அறிமுகம்:பால்நிலை புவியியல் ஓர் அறிமுகம்- Introduction of Gender Geography
புவியியற்துறையில் அண்மைக்காலமாக விருத்தியடைந்து வரும் கற்கைத்துறையாக
பால்நிலை புவியியல்(Gender Geography) அவதானிக்கப்படுகின்றது. “அனைத்தும் புவியியல்-Everything
is Geography” என்பதற்கிணங்க
உலகின் அனைத்து துறைகளையும் ஆராயும் புவியியல் பால்நிலைச்சார்ந்த அணுகுமுறைகளையும்(Gender
based approaches) அதன் உள்ளடக்கத்தினையும்(Content)
ஆராய்வதற்கும் முன்நிற்கின்றது.
இன்றைய நூற்றாண்டில் வெளிரீதியான பரப்பில் பால்நிலையின் முக்கியத்துவம் (The importance of Gender) பற்றியும் அவற்றின் உள்ளடக்கம் தொடர்பாகவும் சமூக ரீதியாக ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளையும்(Inequalities) புவியியலாளர்கள் விளக்க முற்பட்டதன் விளைவாக பால்நிலை புவியியல்(Gender Geography) தோற்றம் பெற அடிப்படையாக அமைந்தது.
பால்நிலை பிரச்சினைகளையும் உயிரியல்
ரீதியாக அவற்றின் முக்கியத்துவத்தையும்(Gender
issues and their biological significance) அறிந்துக்கொள்வதற்கும் பல்வகைப்பட்ட பால்நிலை பிரச்சினைகளுக்கு தீர்வாகவும்(As a solution
to gender issues) பால்நிலை புவியியல்
செயற்படுகின்றது என்பதனை மறுக்க
இயலாது.
அந்த வகையில் இப்பதிவில்
பால்நிலை புவியியல் என்றால்
என்ன? அதன் தோற்றம் மற்றும்
அவற்றின் முக்கியத்துவம் (What is gender geography?
,Its origins and their importance) தொடர்பாக ஆராய உள்ளோம்.
பாலினப் புவியியல் என்றால் என்ன-What is Gender Geography?
பாலினப் புவியியல் என்றால் என்ன (What is gender geography?) என்பதற்கு பல்வேறு வகையான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.அவற்றில் முறையானதாகவும் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கங்களாக பின்வறுவனவற்றினை குறிப்பிட முடியும்.
உயிரியல் ரீதியாக ஆண் மற்றும் பெண் பாலினத்திற்கு சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்ட பண்புகளையும் அவற்றுக்கிடையினான உறவுகளின் பன்முகத்தன்மையையும் வலியுறுத்தி பொருளாதார,சமூக,பொருளியல் மற்றும் பரப்பியல்(Economic, social, economic and Spatial) ரீதியாக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளை பால்நிலை புவியியல் ஆராய்கின்றது - லாரி (Laurie,)1999
பாலின புவியியலானது சமூக அமைப்புக்களில் காணப்படும் பாலின வர்க்கம்(Gender class) எவ்வாறு இடம் மற்றும் அளவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதனை பகுப்பாய்வு செய்ய முயல்கின்றது.
ஆண்களுக்கும்,பெண்களுக்கும் இடையிலான பாலின உறவுகள் மற்றும் உயிரியல் இனப்பெருக்கத்தின்(Sexual relations and biological reproduction) நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் தன்மையினை ஆராய்யும் இயல் - ஜோ ஃபோர்ட் மற்றும் நிக்கி கிரெக்சன் (Joe Ford and Nicky Gregson)
பாலின சமூக கட்டமைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உயிரியல் வேறுபாடுகளையும்(Biological differences) சமூக பிரிவுகளில் எவ்வாறு அவை வெளிப்படுத்துகின்றன என்றும் உயிரியல் மற்றும் பெளதீக சூழலை வடிவமைப்பதில் அவற்றின் பங்களிப்பு என்ன என்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றது - மோசர்(Moser),1993
ஆண்களும்,பெண்களும் இடப்பரப்பில் இனம்,இனத்துவம்,பால்,வயது,தேசியம் மற்றும் வகுப்பு(Race, ethnicity, gender, age, nationality and class) என்பனவற்றின் நிலையத்திலும் வித்தியாசமான நடிப்பங்குகளை வகிக்கின்றனர்.அத்துடன் சமூக இயக்கவியல்(Social dynamics) தன்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பால்நிலை ரீதியான நடிப்பாங்கிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. - கபீர் (Kabir),1994
ஆண் மற்றும் பெண்களுக்கு இடையிலான உறவு நிலையினை பிரித்துக் காட்டும் ஒரு செயல்முறையாகவும் பால்நிலை ரீதியான நடிப்பாங்குகளும் உறவு நிலை, சமூக,கலாசார,அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளினால் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் விளக்குகின்றது- மோங்கா மற்றும் ஹான்சன் (Monk and Hanson)
பாலினப் புவியியலின் தோற்றம்-The origins of Gender Geography
பாலினப் புவியியலின்(Gender Geography)
தோற்றப்பாடானது சமூகத்தில் ஆண்கள் மற்றும்
பெண்களின் சமத்துவமற்ற நிலை(Men's and women's inequality
in society) பற்றிய பாரம்பரிய அனுமானுங்களின் பகுப்பாய்வினை(Analysis) அடிப்படையாகக் கொண்டு தோற்றம்
பெற்றது.
இது இடம் சார்ந்த இயக்கவியல் (Dynamics),சமூக செயல்முறைகள் (Social Processes) மற்றும் அதிகாரக் கட்டமைப்புகள் (Power structures) என்பனவற்றில் பாலின வேறுப்பாடுகள் (Gender differences) முகங் கொடுக்கும் சவால்களையும் அதற்கான தீர்வுகளையும் ஆராய முற்பட்டதன் விளைவாக தனித்தொரு துறையாக இனங்காணப்படலாயிற்று.
பாலின புவியியலானது 1970களின்
ஆரம்ப காலப்பகுதியில் பெண்களின் வேலை வாய்ப்பு (Women's employment opportunities),பயணம்(Travel), வேலைக்கான கூலி (Wages) மற்றும் ஆண் பெண் பாலின பாகுப்பாடு(Gender discrimination) எவ்வாறு இடப்பரப்பில் தாக்கம் செலுத்துகிறது என்பதனை ஆய்வுக்குட்படுத்தும் போது புவியியலில் தோற்றம் பெற்றது.
குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்
காலப்பகுதியில் அபிவிருத்தி செயல்முறைகளில்(Development processes) ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமமற்ற
தன்மை (Inequality) நிலவின. இக்காலப்பகுதியில் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள்
அபிவிருத்தி செயன்முறைகளின் ஊடாக
கிடைக்கப்பெறும் நன்மைகளில் பின்
தங்கியவர்களாகவும் அதிகளவான இடைவெளியை கொண்டவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர்.
இங்கு பெண்கள் உயிரியல் வேறுபாட்டின்(Biological diversity) காரணமாக பிற்படுத்தப்பட்டோர்களாகவும் அதிக வறுமைக்குள்ளாகியவர்களாகவும்(Very poor and backward) அதிக புறக்கணிப்புக்குள்ளாகிவர்களாகவும்(Neglected) காணப்பட்டனர்.
இதனைக் கருத்தில் கொண்டு
பெண்களை பாலியல் ரீதியாக
புறக்கணிக்காது பால்நிலை சமத்துவத்தை(Gender equality) பேணும் வகையில்
அனைத்து நிகழ்ச்சி திட்டங்களிலும் அவர்களுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கும் பொருட்டும் பல்வேறு
வகையான முன்வைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு பாலின சார் வேறுபாடுகளால் இடைவெளியை(Gender-based disparities) அனுபவித்த மக்களுக்கு பாலின சார் வேறுபாடுகளை கலைவதற்கும் பெண்களுக்கு சமூகத்தில் அனைத்து துறைகளிலும் பங்குப்பெற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் தோற்றம் பெற்ற துறையாகவே பால் நிலைப் புவியியல் காணப்படுகின்றது.
பாலினப் புவியியலின் முக்கியத்துவம்-The importance of Gender Geography
1970 க்கு முன்னர் வரை உலகின் பெரும்பாலான உள்ளடக்கங்கள் ஆண்களின் பார்வையின் ஊடாகவே நோக்கப்பட்டன(They were viewed through the eyes of men.) இவை 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்ணியல்(Feminism) சார்பான பண்புகளை உள்வாங்கி வளர்ச்சியடைந்தன.
குடும்பம் என்ற அலகினுள் ஆண்களின் ஆதிக்கமே அதிகளவில் இருந்தது இங்கு பெண்களின் வகிப்பங்கினை(Role of women) உயர்த்தவும், சமத்துவத்தை (Equality) பெற்றுக்கொள்ளவும் பெண்களை ஒன்றிணைக்கவும்(unite) இது வழிசமைத்தது.
பெண்களின் வருமான உபாயங்களையும் இயலுமை விருத்தியையும் பலப்படுத்துவதுடன்(Strengthening income streams and Capacity development) பெண்களுக்கான பயிற்சிகளும் வருமான அதிகரிப்பும் ஏற்படுத்தப்படலாயின.
1980 களின் பின் வளர்ச்சி பெற்ற இயலுமை அணுகுமுறையுடன் பெண்களின் அபிவிருத்தி அணுகுமுறையும்(Approach to women's development) ஒன்றிணைந்து பயணித்ததின் விளைவாக பெண்களுக்கான வளக்கிடைப்பனவும் பண உற்பத்தி செயன்முறையும் அதிகரித்தன.
அரசியல் நீரோட்டத்தில் பெண்களின் பங்களிப்பு விருத்தியடைய தொடங்கின. வாக்களிக்கவும் தேர்தலில் பங்கேற்கவும்(Vote and participate in elections) வாய்ப்புகள் ஏற்படுத்தப்படலாயின.
பெண் அடிமைத்துவத்திலிருந்து(female slavery) விடுதலை பெற இவ்வணுகுமுறை பாரிய வகைப்பங்கை வகித்தது எனலாம். எடுத்துக்காட்டாக பெண்களுக்கான
- சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல்(driving license)
- பெண்களின் திருமண வயதில்லையே நிர்ணயித்தல்(marriageable age)
- பெண்களுக்கான கல்வி(Providing education )
- அடிப்படை உரிமையை வழங்குதல் (fundamental rights)
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்ணியல்சார் உடன்படிக்கைகள்-Global Feminist Conference
சர்வதேச நிகழ்ச்சி நிரலில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கிய கவனம் செலுத்தி ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச பெண்கள் மாநாடு மேக்சிகோவில் 1975-(United Nations (UN) designated 1975 as International Women's Year) முதல் முதலில் நடாத்தப்பட்டமை.
பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களையும் இல்லாதொளிப்பதற்கான சிடோ உடன்படிக்கை 1979 (CEDAW) an international bill of rights for women ஏற்படுத்தப்பட்டமை.
பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்தவும் பெண் வலுவூட்டல் என்ற விடயத்தை 2000 ஆம் ஆண்டின் மில்லினியம் அபிவிருத்தி(Millennium Development) திட்ட இலக்குகளில் உள்வாங்கியமை.
ஐ.நா சபை 1979 ஆம் ஆண்டினை மகளிருக்கு எதிரான அனைத்து பாகுபாட்டையும் அகற்றும் பொது இணக்க உடன்பாட்டை நிறைவேற்றியது மகளிருக்கான உரிமை சட்டம் என்று அழைக்கப்பட்ட இவ் உடன்படிக்கை 1983 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது.
![]() |
African Union Summit- Maputo- Mozambique |
2003 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றிய மாநாட்டில் மபுடோ நெறிமுறை(African Union Summit- Maputo- Mozambique) அமுலுக்கு வந்தது இது மொசாம்பாக்கின் மபுடோ நகரில் இடம் பெற்றது. மபுடோ நெறிமுறை ஆப்பிரிக்க மகளிருக்கான உரிமைகளை பிரகடணப்படுத்தியது.
முடிவுரை
மேற்கொண்ட தன்மையில் புவியியலில் பால்நிலை புவியியல் முக்கியமானதொரு வகைப்பங்கை கொண்டுள்ளது. தொடர்ச்சியாக அடக்குமுறைகளை அனுபவித்து வரும் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அபிவிருத்தி செயல்பாடுகளில் அவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்கும் பரப்பியல் சார் அம்சங்களை பால்நிலை சார் அம்சங்களுடன் தொடர்பு படுத்தி பிரச்சனைகளை இனம் காண்பதுடன் அதற்கான தீர்வுகளையும் முன்பைப்பதில் இடம்,பரப்பியல்,காலம் என்பனவற்றை உள்ளடக்கி பால் நிலை புவியியல் விரிவடைந்து கொண்டு செல்கின்றது.




கருத்துரையிடுக