அறிமுகம்:புவியியலில் சூழல்மையவாத எண்ணக்கரு -Ecocentrism ideology in Geography
புவியியலின் தோற்றக்காலம் முதல் இன்று வரை(From
the beginning to the present day) அதன் ஆய்வுப்பரப்பில்: மனிதனை (Human) முதன்மை படுத்திய வாதங்களும் அத்துடன் இயற்கைச் சூழலை (Natural environment) மையப்படுத்திய வாதங்களும் அதன் முதன்மை ஆய்வு (Main research areas) பகுதியாக உள்ளமை குறிப்பிடதக்கது.
புவியியல் அறிஞர்கள் தங்களது கோட்பாட்டினை
முன்வைக்கும் சந்தர்ப்பங்களில்.
“மனிதன், இயற்கைக்கு கட்டுப்பட்டவன் இயற்கையே அனைத்திற்கும் முதன்மையானது -"Environmental Determinism” என்று ஒரு சாராரும்
இல்லை, அவ்வாறு இல்லை
“இயற்கையை மனிதன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளான்,அதனை தனக்கேற்றவாறு மாற்றியமைத்தும் கொள்கின்றான்- “ Human determinism” என்று ஒரு சாராரும்.
இரு வேறு வகையான கோட்பாடுகளை முன்வைத்து வாதிடுகின்றனர்.
அதனடிப்படையில் புவியியல் அறிஞர்களினால் முன்வைத்த இவ்விரு கோட்பாடுகளும் புவியியல் பரப்பில் பிரதானமானதும் அதிக முக்கியத்துவமுடையதுமாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட இவ்விரு கோட்பாடுகளையும் முறையாக விளங்கிக் கொள்வதன் மூலமாகவே புவியியல் மரபுகளையும்,புவியியல் ஆய்வுகளையும், மற்றும் அபிவிருத்தி திட்டமிடல்களையும் எம்மால் முறையாக விளங்கிக் கொள்ள முடியும் அதற்கமைய இப்பதிவு இவ்விரு கோட்பாடுகளில் ஒன்றான சூழல்மையவாதத்தினையும் அதன் முக்கியத்துவத்தையும் ஆராய்வதாக இப்பதிவு அமையவுள்ளது.
சூழல்மையவாதம் என்றால் என்ன -What is Ecocentrism
எமது உலகில் தோற்றம் பெற்ற அனைத்து விதமான இயற்கை சூழலுக்கும்(Natural Environment) அதனுடன் இணைந்த இயற்கைத் தோற்றப்பாடுகளுக்கும்(Natural Process) முக்கியத்துவம் அளித்து இயற்கையே அனைத்திற்கும் முதன்மையானது மற்றும் பிரதானமானது(Nature-Centered) என்ற கருத்தினை தொடர்ந்து தீவிரமாக முழக்கமிடும் எண்ணக்கருவே சூழல்மையவாத (Environmental Determinism) எண்ணக்கருவாகும்.
மனிதனானவன் ஏனைய அம்சங்கள் போன்று இந்த பூமியில் ஒரு அங்கமே (Humans a part of the natural world).ஏனைய விலங்குகள்(Animals), பறவைகள்(Birds) தாவரங்கள்(Plants) மற்றும் நுண்ணங்கிகள் போன்று அவனும் இந்த பூமியின் ஒரு பாகமாகவே உள்ளான் எனசூழல்மையவாதிகள் (Environmental Determinist) குறிப்பிடுகின்றனர்.
சூழல்மையவாத கருத்தினை ஆதரிக்கும் சூழல் மையவாதிகள் இவ்வுலகில் அனைத்திற்கும் பிரதானமானதும் மூலாதாரமானதுமாக இயற்கைச்சூழலே உள்ளது. என அதனை மையப்படுத்தி (Nature-Centered) அதனை பாதுகாப்பதற்காகவும்(Protect) அதன் நிலைப்பேண் தன்மையினை(Sustainability) உறுதிப்படுத்துவதற்காகவும் சூழல் மையவாத (Ecocentrism) எண்ணக்கருவினை முன்னிருத்தி அதற்காக வாதிடுகின்றனர்.
குறிப்பாக இச் சூழல்மையவாத (Ecocentrism) எண்ணக்கரு,மனிதனை முதன்மைப்படுத்திய மானிட மையவாத(Anthropo-centrism) எண்ணக்கருத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ளது.
சூழல்மையவாத எண்ணக்கருவின் தோற்றம்-Origin of Ecocentrism
புவியியலில் சூழல்மையவாத எண்ணக்கருவானது “Ecocentrism” ஆல்டோ லியோபோல்டால் (Aldo Leopold1887-1948) என்ற அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலரினால் (American environmentalist) ஒழுங்குபடுத்தப்பட்ட எண்ணக்கருவாக உலகிற்கு முன்வைக்கப்பட்டது.
![]() |
| The Father of Ecocentrism-Aldo Leopold1887-1948 |
இவர் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் நீண்டகால பரிணாம வளர்ச்சியின்(Long Term Evolutions) செயன்முறையாகும் அத்துடன் அவை ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்பினைக் கொண்டு உயிரியல் ரீதியாக (Biologically) அபிவிருத்தியடைந்துள்ளன என்கிறார்.
ஆல்டோ லியோபோல்டால் (Aldo Leopold) “A Sand County Almanac“ (1949) என்ற நூலின்நூடாக தனது கருத்தினை
முன்வைத்தார்.
ஆல்டோ லியோபோல்ட் (The Father of Ecocentrism-Aldo Leopold) தன் புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார் “Land Ethic and good Environmental management are a key element to this Philosophy” என்றார்.
இங்கு "சிறந்த நிலச்சார் பண்புகள் மற்றும் தரமான சூழல் முகாமைத்துவக் கொள்கைகள் என்பன சூழல்மையவாத கோட்பாட்டின் முதன்மையான அம்சமாக உள்ளன" என இவரால் அடையாளப்படுத்தப்பட்டது.
ஆல்டோ லியோபோல்ட் (Aldo Leopold) மனிதன் நிலத்தை பொருளாதார வளமாக மட்டுமே பார்க்கிறான் என்றார்(land is an economic resource only).
நாம் நமது தேவைக்காகவும்,வளர்ச்சிக்காகவும் நிலத்தைப் பயன்படுத்துகின்றோம் மறுபுறம் அந்நிலத்தை நாம் பாதுகாக்க மறந்து அதனை வீண்விரயம் செய்கின்றோம்.
வரையறையற்ற நில நுகர்வின்(Unlimited land consumption)
மூலமாக அதன் நிலைப்பேண் தன்மையினை கேள்விக்குட்படுத்துகின்றோம் என்கிறார்.
சூழல்மையவாத எண்ணக்கருவிற்கு ஆதரவான கருத்துக்கள்.
புவியியல் அறிஞர் ரோ(Row) என்பவரின் கருத்துப்படி சூழல் மையவாதம் “Ecocentrism” என்பது: “காலாசார மற்றும் பௌதீக சூழலில் மிக முக்கிய பிரிவாக காணப்படுகின்றது மற்றும்
இது மிகச் சிக்கலான ஆக்கத்திறன் கொண்டதும்” என்கின்றார்.
போல் கிங்ஸ் ஸ்நோத் (Paul King snooth) என்பவர் “ஒரு சிறந்த சமுதாயத்தின் முன்னேற்றகரமான நடைமுறையே” சூழல் மையவாதம் “Ecocentrism” என்கிறார்.
1966 இல் செங்கோப்ளிகானிக் (Senko Plicanic) என்பவர் “உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள் பூமி எங்களின் தாய் என்றும், மனிதன் பூமி மீது வெறுப்புணர்வோடு இருந்தால் அது அவர்களுக்கே வெறுப்புணர்வை ஏற்படுத்தும்” என்ற ஆழமான கருத்தினை தனது “The concept of new Ecocentric legal Philosophy” என்ற நூலின் ஊடாக பதிவு செய்திருந்தார்.
1987 இல் “புறுண்லாண்ட் அறிக்கையில் (Brundtland report) ” முன்வைக்கபட்ட கருத்தானது
முழுமையாக
சூழல்மையவாதத்தினை அடிப்படையாக கொண்டுள்ளமையினை அவதானிக்க
முடிகின்றது.
எமது பொதுவான எதிர்காலம் என்ற தலைப்பில் “எதிர்காலத்தில் தமது சொந்தத் தேவைகளைப்
பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலின் மீது தாக்கம் எதனையும்
மேற்கொள்ளாமல்,நிகழ்காலத்தில் தேவைகளை
நிறைவு செய்யும் அபிவிருத்திச்
செயன்முறைகள்” அவசியமாகின்றன.
'மனிதன் இயற்கையின் ஒரு பகுதியே, இயற்கையை கட்டுப்படுத்துவதுஅவனின் உரிமையாகாது உலகமானது அதன் உற்பத்தி செயற்பாட்டுக்காக கௌரவிக்கப்பட வேண்டியது' என தனது சூழல்மையவாத கருத்தினை டீப் கீரின் (Deep Green) என்ற சூழலியல் அறிஞர் கூறுகின்றார்.
சூழல்மையவாதத்தின் பண்புகள்-Characteristics of ecocentrism
- குறைந்த தொழிநுட்ப திறனுடன் பொருளாதார வளர்ச்சியினை அடைய வேண்டுமென்பது சூழல் மைய வாதத்தின் “Ecocentrism” பிரதான கருத்தாக அமைகின்றது.
- சூழல்மைய எண்ணக்கருவானது (Ecocentrism) உயிருள்ள உயிரற்ற (Living and Non-living things) அனைத்து அங்கிகளையும் உள்ளடக்கியுள்ளது.
- இதனை சூழலியலை மையமாகக் கொண்ட மதிப்பீடு “Values centered on Ecology” எனவும் சிலர் விளக்குகின்றனர்.
- சூழல் மையவாதம் என்பது சுற்றுச்சூழலுக்கு பாதக விளைவுகளை தோற்றுவிக்கும் அரசியல்(Political), பொருளாதாரம்(Economics) மற்றும் மனித நடவடிக்கைகளிலிருந்து(Human Behavior) இயற்கைச் சூழலின் தரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முயற்சிக்கின்றது.
- சூழல் மையவாதம் மனித நடத்தைகள் எவ்வாறு சூழலை பாதிக்கின்றன என்பதனை விஞ்ஞான ரீதியாக(scientifically) கணிப்பிடிக்கிறது அதன் போக்கில் இது சூழலியல் எண்ணக்கருவுக்கு கருவுக்கு புதிய ஒழுக்கவியலை (New ethical concept) நிறுவ முயல்கிறது.
- சூழல் மீதான பெறுமதியை (Value of Environment) விளக்கி அதன் நிலைப்பேண் தன்மையினை உறுதிசெய்கின்றது.
- எதிர்கால சந்ததியினர் தமது தேவைகளினைப் பூர்த்தி செய்வதற்கான திறனை குறைத்து விடாமல் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அபிவிருத்தியே அவசியமானது' என அது அடிக்கோடிட்டு காட்டியது.
- சூழல் மையவாதமானது இயற்கை உலகிற்கு புதிய உணர்ச்சியையும் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் அளிக்கின்றது.மேலும் புவியினை அழிப்பதை தடுத்து அதனை பாதுகாப்பதை அடிப்படையாக இது வலியுறுத்துகிறது.
சூழல்மையவாத
எண்ணக்கருவின் போக்குகள்-Trends
of Ecocentrism
சூழலியல்வாதிகளினால்(Environmentalist) முன்வைத்த ஆதாரப்பூர்வமான கருத்துக்களையும் மற்றும் விஞ்ஞானப் பூர்வமான எடுகோள்களையும் தன்னகத்தே கொண்டு இக்கோட்பாடு முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கோட்பாடாக பரிணாமவளர்ச்சியடைந்திருக்கிறது.
தன் வளர்ச்சிக்
கட்டத்தில் வெவ்வேறு
வகையான
சவால்களை
கடந்து இன்று ஓர் உறுதியான கோட்பாடாக சூழல்மையவாத கோட்பாடானது விருத்தியடைந்துள்ளது.
உலகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து
சூழல் பாதுகாப்பு திட்டங்களிலும்,சூழல் உடன்படிக்கைகளிலும் அடிப்படையாக சூழல் மையவாதக் கோட்பாடே செல்வாக்குச் செலுத்தியிருப்பதை அவதானிக்கமுடியும்.
இன்று
சுற்றுச் சூழல் மாசாக்கத்தினால்(Environment Pollution) இயற்கை
தனது
இயல்பினை
இழந்து வருகின்றது. அத்துடன் அதில் தங்கி
வாழும் மனிதனும்(Human Society) ஏனைய உயிரியல்
அம்சங்களும் அதன் பாதிப்பிற்கு
முகங்கொடுத்து
வருகின்றன.
இங்கு நியூட்டனின் மூன்றாம் விதியான (Newton's third law) எல்லா தாக்கங்களுக்கும் எதிரானதும் சமமானதுமான மறு தாக்கம் உள்ளது(That every force implies an equal and opposite
reaction force) என்பதற்கிணங்க,மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தாங்களுக்கான எதிர் விளைவினை சூழல் வெளியிட தொடங்கியுள்ளது.
இதனை குறைப்பதற்கு நிலைப்பேண் தன்மையுடன் இணைந்த சூழல்மையவாத செயற்பாடுகள்(Ecocentrism and Sustainable development) மிகவும் அவசியமாகவுள்ளன.
எனவே நவீன தொழிநுட்பத்தை(Modern technology) சூழலைப் பாதுகாக்கும் நோக்குடனும் நிலைப்பேண்(Sustainability) நோக்குடனும் மாத்திரமே அபிவிருத்தி நடவடிக்கைளில் பயன்படுத்த வேண்டுமென சூழலியலாளர்கள்(Ecologists) விரும்புகின்றனர்.
இவ்வாறு செய்வதன் ஊடாக புவியினையும், புவியில் வாழும் எல்லா உயிரினங்களையும் சமநிலையாக பேவணுவதுடன் சூழல் பிரச்சினைகள் ஏற்படா வகையிலும் பாதுகாக்கலாம்.
முடிவுரை-Conclusion
சூழல்மையவாதம் (“Ecocentrism”) என்பது இயற்கை மற்றும் அதனுடனிணைந்த அம்சங்களையும் அவை ஏற்படுத்தும் இடைத்தொடர்புகளையும் அதனால் ஏற்படுத்தப்படும் விளைவுகளுக்கும் அதிகமாக மதிப்பளிப்பதுடன் அதன் புனித தன்மைக்கு கேடு விளைவிக்காமல் மானிட செயற்பாடுகள் அமைய வேண்டும்என்பதனையும் முதன்மையாக குறித்து நிற்கின்றது.
இயற்கையை மிஞ்சிய மானிட நடவடிக்கைகளோ அல்லது தொழிநுட்ப செயற்பாடுகளோ என்றும் வெற்றியளிக்காது எனவே இயற்கையின் சமநிலை தன்மைக்கு சூழல்மையவாத கோட்பாட்டினை பின்பற்றுவது கட்டாயமானதாகும்.




கருத்துரையிடுக