aging populationஇaging populationசனத்தொகை முதுமையடைதல்: பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் | Population Ageing Problems and Solutions

சனத்தொகை முதுமையடைதல்: பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் | Population Ageing Problems and Solutions

இன்று உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்ற சனத்தொகையானது பாரிய சமூக மற்றும் சூழலியல் பிரச்சனைகளை(Social and ecological problems) தோற்றுவித்துள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே.


அதே நேரம் குறித்த சனத்தொகையில், சனத்தொகை முதுமையடைதல் வீதம் (Population aging rate) அதிகரிப்பதனால் அவற்றினை கையாளக்கூடிய திறனிலும் அதனை முறையாக நிர்வகிப்பதிலும்(In capacity and proper management) உலக நாடுகள் அனைத்தும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையினை காணக்கூடியதாகவுள்ளது.

உலக  சனத்தொகையில் (In  the  world  population) சனத்தொகை  முதுமையடைதல் போக்கானது  இன்று  பாரிய  விளைவுகளை  ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் இப்பதிவு சனத்தொகை முதுமை அடைவதினால் ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளையும்(Problems and their solutions) முன்வைப்பதாக அமையவுள்ளது.


சனத்தொகை முதுமையடைதலின் பிரதான பண்புகள் | What are the characteristics of an ageing population?

முதுமையின் பண்புகள் மிகையாக காணப்படுதல்.| Excessive signs of aging.)

முதுமையடைந்த    குடித்தொகையில்    உள்ளடங்கும்  அனைவரும்    முதுமையின்  பண்புகள் (Signs of aging) அனைத்தையும்    தாங்கி நிற்பவர்களாக    உள்ளனர்.

  • பொறுமை (Patience)
  • சகிப்புதன்மை (Endurance)  
  • ஞாபகம் (Memory)
  • உடல்  தளர்ச்சி (Physical fitness) 
  • நேரமுகாமைத்துவம் (Punctuality)    போன்ற  திறன்கள் மிகவும் குறைந்த அளவில் காணப்படும். 
முதுமை மற்றும் வயோதிபம் என்பனவற்றின் காரணமாக  இத்தகைய    இயல்புகள் அவர்களிடம்  மிகையாக தோற்றுவிக்கப்படும்.


வேலைப்பளு அதிகம்-The workload is high

முதுமையடைந்தோர் அதிக வேலைப் பளு உடையவர்களாக அடையாளப்படுத்தப் படுகின்றனர். குறிப்பாக வயோதிப காலத்தில் அவர்களுக்கான துணையும் உதவி புரிவோர் எண்ணிக்கையும் குறைவடைவதினால் அவர்களுடைய அன்றாட வேலைகளை அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவர்கள் கூட்டுக் குடும்பத்திலும்(Joint family)  தொழில் புரிவோர் குடும்பத்திலும் (Working family) அங்கத்தவர்களாக இருக்கும் சந்தர்ப்பங்களில் குழந்தைகளையும் ,சிறுவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கும் இவர்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள் மனதளவில் மகிழ்ச்சியை அனுபவித்தாலும் உடல் அளவில் இவர்களுடைய வேலைப்பளு அதிகமாகவே காணப்படுகின்ற. இது குடித்தொகை முதுமையடைதலில் பிரதான பண்புளில் ஒன்றாகும்

மேலும்,தற்காலத்தில்  அதிகளவானோர் குழந்தைகளை முதியவர்களிடத்தில்   விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு செல்வதனால் அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து  குழந்தைகளையும்  பராமரிக்க    வேண்டியவர்களாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார  நெருக்கடிக்குள் வாழ்பவர்களாக காணப்படுகின்றமை | Living in economic crisis.

குடித்தொகை முதுமையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக பிற்பட்டோராகவும் ஏனையவர்களை தங்கி வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்(economically backward and dependent on others). இவர்களில் சிலருக்கே ஓய்வூதியம்(Pensionமற்றும் ஏனைய பண கொடுப்பணவுகள் கிடைக்கப்பெறுகின்றன.


aging populationஇaging populationசனத்தொகை முதுமையடைதல்: பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் | Population Ageing Problems and Solutions
Population-Ageing-Problems-Daily wage

ஏனைய பெரும்பாலானவர்கள் பொருளாதார பின்னடைவுக்கு முகம் கொடுக்கின்றனர் இவர்கள் அரசாங்க திணைக்களங்களிலும் மற்றும் ஏனைய நலன்புரி சபைகளிலும்(In government departments or other welfare bodies) பண தேவைக்காக அதிகம் தங்கி இருப்பவர்களாக உள்ளனர்.இவற்றுக்கு அப்பால் சிலர் வீதியோரங்களில் கையேந்தி வாழ்பவர்களாக உள்ளனர். இது ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும் பாரிய தாக்கத்தினை செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


உடல் ரீதியாகவும்  உள ரீதியாகவும் பலவீனமானவர்களாக    காணப்படுவர் | Feeling physically and mentally weak

முதுமையடைந்த காலத்தில் வயோதிபர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றமையால் முதுமையடைந்த குடித்தொகையினுள் உள்ளடக்கப்படுவோர் உள ரீதியதாகவும் உடல் ரீதியாகவும் (Physically and Mentally Weak) நோயாளிகளாக மாறுகின்றனர். இதனால் இவர்களின் சுகாதார நலனிற்கே அதிக செலவுகளை அரசாங்கம் செலவு செய்ய நேரிடுகின்றது.

கிராமப்புறங்களிலிருந்து நகர்புறம் நோக்கி முதியவர்கள் இடம்பெயர்க்கப்படுகின்றமையாலும் நகர் பகுதிகளில் வாழும் முதியவர்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கப்படுவதனாலும் அவர்கள் உள ரீதியாக பாதிப்படைகின்றனர்.

மேலும்  பொருளாதார  நெருக்கடி காரணமாக பெற்றோரை கவனிப்பதை    பாரமாக கருதும் பிள்ளைகள் அவர்களை கைவிடுவதுடன் முதியோர்    இல்லங்களில்  சேர்க்கின்றனர்.   

இவற்றுடன் தொற்று நோய்களுக்கு இவர்கள் அதிகமாக உள்ளகின்றமையினால் அரசு அதற்கும் அதிகளவு பணத்தினை செலவிட வேண்டி ஏற்படுகின்றது.

உதாரணம்முதியோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அதிகளவான    பணம் செலவு செய்யப்பட்டமை.

 

சனத்தொகை முதுமையடைதலால் ஏற்படும் பிரச்சினைகள்  | What is the problem for aging population?

குறித்த நாட்டின் சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின் அங்கு தங்கியிருக்கும் விகிதத்திலும் அதிகரிப்பு ஏற்படும் இதன் காரணமாக குடித்தொகை முதுமை அடைதல் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்படும் அத்துடன் தங்கி இருப்போருக்கான பராமரிப்பு செலவிலும் துரித அதிகரிப்பு ஏற்படும்.

எடுத்துக்காட்டாக ஜப்பான் நாட்டில் முதியோர் தொகை அதிகரிப்பின் காரணமாக அங்கு தங்கி இருப்போரும் அவர்களுக்கான பராமரிப்பு செலவும் மிக அதிகளவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

aging populationசனத்தொகை முதுமையடைதல்: பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் | Population Ageing Problems and Solutions
 Population Ageing Problems-Depression

  • முதுமை அடைதல் தொகை அதிகரிப்பதன் காரணமாக    அவர்களுக்கான  தொழில்வாய்ப்பினை  பெற்றுக்கொள்வதில்    பாரிய அசௌகர்யங்களும்  ஏற்படும் அத்துடன்  நாட்டின்    ஊழியப்படையில்  வீழ்ச்சி ஏற்பட்டு நாட்டின்  அபிவிருத்தியும்  தடைப்படும்.
  • முதுமை அடைதல்  சனத்தொகை அதிகரிக்கும் போது அங்கு    ஊழியப்படையில் தொடர்ச்சியான சுருக்கங்கள் நிலவும்  இதனால்    மக்களும்அரசாங்கமும்  பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இது பாரிய பிரச்சினையாக நோக்கப்படுகின்றது.    
  • முதுமை அடைந்த  சன்னத்தொகையினால் வேலைகளை  இலகுவாகவும்விரைவாகவும் செய்ய முடியாமை  ஒரு  பாரிய  இடர்பாடாக    நோக்கப்படுகின்றது.
  • முதியோர்களுக்கான வைத்திய செலவு மற்றும் சுகாதார கட்டமைப்புக்குரிய செலவுகள் ஓர் அரசாங்கத்திற்கு பாரிய சுமையாக காணப்படுகின்றது. குடும்பங்களை தாண்டி இத்தகைய சுகாதார வசதிகளை ஒரு அரசாங்கம் முன்னெடுக்கும் போது அவற்றிற்கு ஒதுக்க வேண்டிய பணத்தொகை மிகவும் அதிகமாக உள்ளது.

Population Ageing Problems சனத்தொகை முதுமையடைதல்: பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் | Population Ageing Problems and Solutions
 Population Ageing Problems-Health issues 

  • மேலும் இலவச சுகாதார சேவைகளை வழங்கும் இலங்கை போன்ற நாடுகளில் இது பாரிய சுமையாக அவதானிக்கப்படுகின்றது. கைவிடப்பட்ட நிலையில் உள்ள முதியவர்கள் தனியார் துறைகளை நாடுவதை காட்டிலும் பொது சுகாதார சேவையினையே அதிகம் நாடுகின்றமை இத்தகைய சுமைக்கு காரணமாகவும் விளங்குகின்றது.
  • உலக நாடுகளில் 60 - 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுவது நடைமுறையில் காணப்படுகின்றது. அவ்வாறு வழங்கப்படும் போது குடித்தொகை முதுமை அடைதல் பெருமானம் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகரிக்குமானால் அதனை சமாளிப்பதற்கான திறன் பாதிப்படையும்.
  • மேலும் அரசாங்கங்கள் ஓய்வூதிய திட்டம்,முதியோர் கொடுப்பனவு போன்ற திட்டங்களுக்கு பாரிய தொகையினை பங்கிட வேண்டி உள்ளமையினால் அது பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை தூண்டுவிக்கும் அத்துடன் அரசாங்கம் ஏனைய துறைகளில் செலவிடும் முதலீடும் பாதிப்படையும்.
  • சனத்தொகையில் முதுமை அடைதல் வீதம் அதிகரிக்கும் பட்சத்தில் இயல்பாகவே அங்கு பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைவதனை எம்மால் காண முடியும் மேலும் முதியோர்களை பராமரிப்பதினாலும் அவர்களுக்கான நேரம் ஒதுக்குவதாலும் திருமண வயதில் ஏற்படும் மாற்றங்கள் திருமணத்தில் விருப்பமின்மை போன்றவற்றினால் பிறப்பு வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைகின்றது.
  • இன்று ஜப்பான்,சீனா மற்றும்  இந்தியா போன்ற நாடுகளிலும் பிறப்பு வீத வீழ்ச்சியினை நாம் அவதானிக்க முடியும் குறிப்பாக இங்கு முதுமை அடைதல் வீதம் அதிகரித்தமையே இங்கு சனத்தொகை அதிரித்தமைக்கான பிரதான காரணியாக கருதப்படுகின்றது .இது சத்தொகை முதுமையடைதலின் பிரதான சவாலாக காணப்படுகின்றது.

மேற் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சனத்தொகை முதுமையடைதலினால் அடையாளப்படுத்தப்படுகின்ற பிரதான சவால்களாக காணப்படுகின்றன. இவற்றைத் தவிரவும் பலதரப்பட்ட பிரச்சனைகள் குடித்தொகை முதுமை அடைத்ததினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


சனத்தொகை முதுமையடைதலுக்கான  தீர்வுகள் -What is  the solution for the Ageing Populations?

சனத்தொகை முதுமைடைதலினால் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகள் சுமூகமான முறையில் தீர்க்கப்படாவிடின் அது பாரிய சமூக,சூழலியல் மற்றும் உயிரியல்(Social, ecological and biologicalரீதியிலான பிரச்சனைகளை தோற்றுவிக்க கூடும். எனவே அவற்றிற்கான முறையான தீர்வுகளை பின்பற்ற வேண்டியது தற்காலத்தின் கட்டாயமாக உள்ளது அந்த வகையில் பின்வருவன அவற்றிக்கு பிரதான தீர்வாக அமையவுள்ளன.

  • முதியவர்களை    தொழிற்படையில்    தக்க    வைத்து    அவர்களுக்கான    சிறந்த    பயிற்றுவிப்புக்களையும்,தொழில்    முகாமைத்துவ    நடவடிக்கைகளையும்    மேற்கொள்ளும்    போது    அவர்களின்    மூலமாக    போதிய    அளவு    பொருளாதார    உற்பத்தினை    பெற்றுக்கொள்ள முடியும்

What  is  the future of the aging population
Vocational training and business management activities for Elders

  • முதுமை அடைதல் குடித்தொகையில் உள்ளவர்களுக்கான முறையான சுகாதார வசதிகளையும் குடும்ப நல மேம்பாடுகளையும் வழங்கி அவர்களுடைய சுகாதார நலனை மேம்படுத்துதல்.
  • உளவியல் (Psychology) ரீதியாக தனிமைப்படுத்திலிருந்து அவர்களுக்கான பொருத்தமான சமூக சூழலை வழங்குதல்.
  • முதுமை    அடைந்த    குடித்தொகையினருக்கு    குடும்பம்சார்    நல்வாழ்வினை    ஏற்படுத்திக்    (Facilitating    family    well-being)    கொடுத்தல்.
  • வயது முதிர்வினால் அனாதையாக்கப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு பொருத்தமான வாழ்விட மையங்களையும் குடியிருப்புகளையும் அமைத்து அவர்களின் மூலமாக பொருளாதார நன்மையை ஈட்டக்கூடிய நடவடிக்கைகளை மேம்படுத்தல்.
  • பொருத்தமான    சுகாதார    வசதிகளையும்    குடும்பநல    திட்டமிடல்களையும்    வழங்குதல்    (Providing    health    facilities    and    family    planning.)
  • ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிப்பதன் மூலமாக வயோதிபர்களின் சேவை நலனை உள்வாங்கி அரசாங்க செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் இதன் மூலம் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் மட்டம் குறைக்கப்படும்.
  • அரசாங்கங்கள்    தீர்மானம்    மிக்க    மற்றும்    நிலையான    கொள்கைகளை(consistent    policies)    வகுத்து    அவர்களுக்கான    செலவீனங்களை    பராமரித்தல்.
  • முதியோர்களுக்கான    சேவை    நலத்திட்டங்களையும்    பொருளாதார    மையங்களையும்    ஏற்படுத்துதல்(Establishing service welfare schemes and economic centers for the elderly.)
  • நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களை(Institutionalized projects) ஏற்படுத்துதல்.

  • அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் (government    and    non-government organizations)    ஒன்றிணைந்து சிறந்த திட்டங்களை    முன்மொழிதல்.


முடிவுரை

அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் (In developed and developing countries) குடித்தொகை முதுமை அடைதல் இன்று சவாலுக்குரிய அம்சமாகவே நோக்கப்படுகின்றது (Population aging is considered a challenging issue today in both developed and developing countries).

எனினும் முறையான முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கொள்கை உபாயங்களை நடைமுறைபடுத்தி  அவற்றின் எதிர்மறை தாக்கங்களை குறைத்துக்கொள்ள வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post by: Puvitips

Post a Comment

புதியது பழையவை