
அறிமுகம்:ArcMap இல் Google Earth படத்தினை Digitize செய்தல்- Digitize Google Earth Map in ArcGIS.
நாம் ArcMap ல் ஒரு வரைப்படத்தினை Digitalized மயமாக்குவதன் மூலமாகவே அவ்வரைப்படத்தில் எமது தேவைகளையும் தரவுகளையும் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும்(We can fulfill our needs and data in that Map.).
இணையதளத்தின்
மூலமாக Downloads
செய்யப்பட்ட Google Earth, Photos, Map, PDF மற்றும் Scan Map என்பனவற்றை Digitalized செய்வதன் மூலமாக எமது
தேவைகள் இலகுவாகின்றன.
மேலும் Digitalized செய்வதன் மூலமாக
- பகுப்பாய்வு செய்தல் (Analyses),
- அபிவிருத்தி திட்டமிடல் (Development Planning) போன்றவற்றிற்கும்
- குறிப்பிட்ட பகுதியின் குடியிருப்பு (Settlement),
- உட்கட்டுமான அமைப்பு (Infrastructure),
- நீரியல் அமைப்பு (Water sources),
- போக்குவரத்து வலைப்பின்னல் (Transport Network)
- தாவர பரம்பல் (Natural Plants) போன்ற அனைத்து தரவுகளையும் இலகுவாக கையாளக்கூடியதாகவுள்ளது.
இன்று
நாம் Google Earth ஊடாக Download செய்யப்பட்ட
ஒரு பிரதேசத்தினை எவ்வாறு Digitalized செய்வது என்பது தொடர்பாக ஆராய உள்ளோம்.
Georeferenced வழங்குதல்
முதலாவதாக Google Earth Pro ஊடாக தரவிறக்கம்
செய்யப்பட்ட எமது வரைபடத்திற்கு Georeferenced
வழங்கிக் கொள்ள வேண்டும். அது மிகவும்
கட்டாயமானதாகும்.நாம் எமது முன்னைய பதிவுகளில் கூகுளில் இருந்து எவ்வாறு ஒரு
படத்தினை தரவிறக்கம் செய்வது அதற்கு எவ்வாறு முறையாக Georeferenced வழங்குவது என்பது தொடர்பாக
ஆராய்ந்துள்ளோம்.
அதுபோலவே உங்களிடம் Scan செய்யப்பட்ட வரைபடமோ அல்லது PDF வரைபடமோ இருந்தாலும் அதற்கும் நீங்கள் Georeferenced செய்துக்கொள்ள வேண்டியது மிகவும் அடிப்படையானதாகும்.
Georeferenced செய்யப்பட்ட University of Peradeniya
இங்கு நான் இலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான பேராதனை பல்கலைக்கழகத்தின்(University of Peradeniya ) ஒரு சிறிய பகுதியினை Google Earth மேப்பில் இருந்து தரவிறக்கம் செய்து அதற்கு பொருத்தமான Geo-Coordinate வழங்கி ஜியோரீபரன்ஸ் செய்துள்ளேன் அதுவே உங்களுக்கு இங்கு காட்சியளிக்கின்றது.
![]() |
| University of Peradeniya -Georeferenced image |
நாம்
ஒரு வரைப்படத்தினை Digitalized செய்வதற்கு Shapefile களை பயன்படுத்துவோம்.
எமது
முந்தைய பதிவில் வரைபடங்களில் Shapefile களின் செயற்பாடுகள் என்ன என்பதனை
அவதானித்து உள்ளோம்.
மேலும் அவற்றினை எவ்வாறு பயன்படுத்துவோம் என்பதையும் அவதானித்துள்ளோம்.அத்தகைய Shapefile வடிவங்களையே நாம் இங்கு University of Peradeniya வரைப்படத்தினை Digitalized செய்வதற்கு பயன்படுத்தவுள்ளோம்.
Google Earth படத்தினை Digitize செய்தல்- Digitize Google Earth Map in ArcGIS.
Connect the Folder
Digitalized செய்வதற்கு எமது ArcMap இல் Catalog என்பதனை
Open செய்து கொண்டு என்னுடைய ஃபோல்டரை Connect செய்து கொள்ள வேண்டும் நான் Peradeniya university என்பதனை Folder Connections மூலமாக இணைத்துள்ளேன்.
![]() |
| Connect the folder |
Select the suitable Shapefile
இனி Connect செய்துள்ள Peradeniya university என்ற போல்டரை Right Click செய்து அங்கு New என்பதில் சென்று Shapefile என்பதை Click செய்ய
வேண்டும்.
![]() |
Selectl the Shapefile |
Create New
Shapefile என்ற
விண்டோவில் Name என்பதில் நாம் எதனை Shapefile ஆக வரையப்போகிறோம் என்பதனை வழங்க வேண்டும்.
நான் பாதையினை(-Road)
தேர்வு செய்துள்ளதனால் Transport என பெயர் வழங்கியுள்ளேன்.
அதேபோல் பாதை(-Road) வடிவமைப்பிற்கு நாம் பயன்படுத்த வேண்டிய Feature Type: Polyline ஆகும் ஆகவே Polyline என்பதனையும் நான் இங்கு தேர்வு செய்துள்ளேன்.
அடுத்து
மிக முக்கியமாக Spatial
Reference என்பதில் Edit என்ற பகுதிக்கு சென்று Peradeniya university வரைப்படத்திற்கு Spatial Reference Properties சிஸ்டத்தினை தேர்வு செய்து கொள்ள
வேண்டும்.
![]() |
| Spatial Reference Properties |
நான்
இங்கு Kandawala Sri Lanka Grid-(கந்தவள ஸ்ரீலங்கா கிரிட்) என்பதை தேர்வு
செய்து OK செய்துக்கொள்கிறேன்.
![]() |
| Spatial Reference-Kandawala Sri Lanka Grid |
நாம் எம்முடைய Shapefile கான X & Y Coordinate System முறையாக கொடுக்கும் பட்சத்தில் தான் எமது Digitalized வரைபடம் நேர்த்தியானதாகவும் புவியின் சார்பு நிலையங்களை சுட்டி நிற்பதாகவும் அமையும்.
Start Editing
பின்னர் Table Of Contents இல் Transport என்பதனை தேர்வு செய்து பின்னர் Editor சென்று Start Editing என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
![]() |
| Start Editing |
Editor என்ற பகுதி இல்லாத சந்தர்ப்பத்தில் மெனு
பாரில் Right Click செய்து Editor என்பதனை
தேர்வு செய்து கொள்ள வேண்டும். எம்மிடம் நமக்கு தேவையான Windows இல்லாத போது மெனு பாரில் ரைட் கிளிக்
செய்து தேவையானதை இணைத்துக் கொள்ள முடியும்.
Start Editing வழங்கிய பின்
தோன்றும் பாரில் Create
Features என்பதனை
Click செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் தோன்றும் Create Features என்பதில் நாம் தேர்வு செய்த Transport என்பதனை Click செய்து, அடுத்ததாக Construction Tools என்பதில் Line என்பதனையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
![]() |
| Create Features and Construction Tools |
Using the Polyline Tool and draw the Road
பின்பு
என்னுடைய Peradeniya University-படத்தினை பெரிதாக்கி கொண்டு (-Zoom in) அதில் எங்கெங்கு பாதை வலையமைப்பு
காணப்படுகின்றதோ அவைகளை எம்முடைய Polyline Tool
ஐ கொண்டு
படத்தின் மேல் நேர்த்தியாக வரைய வேண்டும்.
நமக்கு
தேவையான பாதைகளை வரைந்ததன் பின்னர் பாதைக்கான நிறம் அதனுடைய அளவு என்பதனை Symbol Selector என்பதன் மூலம் சென்று நம் தேவைக்கற்ப Color, Width என்பவற்றில் மாற்றம் செய்துக்கொள்ள முடியும்.
![]() |
| Symbol Selector |
Save Edits
அதன் பின்னர் Editor சென்று நாம் செய்ததனை Save Edits செய்துக்கொள்ள வேண்டும்.
![]() |
| Save Edits |
இப்போது நாம் Arc Map இன் மூலமாக Polyline என்பதனை தேர்வு செய்து பாதை அமைப்பினை Digitalized செய்துள்ளோம்.
How to digitize the buildings .
அடுத்ததாக குறித்த Peradeniya University வரைபடத்தில் காணப்படும் கட்டடங்களை(-Buildings) இங்கு Digitalized செய்ய உள்ளோம் அதற்காக நாம் மறுபடி Catalog பகுதியில் உள்ள பேராதனையை யுனிவர்சிட்டி போல்டர் என்பதற்கு சென்று Right Click செய்து New சென்று Shapefile என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
![]() |
| Digitize the buildings . |
இப்போது
தோன்றும் Create New
Shapefile என்ற
அமைப்பில் நான் தேர்ந்தெடுத்துள்ள பகுதியானது பில்டிங்ஸ்-Buildings ஆகும்.
இங்கு Name என்பதில் Buildings என தெரிவு செய்து Feature Type:Polygon என்பதனை தேர்வு செய்து கொள்கின்றேன், அத்துடன் Spatial Reference என்பதனை நாம் Edit என்ற பகுதிக்கு சென்று கந்தவள ஸ்ரீலங்கா கிரிட்-Kandawala Sri Lanka Grid என தெரிவு செய்துக்கொள்ளவும் வேண்டும் இப்போது OK என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
![]() |
| Create New Shapefile :Polygon |
பின்னர் நாம் Table Of Contents பகுதியில் Building செலக்ட் செய்து Editor சென்று Start Editing வழங்க வேண்டும் பின்பு தோன்றும் Create Features இல் Building கிளிக் Construction Tools சென்று Polygon என்பதனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
![]() |
| Create Features & Construction Tools |
இவ்வாறு
நாம் பாதைகள்(Transports) பில்டிங்(Buildings) என்பதை தெரிவு செய்தது போலவே குறித்த
நிலப்பரப்பில் காணப்படும் ஏனைய அம்சங்களான,
- நீர்ப்பரப்புகள்-Water Bodies
- மைதானங்கள்-Grounds என்பனவற்றை நமது தேவைக்கேற்ப Shapefile இல் சென்று வடிவமைத்து Digitalized செய்துக் கொள்ள முடியும்.
![]() |
| Digitize:Grounds ,Water Bodies, Buildings and Roads |
நாம் இந்த படத்தில் எமக்கு தேவையான பகுதிகளை Digitalized செய்துள்ளோம்.
இறுதியாக நம்மிடம் இருக்கும் Peradeniya University வரைபடத்தினை நீக்கி விட்டால் நாம் Digitalized செய்த பகுதி முழுமையாக எமக்கு காட்சிப்படுத்தப்படும்.
![]() |
| Digitalized Image |
Create Data frame to our Digitalized image
![]() |
| Create a Data frame |
பின் நாம் குறித்த வரைப்படத்திற்கு Data frame மற்றும் ஏனைய உள்ளீடுகளை செய்வதன் மூலமாக குறித்த படத்தின் Digitize பூர்த்தி செய்யப்படும்.
முடிவுரை
நம்மிடம் உள்ள வரைபடத்தினை Digitalized செய்வதன்
மூலமாகவே அது முழுமையாக கணினி மையப்படுத்தப்படும். அதன் பின்னராக நாம் அவ்வரைப்படத்தின் மூலமாக
பல்வேறு வகையான பகுப்பாய்வுகளையும் எதிர்வுக்சகூறல்களையும் எளிதாக செயற்படுத்த முடியும்.
நாம் மேலே
குறிப்பிட்ட படிமுறைகளை முறையாகப் பின்பற்றும்போது எம்மிடம்
உள்ள எத்தகைய ஒரு வரைப்படத்தினையும் கணினி மயமாக்கல் செய்து அதன் வெளியீட்டினை எம்மால் சிறந்த
முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்வரும்
பதிவுகளில் எவ்வாறு வரைப்படத்தில்
பகுப்பாய்வு நுட்பங்கள
மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் நாம் ஆராய உள்ளோம்.















கருத்துரையிடுக