வைத்திய
ஒழுக்கவியல் அறிமுகம் (Introduction to Medical Ethics)
காலத்தினால்
வரையறுத்துக் கூறமுடியாதளவிற்கு வைத்தியத்துறையானது(The medical field) பழமைவாய்ந்ததாக கருதப்படுகின்றது. குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க நாகரீகங்களினை(Civilizations) ஆய்வுக்குட்படுத்தும் சந்தர்பத்தில் இதற்கான
விடையினை நாம் அறிந்துக் கொள்ள முடியுமாகவுள்ளது. ஆகவே புரதான காலம் தொடக்கம் இன்றைய மிலேனிய
ஆண்டுகள் வரை(From the
Protean period to the present millennium) வைத்தியத்துறையானது சமூகத்தின்
மத்தியில் மிகமுக்கிய போற்றத்தக்க சேவையாக(As a commendable service) கருதப்படுகின்றது.
மக்கள்
மத்தியில் வைத்தியத்துறையின் தேவையும் அதன் அவசியப்பாடும்(The need and necessity of the medical field) தவிர்க்க
முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. குறிப்பாக வைத்திய தொழிலின் சிறப்புக்கு
அடிப்படையாக அமைவது வைத்திய தொழிலில் ஈடுப்படும் வைத்தியர்கள் கடைப்பிடிக்கும்
ஒழுக்கநெறி கோட்பாடுகளே(Moral
principles) ஆகும்.
வைத்திய
தொழிலின் சிறப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலம் முதலாகவே பல்வேறு வகையான
ஒழுக்கநெறி கோட்பாடுகளின் (Medical
Ethics)செல்வாக்கு துணைப்புரிந்து வந்துள்ளன. இவைகளே
வைத்திய துறையின் முதன்மைக்கு அடிப்படையான காரணம் என்றால் அது மிகையில்லை.அத்தகைய விடயங்களை இங்கு நோக்கப்படவுள்ளது.
வைத்தியத்துறையில் பின்பற்றப்படும் ஒழுக்கவியல் கோட்பாடுகள் (Ethical principles followed in the medical field)
வைத்தியத்
தொழிலானது தன்னகத்தே சிறப்பான ஒழுக்ககோட்பாடுகளை கொண்டுள்ளது. அவற்றுல் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்ககோட்பாடுகளாக பின்வறுவனவற்றினை அடையாளப்படுத்த
முடியும்.
- பாபிலோனியாவின் ஹமுறாப் பிரமாணங்கள்(Hammurabi of Babylonia)
- ஹிப்போக்கிரட்டீஸ் சத்தியபிரமாணம் (Hippocratic Oath)
ஹமுறாப் சட்டம்(Hammurabi of Babylonia)
வைத்தியத்துறையில்
ஒழுக்கவியல் தொடர்பான கருத்தினை கூறும் மிக முக்கிய சட்டமாக ஹமுராபிச் சட்டம்(
Hammurabi's Law)
காணப்படுகின்றது. இது காலத்தினால் பழமையானதாக காணப்படினும் தற்காலத்திற்கு மிகவும்
பொருத்தமானதாக அமைந்துள்ளது. இச்சட்டமானது 1901-1902 ஆண்டு காலப்பகுதியில் பாபிலோனியாவில் (Babylonia) மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் மூலமாக
எமக்கு கிடைக்கப்பெற்றவையாகும்.
இவ்வாறு
கிடைக்கப்பெற்ற தகவல்கள் வைத்திய உலகில் மாபெரும் புரட்சியாக கருதப்படுகின்றது.
அதாவது இன்றைய மிலேனிய நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அமசங்களினை விடவும் சிறப்பு
மிக்கதாக அமைந்துள்ளது. இச்சட்டம் வைத்தியத் தொழில் புரிவோர்களினது ஊதிய அளவுகள்(Pay scales) எவ்வாறு காணப்படவேண்டும் என்பதினை
குறிப்பிடுவதுடன் ,வைத்திய சிகிச்சையில் ஏற்படும் கவனயீனமான நடவடிக்கைகளுக்கான
தண்டனையினையும்(Punishment for
careless)
கூறுகின்றது.
உதாரணமாக அறுவை
சிகிச்சை மருத்துவரின்(surgeon) கத்தியினால்
காயம் ஏற்பட்டு நோயாளி மரணமடைந்தால் வைத்தியரின் கை துண்டாடப்பட வேண்டும் என்று
இச்சட்டம் குறிப்பிடுகின்றது. எனினும் இச்சட்டம் எமக்கு முழுமையாக கிடைக்கவில்லை
மாறாக இதன் பகுதியளவான அம்சங்களே எமக்கு கிடைத்துள்ளன.
ஹிப்போக்கிரட்டீஸ் சத்திய பிரமாணம் (Hippocratic Oath)
வைத்திய
ஒழுக்கவியலின்(Medical ethics) தனித்துவமான
கருத்தினையும் முழுமையான அம்சங்களினையும் உள்ளடக்கி அமைந்துள்ள முக்கிய அம்சமாக
ஹிப்போக்கிரட்டீஸின் சத்தியபிரமாணம்(Hippocratic Oath) அமைந்துள்ளது.
இது ஹிப்போக்கிரட்டீஸினால்(Hippocratic) கி.மு. 4ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.இப்பிரமாணம் வைத்தியர்களின் தொழில் ரீதியான கடமைகளினையும் கடப்பாடுகளினையும்,ஒழுக்கத்தின் பேரிலும் தூய எண்ணத்தின் பேரிலும் சமயத்தின் பேரிலும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.
![]() |
| Hippocratic Oath |
ஹிப்போக்கிரட்டீஸ்
சத்திய பிரமாணம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி அமைந்துள்ளது.(The Hippocratic Oath includes the following)
- 'சுகத்தினை வழங்கும் அப்பலோ,ஹைஜியா மற்றும் பெண் கடவுள்களின் சாட்சியாக நான் சத்திய பிரமாணம் செய்துக்கொள்கின்றேன்.
- (Hygeia - Greek goddess of good health)
- (Apollo - As a god of archery, music and dance, truth and prophecy, healing and diseases)
- நான் எனது ஆற்றலுக்கும் நீதிக்கும் ஏற்றவாறு இந்த சத்திய பிரமாணத்தையும் உடன்படிக்கையினையும் நிறைவேற்றுவேன்'.
- வைத்திய தொழிலினை கற்றுத்தந்தவர்களை எனது பெற்றோருக்குச் சமமாக மதிப்பேன், அவருக்கு பணத்தேவை ஏற்படின் எனது பாகத்திலிருந்து அவருக்கு கொடுப்பேன்.அவர்களது பிள்ளைகளை எனது சகோதரர்களுக்கு சமமாக மதிப்பேன்.
- நோயாளிகளின் நலனை காப்பதுடன்,அவர்கள் மரணத்தினை ஏற்படுத்தக்கூடிய விஷ மருந்துக்களை(Poisonous drugs) விரும்பி கேட்பினும் அவர்களுக்கு வழங்கவோ அது தொடர்பாக ஆலோசனை (Advice) வழங்கவோ மாட்டேன்.
- பெண்களுக்கு கருச்சிதைவினை (miscarriage (also called a spontaneous abortion)) ஏற்படுத்த மாட்டேன்.
- நான் எவ்விடத்திற்கு சென்றாலும் நோயாளியின் நலனை தீர்பதே எனது பிரதான நோக்கமாகும்.
- எனது சிகிச்சையின் போது ஆண்கள் மீதோ,பெணகள் மீதோ அல்லது அடிமைகள் மீதோ பாலியல் உறவுகளில் ஈடுப்படமாட்டேன் (I will not engage in sexual relations).
- சிகிச்சை மேற்கொள்ளும் காலப்பகுதியில் ஒருவரின் வாழ்வில் நான் கேட்ட அல்லது பார்த்த விடயங்களை யாரிடமும் தெரிவிக்கமாட்டேன்.
இத்தகைய தன்மையில் வைத்தியத்துறையில் ஹிப்போக்கிரட்டீஸ் சத்தியபிரமாணம் அமைந்துள்ளது இது வைத்திய ஒழுக்கத்தில் மிகவும் பிரதானமாகவும் உயர்ந்ததாகவும் இன்றளவும் போற்றப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட ஒழுக்க நெறிகளானவை காலத்தினால் மிகவும் பழமைவாய்ந்ததாக காணப்படுவதுடன் தற்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவே காணப்படுகின்றன.
நவீன வைத்திய ஒழுக்கவியல் கோட்பாடுகள்(Modern Medical ethical theories)
இன்று வைத்தியத்துறையின் நவின தொழிநுட்ப முன்னேற்றம் மற்றும் புதிய வகையான சிகிச்சை முறைகளின் (Technological and new types of treatments) தன்மையினால் வைத்திய துறையில் புதிய பல
பிரச்சினைகளும்(Many new issues) தோற்றம்
பெற்றுள்ளன.எனவே இதனை தீர்க்கும் பொருட்டு புதிய ஒழுக்கவிதிகளும் தோற்றம்
பெற்றுள்ளன.அவை பின்வருமாறு அமைந்துள்ளன.
- ஜெனிவா மாநாட்டு உடன்படிக்கை (The Geneva Convebtion Code Of Medical Ethics –World Medical Association)
- சர்வதேச ஒழுக்கவியல் கோவை (The International Code of Ethics) இவை இரண்டும் இன்று பொதுவான விதிகளாக காணப்படுகின்றன.
ஜெனிவா மாநாட்டு உடன்படிக்கை- The Geneva convention Code Of Medical Ethics –World Medical Association)
- இந் நெறிமுறையானது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில்(Geneva in Switzerland) 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்புகளில் ஒன்றாகும்.
- ஜெனிவா மாநாட்டு உடன்படிக்கையில் வைத்திய துறையில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களாக,
- மனித குலத்துக்கு சேவையாற்றுவதே எனது கடமை என்று முறையாக வாக்குறுதியளிக்கின்றேன்.
- அத்தோடு எனது தொழிலை மனச்சாட்சியுடனும் பெருமதிப்புக்குறியதாகவும் மேற்கொள்வேன்.
- எனது முதன்மை நோக்கமாக நோயாளியின் நலனே காணப்படுகின்றது.
- என்னை நம்பிச் சொல்லப்பட்ட ரகசியங்களை நான் பாதுகாப்பேன்.
- வைத்திய தொழிலின் கௌரவத்தினையும் உன்னத மரபினையும் பாதுகாக்க எனது முழு திறமையினையும் பயன்படுத்துவேன்.
- அத்தோடு மனித நெறிமுறைகளுக்கு மாறாக நான் எனது வைத்திய அறிவினை பயன்படுத்த மாட்டேன் எனவும் உறுதியளிக்கின்றேன்.
சர்வதேச ஒழுக்கவியல் கோவை (The international code of ethics)
வைத்திய ஒழுக்கவியல் தொடர்பான
கருத்தினை கூறும் தரவுகளில் சர்வதேச ஒழுக்கவியல் கோவையும் முக்கியவிடத்தினை
வகிக்கின்றது. இக் கோவையில் பின்வரும் விடயங்கள் முக்கியம் பெறுகின்றன.
- வைத்தியர்கள் தமது லாப நோக்கத்தினை(Profit motive) பிரதானமாக கொள்ளக்கூடாது.
- உடல்ரீதியாகவோ,உளவியல் ரீதியாகவோ மனித உயிர்களை எச்சந்தர்பத்திலும் காயப்படுத்தக்கூடாது.
- கருவுற்ற காலம் தொடக்கம் இறப்பு வரையிலான காலம் வரை மனித உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- நோயாளியின் நலனுக்காக ஏனைய வைத்தியருடன் தயக்கம் காட்டாது ஆலோசனை பெறவேண்டும்.
- நோயாளியின்
இரகசியங்களை எச்சந்தர்பத்திலும் வெளியிடக்கூடாது. இவ்வாறு சர்வதேச
ஒழுக்கவியல் கோவையின் சாராம்சம் அமைந்துள்ளன.
வைத்தியத்துறையில்
ஒழுக்கவியல் கருத்துக்கள் இத்தன்மையில் சிறப்பாக காணப்படினும் நடைமுறையில் வைத்தியதுறையானது
தன்னகத்தே பல்வேறுவகையான குறைப்பாடுகளை கொண்டுள்ளமையினையும் காண
முடிகின்றது.
குறிப்பாக கூறினால் ஒழுக்கவியல் கருத்துக்கள் பல ஏட்டளவிலேயே உள்ளன இத்தகைய காரணங்கள் வைத்திய ஒழுக்கம் சீரழிந்து செல்வதற்கு அடிப்படையாய் அமைந்துள்ளது. எனவே நாம் வைத்திய ஒழுக்கவியல் சார் பிரச்சினைகளையும் அதனை தீர்பதற்கான வழிகளையும் கண்டறிந்து வைத்தியத்துறையின் முக்கியத்துவத்தினை தக்கவைத்துக் கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது.
Post by: Puvitips


கருத்துரையிடுக