Usage of ArcGIS in Geography


அறிமுகம்-புவியியலில் ArcGIS மென்பொருளின் பயன்பாடு- Usage of ArcGIS in Geography

புவியியல் கற்கையானது (Study of Geography) காலத்திற்கு காலம் பல நவீன தொழில்நுட்ப கருவிகளின் (New Technical Tools) துணைக்கொண்டு தன்னை புதுப்பித்துக் கொள்வதுடன் (Updates)  பல புதிய பரிமாணங்களை (Revaluation) நோக்கியும் பயணிக்கின்றது.

அந்த வகையில் புவியியலின் மிகப் பிரதான மற்றும் அடிப்படை அம்சமும் அதிக முக்கியத்துவமுடையதுமான  வரைப்படங்கள்(Mapping Technology) இன்று பாரிய அபிவிருத்தியினை உள்ளடக்கி நவீன பாதையில் பயணிக்கின்றன.

எடுத்துக்காட்டாக ஆரம்ப காலங்களில் களிமண்(Clay) மூலம் வரையப்பட்ட வரைபடங்கள் (Map) பின்பு ஒளியின் துணைக்கொண்டும்(Light) எறியங்களின் (Projection) மூலமாகவும் வரையப்பட்டன.

இவ்வாறு வளர்சியடைந்த வரைப்படங்கள் இன்று செய்மதி(Set light) மற்றும்  நவீன மென்பொருட்களின்(Software) உதவியினால் கணனியின்(Computers)  துணைக்கொண்டு  வரையப்படுகின்றன. இத்தகைய வரைப்படவாக்கம்  புவியியலின் வளர்ச்சிக்கும் வரைபடங்களின் விருத்தியலும்  பாரிய  புரட்சியினை தோற்றுவித்துள்ளன. 

அவ்வாறே இன்று வரைப்படங்களை(Mapping)  வரைவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் (Display) அதனை பகுப்பாய்வு செய்வதற்கும் அதிகமாக பயன்படுத்தப்படும் முதன்மையான மென்பொருளாக ArcGIS-ArcMap   அடையாளப்படுத்தப்படுகின்றது.

அக்காரணத்தினால் புவியியல் துறையினையின் வரைப்படவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும்  ArcGIS-ArcMap இன் அறிமுகத்தினையும் அதன் உள்ளடக்கம் மற்றும் உபயோகத்தினையும் அறிந்துக்கொள்வது கட்டாயமாகும் அந்த வகையில் இப்பதிவு அதனை ஆராயவுள்ளது.


ArcGIS  இன் தோற்றம் - Origins of ArcGIS

Usage of ArcGIS in Geography

1969 ஆம் ஆண்டு  கலிபோர்னியாவை (California - A Western U.S. State) தலைமையிடமாகக் கொண்ட "Esri" என்று அழைக்கப்படும் "Environmental Systems Research Institute" வரைபடங்களை கணணியின் துணைக்கொண்டு வரைவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளே(Software) ArcGIS  ஆகும்

ArcGIS ஆனது ArcGIS டெக்ஸ்ட்டாப்பில் ( ArcGIS Desktop) பயன்படுத்தப்படும் மைய பயன்பாட்டு கருவிகளில் ஒன்றாகும் (In Central Application Tools).

ArcGIS மென்பொருளானது எமது புவியியல் ஆய்வுப் பகுதிகளுக்கான Geographical Information System  இன் தரவு தொகுதிகளை(Data) பயனர்களுக்கு(Users) வழங்கும். அத்துடன் தரவுகளை ஆராய்வதற்கும்(Explore the data), ஒழுங்கமைப்பதற்கும் அதனை காட்சிபடுத்தவும்(Organize and display) பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் சாதனம் இதுவாகும்.

வரைபடங்களை உருவாக்குவதற்கும் தரவு தொகுப்புகளை உருவாக்குவதற்கும் மற்றும் திருத்துவதற்கும்(creating and editing data sets) இது இன்று அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது

 

ArcGIS மென்பொருளில்  வழங்கப்படும் பிரதான சேவைகள்-Main services provided in ArcGIS software

  • ArcGIS Notebook Server
  • ArcGIS Enterprise
  •  Esri Redistricting
  • ArcGIS Data Reviewer
  • ArcGIS Data Reviewer
  • ArcGIS for Maritime
  • Drone2Map para
  • ArcGIS Workforce
  • ArcGIS Tracker for
  • ArcGIS Navigator for
  • ArcGIS Quick Capture
  • ArcGIS Quick Capture
  • ArcGIS Experience Builder
  • ArcGIS Excalibur
  • ArcGIS Hub
  • ArcGIS Living Atlas of the World 
  • ArcGIS Story Maps
  • ArcMap
  • ArcGIS Earth
  • Arc Globe

இத்தகைய மென்பொருட்கள் புவியியலில் இடம் சார்ந்த தகவல்களை  ஒரு வரைபடத்தில் உள்ளடக்குவதற்கும் (Organized to include Spatial Information  in  a  Map) அதனை தொகுப்பதற்கும் குறியீடுகளை உள்ளடக்கி (Symbol)  வரைப்படமாக்கத்திற்கும் அது தொடர்பான விளக்கத்தை  வழங்குவதற்கும்(Provide  related  Information)  பகுப்பாய்வுகளை  மேற்கொள்வதற்கும்(Perform  Analysis.) ஒழுங்கமைக்கப்பட்டுள்ள  சட்டகங்களைக் கொண்டுள்ள தரவு தொகுப்பு(Data set) அமைப்பாகும்.

இம் மென்பொருட்கள்  பரந்தளவிலான செயற்பாடுகளை புவியியல் ஆய்வாளர்களுக்கும் மற்றும் வரைபட கலைஞர்களுக்கும்(Geographers and Cartographers) வழங்குகின்றது.மேலும் புவியியற்துறையினை  தாண்டியும் இவற்றின் பயன்பாடுகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக,

  • இயற்கை விஞ்ஞானம் (Natural Science)
  • வைத்தியம் (Medicine)
  • நில அளவை (Surveying)
  • தாவரவியல் (Botany)
  • கட்டிட நிர்மாணம் (Architecture)
  • வணிகம் (Commerce)
  • விவசாயம் (Agriculture)
  • திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி(Planning and Development) 

என அனைத்து துறைகளிலும் ArcGIS தவிர்க்க முடியாத பயன்பாட்டை கொண்டுள்ளது.



Usage of ArcGIS in Geography


ArcGIS மென்பொருலின் பயன்பாடுகள்-Usage of ArcGIS software

  • ArcGIS  மென்பொருலின் மூலமாக கைகளால் வரையப்பட்ட வரைபடங்கள்(Hand-drawn maps), விவரணப்படங்கள்(Illustrations), புகைப்படங்கள்(Photographs) மற்றும் Scan Photo என்பனவற்றை Digital வரைபடங்களாக மாற்ற முடியும்.
  • Data தொகுப்புக்களை உருவாக்கவும் அதனை வரைப்படத்தின் உதவியுடன் வெளிக்கொணரவும்(Out put) தரவுகளை பகுப்பாய்வு(Analyze the data) செய்யவும் முடியும்.
  • தாம் உருவாக்கிய வரைபடங்களில் காலத்திற்கு காலம் புதிய திருத்தங்களையும்(Correction) மேற்கொள்வதற்கும் புதிய உள்ளீடுகளை(New Update) புகுத்தவும் இம்மென்பொருள் பயன்படுகின்றது.
  • வரைபடங்களை காட்சிப்படுத்துவதுடன்(Visualizing) அவற்றினை படப்பிரதிகளாக வெளி கொணர்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
  • அதிக தரவுகளை துல்லிய தெளிவுடனும்(High Resolution)  இலகுவாக பயன்படுத்தக்கூடிய வரைபடங்களாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
  • GIS பயனர்கள் பயன்படுத்தும் தரவு தொகுதிகளை லேயர்களின்(Layers) அடிப்படையில் உருவாக்கவும். வரைபட ஆவணத்தில்  புதிய உள்ளீடுகளை(Inputs) உட்புகுத்தவும் சாதக தன்மைகளை மிக இலகுவாக வழங்குகின்றது.
  • Online தரவு தொகுதிகளில் சேமிப்பதற்கும்(Store) விரும்பிய நேரங்களில் மற்றும் விரும்பிய இடங்களிலிருந்து அதனை பயன்படுத்தவும்  அனுமதிக்கின்றது.
  • புவியியல் தரவுகளை தானியங்கப்படுத்தவும்(Automate Geographic data) அவற்றினை பகுப்பாய்வு(Analyze) செய்யவும் , புவிசெயலாக்கத்தை துரிதப்படுத்தவும்(Accelerate Geoprocessing)  இம் மென்பொருளில் பலதரப்பட்ட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
  • கடினமான வேலைகளை தானியங்கி (Automatic) ரீதியில் மிகவும் இலகுவாகவும் துரிதமாகவும்(Easy and fast) மேற்கொள்ள முடியும்.
  • ஜியோப்ராசசிங் (Geoprocessing) மூலமாகவும் ஆட்டோமேட்டிக் அமைப்பின் மூலமாகவும் பலதரப்பட்ட விடயங்களை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியும்.



Usage of ArcGIS in Geography


  • புவி செயலாக்க மாதிரிகளை (Geoprocessing Models) உருவாக்கவும், வரைப்பட தொகுப்பில்  புதிய இணைப்புகளை உருவாக்கவும், மீள் திருத்தம் செய்யவும் முடியும்.
  • ArcGIS மூலம் ஆவணங்களை ஒழுங்கமைக்கவும் அவற்றினை நிர்வகிப்பதற்கும் முடியும்.
  • தரவு தொகுப்புகள்,ஜியோ டேட்டா பேஸ்கள்(Datasets and Geodatabases), வரைபடங்கள் , ஆவணங்கள்(Drawings and documents) மற்றும் கோப்புகள் என்பனவற்றை இலகுவாக உருவாக்கவும் தகவல் தொகுப்புகளை ஒழுங்கமைத்து பட்டியலிடவும்(Organize and catalog data sets) விரும்பிய நேரத்தில் அவற்றினை தரவிறக்கம்(Download) செய்துக்கொள்ளவும் முடியும்.
  • தாம் உருவாக்கிய தரவுகள் அடங்கிய வரைபடங்களை(Graphs containing data) இணையத்தின் மூலமாகவோ அல்லது வரைபடப் பிரதிகள் மூலமாகவோ ஆன்லைன் படங்களாகவும் எளிய முறையில்  பயனர்கள் பயன்படுத்துவதற்கு (Users to Use) துணைப் புரிகின்றது.
  • உருவாக்கிய வரைபடங்கள்,அதன் அடுக்குகள்(Layers) பொதுச் செயலாக்க மாதிரிகள் மற்றும் டேட்டா பேஸ்கள்(Common processing models and databases) என்பனவற்றை பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் இணையத்தில் காட்சிப்படுத்தவும் இவற்றில் உள்ள கருவிகள் உதவுகின்றன. 
  • வரைப்பட கோப்புக்களை ஏனைய பயனர்கள் (Users) பயன்படுத்திக் கொள்வதற்கும் அதில் மாற்றங்களை(Changes) மேற்கொள்வதற்கும் இது பல அம்சங்களை கொண்டுள்ளது.

  • ஒரு பயனர் தாம் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இம்மென்பொருளின் இடைமுகத்தினை(The interface of this software) மாற்றியமைப்பதற்கும்,
  •  ArcGIS இல் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் ,
  • அதன் செயற்பாட்டை துரிதப்படுத்தவும்,
  • வேகத்தை அதிகரிப்பதற்கும்(Process and increase the speed) , 
  • துணை மென்பொருட்களை நிறுவுவதற்கும்(install additional software) ,
  • திறனை விருத்தி செய்வதற்கும்,
  • தானியக்க முறையில் செயற்படுத்துவதற்கும்(Automatic processing) 

இதில் பல அம்சங்கள் உள்ளன.

பயணர்களின் தேர்வுகளை எளிதாக்குவதில் இது முக்கியம் பெறுகின்றது.


Usage of ArcGIS in Geography


ArcGIS software இன் குறைப்பாடுகள்-Disadvantages of ArcGIS software

  • ArcGIS மென்பொருளினையும் அதன் தரவுகளையும் எம்மால்,இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியாமை (Cannot be used for free) இதன் பிரதான குறைப்பாடாகவுள்ளது.
  • இம்மென்பொருள் வணிக ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதுடன் அதனை கொள்வனவு செய்துக்கொள்ள பெருந்தொகை பணத்தினை செலவிட வேண்டியுள்ளது இது சாதாரண பயனர்களால் முடியாது.
  • ஆர்க்.ஜி.எஸ் தொடர்பான கற்க நெறிகளுக்கான வளங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
  • இக்கற்கை நெறிக்கான கட்டணத்தொகை அதிகமாக உள்ளமை.

இதை மாத்திரம் தவிர்த்து நோக்கின் இம்மென்பொருள் மூலமாக எமது தேவைகளை மிகவும் எளிதாக பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளமையினை எம்மால் மறுக்கமுடியாது.

முடிவுரை

மேலே நாம் நோக்கிய வகையில் ArcGIS மென்பொருளின் பயன்பாடுகள் அமைந்துள்ளன இவற்றினை நாம் முறையாக பின்பற்றும் போது இவற்றிலி ருந்து அதிகப்படியான நன்மைகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்ந்து வரும் பதிவுகளில் இம்மென்பொருளின் ஊடாக எவ்வாறான அம்சங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதனை அவதானிக்க உள்ளோம்.

Post by: Puvitips



ArcMap மென்பொருளின் பயனர் இடைமுகம்- User interface of ArcMap Software

வரைப்படத்திற்கு முறையான Projection எவ்வாறு வழங்குவது- How to define projection in ArcGIS: Coordinate system essential

ஸ்கேன் மற்றும் JPG வரைப்படத்திற்கு எவ்வாறு Georeference வழங்குவது. - How to Georeferencing a Scanned  and JPG Image Maps in ArcMap

Google Earth படங்களுக்கு எவ்வாறு Georeference வழங்குவது? - How To Georeference A Google Earth Image In ArcMap

கோர்டிநேட் தெரியாத  வரைப்படத்திற்கு Georeference  வழங்குதல்- How to Georeference a Australian map without Coordinates

ஆக்மெப்பில் எவ்வாறு Shapefile உருவாக்குவது- How to Create Shapefile in ArcMap

Google ஏர்திலிருந்து எமக்கான வரைப்படத்தினை உருவாக்குதல்- Creating Study area Map From Google Earth

ArcMap  இன்பண்புக்கூற்று அட்டவணையை Excel Sheet க்கு Export செய்தல் - How to Export attribute table from ArcMap to Excel sheet

ArcMap இல் Google Earth  படத்தினை எவ்வாறு Digitize செய்தல்- How to Digitize Google Earth Map in ArcGIS.





Post a Comment

புதியது பழையவை