01. ஐ.நாவின் பாலைவன தடுப்பு மாநாட்டிற்கான (United Nations Convention to Combat Desertification-UNCCD) முதலாவது தீர்மானம் எங்கே முன்மொழியப்பட்டது?
பிரேசிலின், ரியோ டி ஜெனிரோ நகரில்( Brazil,Rio de Janeiro) நகரில் 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகின் முதலாவது புவி உச்ச மாநாட்டில் (Earth Summit in Rio) முன்வைக்கப்பட்ட ஒரு தீர்மானமே இதுவாகும்.
02. ஐ.நாவின் பாலைவன தடுப்பதற்கான இம்மாநாடு (UNCCD) எத்தனையாம் ஆண்டு நிறுவப்பட்டது?
1994 ஆம்
ஆண்டு
03.பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐ.நாவின்(UNCCD) முதலாவது அமர்வு எங்கே இடம்பெற்றது?
இதன்
முதலாவது அமர்வு1994 ஆம் ஆண்டு ஜீன்
17 ம் திகதி, பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் (Paris In France) இடம் பெற்றது.
04. ஐ.நாவின்(UNCCD) மாநாட்டில் மொத்தம் எத்தனை நாடுகள் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ளன?
197 நாடுகள்
05. பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐ.நாவின்(UNCCD) ஒப்பந்தம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
இது 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உலகலாவிய ரீதியாக நடைமுறைக்கு வந்தது.
06. ஐ.நாவின்(UNCCD) முதலாவது குழு கூட்ட அமர்வு(COP) எங்கே? எப்பொழுது இடம் பெற்றது?
1997இல், இத்தாலியின் ரோம் நகரில்(In Rome,Italy) இடம் பெற்றது
07.UNCCD இன் தலைமைச்செயலகம் எங்கு அமைந்துள்ளது?
ஜெர்மனியின்
போன்
(Bonn,Germany) நகரில்,
1999 ஆம் ஆண்டு முதல் இதன் தலைமைச் செயலகம்
செயல்படுத்த தொடங்கியது.
08.எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மாநாட்டின் கோப் (COP) குழு கூடும்?
இரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படும்.
09. Conference of the parties-COP- கோப் குழுவின் இன் பிரதான நோக்கங்கள் எவை?
- அங்கத்துவ நாடுகள் தங்களது செயற்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றன என்பதனை அவதானித்தல்.
- நாடுகளினால் முன்மொழிபடும் திட்டங்களை பகுப்பாய்வு செய்தல்.
- அங்கத்துவ நாடுகளின் அறிக்கைகளை மதிப்பீடு செய்தல்.
- முன்மொழியப்பட்ட அறிக்கைகளில் அல்லது திட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல்.
- பிராந்திய செயலாளர்களிடையே இணைப்பினை ஏற்படுத்துதல்.
- அங்கத்துவ
நாடுகளால் முன்வைக்கப்படும் பிரச்சனைக்கான தீர்வுகளையும் தொழிநுட்ப உதவிகளையும் வழங்கல்.
10.பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐ.நாவின்(United Nations Convention to Combat Desertification-UNCCD) ஒப்பந்தம் பாலைவனமாதல் என்பதனை எவ்வாறு வரையறுத்துள்ளது ?
காலநிலை மாறுபாடுகளின் காரணமாகவும் மற்றும் மானிட நடவடிக்கைகளின் காரணமாகவும் வறண்ட, அரை வறண்ட மற்றும் ஈரப்பதன் குறைவாக உள்ள(arid,semi-arid,and dry sub-humid areas) உயிரியல் பன்முகத் தன்மை(Biodiversity) கொண்ட பிரதேசங்கள் தனது இயல்பான பண்பினை இழந்து பாலைவன பகுதிகளின் இயல்புக்கு மாற்றமடைதல் பாலைவனமாதல்(Desertification) எனப்படுகின்றது.
11.தீவிர பாலைவனமாதளுக்கு பங்களிப்பு செய்யும் ஏதுக்கள் எவை?
- காலநிலை மாற்றம் (Climate change)
- அமில மழை (Acid rain)
- காட்டுத் தீ (Wildfires)
- திட்டமிடாத முறையற்ற பயிர்ச்செய்கை. (சேனை) (Unplanned and improper cultivation)
- சட்டவிரோத விவசாய முறைமை (Illegal farming practices)
- அதிகப்படியான விவசாய செயற்பாடு (Excessive agricultural activity)
- மிகுதியான மேய்ச்சல் (Overgrazing)
- தாவரப் போர்வைகளை அகற்றுதல் (Deforestation)
- தரைகீழ் நீர் வளத்தின் முகாமைத்துவமின்மை (Mismanagement of groundwater resources)
- யுத்த நடவடிக்கை (War)
- முறையற்ற குடியேற்றத்திட்டங்கள் (Illegal immigration projects)
- இயற்கை வளங்களை அழித்தல் (Destruction of natural resources)
12. தீவிர பாலைவனமாதளுக்கு(Desertification) முகங்கொடுத்துள்ள உலகின் பிரதான பகுதிகள் எவை?
01.ஆப்பிரிக்கா
(Africa)
02.ஆசியா(Asia)
03.லத்தின்
அமெரிக்கா மற்றும் கரீபியன்(Latin America and the
Caribbean (LAC))
04.வடக்கு
மத்திய தரை கடல் (Northern Mediterranean)
05.மத்திய
மற்றும் கிழக்கு ஐரோப்பா (Central and Eastern
Europe)
13. தீவிர பாலைவனமாதலால் (Desertification) அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை?
உலகில் 95
நாடுகள் தீவிர
பாலைவனமாதளுக்கு முகங்கொடுத்து வருகின்றன அவற்றுல் சஹேல் பகுதியில்(Sahel region) அமைந்துள்ள பின்வரும் நாடுகள் பிரதானமானவையாகும்.
- கேமரூன்(Cameroon),
- சாட்(Chad),
- மொரிட்டானியா( Mauritania),
- நைஜீரியா(Nigeria),
- புர்கினா பாசோ(Burkina Faso),
- செனகல்(Senegal),
- கினியா(Guinea),
- மாலி(Mali),
- நைஜர்(Niger)
- காம்பியா(Gambia)
14.தீவிர பாலைவனமாதலை தடுப்பதற்காக UNCCD சர்வதேச மாநாட்டில் முன்மொழியப்பட்ட பிரதான அம்சங்கள் எவை?
- பாலைவனமாவதைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதல்.
- உலக அளவில் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் நிகழும் பாலைவன அதிகரிப்பினை கண்காணிப்பு செய்வதும் அவற்றினை மதிப்பீடு செய்வதும்.
- பாலைவனமாகுதலை எதிர்த்து போராடுவதற்கான திறன்களை மேம்படுத்தல்
- வறண்ட நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயத்திற்கான நீர் தேவையினை மேலாண்மை செய்தல்.
- வறட்சி காலத்தில் நீர் தேவையினை முகாமைத்துவம் செய்தல்.
- அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆலோசனை வழங்கள்.
15. இலங்கை எத்தினத்தில் ,ஐ.நாவின்(UNCCD) பாலைவனமாதலை தடுப்பதற்கான மாநாட்டினை ஏற்றுக்கொண்டது?
1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி இலங்கை
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
16.இந்தியா எத்தினத்தில் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டது?
1994 ஆம்
ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி UNCCD இல்
இந்தியா கைச்சாத்திட்டது.
17.பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம் எத்தினத்தில் அனுஸ்டிக்கப்படுகின்றது?
ஐ.நாவின்(UNCCD),
A/RES/49/115 பிரகடனப்படி,ஆண்டுதோரும் ஜூன் 17 ஆம் திகதி.
18. ஐ.நாவின் (UNCCD) யின் 2018–2030 வரையிலான காலப்பகுதியில் அடையவேண்டிய 5 இலக்குகள் எவை?
01.வறண்ட
நிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துதல்.
02.பாதிக்கப்பட்ட
சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் நிலப்பரப்புகளின் தரத்தினை மேம்படுத்துதல்.
03.நிலையான
நில மேலாண்மையை மேம்படுத்துதல்
04.பாலைவனமாக்கல்
மற்றும் நிலச் சீரழிவை எதிர்த்துப் போராடுதல்,
05.கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் மூலம் தீர்மானங்களை அமுல்படுத்துதல்.
19. ஐ.நாவின்(UNCCD) பாலைவன தடுப்பு சகாப்த நடவடிக்கைகள் எவை?
2010 - 2020 இடைப்பட்ட காலப் பகுதியானது பாலைவனமாதலுக்கு எதிரான சகாப்தமாக UNEP னால் பிரகடனப்படுத்தப்பட்டது.இதன் போது,
- மண் தரமிழத்தல்
- காலநிலை மாற்றம்
20.2024 ஆம் ஆண்டு COP16 இன் அமர்வு எந்நாட்டில் இடம்பெறவுள்ளது?
சவுதி அரேபியாவில் (Saudi Arabia)
21. 2025 ஆம் ஆண்டுக்கான இத்தினத்தின் கருப்பொருள் என்ன?
"Restore Land, Unlock Opportunities"



கருத்துரையிடுக