அறிமுகம்:மருத்துவப் புவியியல் - Introduction to Medical Geography



அறிமுகம்:மருத்துவப் புவியியல் - Introduction to Medical Geography

புவியியல் கற்கையானது(Study of Geography) உலகில் உள்ள அனைத்து விடயங்களையும் ஆராய்யும் விஞ்ஞான நுட்ப முறைக்குட்பட்ட (Science Techniques) கற்கை நெறியாகும் அதன் காரணமாகவே புவியியலை ஆங்கிலத்தில் ”Geography is Mother Of Science” என அழைக்கின்றனர்.


அத் தன்மைக்கேட்பவே புவியியலானது ஏனைய கற்கைத்துறைகளான அரசியல்(Politics), பொருளாதாரம்(Economics), மெய்யியல்(Philosophy), வளிமண்டலவியல்(Meteorology), நீரியல்(Hydrology), சமுத்திரவியல்(Oceanography) மற்றும் மருத்துவம்(Medicine) போன்ற எண்ணற்ற துறைகளில் தனது செல்வாக்கினை செலுத்தி வருகின்றது.

மேல் நோக்கிய தன்மைக்கேற்ப மருத்துவக்கற்கையிலும்(Study of Medicine) புவியியல் பாரிய பங்காளியாக உள்ளது. அத்தன்மையினால் புவியியலில் மருத்துவ புவியியல்(Medical Geography) என்பது தனித்துவ கற்கையாக(Unique study) அடையாளப்படுத்தப்படுகின்றது.

உலகில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவ புவியியல் (Medical Geography) சிறப்பு கற்கையாக (Special Subject) கற்பிக்கப்படுகின்றது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கை மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் இக்கற்கை இன்று பிரபல்யம் அடைந்து வருகின்றது.

அந்த வகையில் இப்பதிவில் மருத்துவப் புவியியல் என்றால் என்ன?(What is Medical Geography?) அதன் உள்ளடக்கம் (Content),வரலாறு(History) மற்றும் அதன் நோக்கங்கள்(Objectivesஎன்ன என்பதனை நாம்  ஆராயவுள்ளோம்.


மருத்துவ புவியியல் என்றால் என்ன? -What is Medical Geography?

"மருத்துவப்புவியியல்-Medical Geography" எனும் சொற்பதமானது மருத்துவம்(Medicine), சுகாதாரம்(Health), புவியியல்(Geography) எனும் மூன்று துறைகளுடன் தொடர்புபட்டுள்ளது.

மருத்துவ புவியியல்(Medical Geography) அல்லது சுகாதாரப் புவியியல்(Health Geography) என்று அழைக்கப்படும் இக்கற்கையானது மானிட சூழலுடன் இணைந்து பௌதீக சூழலையும்(Physical environment along with human environment) அவற்றின் தன்மைகளையும், மக்கள் நோய் சுகாதார உறவு தொடர்புகள்(relationship between people and health) என்பனவற்றினை ஆராய்கின்றது.

இங்கு சுகாதார நிறுவனங்கள்(health institutions),மக்களுக்கான சுகாதார தேவைப்பாடுகள்(health needs) அதனை பூர்த்தி செய்ய முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்(actions),உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புக்கள்(Health Organizations) அவை சூழலுடனும் மக்களுடனும் கொண்டுள்ள இடைத்தொடர்புகள்(Interconnections) என்பனவற்றை பிரதானமாக ஆராய்கின்றது.

உலகில் அதிகரித்து வருகின்ற தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும்(Infectious and non Infectious diseases) கண்டறிந்து அவற்றிற்கான சாதகமான தீர்வுகளை(Solutions) மருத்துவ புவியியல் முன்வைக்கின்றது.

மருத்துவ புவியியல் என்றால் என்ன?(What is Medical Geography?)

கடந்த காலங்களில் நாம் எதிர் நோக்கிய மருத்துவ இடர்பாடுகளை(Medical complications) கண்டறிந்து எதிர்காலத்தில் அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் மனித சமூகத்தை மீட்டெடுத்துக் கொள்வதற்கும் மருத்துவ புவியியல் முன்னிற்கின்றது.

இன்று அதிகரித்துள்ள பெருந்தொற்றுக்கள்(Pandemic disease), அதற்கான காரணிகள்(Factors for that) அவற்றினை தடுப்பதற்கான உபாயங்கள் (Prevention strategies) மக்களை அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நுட்ப முறைகள்(Techniques for protection) என்பனவற்றிற்கு மருத்துவப் புவியியல் அதிகளவான கவனம் செலுத்துகின்றது.

புவியியல்  தகவல்  நுட்ப  (GIS)  தரவு  நுட்பத்தின்  மூலமாக  வரலாற்றில்  கடந்து  வந்துள்ள  சுகாதார  மற்றும்  மருத்துவ  தன்மைகளையும்  தொற்று  நோய்களின்  பரவலையும்  புவியில்  அவற்றின்  தாக்கத்தையும்  அடையாளப்படுத்துகின்றது.

சுருங்கக் கூறின் மருத்துவ புவியியல்(Medical Geography) அல்லது சுகாதாரப் புவியியல்(Health Geography) என்பது மானிட மற்றும் பௌதிக சூழலை ஒருங்கிணைத்து(Integrating the human and physical environment) அவற்றின் சுகாதார பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை முன்வைப்பதுடன் புவியியன் நிலைப்பேண் வளர்ச்சிக்கு(For sustainable development) உதவும் ஒரு கற்கையாக வளர்ச்சி அடைந்துள்ளது.


மருத்துவப்  புவியியலுக்கான  வரைவிலக்கணங்கள்  -Definitions  for  Medical  Geography

Amanda  Briney  என்பவரின்  2006  ஆம்  ஆண்டுதனிநபர் தொட்டு முழுச்  சனத்தொகையினரது உடல் நலத்தில் செல்வாக்குச் செலுத்தும் புவியியல்  ரீதியிலான அம்சங்களான இடம்அமைவிடம்காலம்பிரதேசம்பரப்பு(Place,  location,  period,  territory,  area)  என்பனவற்றினை  ஒருங்கிணைத்து அவற்றினை ஆராய்கின்ற கற்கை நெறியாக  மருத்துவப்புவியியல்(Medical  Geography)  உள்ளது என்றார்.

மக்களின் சுகாதாரத்துடனும் நோய்த்  தாக்கங்களுடனும் புவியியலின்  பிரதான கருக்களான பரப்பு (Space),  நேரம்  (Time),  பரப்பியல் ரீதியான  வேறுபாடுகள்(spatial  variations),  மனித சூழல் தொடர்புகள்(Human-environment  interactions) ஆகியன பரப்பியல் ரீதியில் எவ்வாறு தொடர்புபட்டுள்ளன  என்பதனை சுகாதாரப்புவியியல் ஆராய்கின்றது.

மருத்துவப் புவியியல் ஆனது இயற்கை மற்றும் மனித சூழலுடன் இடம்  மற்றும் காலம் சார்ந்த புவியியல் நுட்பங்களையும் உள்ளடக்கி ஆராயும் ஒரு  இயலாகின்றது.

"மருத்துவப் புவியியல்"  நோய்கள் வருமுன் காத்தல்கட்டுப்படுத்தல்  (Preventive)  மற்றும் நோய்களை குணப்படுத்துதல் (Curative)  எனும்  அம்சங்களை மையமாக கொண்டது.

 

மருத்துவப் புவியியலின் வரலாறு -History of Medical Geography

கிரேக்க  மேதையான ஹிப்போக்ரடீஸ் (Hippocratic-the  ancient  Greek  physician)  கிறிஸ்துக்கு  முன்  5-4  ஆம்-நூற்றாண்டுகளில்  ஒருவரின்  ஆரோக்கியத்தில்  புவியின்  இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை  வெளிக்கொணர்ந்தார்.

மக்களின் இருப்பிடத்தை கொண்டு நோய்  பரவல்  மற்றும்  நோய்  தாக்கம் ஏற்படுகின்றன என்பதனை அவர் வலியுறுத்தினார். உயரமான மற்றும்  குறைந்த உயரத்தில் வாழும் மக்கள் அனுபவிக்கும் நோய்களில் உள்ள  வேறுபாடுகளை  இவர்  ஆய்வு  செய்தார்.

உயரமான இடங்கள் மற்றும் வறண்ட ஈரப்பதம் குறைந்த பகுதிகளில்  இருப்பவர்களை காட்டிலும் நீர் பரப்புகளுக்கு அருகிலும் குறைந்த  உயரத்தில்  வசிப்பவர்களும் மலேரியா நோயினால்(Malariaஅதிகம்  பாதிக்கப்படுகின்றார்கள். என இவர் தன் கருத்தினை முன் வைத்தார் இது  இடம் சார்ந்த பரவல் பற்றிய மருத்துவப் புவியியலின் ஆரம்பத்திற்கு  வித்திட்டது.

இத்தகைய முன்வைப்புக்களின் காரணமாக ஹிப்போக்ரடீஸ்  (Hippocratic-the  ancient  Greek  physician) மருத்துவத்தின் தந்தை"father  of  medicine"  என  அழைக்கப்படுகின்றார்.


ஹிப்போக்ரடீஸ்-மருத்துவத்தின் தந்தை (Hippocratic-father of medicine)
ஹிப்போக்ரடீஸ்-மருத்துவத்தின் தந்தை (Hippocratic-father of medicine)


ஹிப்போக்ரடீஸ் (Hippocratic) முன்வைத்த நடைமுறைகளை பின்பற்றி மருத்துவத்துறை பாரிய முன்னேற்றங்களை அடைந்தது. பின்னாளில் ஒரு வைத்தியன் ஹிப்போக்ரடிக்ஸ் உறுதிமொழியினை(Hippocratic Oat) ஏற்பதன் மூலமாகவே வைத்தியத்துறையில் காலடி எடுத்து வைக்கிறான். இத்தகைய அளப்பரிய சேவையினை ஹிப்போக்ரடீஸ் மருத்துவத் துறைக்கு முன் வைத்துள்ளார்.


1800 ஆம் ஆண்டுக்கு பின்னர் -After 1800

1800 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை மருத்துவ புவியியல் மிகவும் மெதுவாகவே பயணித்தது எனலாம். அதன் பின் 1854 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லண்டனில் அதிகமான மக்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகினர் குறிப்பாக 500க்கும் மேற்பட்ட மரணங்கள் அங்கு நிகழ்ந்தன.

இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட டாக்டர் ஜான் சினோ (Dr. John Snow) என்பவர் அப்பகுதியிலிருந்து வெளியேறிய நீராவியினாலேயே மக்கள் உயிரிழந்தனர் என்றார்.மேலும் அப்பகுதியிலுள்ள நீரானது கொலரா(cholera disease) தொற்றுக்குள்ளாகியமையே இம்மரணத்திற்கு காரணம் எனவும் கண்டறிந்தார்.

அப்பகுதியில் மக்களை பாதிக்கும் நச்சுக்களின் மூலத்தை ஆராய்ந்து அவற்றினை தனிமைப்படுத்தினார். இதன் மூலம் அப்பகுதியில் நிலவியே கொலோரா நோய் தொற்றினையும் மரணத்தையும் கட்டுப்படுத்தினார் ஜான் சினோ (Dr. John Snow).

இக்காலப்பகுதியில் புவியியலை இடரீதியான கண்ணோட்டத்திலும் காலரீதியான கண்ணோட்டத்திலும் ஜான் சினோ (Dr. John Snow) நோக்கினார். இது மருத்துவ புவியியல் வேகமாக வளர்ச்சியடைய துணைப்புரிந்தது.

 Dr. John Snow லண்டன் முழுவதையும் உள்ளடக்கி அங்கு இடம் பெற்ற மரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு புவியியல் வரைபடத்தினை(Geographical map) வெளியிட்டார். இது மருத்துவப் புவியலின் ஆரம்பகால வளர்ச்சிக்கு பெரிதும் துணைப் புரிந்தது.

இவரே மருத்துவ துறையில் ஏற்படும் நோய்களுக்கும் சுற்று சூழலுக்கும் தொடர்பு காணப்படுகின்றன என்பதை உலகத்திற்கு அறியப்படுத்தினார்.

இத்தகைய காரணிகளினால் ஜான் சினோ (Dr. John Snow) மருத்துவப் புவியியலின் தந்தையாக (Father of Medical Geography) கருதப்படுகின்றார்.


Dr. John Snow-Father of medical Geography

Dr.ஜான் சினோ-Dr. John Snow-Father of medical Geography

சுற்றுச்சூழல் நிகழ்வுகளை வரைப்படவியல் ரீதியாக சுகாதார நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தலாம் என்பதனையும் இவர் ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தினார்.


20ஆம் நூற்றாண்டுக்கு பின்னர்-After the 20th century

20ஆம் நூற்றாண்டில் மருத்துவ புவியியலில்(Medical Geography) வியத்தகு முன்னேற்றங்கள் இடம் பெற்றன.

குறிப்பாக இக்காலப்பகுதியில் Colorado பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் பற்களில் Cavities குழிவுகள் மிகவும் குறைவாக காணப்பட்டது மறுபுறம் அதன் ஏனைய பகுதிகளின் குழந்தைகளுக்கு பற்களின்  Cavities குழுவுகள் அதிகமாகவும் காணப்பட்டது.


Cavities குழிவுகள் மருத்துவ புவியியல் என்றால் என்ன?(What is Medical Geography?)

Cavities குழிவுகள்

இதனை ஒப்பிட்டு பார்த்த பிறகு குறைவான Cavities குழிவுகள் கொண்ட குழந்தைகள் அதிகளவு ஃப்ளோரைடு-high levels of fluoride உள்ள பகுதிகளை சுற்றி அதிகமாக இருப்பதனை அவர்கள் அவதானித்தனர்.

அதுபோல் பற்குழிகள் அதிகமாக காணப்படும் குழந்தைகளும் சிறுவர்களும் ஃப்ளோரைடு செறிவு குறைந்த பகுதிகளில் வாழ்கின்றமையினை இவ்வாய்வு வெளிப்படுத்தியது.

இவ்வாய்வு பின்னர் பல் மருத்துவத்தில் ஃப்ளோரைடு- fluoride பயன்பாடு அதிகரிக்க வித்திட்டது.


21 நூற்றாண்டில் மருத்துவப் புவியியல் -Medical geography in the 21st century

21 நூற்றாண்டில் மருத்துவ புவியியல் பல்வேறு கட்டங்களையும் கடந்து தவிர்க்க முடியாத ஒரு பாடத்துறையாக வியாபித்துள்ளது. எடுத்துக்காட்டாக இன்று மருத்துவப் புவியியலில் வரைபடங்களின்(Maps) தாக்கம் அதிகரித்துள்ளதுடன் அவற்றின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக வொன்றாகவும் உள்ளது.

21 நூற்றாண்டில் மருத்துவப் புவியியல் -Medical geography in the 21st century

புவியியல் துறையில் இனங்காணப்பட்ட பல்வேறு வகையான நவீன விஞ்ஞான ரீதியான துறைகளும்,ஆராய்ச்சி கருவிகளும்(Modern scientific fields and research tools) மருத்துவப் புவியலின் வளர்ச்சிக்கு சாதகமான வாய்ப்பினை இக்கால பகுதியில் வழங்கி உள்ளன.

மனித சூழல் இடை தொடர்புகளுடன் நோய்களை கண்காணிப்பதற்கான செய்மதிகள், படவாக்க கருவிகள்(Mapping tools), இடர் முகாமைத்துவ காலங்களில் மக்களை ஒருங்கிணைப்பதற்கும் (risk management) அத்துடன் பெருந் தொற்று காலங்களில் தொற்றுக்களை அடையாளப்படுத்தவும் அவற்றினை கட்டுப்படுத்தவும் சர்வதேச ரீதியிலான தொடர்புகளை ஏற்படுத்தவும் (Diseases and international communication during epidemics) மருத்துவ புவியியல் துணை நிற்கின்றது.

1918 க்கு பின் இன்ஃப்ளுவன்சா நோய் தொற்று(Influenza virus) மற்றும் உலகளாவிய பெரும் தொற்றுகள் (Pandemic) என்பனவற்றினை முறையாக தொகுத்து நோக்க மருத்துவ புவியியல் முன்னிற்கின்றது.

மேலும் 2019 ஆம் ஆண்டு காலங்களில் இடம்பெற்ற கொரோனா Coronavirus disease 2019 (COVID-19) பெரும் நோய் தொற்றுக் காலகட்டங்களிலும் அதனை தடுக்க மருத்துவப் புவியியல் இடம், பரப்பியல், காலம் போன்ற பல்வேறு நுட்பங்களை முன்னெடுத்து அதற்கு எதிராக போராடியமையினையும் நாம் அவதானித்துள்ளோம்.

 

மருத்துவப் புவியியலின் அடிப்படைகள் -Concepts of Medical Geography

மருத்துவ புவியியலின் அடிப்படைகள் தொடர்பாக பற்றீசனினால் 1964 (Pattison, 1964) ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட நான்கு பிரதான மரபுகளும் -4 Traditions மருத்துவப் புவியியலின் அடிப்படை பண்புகளை வெளிகாட்டுகின்றன. அந்த வகையில், 
  • பரப்பியல் மரபு (Spatial Tradition)
  • பௌதிக மரபு (Physical Tradition)
  • பிரதேச மரபு (Regional Tradition)
  • மனித சூழல் மரபு (Human-Environmental Tradition) என்பன  மருத்துவப் புவியியலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுடன் அளவுசார் ஆய்வு நுட்பங்கள் (Quantitative Research Techniques) ஆய்வுகளின் பொருத்தப்பாட்டுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவப்புவியியலில் பயன்படுத்தப்படும் எண்ணக்கருக்கள், மாதிரிகள் மற்றும் கோட்பாடுகளில் சுகாதாரம்(Health), இடம்(Place) மற்றும் காலம்(Time) என்பன முக்கிய வகிப்பங்கினை கொண்டுள்ளன.

  

மருத்துவ புவியியலின் நோக்கங்கள்-Objectives of Medical Geography

  • மருத்துவப் புவியியல்(Medical Geography) மக்களின் ஆரோக்கியத்தை(People's health) முதன்மை படுத்துகின்றது.
  • "மருத்துவப்புவியியல்(Medical Geography)" நோய்கள் வருமுன் காத்தல்கட்டுப்படுத்தல் (Preventive) மற்றும் நோய்களை குணப்படுத்துதல் (Curative) எனும் நோக்கங்களை மையமாக கொண்டது.

மருத்துவ புவியியலின் நோக்கங்கள்-Objectives of Medical Geography


  • மருத்துவ புவியியல் மனித சூழல் தொடர்பான பல்வேறு காரணிகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த முயல்கிறது.
  • மருத்துவப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வை வரைபடமாக்குவதன் ஆற்றலைப் புரிந்துகொள்ள உதவுகிறது ,தரவு (நோய்கள்) மற்றும் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதில் இடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றது.
  • மருத்துவப் புவியியல் என்பது உடல் மற்றும் உள நலப் பிரச்சனைகள் பற்றிய புரிதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
  • பல்வேறு புவியியல் காரணிகளின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிகோருகின்றது.
  •  இது நோய்களின் காரணங்கள் மற்றும் வடிவங்களை தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  •  பெருந்தொற்றுக்கள் பரவுதலை குறைப்பதற்கான வழிவகைகளை தெளிவுப்படுத்துகின்றது.
மேற்கூறிய வகையிலான நோக்கங்களை அடிப்படையாக கொண்டே மருத்துவ புவியியல் உலகலாவிய ரீதியில் மக்களின் சுகாதார நலன் பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருகின்றது.


மருத்துவப் புவியலின் விருத்திக்கு தடையாக உள்ள காரணிகள்  -Obstacles in Medical Geography

  • மருத்துவப்புவியியலில்  தரவுகள் சேகரிக்கும்(Data collection or data gathering) போது பல்வேறுவகையான தடைகளை சந்திக்க வேண்டியுள்ளன. குறிப்பாக நோயின் இருப்பிடத்தை பதிவு செய்வது மிக முக்கிய இடர்பாடாக உள்ளது. எடுத்துக்காட்டாக கொரோனா நோய் தொற்றின் போதும் அது சீனாவில் எப்பகுதியில் விருத்தி அடைந்தது என்பது தொடர்பாக ஆரம்ப கால தரவு சேகரிப்பு பெரும் சிக்கலுக்குரியதாகவே இருந்தது.

  • மக்கள் நோய் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதில்லை குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடையாத நாடுகளில் உள்ள மக்கள் நோய் தாக்கங்கள் ஏற்படும் போது அது தொடர்பான முறையான முகவர்களிடம் அல்லது வைத்தியரிடம்  பதிவு செய்யாமை நோய் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமமாக உள்ளது.
  • நோய் தொடர்பான பரவலை அறிந்து கொள்வதிலும்,நோய் காவிகள் தொடர்பாகவும் மற்றும் நோயின் மூலாதாரத்தையும் அறிந்து கொள்வதில் காணப்படும் பிரச்சனைகள்.
  • நோய் தொடர்பான அறிக்கையினை சரியான துள்ளிய நேரத்தில் பதிவு செய்யாமை.
  • நாடுகளுக்குள்ளான ரகசியத்தன்மையும் அவற்றின் இறையாண்மையும் நோய் காவி தொடர்பான தகவல்களை வெளி உலகத்திற்கு அறிய படுத்தாமல் இருக்கின்றமை.
  • நோய்த் தொற்றினையும் நோய் ஆரம்பித்த இடங்களையும் ஆராய்வு செய்வதில் காணப்படும் சூழலியல் தடைகள்.
  • மக்கள் தங்களுடைய பழக்க வழக்கங்களையும், பழமைகளையும் முன்னிறுத்தி ஆய்வு தொடர்பான வேலை திட்டங்களுக்கு முறையாக ஒத்துழைக்காமை.
  • நாடுகளுக்கு இடையே காணப்படும் சட்டதிட்டங்கள் போன்றவையும் மருத்துவப் புவியியலின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது

மேற்போன்ற பல தடைகள் காணப்பட்டாலும் அவற்றினை தகர்த்து மருத்துவப்புவியியல் இன்று உலக சுகாதார முகாமைத்துவத்தில் முக்கிய பங்காளியாக உள்ளது


முடிவுரை-Conclusion

சுகாதார சேவைகளின் கிடைப்பவை அனைத்து மக்களும் பெற்றுக் கொள்ளும்  வகையிலும் சர்வதேச ரீதியாக இடைத்தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச  நிறுவனங்கள்(International  organizations),அரசுசார்பற்ற துறைகள்(non-governmental  sectors)  மற்றும் பல் தேசிய கம்பெனிகள்(multinational  companies)  போன்றவற்றின்  கூட்டணியுடன் மருத்துவப் புவியியல் இன்று வளர்ச்சியடைந்து உலக  மக்களின் சுகாதார முன்னேற்றத்தில் பங்களிப்பு செலுத்துவதனை  காணக்கூடியதாக உள்ளது. 

Post By:Puvitips


    வைத்திய ஒழுக்கவியல் ஓர் அறிமுகம் -An Introduction of Medical Ethics

    சுகாதார முகாமைத்துவத்தில் நோய்ப்பரவல்  கோட்பாடு-Disease Diffusion Theory in health management

    பெருந்தொற்று முகாமைத்துத்தில் மருத்துவப் புவியியலின் பங்களிப்பு- Contribution of medical geography to Pandemic disease management


    Post a Comment

    புதியது பழையவை