google earth,Map,Gisgis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate system

அறிமுகம்:Google Earth படங்களுக்கு எவ்வாறு Georeference வழங்குவது? - How To Georeference A Google Earth Image In ArcMap 

இன்று புவியியல் அறிஞர்களும் வரைப்படவாக்க கலைஞர்களும் (Geographers and Cartographers) Google earth இன் ஊடாகவே தங்களுடைய வரைப்படத்திற்கான (Mapping) மூல தரவுகளை பெற்றுக் கொள்கின்றனர்.


கூகுள் ஏர்த்(Google earth) என்பது கூகுள்(Google) நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள Open Source மென்பொருளாகும்.இது உலகில் உள்ள அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது,மேலும் தினமும் புதிய அப்டேட்களையும்(New Updates) நவீன நுட்பங்களையும்(New Technical) உள்ளடக்கியுள்ளமையினால் வரைப்படவாக்கத்தில் இது மாபெரும் பங்காளியாக உள்ளது.

எங்களிடம் புகைப்படமோ(Photos) அல்லது ஸ்கேன் வரைப்படமோ(Scanned Map) இல்லாத சந்தர்பத்தில் உலகில் நாம் விரும்பிய எவ்விடத்தினையும் Google earth ஊடாக வரைபடமாக்கிக் கொள்ள முடியும்.

இதற்கு எமது கணணியில் Google earth அல்லது Google earth Pro ஆகிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்து Install செய்துக்கொள்ள வேண்டும். இது எமக்கு இலவசமாக கிடைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பதிவில் Google earth அல்லது Google earth Pro இல் உள்ள ஓர் பிரதேசத்தினை எவ்வாறு எமது கணினியில் சேகரித்து அதற்கு Georeferencing வழங்குவது என்பது தொடர்பாக ஆராய உள்ளோம்.


Google earth இல் ஓர் இடத்தினை தேர்வு செய்தல்- Selecting a location in Google Earth

Google  earth  அல்லது  Google  earth  Pro  மென்பொருளை  கணணியில்  ஓபன்  செய்து  கொண்டு  நாம்  எந்த  பகுதிக்கு  Georeferencing  வழங்க  வேண்டுமோ  அப்  பகுதியை  Search  இல்  தேர்வு  செய்துக்கொள்ள  வேண்டும்.  இங்கு  உலகின்  எந்த  ஒரு  பகுதியையும்  எம்மால்  Google  earth  மூலமாக  இலகுவாக  அடையாளப்படுத்தி தேர்வு செய்துக்கொள்ள  முடியும்.

நான்  இங்கு  இலங்கையின்  மிகவும்  பிரசித்தி  பெற்ற  இடமாகவும்  புதிதாக  அமைக்கப்பட்டு  வருகின்ற  இடமுமான  கொழும்பு  போர்ட்  சிட்டியினை-(Colombo  port  city)  Georeferenced  செய்வதற்காக  தேர்வு  செய்து  கொண்டுள்ளேன்.  அதை  உங்களால்  இப்படத்தின்  மூலம்  பார்க்க  முடியும்  .

 

Colombo  port  city,gis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate system

Selecting a location in Google Earth-Colombo  port  city


Folder உருவாக்குதல்-Create a Folder

பின்னர்   நாம்   Google   Earth இல்   Place -- Temporary   Place -- Add -- Folder   என்பதில்   கிளிக்   செய்து   எமக்குரிய   போல்டரை   உவருவாக்கிக்   கொள்ள   வேண்டும்.

Place-Temporary Place-Add-Folder,Colombo  port  city,gis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate system

Create a Folder 

 

இங்கு நான் Google earth to Georeference என்ற பெயரில் என்னுடைய Folder ஐ உருவாக்கிக் கொண்டுள்ளேன்.

Google earth to Georeference

Create a Folder Name 

Georeferenced Points களை அடையாளப்படுத்துதல்-Find the  Georeferenced Points in Google Earth

நாம் தெரிவு செய்துள்ள வரைபடத்தில் எமக்குத் தேவையான Georeference Points களை அடையாளப்படுத்த வேண்டும்.

இங்கு நாம் குறைந்தது நான்கு புள்ளிகளையேனும் Georeference க்கு அடையாளப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் எமது வரைப்படம் துல்லியமாக அமையும்.

எம்மால் கொடுக்கப்படும் Georeference Points சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ (Square or Rectangular) இருப்பது சிறப்பாகும்.

இப்போது Google earth இன் Menu Bar இல் உள்ள Add Place Mark என்பதை தெரிவு செய்து எமக்கான Georeference Points களை அடையாளப்படுத்த வேண்டும்.


Georeference Points,Colombo  port  city,gis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate system
Add Place Mark

நாம் Add Place Mark என்பதை கிளிக் பண்ணும் போது எங்களுக்கு New Placemark என்னும் புதிய Window  திறக்கும் இதில் 


Add Place Mark,Georeference Points,Colombo  port  city,gis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate system
New Placemark 

  • Name
  • Latitude
  • Longitude  
  • Description 
  • Style, Color 
மற்றும் ஏனைய பல அம்சங்களும் உள்ளடக்கி காணப்படும். 


படத்திற்கான பெயரினை வழங்குதல்-Providing a name for the image

Name    என்பதில் எமக்கு  விரும்பிய பெயர்,இலக்கம் அல்லது கோர்டினேட்    என்ற அடிப்படையில்  படத்தினை  சேமித்து வைத்துக் கொள்ளலாம்.   

இங்கு என்னுடைய நோக்கம் கருதி என்னால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள    Latitude மற்றும் Longitude  புள்ளியினை  Copy  செய்து அவ்வாறே Name  என்ற    பகுதியில் Paste செய்து கொண்டு பின்பு OK என்பதனை வழங்குகின்றேன்.

இவ்வாறே  எமது  மிகுதி  மூன்று புள்ளிகளையும் தேர்வு செய்து அதற்குரிய    Georeferenced Points களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.


Add Place Mark,Georeference Points,Colombo  port  city,gis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate system
Georeference the Points

இப்பொழுது google earth to georeference  என்ற  போல்டரில் நான் தேர்வு செய்த     நான்கு  புள்ளிகளும்  காட்சிப்படுத்தப்படுவதனை உங்களால் அவதானிக்க    முடியும்.

Add Place Mark,Georeference Points,Colombo  port  city,gis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate system

Georeference the all 04 Points


இங்கு நாம்  எமது  வரைபடத்தினை தேர்வு செய்து அதற்கான நான்கு  Georeference புள்ளிகளையும் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்ற அடிப்படையில் சேமித்துள்ளோம்.


Google Earth படத்தினை Save செய்தல்-Saving a Google Earth image

இனி எம்முடைய வரைப்படமான  Colombo port city    எமது கணினியில் Save செய்ய வேண்டும்.அதற்காக Google earth  இல் Save Image என்ற பகுதி வழங்கப்பட்டுள்ளது.நாம் அதனை Click செய்து எமது படத்தினை Save செய்து கொள்ளலாம்.

இங்கு MapOptions இல் எமக்கு தேவையற்ற பகுதிகளை நீக்கிக்கொள்ள முடியும்.

இங்கு More Options என்ற பகுதியில் இப்படத்திற்கு தேவையான 

  • Elements, 
  • Title and Description,
  • Legend, Scale, 
  • Compass, 
  • HTML Area என எமது தேவை கருதி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Google Earth -Save
Saving a Google Earth image

படத்திற்கான Resolution தேர்வு செய்தல்-Choosing a resolution for the image

Resolution என்ற பகுதியில் எமது படத்தின் துள்ளியத்தினை தேர்வு செய்து      கொள்ளலாம்.நாம் எப்பொழுதும் அதிக்கூடிய  Resolution இல் எமது படத்தை சேவ் செய்துக்கொள்ள வேண்டும்.எனவே நான் Maximum (819 X 4813)  என்பதனை வழங்கி Save செய்துக்கொள்கிறேன்.

Resolution

Choosing a resolution for the image

Resolution என்ற பகுதியில் எமது படத்தின் துள்ளியத்தினை தேர்வு செய்து      கொள்ளலாம்.நாம் எப்பொழுதும் அதிக்கூடிய  Resolution இல் எமது படத்தை சேவ் செய்துக்கொள்ள வேண்டும்.எனவே நான் Maximum (819 X 4813)  என்பதனை வழங்கி Save செய்துக்கொள்கிறேன்.

Save as Resolution
Save-as Image

இங்கு என்னுடைய படத்திற்கான பெயரினை  Colombo port city என கொடுத்து      என்னுடைய போல்டரில் சேவ் செய்து கொள்கிறேன்.

இப்போது Google Earth இல் எமக்கு தேவையான இருப்பிடத்தை தேர்வு செய்து அதற்கான நான்கு புள்ளிகளையும் அடையாளப்படுத்தி அதனை High Resolution அமைப்பில் என்னுடைய Folder இல் சேமித்து வைத்துள்ளேன்.

Google earth இல் Georeferenced  செய்வதற்கான முதலாவது படி இப்போது      நிறைவடைந்துள்ளது.


 ArcMap மென்பொருளினை open செய்தல்-Opening ArcMap software

அடுத்ததாக எமது ArcMap மென்பொருளினை திறந்துக்கொள்ள வேண்டும்.

ArcMap மென்பொருளினை open செய்தல்

ArcMap software

நாம் ArcMap மென்பொருளினை ஓபன் செய்து -பின்பு எங்களுடைய GIS Golder-Connected செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

Folder Connection - Colombo Port City - JPG படத்தினை இணைத்தல்

இங்கு Catalog என்ற பகுதியில்  Folder Connection என்பதில் நான் சேமித்த Colombo Port City -JPG ஃபைலினை தெரிவு செய்துக்கொள்கின்றேன்.

Folder Connection

Folder Connection


இங்கு Colombo port city என்ற Google Earth மெப்பினை Drag and drop செய்வதன்      மூலம்  என்னுடைய  Work Place இல் இணைத்துக்கொண்டுள்ளேன்.


Google Earth -Drag and drop
Work Place In  ArcMap 


இங்கு நாம் Google Earth இல் Coordinate வழங்கிய செய்த Colombo port city படம் காட்சிப்படுத்தப்படுகின்றது இந்த படத்திற்கு நாம் இயலவே செய்த Georeferenced முறையினை இப்பொழுது வழங்க வேண்டியது கட்டாயமாகும்.

Georeference வழங்கும் முறை-A method of providing Georeferenced

Data Frame Properties சென்று அங்கு Coordinate System என்பதில் Geography      Coordinate System என்பதை உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொண்ட  WGS_1984      என்பதை வழங்க வேண்டும்.

Projected Coordinate System என்பதில் Kandawala Sri Lanka Grid என்பதனையும்      தெரிவு செய்து கொள்கிறேன்.

"இதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பான பூரண விளக்கம்      முன்னைய  பதிவில் நாம் அவதானித்துள்ளோம்"

 

Georeference
Kandawala Sri Lanka Grid 

இப்பொழுது Work Place இல் உள்ள Colombo Port City- JPG வரைப்படத்தின்      நான்கு புள்ளிகளுக்குமான Coordinate Points   வழங்க உள்ளோம்.

அதற்காக Menu Bar இல் Georeference Tool என்பதனை கிளிக்      செய்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக எங்களுடைய படத்தினை  Zoom  In  ஊடாக பெரிதாகிக்      கொண்டு நாம் நாம் Georeferenced  வழங்க வேண்டிய முதலாவது      புள்ளியினை  தேர்வுச்செய்து அந்தப்  புள்ளிக்கான Coordinate Points வழங்க      வேண்டும்.

Input DMS of Lon and Lat.
Input DMS of Lon and Lat.

இங்கு குறித்த புள்ளியை தெரிவு செய்து Left  Click இன் தொடர்ச்சியாக Right Click செய்து அதில் தோன்றும் மூன்று தெரிவுகளில் இரண்டாவது தெரிவான Input DMS of Lon and Lat... என்பதனை Click செய்ய வேண்டும்.

பின்னர், தோன்றும் Enter Coordinates DMS என்ற பகுதியில் எமக்கான புள்ளிகளை தெளிவாக வழங்க வேண்டும்.

இங்கு Longitude என்ற பகுதியில்:

  • Degree என்பது 79 ஆகவும்
  • Minute என்பது 49 ஆகவும் 
  • Second என்பது 12. 25 ஆகவும் உள்ளது.

அதுபோலவே Latitude என்ற பகுதியில்: 

  • Degree என்பது 06 ஆகவும்
  • Minute என்பது 57 ஆகவும் 
  • Second என்பது 57. 05 ஆகவும் உள்ளது.


Input DMS of Lon and Lat.
Input DMS of Lon and Lat.

அதனைத்தொடர்ந்து ஏனைய மூன்று புள்ளிகளுக்கும் அதன் அமைவிடத்தினையும் மேற்கூறிய ஒழுங்கமைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இங்கு கடிகாரத் திசை வழியே(Clock wise direction) எம்முடைய Coordinate Points ஐ வழங்க

 வேண்டும்.நாம் Coordinate செய்த  படம்  தலைகீழாகவோ அல்லது  வேறு      புறங்களில் திசை  திருப்பப்பட்டாலோ எமது கோடிநேட்  புள்ளியில்      பிழை  இருப்பதாக  அர்த்தம். ஆகவே அவ்வாறு எம்முடைய வரைபடம்      திசை திரும்பும் சந்தர்ப்பத்தில் எங்களுடைய  கோடினெட் புள்ளியை  சரி      பார்த்து மீளவும் வழங்க வேண்டும்.


Georeference படத்தினை Save செய்தல்-A method of providing Georeference

இப்போது  நாம்  கோர்டிநேட் புள்ளிகள் வழங்கிய JPG பைலினை Save      செய்ய வேண்டிய  தருணம்.

இப்போது Georeferencing -Rectify என்பதனை கிளிக் செய்து நாம் எவ்விடத்தில் இந்த பைலினை Save செய்ய வேண்டும் என்பதனை.Output Location தேர்வு செய்து,எமது படத்திற்கான பெயரையும் வழங்கி Format - TIFF என சேவ் செய்துக்கொள்ள வேண்டும்.

Georeferencing - Rectify
Save-Format - TIFF

இப்போது நாம் Google earth to Georeference கொடுத்த Colombo port city -TIFF பைல் நம்முடைய Folder இல் Save செய்யப்பட்டுள்ளது.

இனி நாம் Save செய்த Colombo port city-TIFF என்பதனை ArcMap இல் Add Data செய்து  உள்ளீடு செய்துக்கொள்ள வேண்டும்.

 

Georeferencing -Colombo port city-TIFF
Save image

இப்போது Table Of  Contents பகுதியில் எமது இரண்டு படத்தினதும் Layers கள்      காட்சியளிக்கிறன.

இனி Google  Earth லிருந்து Download செய்த Colombo  port city -JPG படத்தினை      Remove செய்துவிட்டு நாம் ஜியோ ரெஃபரன்ஸ்  செய்த Colombo port city-TIFF      ஐ மாத்திரம் தெரிவு செய்ய வேண்டும்.

 

Colombo port city-TIFF
Colombo port city-TIFF   


Georeferencing சரி பார்த்தல்-Verify a Georeferenced Map

நாம்வழங்கிய Georeferencing சரியாக உள்ளதா என்பதனை பரீட்சித்து பார்க்க Colombo port city -TIFF லேயரில் Right Click செய்து அங்கே Properties கிளிக் செய்து அதில் Source என்பதில் Spatial Reference- XY Coordinate System-Kandawala Sri Lanka Grid என முறையாக வழங்கப்பட்டிருக்கும் இதன் மூலம் நம்முடைய படத்தின் துல்லிய தன்மையை எம்மால் அறிந்துக்கொள்ள முடியும்.

 

Spatial Reference- XY Coordinate System-Kandawala Sri Lanka Grid

Verify a Georeferenced Map


மேற்குறிப்பிட்ட முறைகளை முறையாகப் பின்பற்றும் சந்தர்ப்பத்தில் Google Earth லிருந்து ஒரு படத்தினை தரவிறக்கம் செய்து அதற்கான Georeferenced வழங்க முடியும்.

இதன் மூலம் எம்முடைய படங்களை எங்களுடைய தேவைகளுக்கு அல்லது வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Post by: Puvitips





Post a Comment

புதியது பழையவை