How to Georeference a Australian map without Coordinates


அறிமுகம்:கோர்டிநேட் தெரியாத ஆஸ்திரேலிய வரைப்படத்திற்கு Georeference  வழங்குதல்- How to Georeference a Australian map without Coordinates


வரைபடவாக்கத்தில் Georeference என்பது மிகவும் அடிப்படையான மற்றும் பிரதானமான அம்சமாகும்.அதன் முக்கியத்துவம் தொடர்பாக நாம் ஏவே எமது முன்னைய பதிவில் அவதானித்துள்ளோம்.


குறிப்பாக ஒரு வரைப்படத்தினை கணனி மயமாக்கம் செய்யும்போது அவ்வரைபடம் புவியில் எப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பதனை அதே துல்லியத்துடன் எம்மிடம் உள்ள வரைபடத்திற்கு உள்வாங்கி பொருந்த செய்யும் நோக்கில் அமைந்துள்ளதே ஜியோரெஃபரன்ஸ் ஆகும்.

இன்றைய பதிவில் ArcMap மென்பொருளில் எம்மிடம் இருக்கும் JPG மற்றும்   Scan படத்தல் X-Y  Coordinate  Points  தெரியாமல் மற்றும் இல்லாமல் இருப்பின் அதற்கு எவ்வாறு   முறையாக Georeference வழங்குவது என்பது தொடர்பாக அவதானிக்க   உள்ளோம்.   


 JPG படத்தினை தேர்வு செய்தல்-Selecting a JPG image

முதலாவதாக நாம் Georeference வழங்க வேண்டிய JPG படத்தினை எங்களுடைய ArcMap இன் Working Folder இல் சேமித்துக்கொள்ள வேண்டும் நான்.

Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .
Australia Topography Map downloaded from Google

 Google இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட Australia Topographic வரைப்படத்தினை இங்கு பயன்படுத்தவுள்ளேன்.


Shapefile தரவிரக்கம் செய்துக்கொள்ளல்-Download the sutiable Shapefile 

இரண்டாவதாக Australia administrative Shapefile லினை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து எனது Folder இல் சேமித்துள்ளேன்.

உலகில் உள்ள எந்த ஒரு இடத்தினதும் Shapefile லினையும் Download செய்துக்கொள்ள diva-gis.org நமக்கு துணைப்புரிகின்றது.

Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .
Australia administrative Shapefile -diva-gis.org

Australia administrative Shapefile மூலமாகதான் இன்று நாம் X and Y கோர்டினேட் சிஸ்டம் பயன்படுத்தாமல் Georeferenced வழங்குவது தொடர்பாக அவதானிக்க உள்ளோம்.

 

Arc Map இல் folder ஐ Connect செய்தல்-Connecting a folder in Arc Map

நாம் இயலவே ArcMap இல் எவ்வாறு எமது Working Folder Connect செய்வது என்று அறிந்துள்ளோம். அதற்கமைய இன்று நான் Australiya georeference என்ற Folder Arc Map இல் Connect செய்துள்ளேன்.


add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .

Connecting a folder in Arc Map



நாம் எம்மிடம் இருக்கும் JPG வரைப்படத்தினை Add Data என்ற பகுதியினூடாகவோ அல்லது Catalog என்ற பகுதியினூடாகவோ தெரிவு செய்துக்கொள்ள முடியும்.


படத்தினை Work Place இல் இணைத்தல்-Attaching the image to the Work Place

நான் முதலாவதாக Australia Topographic-(JPG) என்ற பெயரினை கொண்ட வரைப்படத்தினை drag and drop செய்து என்னுடைய Work Place இல் இணைத்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக நாம் தரவிறக்கிய இரண்டாவது வரைப்படமான Australia administrative Shapefile லினையும் எம்முடைய Arc Map இன் Work Place இல் Drag and dropped செய்து கொள்கின்றோம்.

இப்போது எமது Arc Map மென்பொருளின் வெர்க் பிளேசில் என்னுடைய Australia Topographic மற்றும் Australia administrative Shapefile ஆகிய இரண்டு படங்களும் காட்சியளிக்கின்றன.

 

add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .
Australia Topographic Image and Australia administrative Shapefile 


Georeference வழங்கப்பட்டுள்ளதா என்பதனை அறிதல் - Knowing If A Georeference Has Been Provided

Australia Topographic படத்திற்கு Georeferenced வழங்கப்பட்டுள்ளதா என்பதனை அறிந்துக்கொள்ள Table Of Contents இல் Australia_Topography_Map-sr.svg.png என்பதின் கீழ் ரைட் கிளிக் செய்து அங்கு Properties சென்று Source என்பதனை கவனித்தால்,

Spatial Reference - <Undefined>

check georeferenced point,Spatial Reference-Knowing If A Georeference Has Been Provided,add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .

Spatial Reference-Knowing If A Georeference Has Been Provided


என்று உள்ளது.ஆகவே இப்படத்திற்கு Georeference வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.


ஆஸ்திரேலிய வரைப்படத்திற்கு Georeference  வழங்குதல்- Georeferencing an Australian map

முதலாவதாக Menu Bar இல் Georeferencing tool நாம் செயற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் Table Of Contents இல் Layer பகுதியில் உள்ள Australia administrative Shapefile இன் கீழுள்ள அதன் சதுர பகுதியை கிளிக் செய்வதன் ஊடாக இங்கு சில மாற்றங்களை நாம் செய்து கொள்ள முடியும்.

 

add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .,How to Georeference a Australian map without Coordinates
Symbol Selector


Symbol Selector இது Georeference செய்வதற்கு மிகவும் துணை புரியும் இதில் Fill color என்பதை No Colour எனவும் Outline Width என்பதை 1 எனவும், Outline Color என்பதை சிவப்பாகவும் எனது தேவைக்கேற்ப மாற்றம் செய்து ஓகே செய்து கொள்கிறேன்.

இப்போது நாம் தெரிவு செய்த Shape file இன் Fill Color நீக்கப்பட்டு அதனுடைய சிவப்பு நிற Outline மாத்திரம் காட்சிப்படுத்தப்படும் இப்போது எமக்கு Georeferenced செய்து கொள்வது மிகவும் இலகுவாக அமையும்.

 

கோடிநேட் புள்ளிகளை எவ்வாறு இணைப்பது - How to connect coordinate points

நாம் எம்முடைய JPG படத்திலிருந்து Shape file க்கு கோடிநேட் புள்ளிகளை இணைப்பதன் மூலம் JPG படத்திற்கு Georeference வழங்கவுள்ளோம்.

இப்பொழுது எமது வேர்க் பிலேசில் இருக்கும் இரண்டு படங்களையும் நெருக்கமாக இணைத்துக் கொள்வதற்கு Georeference சென்று Fit To Display என்பதனை தேர்வு செய்து கொள்ளலாம். இதன்போது இரண்டு படத்திற்கும் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் அப்போது Georeference செய்து கொள்வது மேலும் இலகுவாக்கப்படும்.

 

Georeference  Fit To Display,add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .,How to Georeference a Australian map without Coordinates
Fit To Display

இப்போது நாம் தரவிறக்கம் செய்து கொண்ட இரண்டு படங்களையும் ஒப்பிட்டு மிகவும் துல்லியமான முறையில் இரு படங்களையும் Add Control Point மூலமாக இணைக்க வேண்டும்.

இதன்போது வரைப்படங்களின் பௌதீக மற்றும் பண்பாட்டு உறுப்புகளை கூர்மையாக அவதானித்து அதற்கேற்ற வகையில் நாம் Add Control Point இணைக்க வேண்டும்.

இங்கு நான் Australia Topographic JPG வரைப்படத்தினை முதலில் தெரிவு செய்துக்கொண்டு என்னுடைய Add Control Point இணைக்க உள்ளேன் நான் இரு படங்களிலும் துல்லியமான இடங்களை தேர்வு செய்து அதனை இணைக்க முற்படுகின்றேன்.

முதலாவதாக ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் முன்னோக்கி நீண்டிருக்கும் இவ்விரு புள்ளிகளையும் Add Control Point மூலமாக இணைக்கின்றேன்.


Georeference Add Control Point,add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .,How to Georeference a Australian map without Coordinates
Add Control Point JPG to Shape file

அடுத்ததாக இரண்டாவது,மூன்றாவது,நான்காவது புள்ளிகளையும் துல்லியமாக தெரிவு செய்து அதனை Add Control Point மூலமாக இணைக்க வேண்டும்.நாம் இங்கு எத்தனை புள்ளிகளையும் இணைத்துக் கொள்ள முடியும்.

 

Georeference Add Control Point,add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .,How to Georeference a Australian map without Coordinates
Add Control Point JPG to Shape file

இப்பொழுது நான் இணைத்த பொயிண்களும் பார்க்கும்போது இரண்டு படங்களும் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதனை என்னுடைய சிகப்பு நிற அவுட்லைன் மூலமாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .,How to Georeference a Australian map without Coordinates
Add all Control Point 

Georeference  செய்த படத்தினை Save செய்தல் - Save the Georeferenced image

இப்போது நான் Georeference செய்த Australia Topographic JPG படத்தினை சேவ் செய்துக்கொள்ள வேண்டும் இதற்காக நாம் Georeferencing சென்று Rectify என்பதனை Click செய்ய வேண்டும் தோன்றும் Save As ஃபார்மெட்டில் நாம் எங்கே,என்ன பார்மட்டில் சேவ் செய்ய வேண்டும் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.நான் எனது படத்தனை TIFF அமைப்பில் சேமிக்கவுள்ளேன்.

save as a tiff,add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .,How to Georeference a Australian map without Coordinates
Save the Georeferenced image

Georeference செய்த Tiff வரைப்படத்தினை இணைத்தல்-Attaching a Georeferenced Tiff Image

இப்பொழுது நான் முன்னதாக இணைத்துக்கொண்ட Australia Topographic மற்றும் Australia administrative Shapefile இரண்டு படங்களையும் நீக்கிக் கொண்டு,நான் சேவ் செய்த Australia_Topography_new.tif வரைப்படத்தினை எனது ArcMap இல் Add செய்துக்கொள்கின்றேன்.

Australia_Topography_new.tif,add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .,How to Georeference a Australian map without Coordinates
Attaching a Georeferenced Tiff Image


முறையாக Georeferenced வழங்கப்பட்டுள்ளதா என்பதனை அறிதல் -Check if it is properly georeferenced

இப்போது இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள Australia_Topography_new.tif வரைப்படத்திற்கு முறையான வகையில் Georeference செய்யப்பட்டுள்ளதா? என்பதனை அவதானிக்க Australia_Topography_new.tif வரைப்படத்தில் Right Click செய்து Properties சென்று Source-Spatial Reference பார்க்கும்போது அங்கு GCS_WGS_1984 என XY Coordinate System செய்யப்பட்டுள்ளது ஆகவே நாம் செய்த Georeference இங்கே பதிவாகியுள்ளது.


Australia_Topography_new.tif,add files to arcmap,add files to arcmap,Georeference,Australian, without Coordinates, Australia administrative Shapefile, X and Y , Arc Map, Australiya georeference .,How to Georeference a Australian map without Coordinates
Source-Spatial Reference

மேற்குறிப்பிட்ட முறையில்தான் எமக்கு X and Y புள்ளிகள் தெரியாத விடுத்து  Georeferenced  செய்து கொள்ளும் முறையாகும். 


முடிவுரை

புவியியல் மென்பொருட்களில் வரைபடத்தை நாம் கணினியில் உள்ளீடு செய்து அவற்றிலிருந்து தரவுகளையும்தகவல்களையும் மற்றும் பகுப்பாய்வு விளக்கங்களையும் பெற்றுக் கொள்வதற்கு அப்படத்தினை முறையாக Georeferenced செய்ய வேண்டியது அடிப்படை தேவையாகும்.

சில படங்களில் எமக்கான கோடினேட் புள்ளிகள் இலகுவாக கிடைக்கப்பெறும் அவ்வாறு கிடைக்காத சந்தர்ப்பத்தில் ஏலவே ஜியோ ரீஃபிரன்ஸ் செய்த சேஃப் பைல்களில் அல்லது படங்களிலிருந்து எமக்கான கோடினெட் புள்ளிகளை இணைப்பதன் மூலமாக நாம் எம்மிடம் உள்ள எந்த ஒரு படத்தினையும் ஜியோ ரீஃபிரன்ஸ் செய்துக்கொள்ள முடியும்.

அதனையே நாம் இப்பதிவில் அவதானித்தோம் இம்முறைகளை தெளிவாக பின்பற்றுவோமாக இருந்தால் எம்முடைய படங்களுக்கு இலகுவாக ஜியோ பிரெண்ட்ஸ் செய்துக்காள்ள முடியும்.

Post by: Puvistudy



Post a Comment

புதியது பழையவை