Contribution of medical geography to Pandemic disease management


அறிமுகம்:பெருந்தொற்று முகாமைத்துத்தில் மருத்துவப் புவியியலின் பங்களிப்பு- Contribution of Medical Geography to Pandemic disease management

அனைத்தும் புவியியல் (Everything is Geography)” என்ற பதத்திற்கேற்ப உலகிலுள்ள அனைத்து துறைகளிலும் புவியியல் தன் ஆதிக்கத்தினை செலுத்துகின்றது. அதற்கேற்ப புவியியல் மருத்துவத் துறையினுள் (Medicine Field) பயணித்ததன் விளைவாக மருத்துவத்துறையின் சிந்தனையிலும் அதன் செயற்போக்கிலும் பல்வேறுவகையான மாறுதல்கள் இடம்பெறத் தொடங்கின.

மருத்துவப் புவியியல்(Medical Geography) அல்லது சுகாதாரப் புவியியல்(Health Geography) என்பது இயற்கை மற்றும் கலாச்சார சூழலின்(Natural and Cultural environment) சுகாதாரம், உடல் நலக்குறைவு மற்றும் நோய்களின் இடஞ்சார்ந்த நகர்வு(Spatial movement) தொடர்பான ஆய்வு என வரையறுக்கப்படுகிறது.


வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் மனித இனத்தினை பெருந்தொற்றுக்கள் ஆக்கிரமித்துள்ளன இவற்றினால் பில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். எடுத்துக்காட்டாக 2019 ஆம் ஆண்டில் நாம் அனைவரும் கண்முன்னே அவதானித்த கொரோனா- Coronavirus disease (COVID-19) தொற்றினை மக்கான அனுபவ உதாரணமாக கூற முடியும்.

எமது முந்தைய பதிவில் உலகை ஆட்கொண்ட கொடிய பெருந்தொற்றுக்களை (Pandemic disease) அவதானித்துள்ளோம்,த்தகைய கொடிய நோய் தொற்றுக்கள் மனித இனத்தை ஆக்கிரமிப்பதையும்,அழிப்பதனையும் இழிவாக்கும் நடவடிக்கைகளை (Prevention of pandemic disease) மருத்துவத்துறை தனது தொழில்நுட்ப வளர்ச்சியின் துணைகொண்டு மேற்கொண்டு வருகிறது. அதற்கு உதவும் வகையில் புவியியலும் தன்னை மருத்துவத் துறையுடன் இணைத்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பெருந்தொற்றும் புவியியலும்- Pandemic and Geography

பொதுவாக நோயானது புவியியல் ரீதியான  பரப்பியலை அடிப்படையாகக் கொண்டே(Based on Spatial)  தொற்றுக்குட்படுகின்றது. இதற்கு காலம்(Time), இடம்(Place) என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.

நோய்கள் என்பவை மானிட வர்க்கத்தினைப் பீடிக்கும் ஒருவகையான அழிவுக்காரணிகள் ஆகும். இவ்வாறான நோய்கள் உலகம் முழுவதும் பல்வேறுபட்ட கோணங்களிலும், பல்வேறுபட்ட செயற்பாடுகள் வாயிலாகவும் மற்றும் பல்வேறுபட்ட பழக்க வழக்கங்களினாலும் மனிதர்களைப் பீடிப்பதனை அவதானிக்கலாம்.

அத்தகைய பெருந்தொற்றுக்களை ஆய்வு செய்வதில் மருத்துவப் புவியியலின் பங்களிப்பானது வரலாற்றின் ஆரம்பக் காலந்தொடக்கம் இருந்து வந்துள்ளது. எனினும் முறைமைப்படுத்தப்பட்ட அமைப்பானது 1854 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் இனங்காணப்பட்டது.

குறிப்பாக  லண்டன்  பிராந்தியங்களில்  பரவிய  கொலாரா தொற்று  நோயினை  (Cholera  Epidemic)  கட்டுப்படுத்தும்  நோக்கில்  டாக்டர்  ஜான்  ஸ்னோ(Dr.  John  Snow)  கொலாரா  நோயாளிகளின்  தினசரி  நடவடிக்கைகளை  1854 ஆம் ஆண்டு வரைப்படமாக்கினார் (Dr.  Snow-  employing  mapping  and  statistical  analysis  to  uncover  patterns  in  the  transmission  of  the  disease.) அத்தினம் முதலே  உத்தியோகப்பூர்வமாக  மருத்துவ  புவியியல்  பெருந்தொற்றுகளை  கையாளுவதில்  தன்னுடைய  பங்களிப்பை  ஆரம்பித்தது  எனலாம்.

டாக்டர்   டாக்டர்   ஜான்   ஸ்னோ(Dr.John   Snow)   1854   ஆம்   ஆண்டு   உருவாக்கிய   ஸ்னோவின்   வரைபடம்-   Snow's   Map   என   அழைக்கப்பட்ட   அப்புவியியல்   வரைபடத்தின்   மூலமாக   குறிப்பிட்ட   பிராந்தியத்தில்   பரவிய   கொலாரா   தொற்றுக்கான   மூலம்   அறியப்பட்டதுடன்   கொலரா   நோயினையும்   முடிவுக்கு   கொண்டு   வந்தனர்.   

John Snow's cholera map that changed the world

John Snow's cholera map 


இவ்வாறு  டாக்டர்   ஜான்   ஸ்னோ(Dr.John   Snow)  உருவாக்கிய புவியியல் வரைபடமானது மருத்துவ புவியியலின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்தது என்பது மறுக்கவியலாது.

பெருந்தொற்றுக்களை முகாமைத்துவம் செய்வதில் மருத்துவப் புவியியலில் பல்வேறு வகையான முறைமைகளையும் நுட்பங்களையும் பயன்படுத்தி தொற்றுக்களினால் ஏற்படும் பாதிப்புக்களை இழிவாக்கி வருகின்றது. அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.


GIS இன் பயன்பாடு-  Application of GIS


ஜி.ஐ.எஸ்(GIS-) என்பது புவியியலில் தரவைக் காட்சிப்படுத்தவும்,பகுப்பாய்வு செய்யவும் மற்றும் விளக்கவும் பயன்படும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்(GIS is a powerful tool to visualize, analyze and interpret geographic data.இது புவியியலை தவிர்த்து ஏனைய பல துறைகளிலும் பிரபல்யம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் மருத்துவப் புவியியலில் மருத்துவமனைகள்மருத்துவர்கள்தாதியர்கள்,மருந்துக்கள்,மருத்துவ பொருட்கள்,மருத்துவ உபகரணங்கள்,மாசுபாடு,கழிவு வெளியேற்றம் ஆகியவற்றினை தரவுத் தொகுதிகளாக இது வழங்குகின்றது.

இங்கு ஜி..எஸ் (GIS) தொழில்நுட்பத்துடன் ரிமோட் சென்சிங்(Remote sensing) மற்றும் செய்மதி தொழில்நுட்பங்கள்(Satellite Technology) ஒன்றிணைந்ததன் விளைவாக பெரும் தொற்றுக்களின் தோற்றுவாய்,அதன் இயக்கம், செயற்பாடு, பரவல் போன்ற விடயங்களை துல்லியமாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்தகைய காரணங்களினால் மக்கள் தங்களுடைய சுகாதார மேம்பாட்டுக்கான நோய் தடுப்பு கருவிகளை முன்கூட்டியே பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

 இவ்வாறு ஜிஐஎஸ் (GIS) தொழில்நுட்பம் மருத்துவ புவியியலில் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக மருத்துவத் துறை சார் அம்சங்கள் மக்களுக்கு மிகவும் விரைவாகவும்,துல்லியத்துடனும் கிடைக்க ஏதுவாகின அத்துடன் பெருந்தொற்று முகாமைத்துவ நடவடிக்கைகளிலும் இதன் பங்கு முக்கிய இடத்தினை அடைந்தது. 

 

தரவு சேகரிப்பு முறை-  Method of data collection

மருத்துவப்   புவியியலில்   தரவு   சேகரிப்பு   முறைமை(data   collection)   முக்கியத்துவமுடையதாக   அவதானிக்கப்படுகின்றது.   இங்கு   தரவு   சேகரிப்பானது   பல்வேறு   வகைகளில்   இடம்   பெறுகின்றது   எனினும்   பிரதானமாக,

  • முதலாம் நிலைத்தரவுகள்(Primary Data)

  • இரண்டாம் நிலைத்தரவுகள்(Secondary Data) என்பன மிக முக்கியத்துவம் உடையவையாக உள்ளன.

முதலாம்  நிலைத்  தரவுகள்   (Primary  Data)  என்னும்  போது ஆய்வாளன்   குறிப்பிட்ட நோய் தொடர்பான தரவுகளை அறிய நேரடியாக ஆய்வுப்   பிரதேசத்திற்குச் (Study   Area)  சென்று அங்கு  நிலவும் உண்மை நிலவரங்கள்   தொடர்பாக  தரவு  சேகரிக்கும்  முறையாகும்.

முதலாம் நிலைத் தரவுகள் -Primary Data

  • நேர்காணல்(interviews),
  • வினாக் கொத்து(questionnaire),
  • பங்குபெற்றல்(Participating ) முறைமை போன்றவற்றின் ஊடாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இரண்டாம் நிலைத் தரவுகள்-Secondary Data 

ஆய்வாளன்(Researcher) ஏற்கனவே குறிப்பிட்ட நோய் தொடர்பாக மேற்கொண்ட

  •  ஆய்வுகளையும் (Research)
  • ஆய்வு கட்டுரைகளையும்(Research articles), 
  • சஞ்சிகைகளையும்(journals) 
  • வைத்திய நூல்களையும்(medical books ), 
  • இணையத்தளங்களையும்(websites) அடிப்படையாகக் கொண்டு குறித்த நோய் தொற்றுக்கு காரணமான தரவுகளை சேகரிப்பதாகும்.

இத்தகைய தரவு சேகரிப்பு முறைமைகள் மருத்துவ புவியியலில் நோய்களின் பெருக்கத்தினையும் அவற்றின் பரவலினையும் கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான காரணிகளாக விளக்குகின்றன.

இன்றைய  AI  (Artificial  intelligence)  வளர்ச்சியின்  காரணமாக  செயற்கை  நுண்ணறிவு  ரோபோக்களையும்(Artificial  intelligence  robots)  பரிசோதனை  ஆய்வுக்கூடங்களையும்(Testing  laboratories)  குறித்த  ஆய்வு  களத்திலேயே(Research  Area)  நிறுவி  நோய்  தொற்று  தரவுகளை  கண்காணிப்பதற்கான  வசதியும்  உருவாக்கம்  பெற்றுள்ளன.

(Artificial  intelligence  robots) Contribution of medical geography to Pandemic disease management

இவ்வாறு குறித்த நோய் தொடர்பாக சேகரிக்கப்படும் முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் என்பன குறித்த புவியியல் பிரதேசங்களில் தாக்கத்தினை செலுத்தியுள்ள நோய் தொற்றின் உண்மை நிலவரங்களையும் அதன் தீவிர தன்மையையும் இலகுவாக இனங்கண்டுக்கொள்ள உதவுகின்றன. 

இது  மருத்துவ  புவியலின்  பெருந்தொற்று  முகாமைத்துத்தில்  முக்கிய  அடிப்படையாகவும்  உள்ளன.


இடம் சார்ந்த பகுப்பாய்வு -Spatial analysis

புவியியலில் முக்கிய ஆராய்ச்சிக் கருவியான இது.தொற்றுக்களின்   இடஞ்சார்ந்த பரவலைக்(Spatial   distribution)  கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.  

புவியியலானது ஒரு நோயின் இடவியல் சார்ந்த தரவுகளை தொகுத்து தருவதில் பிரதான வகுப்பங்கினை கொண்டுள்ளது. 

குறிப்பிட்ட இடத்தின் தன்மை,தரைத்தோற்றம்,ஏனைய எல்லைகளுக்கு இடையிலான தூரம் போன்ற இடப்பரப்பியல் ரீதியான பண்புகளை மருத்துவப்புவியியல் விளக்குகின்றது.இது மருத்துவ புவியலின் பெருந்தொற்று முகாமைத்துத்தில் மிகமுக்கிய  அடிப்படையாகவும் உள்ளன.

  • தொற்று   நோய்
  • அதன் தீவிரம்   
  • கண்காணிப்புக்குப்   பொறுப்பான   முகவர்கள்  
  • மாதிரிகள்
  • பரவும் முறை
  • பரவும் வேகம்
  • தொற்று நோயின்   வடிவம்
  • பரவல் அடைவதன்   காரணிகள் என்பனவற்றினை கண்டறிந்து அளவிட   இம்முறை உதவுகின்றது.

குறிப்பிட்ட பிரதேசத்தில் பரவியுள்ள தொற்று நோயின் தீவிரம் அதன் பரவும் தன்மை என்பவற்றுடன் அதற்கான சூழல்சார்ந்த காரணிகளையும்(Environmental factors) இம்முறை மூலம் அறிய முடியும்.

அடிப்படையில் இடம் சார்ந்த பகுப்பாய்வு(Spatial   analysis) என்பது குறிப்பிட்ட   இடத் தரவுகளை பெருமானங்களாக வெளிப்படுத்துகின்றது.இடம் சார்ந்த   தரவுகள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • வடிவவியல்  
  • புவி அமைவிடவியல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இது   அமைந்துள்ளது.

இடம்சார்ந்த பகுப்பாய்வின் ஊடாக ஆரம்பக் காலம் தொடக்கம் உலகில் பரவும் பல்வேறு நோய்களினை தடுப்பதற்கு முகாமைத்துவ  நடவடிக்கைகள் பேணப்பட்டு வந்துள்ளமையினை அறியமுடிகின்றது.


இடம் சார்ந்த பகுப்பாய்வு (Spatial analysis)


இடஞ்சார்ந்த புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி இடவிளக்கப் பகுப்பாய்வினை மேற்கொள்கின்றது. இதன் மூலம் நோய் பரவலின் இடஞ்சார்ந்த தன்னியக்க தொடர்பினை கண்டறிய முடியும்மேலும் சாத்தியமான அடிப்படையில் இது மதிப்பீட்டையும் செயல்படுத்துகிறது.

நோய் பரவல் மற்றும் அவற்றை தடுப்பதற்கு வளங்களை மிகவும் திறம்பட ஒதுக்கீடு செய்தல்,நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆகியனவற்றிற்கு இம்முறை அதிகமாக உதவுகின்றது.

மருத்துவ புவியியல் உலகில் தோன்றும் பெருந் தொற்றுக்களையும் நெருக்கடியான நோய் சார் தன்மைகளுக்கும் முறையான பகுப்பாய்வு முறைகளை கண்டறிந்து அவற்றின் இடஞ்சார்ந்த தகவல்களை வெளிக்கொணறுவதுடன் எதிர்கால சூழ்நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய முடிவுகளை முன்வைக்கின்றது.

எடுத்துக்காட்டாக கோவிட் 19 (Coronavirus disease (COVID-19) இன் தோற்றுவாயினையும் அதன் உலகளாவிய புவியியல் மாற்றங்களையும்(Geographical changes) அதனால் தோற்றுவிக்கப்பட்ட வேலையின்மை(unemployment), சமூகத் தனிமை படுத்தல்(social isolation), மற்றும் ஏனைய இழப்புக்களையும்(other losses) கருத்தில் கொண்டு எதிர்கால பாதுகாப்பிற்கான வரையறையை இது முன் வைத்துள்ளது.

நோய்   பரவலைக்   காட்சிப்படுத்தவும் (Visualize the spread of the disease),   நோய்   பரவும்   திசையைப்   புரிந்து   கொள்ளவும் (Direction of disease spread) இது   உதவுகிறது. இதன் மூலம் நோயோடு தொடர்புடைய சுற்றுச்சூழல் அல்லது   மக்களோடு சார்ந்த காரணிகளை இதன் மூலம் அறியமுடியும்.

இங்கு நோயிற்கான  முறையான காரணிகளை அறிவதன் மூலம் அதனை   தடுக்க கூடிய வழிவகைகளையும்  கையாள  முடியும்.

நோய் பரவும்   திசையை  முறையாக கண்டறிந்து அதற்கான தடைகளை விதிக்கும் போது   நோய் பரவல் குறைவடைகின்றது.

மருத்துவப் புவியியலில் நோய்களின் அவதானிப்பு பற்றிய புவிசார் பரப்பியல் தொடர்பான பிரயோகங்கள் சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக பெருந்தொற்றுக்களின் தோற்றம் அதன் தீவிரத் தன்மை, பரவல் வேகம், பரவல் அடையும் பரப்பு போன்றன துல்லியமாக கணிக்கப்படுகின்றன.


சர்வதேச  ஆய்வரங்குகள்-International Conference

மருத்துவப் புவியியலானது தன்னுடைய நோக்கம் எத்தகையது என்பது தொடர்பாகவும் உலக மக்களை கொடிய நோயிலிருந்து பாதுகாப்பதற்காகவும் சர்வதேச ரீதியில் ஆய்வரங்குகளை ஏற்படுத்துகின்றது.

அந்த வகையில் முதலாவது ஆய்வரங்கானது 1985 ஆம் ஆண்டு நோட்டின்ஹாமில் (Nottingham) முதன் முதலில் ஆரம்பமானது.

பின்னர் 1986 ஆம் ஆண்டு நியூ ஜேசியிலும்(New Jersey),1988 ஒண்டாரியாவிலும்(Ontario),1990 ஆம் ஆண்டு நோவிச்சிலும்(Norwich) இதன் சர்வதேச ஆய்வரங்குகள் இடம்பெற்றன.

இத்தகைய ஆய்வரங்குகளின் போது போது குறிப்பிட்ட காலப்பகுதியில் தோன்றும் கொடிய பெருந்தொற்று நோய்கள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு முறையாக கட்டுப்படுத்துவதெனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இங்கு சர்வதேச நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் மருத்துவ உபகரண பரிமாற்றல்களையும் ,எதிர்காலத்தில் தோன்றும்  கொடிய நோயினை தடுப்பதற்கான முகாமைத்துவ நுட்பங்களையும் உலக நாடுகளுக்கு முன் வைக்கின்றது.

மேலும் சர்வதேச நிறுவனங்கள்,அரசு சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் உதவியுடன் நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான விதிகளையும் இது முன்வைக்கின்றது.


முடிவுரை

மருத்துவத்துறையானது தனித்து நோய் மற்றும் நோய் முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் புவியலையும் தன்னுடன் இணைத்துக் கொண்டதன் காரணமாக பரப்பியல் சார்பான தரவுகளை சுகாதாரத் தரவுகளுடன் ஒன்றிணைத்து நோய் தடுப்பு முகாமைத்துவத்தினை திறப்பட மேற்கொள்வதற்கு சாதமகாயிருந்தது.

மருத்துவத்துறையானது புவியியல் துறையுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் போது வினைத்திறனனதாகவும் இலகுவாக நோய் தடுப்பாற்றலை மேம்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

மேலே நாம் நோக்கிய வகையில் மருத்துவ புவியியல் ஆனது பெருந்தொற்று முகாமைத்துவத்தில் பிரதான வகிப்பங்கை கொண்டுள்ளது அவற்றுள் மிக முக்கிய செயல்பாடுகளை நாம் மேலே அவதானித்தோம் இருப்பினும் இவற்றுடன் இணைந்து இன்னும் பல்வேறு வகையான தொழில்பாடுகளை மருத்துவப் புவியியல் செயல்படுத்துகின்றது என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

Post By:Puvitips



Post a Comment

புதியது பழையவை