
அறிமுகம்:ஸ்கேன் மற்றும் JPG படத்திற்கு எவ்வாறு Georeferenced வழங்குவது. How to Georeferencing a Scanned and JPG Image in ArcMap
ArcMap மென்பொருளில் மிகவும் அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான செயற்பாடுகளில் ஒன்றாக எமது வரைப்படங்களுக்கு வழங்கப்படும் Georeferenced அமைந்துள்ளது.
வரைப்படங்கள்,புகைப்படங்கள்,Scanned Map மற்றும் Shape file என்பனவற்றை Digitalize செய்வதற்கும் அதன் ஆள்கூற்றுகளை உண்மையான பிரதேசங்களுடன் இணைப்பதற்கும் Georeferenced அத்தியாவசியமாக உள்ளது.
எமது வரைபடங்களுக்கு முறையான Projected Coordinate System வழங்கியதற்குப் பின் நாம் Georeference னை மேற்கொள்ள வேண்டும். எவ்வாறு ஒரு படத்திற்கு முறையான கோடி நெட் சிஸ்டம் வழங்குவது என்பது தொடர்பாக முன்னைய பதிவில் நாம் அவதானித்துள்ளோம்.
ஆர்க் மெப் இல் உள்ளீடு-Input செய்யப்படும் படங்களுக்கு Georeferenceing இன்றி அதன் உண்மை தகவல்களை
எம்மால் வெளிக்கொணர முடியாது. ஆகவேதான் நாம் அமைக்கும்
படங்களுக்கும் மற்றும் சேப் பைல்களுக்கும் Georeferenceing வழங்குவது கட்டாயமாக உள்ளது.
ஆகவே இன்று ஆர்க் மெப் இல்(ArcMap) எவ்வாறு ஒரு படத்திற்கு முறையாக Georeference வழங்குவது என்பது தொடர்பாக இப்பதிவில் ஆராயவுள்ளோம்.
எவ்வாறு Connect folder ஐ உருவாக்குவது- How to create a Connect folder
முதலாவதாக நாம் எமது Working Folder ஐ ஆர்க் மெப்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக ஆர்க் மெப் இல் Catalog என்ற
பகுதியில் Connect
folder என்பதை தெரிவு செய்து நாம்
ஜியோ ரெஃபரன்ஸ் செய்ய வேண்டிய Folder ஐ தேர்வு செய்துக்கொள்ள
வேண்டும்.
நான் Georeference என்ற Folder ஐ உருவாக்கி அதனுள் எனது JBG படத்தினை சேமித்து
வைத்துள்ளேன்.
![]() |
create a Connect folder Name as Georeference |
முறையான Coordinate system வழங்குதல்-Providing a proper coordinate system
இங்கு Work Place ல் Right Click -செய்து Data Frame Properties என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
![]() |
| Data Frame Properties |
அங்கு- Coordinate system என்ற ஃபார்மெட்டுக்குள் எமது படத்திற்கு ஏற்ற கோர்டினேட் சிஸ்டத்தினை
வகுத்துக் கொள்ள வேண்டும்.
உலகளாவிய ரீதியில் தெரிவு செய்யும்போது WGS1984 என்பதனை தேர்வு செய்கின்றனர். நான் இங்கு இலங்கைக்கு ஏற்ற கோர்டினேட் சிஸ்டமான Kandawala Sri Lanka Grid-கந்தவெள ஸ்ரீலங்கா கிரிட் என்பதனை தெரிவு செய்து பின்னர் Apply செய்து OK கொடுக்க வேண்டும்.
![]() |
Kandawala Sri Lanka Grid-கந்தவெள ஸ்ரீலங்கா கிரிட் |
இப்போது எமது படத்திற்கு முறையான Coordinde System கொடுக்கப்பட்டுள்ளது.
JBG படத்தினை உள்ளீடு செய்தல்-Input JBG Image
அடுத்ததாக நாம் Arc
Catalog என்ற பகுதியில் முன்னதாகவே Connect செய்துள்ள ஜியோ ரெஃபரன்ஸ் என்ற போல்டரில் நாம் சேகரித்துள்ள
ஜியோ ரெஃபரன்ஸ் வழங்க வேண்டிய JBG படத்தினை உள்ளீடு செய்து
கொள்ள வேண்டும்.
இங்கு எமது படத்தினை Drag
and drop செய்வதன் மூலம் நேரடியாக Work Place இல் எமது படத்தினை இணைத்துக் கொள்ள முடியும்.
![]() |
Input JBG Image in ArcMap |
இப்போது எமது Srilanka -JBG படம்
வோ்க் பிலேசில் காட்சிப்படுத்தப்படுவதனை உங்களால் காண முடியும்.
JBG படத்திற்கான Georeferenced வழங்கும் முறை-Georeferenced for JBG image
இங்கு இலங்கை -JBG படத்திற்கான Georeference
ஐ வழங்க
உள்ளோம்.
இப்படம் இணையத்தில் (Internet) இருந்து
தரவிறக்கம் (Download) செய்யப்பட்ட JBG பார்மெட்டிலான படமாகும்.
Georeference வழங்குவதற்கு முன் எமது
படத்திற்கான Coordinate system points என்ன என்பதனை நாம் அறிந்து
வைத்திருக்க வேண்டும் சில படங்களில் அதற்கான X,Y coordinate அதன் படங்களில்
வழங்கப்பட்டிருக்கும், சிலவற்றின் கோர்டினட் சிஸ்டம் Google Earth அல்லது Google
Search இருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
நாம் பதிவிடும் X and Y coordinates (நெட்டாங்கு -அகலாங்கு) புள்ளியினை மிகவும் சரியானதாகவும் துள்ளியதாகவும் வழங்க வேண்டும். அப்போதுதான் எமது படம் புவியின் உண்மையான பாகத்தில் அமைந்துள்ள பகுதியுடன் ஒத்துப்போகும் இல்லை என்றால் Georeferenced பிழைத்து விடும்.
அவ்வாறு பிழைக்குமெனின் அவற்றிலிருந்து பெறப்படும் பகுப்பாய்வுகளும் அளவு திட்டங்களும் (Analyzes and Quantitative) துல்லியத்தன்மை அற்றதாக காணப்படுவதுடன் விஞ்ஞான ரீதியான முடிவுகளையும் எம்மால் எடுத்துக்கொள்ள முடியாது.
ஆகவே கோர்டினேட் சிஸ்டம் என்பது ஜியோரெபரன்சிங் அமைப்பில் மிக துல்லியமாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டும்.
X-Y Coordinate புள்ளிகளை அடையாளப்படுத்தல்
- X - என்னும் போது நெடுங்கோடுகளையும்
- Y - என்னும் போது அகல கோடுகளையும் குறித்து நிற்கின்றன.
இங்கு எமது படத்தில் X,Y Coordinate சிஸ்டங்கள் நெட்டாங்கு- அகலாங்கு என்ற ரீதியில் அதனுடைய அமைவிட புள்ளிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு X,Y Coordinate புள்ளிகள் காட்சிப்படுத்தா படாவிடிலும் எம்மால் Georeference வழங்க முடியும் அவற்றை எதிர்வரும் பதிவுகளில் நாம் அவதானிப்போம்.
Georeferenced எவ்வாறு வழங்குவது- How to provide Georeferenced
ஒரு படத்தில் என்னற்ற Georeferenced புள்ளிகளை எமக்கு வழங்க முடியும். அதிகளவான புள்ளிகளை வழங்கும் போது படத்தின் துல்லியத்தன்மை சிறப்பாக அமையும்.
இருப்பினும் பொதுவாக 4 புள்ளிகள் (Points) மூலமாக எமது ஜியோ ரெஃபரன்ஸிங்கை நாம் பதிவிடலாம்.
ஜியோ ரெஃபரன்ஸிங்கைபதிவிடும் போது நாம் கடிகார முள்ளின் திசையினூடாகவே (Clock wise) Georeference புள்ளியை குறித்தல் வேண்டும்.
எமது வேர்க் பிலேசில் உள்ள படத்தின் அளவை நாம் பெரிதாகிக் (Zoom In) கொள்வதன்
மூலமாக தெளிவாக புள்ளிகளை அமைத்துக்கொள்ள முடியும். அதற்காக Zoom In Tool பயன்படுத்தி
எமது வரைப்படத்தினை நாம் பெரிதாகிக் கொள்ள முடியும்.
![]() |
Zoom In Tool |
இங்கு எமது படத்திற்கான X- Y coordinate கள்
காணப்படுகின்றன.
X என்னும் போது
நெடுங்கோடுகளையும்
Y என்னும் போது அகல கோடுகளையும் குறித்து நிற்கின்றன.
நாம் X -
Y புள்ளிகள் சந்திக்கும்
இடங்களில் எங்களுடைய Georeference புள்ளிகளை
தேர்வு செய்து கொள்வது சிறப்பாகும்.
Georeferencing Tool ஐ தெரிவு செய்தல்
Georeference செய்வதற்காக Georeferencing Tool ஐ நாம் தேர்வு செய்துக்கொள்ள வேண்டும் எங்களுடைய Menu bar இல் Georeferencing Tool காட்சிப்படுத்தப்படாவிடின் Right Click செய்து ஜியோ Georeferencing Tool ஐ தேர்வு செய்துக்கொள்ள முடியும்.
பின்பு தோன்றும் Georeference
bar ல்- Add control Point என்பதனை தேர்வு
செய்ய வேண்டும்.
பின்பு எமது வரைப்படத்தில் நாம் தேர்வு செய்த X and Y புள்ளியில் Left Click செய்து அதன்
தொடர்ச்சியாக Right Click
செய்து Input X and Y என்பதனை தேர்வு
செய்ய வேண்டும்.
![]() |
Input X and Y |
X and Y Georeference Point ஐ பதிவுசெய்தல்- Registering an X and Y Georeference Point
- நெடுங்கோடு X-79 பாகை எனவும்
- அகலக்கோடு Y- 10 பாகையாகவும் உள்ளன.
![]() |
Registering
an X and Y Georeference Point |
நாம் எமது படத்திற்கான முதலாவது Georeference Point ஐ பதிவிட்டுள்ளோம்.
சிலவேளை எங்களுடைய படம்
Work Place ல் இருந்து மறைந்து இருந்தாலும் அல்லது உருவத்தில் பெரியதாக
இருந்தாலோ நாம் Full
Extent என்பதனை கிளிக் செய்து
மீளவும் எம்முடைய படத்தினை Work Place இல் சரியான
அளவில் வரவழைத்துக்கொள்ள முடியும்.
![]() |
Full Extent |
![]() | |
|
இங்கே நாம் எமது படத்திற்கான நான்கு Georeferenced புள்ளிகளையும் முறையான ஒழுங்கில் வகை குறித்துள்ளோம்.
X and Y கோர்டினேட் சிஸ்டங்களின் Error- Error of X and Y coordinate systems
நாம் குறித்துள்ள X
and Y கோர்டினேட் சிஸ்டங்களின்
துல்லியத்தன்மையை அறிந்துக்கொள்வதற்காக View Link Table என்பதனை அழுத்தி அதன் உள்ளடக்கங்களை பார்த்துக் கொள்ள
முடியும் இதில் Total
RMS Error என்பது எமது பிழைகளை
சுட்டிக்கட்டும்.
![]() |
View Link Table-Total RMS Error |
Georeference செய்த படத்தினை Save செய்தல் - Saving a georeferenced image
நாம் Georeference செய்த வரைப்படத்தினை Save- சேமிப்பதற்காக ஜியோ ரெஃபரன்ஸிங் பார்(Georeferencing) என்பதனை கிளிக் செய்து Rectify என்பதனை தேர்வு செய்ய வேண்டும் .இதுவே ஜியோ ரெஃபரன்ஸியில் எமது படத்தினை save செய்வதற்கான முறையாகும்.
![]() |
Saving a
georeferenced image |
இறுதியாக Save As என்ற பகுதியில் Location என்ற பகுதியில் எந்தப் பகுதியில் எம்முடைய படத்தினை எங்கே Save செய்ய வேண்டும் என்பதனை தீர்மானித்து அதற்கான பெயரினையும் வழங்கி Format என்பதில் Tiff என்பதை தேர்வு செய்து Save செய்ய வேண்டும்.
![]() |
| Save as a Tiff File |
இப்பொழுது நாம் எம்முடைய JPG படத்தை முறையான வகையில் Georeferencing செய்துள்ளோம்.
பின்னர் Tiff படத்தினை Add செய்து எம்முடைய Work Place இணைத்துக் கொள்வதின் மூலமாக அப்படத்தை டிஜிட்டலைஸ் செய்யவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ பயன்படுத்த முடியும்.
முடிவுரை
நாம் ஒரு வரைப்படத்தினை கணினி மயமாக்கம் செய்யும் பொழுது அப்படத்திற்கு முறையான
Georeferencing வழங்குவது கட்டாயமானதாகும். ஒரு படத்தின் புவியியல்
அமைவிடத்தையும் அதன் உண்மை தன்மையினை வரைபடத்தில் கொண்டு வருவதற்கும் Georeferencing அடிப்படையானதாகும்.
அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பதனையே நாம் இப்பதிவில் அவதானித்தோம், ஆகவே மேற்கூறிய படிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் எம்மிடம் உள்ள Scanned and JPG Image Maps மற்றும் ஏனைய வரைபடங்களுக்கும் இலகுவாகவும், திருத்தமாகவும் ஜியோ ரெஃபரன்ஸ் செய்து கொள்ள முடியும்.










.webp)
.webp)
.webp)
.png)
கருத்துரையிடுக