
அறிமுகம்:மருத்துவப் புவியியலில் பெருந்தொற்றுக்கள்-Medical Geography and Pandemic
புவியியல் பரப்பில் மருத்துவப் புவியியலின்(Medical Geography ) செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பாகவும் அதன் வரலாற்று அபிவிருத்தியினையும் அதன் முக்கியத்துவத்தினையும் (Medical Geography's Historical development and its importance) எமது முந்தைய பதிவில் அவதானித்துள்ளோம்.
மருத்துவப் புவியியல் புவிச் சூழலில் பல்வேறு வகையான நோய்களின் தொடக்கம் மற்றும் பரவல் (Spread of diseases) பற்றி ஆய்வு செய்கிறது.இது உலக சுகாதாரம் மற்றும் உடல் நல பேணுதலுக்கும் திட்டமிடலுக்கும் உதவுகின்றது.
இது மனித சூழல் இடைத் தொடர்புகளை (Interactions between Human and Environment) ஆராய்ந்து மனிதனுக்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய(Harmful) சுகாதாரக் கெடுதல்களை(Health hazards) அடையாளப்படுத்தி அவற்றுக்கான முகாமைத்துவ நுட்பங்களையும் பாதுகாப்பு விதிகளையும்(Management techniques and safety rules) பட்டியலிடுகின்றது.
அதன் காரணமாகவே உலகளாவிய சுகாதார கட்டமைப்பிற்கும்(Global health framework),தொற்றும் மற்றும் தொற்றா நோய்களின்(Infectious and non Infectious diseases) முகாமைத்துவத்திலும் மருத்துவப் புவியியலின் நுட்ப முறைகள் (Techniques of Medical Geography) அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவப் புவியியலை கற்கும் நாம் புவியில்
தோற்றம் பெற்ற தொற்று நோய்கள்,தொற்றா நோய்கள் சமூக நோய்கள் மற்றும் பெரும் தொற்றுகள் என்பனவற்றினை அறிந்து
வைத்திருப்பது அவசியமானதாகும். இது நிகழ்கால
வாழ்விற்கும் எதிர்கால சுகாரதார நிலைப்பேன்
தன்மைக்கும் எம்மை தயார்படுத்தும் முக்கிய அம்சமாகவும் உள்ளது.
அந்த வகையில் எமது புவியில் காலத்திற்கு காலம் தோற்றம் பெறும் பெருந் தொற்றுக்கள்(Pandemic disease) தொடர்பாக அறிந்துக்கொள்வது அவசியமானதாகும்.
எனவே இப்பதிவில் பெருந்தொற்றுக்கள் என்றால் என்ன?-What are pandemics? இதுவரை எமது
புவியில் தோற்றம் பெற்று மனித மற்றும் இயற்கை சூழலிற்கு சவாலாக அமைந்த
பெருந்தொற்றுக்கள் என்ன என்பதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமையவுள்ளது.
பெருந்தொற்றுக்கள் என்றால் என்ன?-What is the meaning of Pandemic disease
இன்றைய காலகட்டத்தில்
பெருந்தொற்றுக்கள்(Pandemic Disease) என்றால் என்ன? அது உலகில் எத்தகைய முறையில் பரவல் அடைந்தன(How to spread) அதன் மூலமாக எவ்வாறு மக்கள் தங்களுடைய இயல்பினை இழந்தனர் (How to People lost their
nature) என்பது தொடர்பான ஆராய்வினை
மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதற்கு கீழ்வரும் விடயங்களை நன்கு
கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்படிமிக்-Epidemic என்றால் என்ன என்பதற்கு
அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம்(The United States Centers
for Disease Control and Prevention defines) ஒரு குறிப்பிட்ட புவியியல் பரப்பிற்குள் ஒரு நோய் தாக்கம் ஏற்பட்டு
அது எண்ணிக்கையில் அதிகரித்தது என்றால் அது எப்படிமிக் என்கிறது. எடுத்துக்காட்டாக
:பெரியம்மை,தட்டம்மை, போலியோ போன்றவை இதற்குள் உள்ளடங்கும்.
இங்கு தோன்றும் நோய் தொற்று நோயாக இருக்க
வேண்டிய அவசியப்பாடு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட புவியியல் பகுதியில் உள்ள மக்களில் ஏற்படும் உடல் பருமன் அதிகரிப்பும் எப்படிமிக்குள் (Epidemic) உள்ளடங்கும்.
என்டமிக்(Endemic) என்னும் போது ஒரு புவியியல் பிரதேசத்தில் ஒரு நோய் தோற்றமடைந்து குறிப்பிட்ட
பிரதேசத்திற்குள்ளேயே அதிக நாட்கள் பயணிக்குமாக இருப்பின் அது எண்டமிக்(Endemic) எனப்படுகிறது. இங்கு குறிப்பிட்ட நோயின்
தன்மை,அதன் தீவிரம்,பரவலடையும் வேகம்
என்பனவற்றினை கண்டுக்கொள்ள முடியும்.
பென்டமிக்(Pandemic) என்பது ஒரு பிரதேசத்தில் தோற்றம் பெற்ற நோய் சடுதியாகவும் மிக மிக
விரைவாகவும் குறிப்பிட்ட புவியியல்(Specific geographical
region) பிரதேசத்தினை விட்டு
சர்வதேச ரீதியில்(Internationally) பரவலடைந்து
பாரிய நோய்தொற்றாக மாற்றமடைந்து அதிகளவான உயிரிழப்பையும் சுகாதார சீர்கேட்டு
நிலைமைகளையும் உருவாக்கும் சந்தர்ப்பத்தை பெருந்தொற்று பென்டமிக்(Pandemic disease) எனப்படுகின்றது.
இங்கு நாம் பெருந்தொற்றுக்கள்(Pandemic disease) என்னும் போது அவை ஒரு புவியியல் பிரதேசத்தில் இருந்து பரவல் அடையும் வேகம் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள்(The speed of the spread
and the resulting casualties) என்பனவற்றினை அடிப்படையாகக்
கொண்டு பெருந்தொற்றுக்களை வரையறுக்கின்றோம்.
ஆகவே பெருந்தொற்றுக்கள் என்னும் போது ஒரு குறிப்பிட்ட புவியியல்
பகுதியில் தோற்றம் பெற்று அப்பிரதேசத்தினை விட்டு விரைவாக கடந்து சர்வதேச நாடுகளை
ஊடுருத்து மனித குலத்தினை நாசமாக்கும் தன்மையினை கொண்டவைகளே
பெருந்தொற்றுக்கள் ஆகும்.
இவை சில நாட்கள் தொடக்கம் சில வருடங்கள் வரையும்(From a few days to a few years) தீவிரமடைந்து செல்லும்.அத்துடன் இதற்கான நோய் காரணிகளையும்(Disease factors) பரவல் அடையும் விகிதத்தையும்(Rate of diffusion) இந்நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளையும் விநியோகிப்பதில் உலக நாடுகள் ஸ்தம்பிதம் அடையும்.
இத்தகைய பெருந்தொற்றுகள் காரணமாக சமூகங்களுக்கிடையிலான
- தொடர்பு பாதிப்படையும்(An interruption in communication)
- பொருளாதார காரணிகள் சீர்குழையும்(Economic factors affecting)
- நாட்டின் அரசியல் அமைதியின்மை ஏற்படும்(Political unrest in the country)
- உணவு உற்பத்தி குறைவடையும்(Food production decreasing)
- ஏற்றுமதி இறக்குமதி பாதிப்படையும்(Exports and imports affected)
- மருத்துவ பொருட்களின் தட்டுப்பாடு நிலவும்.(Shortage of medical supplies)
உலகில் தோற்றம் பெற்ற பெருந்தொற்றுக்கள்-Epidemic that spread worldwide
உலகில்
இதுவரையிலான காலப்பகுதியில் தோற்றம் பெற்ற முக்கிய பெருந்தொற்றுக்களை பின்வருமாறு
வகைப்படுத்த முடியும்.
பிளேக் (The Plague of 541 CE)
கிறிஸ்துக்கு
பின் 541 தோற்றம் பெற்ற பிளேக்(The plague of 541 CE) பேரழிவு நோய் இது எலிகள் மீதான உன்னிகள்
மற்றும் பக்டீரியாக்கள் வழியாக உருவாக்கமடைந்தது.
பிளேக் நோய் பரவலானது இந்நோய்
பாதிக்கப்பட்டவர்களின் சுவாச வாயிலாக பரவல் அடைந்தது. இதனால் உலகளாவிய ரீதியில் 200 மில்லியன் வரையிலான மரணங்கள்
ஏற்பட்டுள்ளன. இன்றும் இந்த நோயின் தாக்கம் உலகப் பிராந்தியங்களில் அவதானிக்க
கூடியதாக உள்ளதையும் குறிப்பிடத்தக்கது.
பெரியம்மை (Smallpox epidemic)
1520 ஆண்டுகளில் பெரியம்மை(Smallpox epidemic) என்னும் பெருந்தொற்று நோய் தோற்றமடைந்தது. இதுவும் உலகை அச்சுறுத்திய
உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாகும். உடல் முழுக்க சீழ் கட்டிகளை உருவாக்கி அதன்
அதிகரித்த காரணத்தினால் வாய், கண்,முகம்,மூக்கு போன்றவைகளில்
புண்கள் உருவாகி மக்கள் மரணித்திருக்கின்றனர்.
இது 350 மில்லியன் வரையிலான
மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பிற்பட்ட காலத்தில் அட்வர்ட் ஜென்னர்( Edward Jenner) என்பவர் 1796 இல் இதற்கான தடுப்பூசியினை(Vaccine) கண்டுபிடித்து இதனை
மட்டுப்படுத்தினார்.
காலரா நோய் (Cholera)
1817 களில் உலகளாவிய ரீதியில்
தாக்கத்தை ஏற்படுத்திய காலரா நோய்(Cholera pandemic).இது சுத்தமற்ற மற்றும் அசுத்தமான நீர் மூலமாக இந்நோய்
பரவலடைந்தது.ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகளவான மக்களை இது காவு கொண்டது சுமார் 50 மில்லியன் மக்கள் இதன் மூலமாக உயிரிழந்துள்ளனர் இன்றும் குறைந்த
வருமான நாடுகளில் காலரா(Cholera) நோய் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.
இன்ஃபுளுவென்சா(Influenza-(H1N1 Virus)
1918 இல் தோற்றம் பெற்ற
இன்புளுபன்சா(Influenza-(H1N1
Virus), இந்த நோய் மனித சுவாசத்தின்
மூலமாக பரவல் அடைகின்றது. இதன் மூலம் 50 மில்லியன் மக்கள் உலகலாவிய
ரீதியில்
உயிரிழந்தனர்.
ஏசியன் ஃப்ளூ-Asian Flu
சீனாவில் 1956 ஆம் ஆண்டு பரவிய ஏசியன் ஃப்ளூ-(Asian Flu) சிங்கப்பூர்
ஹாங்காங் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் உயிர்களை காவு கொண்டது.
அமெரிக்காவில் 70
ஆயிரம் மக்கள் இதன் மூலமாக இறந்தனர் உலகளாவிய ரீதியில் 20 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்
ஃப்ளூ-2-Flu fever
ஃப்ளூ-(Flu fever) என்னும் சளி காய்ச்சல் 1968இல் ஹாங்காங்கில் உருவான இது ஃப்ளூ-2 என்று
அழைக்கப்பட்டது. முன்னதாகவே இதனுடைய ஆரம்பப் பிரிவு அடையாளப்படுத்தப்பட்டதனால் இது
ஃப்ளூ-2 என அழைக்கப்பட்டது.
இது இந்தியா,ஆஸ்திரேலியா,ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவலடைந்து.இதன் மூலமாக
ஒரு மில்லியன் வரையிலான மக்கள் இறந்தனர்.
எச்ஐவி எய்ட்ஸ்-(HIV - human immunodeficiency virus)
1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
ஆப்பிரிக்காவின் கொங்கோவில் தோற்றம் பெற்று 3 கோடிக்கு மேற்பட்ட
உயிரிழப்பினை ஏற்படுத்திய எச்ஐவி எய்ட்ஸ்-(HIV - human immunodeficiency virus) ஒரு உலகளாவிய பெரும் தொற்றாக அவதானிக்கப்படுகின்றது.
இது மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலை சீர்குலைத்து நோய் எதிர்ப்பு
சக்தியை குறைத்து மனித உயிரை தாக்குகின்றது.இந்நோய்க்கு இன்று வரையிலும் முறையான
மருந்து கண்டுபிடிக்கவில்லை.
சார்ஸ்(SARS-CoV-2)
2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சார்ஸ்(SARS-CoV-2) சீனாவில்
பரவத் தொடங்கியது. நுரையீரலை கடுமையாக பாதிக்கும் வைரஸ் நோய் தொற்றியவர்களில் சுமார் 11 சதவீதத்தினர் உயிரிழந்தனர்.
சார்ஸ்(SARS-CoV-2) தொற்று பாதிக்கப்பட்ட
நபரின் உமிழ்நீர் மற்றும் நாசி நீர்த்துளிகள் வாயிலாகவும் இருமல் மற்றும் தும்மல்
மூலமும் வைரஸ் பரவுகிறது.இவ் உயிர்கொல்லி நோயின் காரணமாக ஒட்டுமொத்தமாக
ஆயிரத்திற்கும் மேலான மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா-Coronavirus disease
இன்றைய நூற்றாண்டில் நாம் அனைவரும் கண்கூடாக பார்த்த மற்றும் அனுபவித்த உயிர்கொல்லி நோயான கொரோனா-Coronavirus disease (COVID-19) 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டு சர்வதேச எல்லைகளைக் கடந்து உலகின் அனைத்து நாடுகளையும் முடக்கத்துக்குள்ளாகிய பெரும் தொற்றாக கோவிட்-19 பெரும் தொற்று அடையாளப்படுத்தப்படுகின்றது.
![]() |
| coronavirus molecular structure |
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் 79.2 மில்லியனுக்கும் அதிகமான
கோவிட்-19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்கள்
இறந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய உலகளாவிய பெருந்தொற்றுக்களினால் அதிகமாக உயிர் இழப்பவர்கள்
குழந்தைகள்,சிறுவர்கள்,முதியவர்கள் மற்றும்
கர்ப்பிணி தாய்மார்களும் உடலில் ரீதியான பலவீனமானவர்களுமே ஆகும்.
முடிவுரை
மேலே நாம் நோக்கிய வகையில்
உலகளாவிய ரீதியில் மக்களை பாதித்த முக்கிய கொடிய பெருந் தொற்றுகள் அமைந்துள்ளன.
இத்தகைய பெருந் தொற்றுக்களின் ஆரம்ப நிலையினை அடையாளப்படுத்துவதும் அதன் பரவலை
கட்டுப்படுத்துவதற்கும் இக்கொடிய நோயிலிருந்து உலக மக்களை பாதுகாக்கவும் மருத்துவ
புவியியல் பல்வேறு வகையான நுட்ப முறைகளை வழங்குகின்றது.
இப்பெருந்தொற்றுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்து உலக மக்களின்
நிலைப்பேன் வாழ்க்கைக்கு மருத்துவப் புவியியல் உதவுகின்றது என்பதனை எதிர்வரும்
பதிவுகளில் நாம் அவதானிப்போம்.



கருத்துரையிடுக