Fauna, Flora, Wallace line, Endemic species, Topography, Species, Systematics, Historical biogeography, Biogeography

அறிமுகம்: உயிரினப்புவியியல்- Introduction to Biogeography

புவியியல் கற்கைத்துறையானது ஓர் பரந்துப்பட்ட உலகளாவிய கற்கை நெறியாகும். இது புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு வகையான பௌதீக மற்றும் மானிட செயற்பாடுகளை(Physical and human activities) வெளி,இடம்,நேரம் (space place and time) என்ற வகையில் ஆய்வுக்குட்படுத்துகின்றது.

இக் ற்கைத்துறையானது பிரதானமாக இரண்டு அணுகுமுறைகளை (Approach) உள்ளடக்கியுள்ளது. 

01.பிரதேச ரீதியான அணுகுமுறை மற்றும் (Regional Approach)

02.ஒழுங்கு முறையான அணுகுமுறை (Systematic Approach) என்பனவே அவ்விரண்டுமாகும்.

இத்தகைய அணுகுமுறைகளின் ஊடாக புவியியலானது உலக பிரதேசங்களினதும் அவற்றின் பண்புகளையும்,வேறுபாடுகளையும் அங்கு காணப்படும் பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் ஆராய்கின்றது(It examines problems and their solutions.).

புவியியல் கற்கையானது பிரதானமாக இரு பிரிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது பௌதீக புவியியல்(Physical Geography) மற்றும் மானிடப் புவியியல்(Human Geography) என்பனவே அவையாகும்.

இவற்றில் பௌதீகப் புவியியல் (Physical Geography) நான்கு பிரதான பிரிவுகளை கொண்டுள்ளது:

  1. காலநிலையில்(Climatology),
  2. நீரில்(Hydrology)
  3. புவி வெளியுருவியல் (Geomorphology)
  4. உயிரின புவியியல் (Biogeography)

ஆகியனவே அப்பிரிவுகள் ஆகும். இவற்றில் உலக உயிரினங்களின் தோற்றத்தினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும்(Importance) அவற்றுக்கான முகாமைத்துவ நடவடிக்கைகளையும் (Management measures) ஆராயும் தனித்தொருதுறையாக உயிரினப்புவியியல் (Biogeography) தோற்றம் பெற்றுள்ளது.

அத்தன்மையில் இங்கு நாம் புவியியலின் மிகப் பிரதான பிரிவாகவும் உலகளாவிய ரீதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் பிரதான பாடத்துறையாகவும் உள்ள உயிரினப் புவியியலின் தோற்றப்பாட்டினையும் அதன் முக்கியத்துவத்தினையும்(The Origin And Importance Of Biogeography) ஆராயவுள்ளோம்.


உயிரினப் புவியியல் என்றால் என்ன-வரைவிலக்கணங்கள் - Definitions of Biogeography

  • உயிரினப் புவியலானது உலகின் உயிரினங்களின் தோற்றம், அவற்றின் பரிணாமம், உலக நிலப்பரப்புகளிடையே அவற்றின் பரவல் மற்றும் பரம்பல் (Origin of organisms, Their evolution, Their distribution )என்பனவற்றை இடம், காலம், வெளி ஆகிய அம்சங்களின் ஊடாக ஆராயும் கற்கையாகும்.
  • புவியின் தோற்றம் முதலாக அதன் பரப்பில் உயிரினங்களின் தோற்றம்,வளர்ச்சி ,அதன் பரிணாமம் மற்றும் அவற்றுக்கிடையிலான இடைத்தொடர்புகளை விஞ்ஞான ரீதியாக விளக்கும் துறையாகும்.
  • புவியின் உயிரின அம்சங்களான தாவரங்களையும் , விலங்குகளையும்(Plants and animals) ஏனைய உயிரினங்களின் தோற்றம் தொடர்பாகவும் அவற்றின் பரவல்,பரம்பல் மற்றும் அவை சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தொடர்பாகவும் அதன் வாழ்விடங்கள்,சூழல் தொகுதிகள் என்பனவற்றின் தொடர்பினையும் ஆராயும் கற்கை.

Fauna, Flora, Wallace line, Endemic species, Topography, Species, Systematics, Historical biogeography, Biogeography

  • உயிரினப் புவியியலானது தாவரங்கள் விலங்குகள் மற்றும் புவியியல் காணப்படும் நுண்ணுயிர்கள்(Plants ,animals and Microorganisms) என்பனவற்றையும் வெளி ரீதியான அவற்றின் பரவலையும் ஆராய்கின்றது.
  • புவியின் உயிரின வாழ்க்கைக்கும் அவற்றுடன் இடைத்தொடர்புக் கொண்டுள்ள சூழலுக்கும் இடையிலான சிக்கலான மற்றும் ஆழமான தொடர்புகளை ஆராயும் கற்கை.


உயிரின புவியியலின் ப பகுதிகள்- Major subdivisions of Biogeography

உயிரினப் புவியியலானது பிரதானமாக மூன்று உப பிரிவுகளைக் கொண்டு உலக உயிரின அம்சங்களை ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. அத்தன்மையில் சூழலியலறிஞர்கள் உயிரின புவியியலை பின்வரும் வகைப்பாடுகளுக்குட்படுத்தி அதனை ஆய்வுக்குட்படுத்துகின்றனர்.


Fauna, Flora, Wallace line, Endemic species, Topography, Species, Systematics, Historical biogeography, Biogeography

subdivisions of Biogeography


  1. உயிரினப் பாதுகாப்பு- உயிரினப் புவியியல் (Conservation Biogeography)
  2. வரலாற்று- உயிரினப் புவியியல் (Historical Biogeography)
  3. சூழலியல்- உயிரினப் புவியியல் (Ecological Biogeography)


உயிரினப் புவியியலின் வளர்சிக் கட்டங்கள்  -Developmental stages of biogeography                                       

புவியின் உயிரின தோற்றம் காலம் முதலாகவே உயிரினப் புவியியலும் அதனுடன் இணைந்து வளர்சியடைந்தது எனலாம் .எனினும் முறைமைப்படுத்தப்பட்ட (Systematized) தன்மையிலான அதனுடைய ஆராய்சிகள் பின்வரும் அடிப்படையிலேயே புவியியல் கற்கையில்  முன்னேற்றமடைந்தது.

உயிரினப் புவியியலானது அரிஸ்டோட்டிலின்(Aristotle -Greek philosopher) காலகட்டத்திலேயே தோற்றம் பெற்றமை தெளிவாகிறது, குறிப்பாக கிறிஸ்துக்கு பின் 300 களில் இவர் உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகள் (Living and non-living elements) தொடர்பாக விளக்கினார் மேலும் உயிரின ராஜியத்தை தாவரங்கள் மற்றும் விலங்குகள் (Plants and Animals) என இரு பிரிவாக இவர் வகைப்படுத்தினார்.

பின்னர் அலெக்சாண்டர் ஒன் ஹம்போல்ட்(Alexander Von Hambold) 1799களில் புவியின் அகலக்கோட்டு வேறுபாடுகளுக்கிணங்க(According to latitudinal differences) உயிரினங்களின் பல்வகைத்தன்மையின் பரம்பலை விளக்கினார். இவர் தாவரப் புவியலின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

1794 இல் ஜேம்ஸ் காட்டன்(James hutton) உயிரினங்களின் வாழ்க்கை கோலம் அதில் இடம்பெறும் மாற்றங்கள் அவை எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் அவற்றிற்கான முகாமைத்துவம் நடவடிக்கைகள் என்பனவற்றினை  இயற்கைத் தேர்வுக் கொள்கையாக(Natural Selection) முன்வைத்தார். மேலும் ஜேம்ஸ் காட்டன் 1785 இல் புவி மற்றும் உயிரியல் விஞ்ஞானத்தின் அடிப்படை எண்ணக்ருவினை விளக்கினார்.

1820 களில் ஏ.டி.கண்டோல்(A.D.Candol) தனது  Geographical Botany என்ற நூலில் தாவரவியல் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு தனது உயிரியல் சார் கருத்துக்களை முன் வைத்தார் தாவரங்களின் பல்வகைமை தொடர்பாகவும் தாவரங்களுக்கும் அவை பரம்பியுள்ள உயிரியல் சூழலுக்கும் காலநிலைக்கும் தொடர்புள்ளமையினை இவர் கண்டறிந்தார்.

1859 இல் சார்ல்ஸ் டாவின்(Charles Darwin) என்ற உயிரியல் ஆய்வாளரின் “உயிரினங்களின் தோற்றம்-1859 Origin of Species” என்ற நூலில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையானது உயிரின புவியியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது.

1866 Ecology என்ற எண்ணக்கருவானது ஜெர்மனிய உயிரியலாளரான ஹர்னெஸ்ட் ஹக்கில் (Ernest Haeckel) ) என்பவரால் முன்வைக்கப்பட்டது. இது சூழலியல் எண்ணக்கருவில் உயிருள்ள-உயிரற்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தொகுதியை விளக்குவதாக அமைந்தது.

பின்னர் அல்பிரெட் ரசல் (Alfred Russel Wallace) என்ற உயிரியல் அறிஞர் 1876 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்ட Zoological Realms என்ற நூல் உயிர் பல்வகை வளர்ச்சிக்கும் உயிரின புவியியலின் விருத்திக்கும் பிரதான காரணமாகியது.

1935 இல் டென்ஸ்லி மற்றும் ஓடும்(A.G.Tensley and Odum) ஆகியோர் சூழல் தொகுதி என்ற எண்ணக்கருவினை அறிமுகம் செய்தனர்.

"எக்கோ சிஸ்டம்-Ecosystem" என்ற சொற்பதுமானது முதன் முதலில் பிரித்தானிய சூழலியலரான டென்சிலி-Tansley என்பவரினால் 1935 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இவர் 1935 ஆம் ஆண்டு வெளியிட்ட ஸ்டடி ஆப் சிஸ்டம்-Study of Ecosystem என்ற நூல் சூழல் தொகுதியின் அடிப்படை செயல்பாட்டலகை விளக்குவதாக அமைந்தது.

1942 ல் ஹேர்னெஸ்ட் மேயர்(Ernst Mayr) பயாலஜிக்கல் ஸ்பீசிஸ் கான்செப்ட் -Biological Species Concept என்பதனை அறிமுகப்படுத்தினார்

1947 இல் எல்லார் ஹெல்ரிச் என்பவர் உயிர் வெப்ப குறிக்காட்டியினை-Bio Temperature Index பயன்படுத்தி உலகப் பிரதேசங்களை 17 வகையாக வகைப்படுத்தினார்.

Fauna, Flora, Wallace line, Endemic species, Topography, Species, Systematics, Historical biogeography, Biogeography

1966 இல் ஸ்மித்(Smith) என்பவர் சூழல் தொகுதியில் காணப்படும் பிரதான அம்சங்களை ஆராய்ந்து வெளியிட்டார்.

1973 இல் ஆலன் பேக்(Ellenberg) சூழல் தொகுதியை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி வெளியிட்டார்

19 ஆம் நூற்றாண்டில் சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் உயிரின புவியியலின் விருத்திக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் இக்காலப் பகுதியில் உயிர் சூழல் விஞ்ஞானம் (Science Of Ecology) என்ற எண்ணக்கரு உருவாக்கம் பெற்றது.

1948 இல் உயிர் பல்வகைமை(Biodiversity) என்ற எண்ணக் கருவினை லியோ போல்(Aldo Leopold) என்பவர் அறிமுகப்படுத்தினார்.

1959 இல் அமெரிக்க தாவரவியலாளரான ராபர்ட் ஹார்டிங் விட்டேக்கர் (Robert Harding Whittaker) உயிரின ராஜ்யத்தை ஐந்தாக பாகுபடுத்தி வெளியிட்டார்.

ரசல்ஸ் கார்ஸ்ன்(Rachal Carson) என்பவர் 1962ல் மௌன வசந்தம்(Silent Spring) என்ற கட்டுரையில் அதிகரித்து வரும் கிருமி நாசினி மற்றும் ரசாயன பாவனை என்பவற்றினால் உயிரினங்கள் எதிர்கொள்ளும் பாதிப்பினை வெளிக்கொண்டு வந்தார்.

உயிரின புவியியலின் விருத்திக்கு 1967இல் மேக் ஆர்தர் மற்றும் E.O.வில்சன் (Mac Arthur and E.O.wilson) என்போரினால் முன்வைக்கப்பட்ட தீவு உயிரினப் புவியியல் கோட்பாடு-Theory of Island Biogeography பாரிய உந்து சக்தியாக அமைந்தது. 

அதிகரித்து வரும் மானிட நடவடிக்கைகள் காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரினங்களின் வாழ்விட அழிவு ஏற்படுகின்றன என்பதனையும் உயிரினங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அச்சுறுத்தல்கள் என்பனவற்றினை கோட்பாட்டு ரீதியாக இவர்கள் முன் வைத்தனர்.

1976 இல் வான்வலேன்-Vanvalen என்பவரினால் Ecological Species என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது.

1978-ல் The Evolutionary Species Concept என்ற எண்ணக்கரு பீட்டர்சன்(Peterson) என்பவரினால் முன்வைக்கப்பட்டது.

1988 நார்மல் மேயரினால்(Norman Mayer) உயிரின செறிவு மிக்க பிரதேசங்கள் தொடர்பான முன்வைப்புக்கள் எழுச்சி அடைந்தவுடன் உயிரின பாதுகாப்புக்கான நடவடிக்கைகளும் விரிவடைந்தன

உலகளாவிய ரீதியில் 1992 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட புவி உச்சி மாநாடு உயிர்பல்வகைமை எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக பாரிய அளவில் விவாத கேள்விகளை எழுப்பினர்.

இவ்வாறு விருத்தியடைந்த கற்கை நெறியானது இன்று புவியியல் துறையில் தனிதொரு கற்கை நெறியாக அடையாளப்படுத்தப்படுவதுடன் உலகில் உள்ள பிரபல்யமான அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தனித்த துறையாக விளங்குகின்றது. இன்றும் இக்கற்கை நெறியில் பல்வேறு வகையான திருப்பங்களும் புதிய வருகைகளும் ஆராய்ச்சிகளும் இடம்பெற்ற வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது


உயிரினப் புவியியலின் உள்ளடக்கம்-Content of Biogeography


Fauna, Flora, Wallace line, Endemic species, Topography, Species, Systematics, Historical biogeography, Biogeography

உயிரினப் புவியலானது புவியில் தோற்றம் பெற்ற உயிரினங்கள் எங்கே,எப்போது(Where and when) தோற்றம் பெற்றன, அவற்றின் உயிரியல் மற்றும் பரிணாம வளர்ச்சி எவ்வாறு புவியின் பரப்பியல்,இடம்,கால அளவுகளுடன் தொடர்பு படுகின்றன என்பனவற்றினை விஞ்ஞான ரீதியான பண்புகளுடன் புவியியலையும் உயிரியலையும் இணைத்து ஆராய்கின்றது.

உயிரினப் புவியியலில் உயிரினங்களின் தோற்றப்பாட்டினை ஆராய்வதற்காக சூழலியல் திதி(Ecological Niche),சூழலியல் சந்தானம்(Ecological Succession) என்பனவற்றை உள்ளடக்கி உலக உயிரினம்,காட்டு உயிரின கூட்டம், புல் உயிரின கூட்டம், கரையோர உயிரின கூட்டம் என பல்வேறா அளவு திட்ட அடிப்படையில் நோக்குகின்றது.

து தாவரங்கள் மற்றும் விலங்குகள் அவற்றின் வாழ்விடங்கள் அவற்றுக்கு இடையேயுள்ள தொடர்புகள் போன்றவற்றினை ஆராய்வதற்கு முற்படுகிறது.

உயிரினப் புவியியலானது உயிர் பல்லினத்தன்மையினை பிரதான எண்ணக்கருவாகக் கொண்டு பயணிக்கின்றது. பிறப்புரிமையில் பல்வகைமை, உயிரின பல்வகைமை ,சூழல் தொகுதி பல்வகைமை என்பனவற்றினை இது வரையறுத்து பயணிக்கின்றது. 

இங்கு இயற்கை மற்றும் மானிட காரணிகளினால் உயிரினங்களுக்கு இடரீதியாகவும் காலரீதியாகவும் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும் அவதானிக்கின்றது.

உயிரின புவியியலானது அதன் உள்ளடக்கத்தினை தெளிவாகவும் முறையாகவும் வெளிப்படுத்துவதற்காக பல்வேறு வகையான கோட்பாடுகளையும் எண்ணக்கருக்கலையும் உள்ளடக்கியுள்ளது அவற்றினை முறையாக கற்பதன் மூலமாக உயிரின புவியியலின் முழுமையான உள்ளடக்கங்களை எம்மால் தெளிவாக அறிந்துக்கொள்ள முடியும்.

  • தீவு உயிரினப்  புவியியல் கோட்பாடு
  • உள்நிலை காப்பு எண்ணக்கரு
  • வெளிநிலை காப்பு எண்ணக்கரு போன்றவற்றை எடுத்துக்காட்டாக கூற முடியும்.

மேற்கொண்டு பிரதான அம்சங்களை தன்னுடைய ஆய்வு பரப்பில் உள்ளடக்கி உயிரின புவியியல் பயணிக்கின்றது எனினும் காலம் மாற்றத்திற்கு ஏற்ப நிகழும் புத்தகங்களையும் உயிரின புவியியல் உள்வாங்கிக் கொள்கின்றமையினையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.


உயிரனப் புவியியலின் நோக்கங்கள்-Objectives of Biogeography

  • உயிரனப் புவியலானது உலகில் உயிரினங்களின் தோற்றம் அவற்றின் பரிணாமம் உலக நிலப்பரப்புகளிடையே அவற்றின் பரவல் மற்றும் பரம்பல் என்பனவற்றை இடம்,காலம்,வெளி ஆகிய அம்சங்களின் ஊடாக ஆராய்வதனை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
  • இது உலகில் தோற்றம் பெற்ற உயிரின இடைத்தொடர்பினை ஆராய்வதற்குட்பட்டதன் விளைவாக அதனுடைய நோக்கங்கள் வெளியாகின்றது. அந்த வகையில் பிரதானமாக உலகின் விலங்கின தாவர  மற்றும் நுண்ணங்கிகளுக்கிடையிலான தொடர்புகளை ஆராய்வது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.
  • உயிருள்ள மற்றும் உயிரற்ற சூழலுக்கு இடையிலான தொடர்புகளை ஆராய்தல்.
  • உயிரினங்களை வகைப்படுத்தி அவற்றின் அனைத்து அம்சங்களையும் புவியியலுடன் தொடர்புபடுத்தி இடம்,காலம்,வெளி ,தரைத்தோற்றம் மற்றும் காலநிலை போன்ற பண்புகளுடன் இது ஆராய முற்படுகின்றது.
  • உயிரினங்களின் தோற்றம்,அவை எதிர்நோக்கும் சவால்கள்,அவற்றுக்கான முகாமைத்துவ நடவடிக்கைகளை முன் வைப்பதில் உயிரின புவியியல் முதன்மையானதாக விளங்குகின்றது.
  • உலகில் தோற்றம் பெற்ற உயிரினங்களை ஆய்வுக்கூட்படுத்தி அதன் பரிணாம வளர்ச்சி அவை சூழலியல் அம்சங்களினால் எதிர்கொள்ளும் சவால்கள் அவற்றுக்கான தீர்வுகளை இது முன்வைக்கின்றது.
  • உலகின் நாடுகள்,கண்டங்கள்,சமுத்திரங்கள் மற்றும் விண்வெளி என அனைத்து பகுதிகளிலும் உள்ள உயிரினங்களை ஒருமைப்படுத்தி அவற்றினுடைய வளர்ச்சி பரிணாமம் என்பனவற்றின் முக்கியத்துவத்தை ஆராய்கிறது.
  • உயிரினங்களின் உள்ளார்ந்த சக்தியினையும் அதன் மூலமாக சமூக,கலாச்சார,அரசியல்,பொருளாதார,அழகியல் மற்றும் மருத்துவப் பெருமதிகளையும் இது மதிப்பீடு செய்கிறது.
  • உலகில் உள்ள உயிரினங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் அதனை பாதுகாப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்குமான வழிவகைகளையும் இது ஆராய்கின்றது.


முடிவுரை

புவியியல் கற்கை துறையில் உயிரினப் புவியியல் பிரதான ஒரு துறையாக இன்று விருத்தி அடைந்துள்ளது. புவியின் உயிரின இணைப்புகளுக்கு இடையில் ஏற்படும் அனைத்து விதமான தொடர்புகளையும் உயிரினப் புவியியல் ஆராய்கின்றது.

புவியில் மனிதன் மாத்திரமன்றி ஏனைய விலங்குகளுக்கும்,தாவரங்களுக்கும், நுண்ணங்கிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உயிரின புவியியல் தன்னை முன் நிறுத்தி பயணிக்கின்றது. 

ஆகவே அதன் கோட்பாடுகளையும்,தாற்பரியங்களையும் மற்றும் நோக்கங்களையும் முறையாக விளங்கிக் கொள்வதின் வாயிலாக புவியின் சமநிலை தன்மைக்கும் ஏனைய உயிரினங்களின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வதற்கு இது வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எதிர்வரும் பதிவுகளில் உயிரின புவியியலில் காணப்படும் கோட்பாடுகளையும் விண்ணக்கருக்களையும் நாம் ஆராய்வோம்

 Post by: Puvistudy



Post a Comment

புதியது பழையவை