rs. 133,000 (approx.)

Business Users

  • Priority 40GB : Rs. 24,100/month
  • Priority 1TB : Rs. 63,200/month
  • Priority 2TB : Rs. 127,000/month
  • Hardware (Performance Kit) : Rs. 911,000
  • Total Initial Cost (for 40GB plan) : Rs. 929,300


எவ்வாறு Starlink இணைப்பினை பெற்றுக்கொள்வது-How to get a Starlink connection


ஸ்டார்லிங்க் இனிய சேவையினை பெற்றுக் கொள்வதற்கு நாம் ஸ்டார்லிங்க் இணையதளத்திற்கு(website) பிரவேசித்து நம்முடைய பதிவுகளை மேற்கொள்வதன் மூலமாக ஆன்லைன் மூலமாக எமக்கு ஸ்டார் லிங்க் பர்ஃபாமன்ஸ் கிட் எம் வீட்டுக்கே வந்து சேரும் இது வன்பொருள் அடிப்படையில் காணப்படுவதுடன் அதனை எவ்வாறு நாம் முறையாக வடிவமைப்பது என்பது தொடர்பான விளக்கமும் கிடைக்கப்பெறும்.


www.starlink.com
23

முடிவுரை

இன்றைய உலகம் துரித கதியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது அத்தகைய இயக்கத்திற்கு இணையத்தின் பாவனையும் முக்கிய பங்காற்றுகின்றது என்பதனை எமது நடைமுறை வாழ்க்கையின் ஊடாகவே தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் கால மாற்றத்திற்கு ஏற்ப ஸ்டார் லிங்க் செய்மதி இணைய சேவையின் தேவையும் அத்தியாவசியமாக உள்ளது.

இலங்கை போன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு இவை பாரிய பங்களிப்பாக அமையப்பெறும் எனினும் இத்தகைய அமைப்பில் உள்ள சாதக பாதக தன்மைகளை அறிந்து அவற்றினை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் அவற்றினூடாக நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் எதிர்காலத்தில் இலங்கைய தொழில்நுட்பத் துறையில் சிறந்த கட்டமைப்புடனும்  இது போன்ற நவீன நுட்பங்களின் தேவைப்பாடு அவசியமானதாகவும் உள்ளது.

Post by: Puvitips


Post a Comment

புதியது பழையவை