விண்வெளித்திட்டம் ககன்யான் (Gaganyaan Mission)


01.ககன்யான் விண்வெளித்திட்டம் ககன்யான் (Gaganyaan Mission) என்றால் என்ன?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (Indian Space Research Organization, ISRO) மனிதர்களை விண்வெளிக்கு (India's first human spaceflight mission) அனுப்பும் தனது திட்டத்தினை ககன்யான் திட்டம்(Gaganyaan Mission) என்கிறது.  


02. Indian Human Spaceflight Program (IHRP- Gaganyaan) எவ்வாறு தோற்றம் பெற்றது?

2006: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவினால் (Indian Space Research Organization, ISRO) முதல் முதலாக 2006 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

2014: ககன்யான்  திட்டம் (Gaganyaan Mission) என பெயரிடப்பட்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப(India's first human spaceflight mission) இந்தியா தயாராகியது.

2018: பிரதமர் நரேந்திர மோதி (Narendra Modi)  இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தின உரையில்  இத்திட்டத்தினை முதல் முதலாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

2024: 2024-2025 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது.


03.ககன்யான்( Gaganyaan) என்பதன் பொருள் என்ன?

ககன்யான் என்ற சமஸ்கிருத(Sanskrit) சொல்லின்

  • "ககன்" என்ற  சொல்லுக்கு "வானம்என்று பொருள்.
  • "யான்" என்பதற்கு "வாகனம்என்று பொருள்
எனவே "வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம்-"Sky Craft" " என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

04.ககன்யான் திட்டத்தின் பிரதான சிறப்பம்சம் என்ன?

முற்று முழுவதும் இந்தியாவின்  கட்டுமானத்தினால் உருவாக்கிய விண்கள தொழில்நுட்பம் மூலம் இந்தியர்களை விண்வெளி நோக்கி கூட்டிச்சென்று மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதே  இதன் பிரதான சிறப்பம்சமாகும்.


05. இந்திய அரசாங்கத்தினால் ககன்யான் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பாதீட்டு தொகை எவ்வளவு?

9,023 கோடி 

06.ககன்யான்  விண்கலத்தினை  விண்வெளிக்கு  கொண்டுச்செல்லும்  ராக்கெட்டின்  பெயர்  என்ன?

எல்விஎம்-3 (LVM-3 )

எல்விஎம்-3 (LVM-3 ),விண்வெளித்திட்டம் ககன்யான் (Gaganyaan Mission)
எல்விஎம்-3 (LVM-3 )


07.எல்விஎம்-3 LVM3 – ராக்கெட் எத்தனை பகுதிகளை கொண்டுள்ளன?

எல்விஎம்-3 (LVM3)   மூன்று கேப்சூல்(capsule) பகுதிகளை கொண்டுள்ளது.


08. இஸ்ரோ எல்விஎம்-3 (LVM 3)  ராக்கெட்டின் முக்கியமான பகுதி எது என குறிப்பிட்டுள்ளது.

Crew Escapes capsule


09.Crew Escapes capsule இன் சிறப்பம்சங்கள் என்ன?

  • குரு எஸ்கேப்(Crew Escapes capsule) இது விண்வெளி வீரர்களை கொண்ட பகுதியாக காணப்படும்.
  • இது விண்வெளி ஓடத்தில் ஏதேனும் இடர்கள் அல்லது உயிராபத்து தோன்றின் Crew Escapes capsule பகுதி மாத்திரம் தனியாக கழன்று பூமியினை வந்தடையும் தன்மையுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.

10.ககன்யான் மூலமாக விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு எந்நாடு பயிற்சியளிக்கின்றது?

விண்வெளி செல்லும் வீரர்களை தயார் செய்வதற்காக ரஷ்யாவில் உள்ள லீவ்காஸ்மோஸ்(Russian space corporation- Roscosmos) என்ற விண்வெளி நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.


11.ககன்யான் திட்டத்தின் மூலமாக விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் யாவர்?

  1. பிரசாந்த் பாலகிருஷ்ணன் (Prashanth Balakrishnan)
  2. அங்கத் பிரதாப் (Angad Prathap)
  3. அஜித் கிருஷ்ணன் (Ajit Krishnan)
  4. எஸ் சுக்லா (Shubanshu Shukla)
The Gaganyan programme astronautsபிரசாந்த் பாலகிருஷ்ணன் (Prashanth Balakrishnan) அங்கத் பிரதாப் (Angad Prathap) அஜித் கிருஷ்ணன் (Ajit Krishnan) எஸ் சுக்லா (Shubanshu Shukla),எல்விஎம்-3 (LVM-3 ),விண்வெளித்திட்டம் ககன்யான் (Gaganyaan Mission)

The Gaganyan programme astronauts




12.இவ் விண்வெளி திட்டத்தின் பிரதான செயற்பாடுகள் எவை?

  • பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் ககன்யான் விண்கலம் நிலைநிறுத்தப்படும்.
  • வீரர்கள் 3 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து விண்வெளி தொடர்பாக ஆய்வு நடத்துவார்கள்.

13.ககன்யான்  சோதனைப்  பயணத்தின்  போது  பின்பற்றப்படும்  சிறப்பம்சங்கள்  எவை?


  • ஏனைய நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன் மிருகங்களையும் ஏனைய உயிரினங்களையும் விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யும், ஆனால் இந்தியாவின் இஸ்ரோ அத்தகைய செயற்பாடுகளை கை விட்டமை சிறப்பாகும்.
  • வாயோ மித்ரா(ISRO's Vyommitra)  என்ற பெண் இயந்திர    ரோபோவினை(the female  robot  in Gaganyaan  mission)  வடிவமைத்து    விண்வெளி    சோதனை    ஓட்டத்திற்காக    விண்வெளிக்கு  அனுப்ப    இஸ்ரோ    திட்டமிட்டுள்ளது.

வாயோ மித்ரா(ISRO's Vyommitra) எல்விஎம்-3 (LVM-3 ),விண்வெளித்திட்டம் ககன்யான் (Gaganyaan Mission)
வாயோ மித்ரா(ISRO's Vyommitra)

14.வாயோ மித்ரா(Vyommitra) என்பதன் பொருள் என்ன?

சமஸ்கிருத்த (Sanskrit) மொழியிலிருந்து தோற்றம் பெற்றதே வாயோ மித்ரா(Vyommitra) என்ற பெயராகும்.

  • வாயோ என்றால் வானம் “Vyoma” (meaning Space)
  • மித்ரா என்றால் நண்பன் “Mitra” (meaning Friend).

15.வயோமித்ரா இயந்திர ரோபோவினை இஸ்ரோவின் எந்தப் பிரிவு உருவாக்கியது?

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (Vikram Sarabhai Space Center in Thiruvananthapuram, Kerala)


16. ககன்யான்  சோதனைக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள "வாயோ மித்ரா என்ற (ISRO's Vyommitra)" பெண் இயந்திர ரோபோவின் பிரதான செயற்பாடுகள் எவை?

  • ராக்கெட்டை இயக்குவதற்கான கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளின் அடிப்படையில் செயற்படுதல்.
  • விண்வெளியில் ஏற்படும் அசாதாரண பிரச்னைகளை உணர்ந்து உடனுக்குடன் விஞ்ஞானிகளுக்கு ரோபோ மித்ரா அறிவிக்கும்.
  • ராக்கெட்டின் எரிவாயு, மின்சாரம் மற்றும் உயிர் பாதுகாப்பு அமைப்புகளின் செயற்பாட்டை கண்காணித்து விஞ்ஞானிகளுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்தல்.
  • மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனை கொண்டுள்ளதுடன் அவர்களின் கேள்விகளுக்கு சரியான பதிலளினை அளிக்கும் திறன்
  • இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஞ்ஞானிகளுக்கும் விண்வெளி வீரர்களுக்கும் தகவல்களை வழங்குதல்.
  • மின் இணைப்பு பலகைகளின் செயல்பாடுகளைக் திறமையாக முகாமை செய்தல்.
  • சுற்றுச்சூழல் மற்றும் காற்றழுத்த  எச்சரிக்கைகளை வழங்குதல்.

Post by: Puvitips

 

Post a Comment

புதியது பழையவை