Creating Study area Map From Google Earth google search:Australia-Lyneham wetland


அறிமுகம்:Creating Study area Map from google earth -Australia-Lyneham wetland

ArcMap இல் எமக்குத் தேவையான ஆய்வு பிரதேசத்தினை (Research area) அல்லது இருப்பிடத்தை(Study area) வரைப்படமாக அமைத்துக் கொள்வதற்கு அதிகளவு பயன்படுத்துவது Google earth மென்பொருளே ஆகும்.


நாம் உலகில் உள்ள எந்த ஒரு இடத்தினதும் அமைவிடத்தினையும் (Location) எமது தேவை கருதி Google earth அல்லது Google earth Pro மூலமாக இலவசமாகவும் அதிக துல்லியத்துடனும்(High Resolution) தேர்வு செய்துக்கொள்ள முடியும்.

அத்தன்மையில் இப்பதிவில் Google earth இல் உள்ள ஒரு பிரதேசத்தினை எமது தேவைக்கருதி எவ்வாறு Shapefile ஆக உருவாக்கிக்காள்வது என்பது தொடர்பாகவும் அதனை எவ்வாறு எமது தேவைக்கேற்ப ArcMap மூலமாக வரைபடமாக்கி கொள்வது என்பதும் தொடர்பாக இப்பதிவில் ஆராயவுள்ளோம்.

 

Google earth/Google earth Pro திறந்துக்கொள்ளுதல்-Opening Google Earth/Google Earth Pro

முதலாவதாக எமது கணணியில் இணைய வசதியுடன்(With internet facility) Google earth அல்லது Google earth Pro வினை Open செய்துக்கொள்ள வேண்டும்.


open-google earth google search:Australia-Lyneham wetland

Study area-Research area தேர்வு செய்தல்- Choosing A Study Area / Research Area

நாம் தேர்வு செய்யக்கூடிய பகுதியை கூகுள் மேப்பில் நேரடியாகவோ அல்லது Search என்ற பகுதியினூடாகவோ தேர்வு செய்து கொள்ள முடியும்.

நான் இன்று ஆஸ்திரேலியாவின் காண்போரோ நகரத்தில் அமைந்துள்ள Canberra Australia-Lyneham wetland என்ற ஈரநிலத்தினை வரைப்படமாக்கத்திற்கு தேர்வு செய்துள்ளேன்.

 

google search:Australia-Lyneham wetland
Canberra Australia-Lyneham wetland

Google earth Pro இல் எமது  Study area ஐ வரைதல்- Drawing our study area in Google Earth Pro

நாம் இயலவே கற்றது போல் என்னுடைய கூகுள் ஏர்த் மேப்பில் Temporary Places கீழ் எனது வரைப்படத்திற்கான Folder உருவாக்கிக் கொள்ள வேண்டும் இங்கு நான் Name என்பதில் Study Area என பெயரிட்டுக் கொள்கிறேன்.

நான் Australia-Lyneham wetland என்ற ஈரநிலத்தினை தேர்வு செய்து வைத்துள்ளேன்.

ஈரநிலம் என்னும் போது அது முழுமையாக சூழப்பட்ட தொகுதியாகும்.நான் இங்கு முழுமையாக மூடப்பட்ட ஓர் தொகுதியினை வரையவுள்ளதனால் Add Polygon என்பதனை தேர்வு செய்துக்கொண்டுள்ளேன்.

 

Lyneham Wetland - Canberra & Southern Tablelands, Australasian Swamphen, Australian White Ibis, Lyneham Wetland, part of the Sullivans Creek catchment, manages stormwater, enhances water quality, supports birdlife, and mitigates flooding risks in the area.
Lyneham Wetland - Canberra & Southern Tablelands

பின்னர் தோன்றும் Google Earth-New Polygon இல் Name என்பதில் நாம் இந்த வரைபடத்திற்கான பெயரினை வழங்க வேண்டும்.

இங்கு Name: Lyneham wetland என பெயரிட்டுக்கொள்கிறேன் அத்துடன் Style, Color என்பதில் Lines காண நிறத்தினையும் நமது தேவைக்கேற்ப தேர்வு செய்தல் வேண்டும்.

 

Lyneham Wetland - Canberra & Southern Tablelands, Australasian Swamphen, Australian White Ibis, Lyneham Wetland, part of the Sullivans Creek catchment, manages stormwater, enhances water quality, supports birdlife, and mitigates flooding risks in the area.
New Polygon - Window

தேர்வு செய்த பின்னர் எமது மவுஸ் கேசர்(Mouse cursor) மாற்றமடைவதனை அவதானிக்க முடியும். இங்கு நாம் தெரிவு செய்த பகுதி ஒரு ஈர நிலமாகையால் - Polygon என்ற அமைப்பை தெரிவு செய்துள்ளேன் அதுவே என்னுடைய மவுஸ் கேசரில் காட்சிப்படுத்தப்படுகிறது.


Polygon மூலமாக Australia-Lyneham wetland வரைதல்- Drawing Australia-Lyneham wetland using polygon

பின்னர் எனது Google Earth pro இல் எமது வரைபட பிரதேசத்தினை தேவையான அளவு பெரிதாக்கிக்கொண்டு-(Zoom in) மவுஸ் கேசரின் ஊடாக எமக்கு தேவையான Australia-Lyneham wetland இன் புறப்பகுதியின் வரைபடத்தினை துல்லியமாக வரைந்துக்கொள்ள வேண்டும்.


Polygon Australia-Lyneham wetland

Drawing Australia-Lyneham wetland using polygon


Lyneham wetland முழுவதும் பொலிகன் மூலமாக வரைவடைந்து முடித்ததன் பின்னர் OK என்பதனை கிளிக் செய்துக்கொள்ள வேண்டும்.


Lyneham Wetland - Canberra & Southern Tablelands, Australasian Swamphen, Australian White Ibis, Lyneham Wetland, part of the Sullivans Creek catchment, manages stormwater, enhances water quality, supports birdlife, and mitigates flooding risks in the area.



இப்பொழுது Google Earth pro மேப்பில் எம்மால் வரையப்பட்ட வரைபடத்தின் பொலிகன்-Polygon (Red Line) அமைப்பு தெளிவாக காட்சிப்படுத்தப்படும்.


Polygon Australia-Lyneham wetland


உங்களுடைய தேவைக்கருதி வரைப்படத்தினை துல்லியமாக (high resolution images) வரைந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

நாம் எம்முடைய வரைப்படத்தில் Opacity என்பதனை கூட்டிக்குறைக்கும் போது Shapefile இன் உள்தோற்றத்தினை தெளிவாக கண்டு கொள்ளலாம்.


Polygon Australia-Lyneham wetland படத்தினை Save செய்தல்

இப்பொழுது Temporary Places இல் Study Area போல்டரில் எமது Lyneham wetland வரைப்படம் காண்பிக்கப்படுகின்றது. இதில் Right Click செய்து Save Place As என்பதனை கிளிக் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் தோன்றும் Save file ஃபார்மட்டில்:

  • File name: Lyneham wetland எனவும்
  • Save as type:Kml (*.kml) என்பதனை கிளிக் செய்து கொண்டு எம்முடைய வரைபடம் எங்கு சேவ் செய்ய வேண்டும் என்பதனை நாம் தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.

 


Save Polygon Australia-Lyneham wetland

இப்பொழுது எமது தயார்படுத்தலில் முதலாவது நிலை முடிவடைந்துள்ளது.


ArcMap இல் Lyneham wetland-Kml படத்தினை இணைத்தல்-Linking the Lyneham wetland-Kml image to ArcMap

எமது ஆர்க் மென்பொருளை திறந்து நாம் சேகரித்த ஆய்வு பிரதேசமான Lyneham wetland-Kml வரைபடத்தினை இணைத்துக் கொள்ள வேண்டும்.


Convert Kml to Layer

எமது Kml வரைப்படத்தினை நேரடியாக இங்கே உள்ளீடு செய்ய முடியாது அதனை Layer-லேயராகவே இங்கு உள்ளீடு செய்ய முடியும்.

அதற்காக, Arc Toolbox சென்று -Conversion Tools என்பதனை கிளிக் செய்து From KML என்பதனை கிளிக் செய்ய வேண்டும் அதன்பின் KML To Layer என்பதனை தேர்வுசெய்ய வேண்டும்.

Convert Kml to Layer
Convert Kml to Layer


பின் தோன்றும் KML To Layer விண்டோவில் இங்கு Input KML File என்பதில் நாம் Google Earth pro இருந்து Download செய்த Lyneham wetland-Kml வரைப்படத்தினை இணைக்க வேண்டும் Output Location இல் எமக்கான போல்டரை தெரிவு செய்துக்காள்ள வேண்டும். Output Data Name (optional) என்பதனை நாம் விரும்பினால் மாற்றிக்கொண்டு OK என்பதனை வழங்க வேண்டும்.

Convert Kml to Layer
Convert Australia-Lyneham wetland Kml to Layer


Export Data- Australia-Lyneham wetland   

அடுத்ததாக எம்முடைய Lyneham wetland-Kml- Layer பைலாக எம்முடைய வேர்க் பிளேஸில் காட்சிபடுத்தப்படும்.

Export Data- Australia-Lyneham wetland,Convert Australia-Lyneham wetland Kml to Layer,Convert Kml to Layer

Export Data- Australia-Lyneham wetland 

இப்பொழுது Table Of Contents உள்ள லேயர் பைல் Polygon என்பதில் Right Click செய்து Dada சென்று Export Data என்பதனை தெரிவு செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் Export Data வரைப்படத்தினை எமக்கு தேவையான இடத்தில் சேவ் செய்துக்கொள்ள வேண்டும்.

இப்போது டேபிளஸ் கன்டென்ஸ் பகுதியில் நாம் உள்ளீடு செய்த KML -லேயர் பைலும் நாம் எக்ஸ்போர்ட் செய்த Aus_Lyneham_wetland வரைப்படமும் காட்சியளிக்கின்றன.


Export Data- Australia-Lyneham wetland


இதில் நாம் முதலாவதாக தெரிவு செய்து KML லேயர் பைலை ரிமூவ் செய்து விட வேண்டும்.

இப்பொழுது நாம் Google Earth pro மூலமாக download செய்யப்பட்ட படம் Shapefile ஆக எமது Work Place இல் தயாராகியுள்ளது.


Study area Map படத்திற்கு data frame வழங்குதல்-Providing a data frame for the Study Area Map image

இப்படத்திற்கு தேவையான மேலதிக விடயங்களை நாம் விரும்பின் செயற்படுத்திக் கொள்ளலாம் எடுத்துக்காட்டாக 

  • Data frame
  • Heading
  • Legend
  • North Arrow
  • Scale Bar என்பனவாகும் அதனை எவ்வாறு செயற்படுத்துவது என எதிர்வரும் பதிவுகளில் அவதானிக்கலாம்.

 

study area Export Data- Australia-Lyneham wetland
Final Output -study area Export Data- Australia-Lyneham wetland

மேலே நாம் அவதானித்த படிமுறைகளை முறையே செயற்படுத்தும் போது Google earth அல்லது Google earth Pro வரைப்படத்திலிருந்து எமக்கு தேவையான மற்றும் விருப்பமான உலகின் எந்த ஒரு பிரதேசத்தினையும் ArcMap மென்பொருள் மூலமாக வரைப்படமாக்கிக் கொள்ள முடியும்.

Post by: Puvitips


Post a Comment

புதியது பழையவை