
சனத்தொகை முதுமையடைதல் | Ageing Population –| Introduction, Meaning, Causes and Global Trends of Ageing Population
சனத்தொகை (Population) என்பது
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையை குறிக்கும்.
அத்தன்மையில் இன்று உலக சனத்தொகையானது 8.19 பில்லியன் தொகையினை எட்டியுள்ளது.இத்தொகையானது எதிர்வரும் 2050களில் 9.7 பில்லியன் ஆக அதிகரிக்கும் என UNITED NATION அமைப்பு கூறுகின்றது.
அது மாத்திரமன்றி இன்று உலகளாவிய ரீதியில் குடித்தொகை பெருக்கத்தில் சீனாவைப் பின் தள்ளி இந்தியா முதன்மை நிலையை எட்டி உள்ளமையினையும் சனத்தொகை அதிகரிப்பின் முக்கிய அம்சமாக நோக்கப்படுகின்றது. இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் சன்னத்தொகை அம்சத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்றைய சனத்தொகை பாங்கில் அவதானிக்க கூடய மற்றொரு நமுக்கிய அம்சமாக மொத்த சனத்தொகையில் வயது
முதிர்ந்தவர்களின் பெருக்கம் அதிகரித்துள்ளமையினை கூறலாம்.
மருத்துவத்துறையில் ஏற்பட்ட விருத்தி (Development in the medical field) மற்றும் பிறப்பு வீத குறைவு (Drop in the birth rate) என்பன வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாகின்றன.
இதன் அடிப்படையிலேயே சனத்தொகையில் “சனத்தொகை முதுமை அடைதல் அல்லது குடித்தொகை முதுமையடைதல்”’| Demographic ageing' and 'population ageing என்ற அம்சம் இன்று அதிக முக்கியத்துவமுடையதாக நோக்கப்படுகின்றது.
ஆகவே இன்று நாம் குடித்தொகை முதுமையடைதல் என்றால் என்ன(What is ageing population?) என்பது தொடர்பாகவும் அதன் முக்கிய அம்சங்களினையும் இப்பதிவில் அவதானிக்க உள்ளோம்.
சனத்தொகை முதுமையடைதல் என்றால் என்ன? -What is Ageing Population?
குறிப்பிட்ட ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் வயது முதிர்ந்த மக்களின் விகிதம் அதிகரித்தலை “மக்கள் தொகை முதுமை அடைதல் அல்லது குடித்தொகை முதுமை அடைதல்” 'Demographic Ageing' and 'Population Ageing'. என கூறப்படுகின்றது.
இங்கு முதுமையடைந்த வயதெல்லை என்பது ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில் 60 - 65 வயதுக்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையினை குறிக்கும்.
எனவே இங்கு குடித்தொகை அல்லது சனத்தொகை முதுமையடைதல் என்பது "நாடொன்றின் சனத் தொகையில் 60 வயதிற்கு மேற்பட்ட மக்களின்அதிகரிப்பு குடித்தொகை சதவீதத்தில் ஏற்படும் அதிகரிப்பே" மக்கள் தொகை முதுமை அடைதல் அல்லது குடித்தொகை முதுமையடைதல்” எனப்படுகின்றது.
![]() |
| Demographic ageing |
அத்துடன் நாடொன்றின் நடுத்தர வயது குடித்தொகையில் படிப்படியாக ஏற்படும் அதிகரிப்பும் குடித்தொகை முதுமையடைதல் எனப்படுகின்றது.
ஓர் நாட்டின் குடித்தொகையில் வயதானோரின் எண்ணிக்கை உழைக்கும் குடித்தொகையை விட அதிகரிக்க ஆரம்பித்தலே குடித்தொகை வயதாதல்ஆகும். இதை ஒரு வகையில் அபிவிருத்தியின் பக்க விளைவு என்றும் கூறலாம்.
குடித்தொகை முதுமையடைதலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் -What are the causes of of aging Population?
ஒரு நாட்டின் குடித்தொகையில் 60-65 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதனை குடித்தொகை முதுமை அடைதல் என்கின்றோம் இதற்கு பின்வருவன பிரதான காரணியாக உள்ளன.
- ஒரு நாட்டில் சுகாதார வசதிகளின் முன்னேற்றம்(Improvement in health facilities)
- சிசுக்களின் இறப்பு வீதம்(Infant mortality rate)
- தனி மனித ஆயுட்காலம் அதிகரித்தல்(Increase in individual life expectancy)
- கல்வியறிவு முன்னேற்றம் (Improvement in literacy)
- குடும்பத் திட்டமிடல் சேவைகளின் கிடைப்பனவு அதிகரிப்பு (planning services)
- நாட்டின் சுகாதார வசதிகள் போதிய அளவு கிடைக்கப் பெறுகின்றமை (health facilities)
- போசாக்கு மட்ட உயர்வு (Increased nutritional status)
- உயர்வான வருமானம் மட்டும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை முறைமை அரசாங்க கொள்கை (High income happy lifestyle)
- இலவச சுகாதார வசதி (Free healthcare facility)
- இலவச உணவு மானியங்கள் கிடைத்தல்(Availability of free food subsidies)
- விவாக வயதில் ஏற்படும் அதிகரிப்பு (age of marriage)
- பெண்களின் கல்வி மட்ட உயர்வு (education)
- குடும்பத் திட்டமிடல்(Family planning)
![]() |
What are the causes of of
aging Population? |
உயர்ந்த ஆயுட்காலம் (Increased life expectancy) :நாடுகளின் சனத்தொகையில் 60 மற்றும் 65 மேற்பட்டவர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பது சனத்தொகையில் குடித்தொகை முதுமை அடைதல் அதிகரிப்பிற்கு பிரதான ஏதுவாகின்றது. இன்றைய காலங்களில் அதிகரித்துள்ள சுகாதார வசதிகள் மற்றும் மனித நல்வாழ்வுக்கான முயற்சிகள்(Increased healthcare facilities and efforts for human well-being) என்பன ஒன்றிணைந்து நீண்ட ஆயுட்காலத்தை தோற்றுவித்துள்ளன.
குறிப்பாக சீனா,அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாட்டுகளில் உயர்ந்த ஆயுட்காலம் அவதானிக்கப்படுகிறது.
குறைந்த பிறப்பு வீதம் (Decreased birth rates) : இன்றைய நகரீக உலகில் குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமின்மையும் அதனை பிட்போடுவதும் உலக நாடுகளில் பொதுவாக அவதானிக்கப்படுகின்றது. இதனால் பிறப்பு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளது மறுபுறம் முதிர்ந்த சனத்தொகையின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கின்றது.
மருத்துவ வசதிகளின் மேம்பாடு (Improved healthcare): மருத்துவ வசதிகளின் மேம்பாடு இன்று துரிதமாக அதிகரித்ததுடன்,மனித உயிரை பாதுகாப்பதற்காக பல்வேறு வகையான சுகாதார முறைகளும் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் (Modern scientific discoveries)மனித உயிரை காப்பதற்கும் நோய்களை கட்டுப்படுத்தி(Disease control) வெகு சீக்கிரத்தில் அதற்கான சுகாதாரத் தீர்வுகளையும் (health solutions) முன்வைக்கின்றது.
![]() |
| Improvement in health facilities |
திருமணத்தில் நாட்டமின்மை(Lack of interest in marriage) : இன்றைய இளைஞர்கள் மத்தியில் லிவ்விங் டூ கெதர் (Living Together) மற்றும் பிரேக்கப் (Breakup) உறவுகள் என்பன அதிகரித்துள்ளமையினால் அவர்கள் திருமண வாழ்வினையும் அதனால் உருவாக்கப்படும் குழந்தைகளிலும் அதிக நாட்டமின்மையினால் இன்று புதிய பிறப்பு வீதங்களின் எண்ணிக்கை மறைப்பெருமானத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது, மறுபுறம் சனத்தொகை முதுமை அடைதல் அதிகரித்து.
மேற்போன்ற பிரதான அம்சங்கள் குடித்தொகையில் “சனத்தொகை முதுமை அடைதல்” அதிகரிப்பதற்கு பிரதான ஏதுவாகின்றன.
உலக சனத்தொகையில் "குடித்தொகை முதுமையடைதல்" - Ageing population around the world?
இன்று உலகளாவிய
ரீதியில் 65 வயதுக்கு
மேற்பட்டவர்களின் சனத்தொகை விகிதமானது
ஒப்பிட்டளவில் துரிதமாக அதிகரித்து
வருகின்றது. 2021 ஆம் ஆண்டளவில் 761 மில்லியனாக இருந்த
இச்சனத்தொகை 2025 ஆம் ஆண்டில்
உலகின் மொத்த
சனத்தொகையில் 830 மில்லியன் தொகையினராக அதிகரித்தனர்.
இத்தொகையானது 2050
ஆம் ஆண்டில் 1.6 பில்லியன் அளவினை
எட்டக் கூடும் என World Population
Clock அறிவித்துள்ளது.
ஏனைய பிராந்தியங்களை விடவும் சனத்தொகையில்
"குடித்தொகை முதுமையடைதல்" ஆசியா மற்றும் ஐரோப்பாவில்
(Asia and Europe) அதிகளவாக உள்ளது.
அது போலவே 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் தொகையானது எதிர்கால்தில் மூன்று மடங்காக அதிகரிக்கும் எனவும் எதிர் கூறப்பட்டுள்ளது.
இது 2021ல் 155 மில்லியன் ஆக இருப்பதுடன் 2050 ஆம் ஆண்டில் 459 மில்லியனாக அதிகரிக்க கூடும் என உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) அவதானிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக 'குடித்தொகை முதுமையடைதல்' தொகையினை கொண்டுள்ள நாடு - Which country has highest ageing Population
தற்போதைய கணக்கடுப்பின் படி உலகளாவிய ரீதியில் ஜப்பான்(Japan) சனத்தொகை முதுமை அடைதலில் முதலாவது இடத்தினை
கொண்டுள்ளது அங்கு 28% சதவீதமான மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டோராக உள்ளனர்.
ஜப்பானுக்கு அடுத்தப்படியாக
- இத்தாலி 23 சதவீதமும்
- பின்லாந்து(Finland),
- போர்த்துக்கள்(Portugal),
- கிரீஸ்(Greece)ஆகியவை அடுத்தடுத்த இடங்களை கொண்டுள்ளன இந் நாடுகளின் சனத்தொகையில் 22 சதவீதமானவை 65 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையாக உள்ளது.
![]() |
First
Ten Aging Population Country In The World
|
உலகில் குறைந்த 'குடித்தொகை முதுமையடைதல்' தொகையினை கொண்டுள்ள நாடு -Which country has lowest population ageing?
குடித்தொகை முதுமையடைவில் கீழ்மட்டத்தில் உள்ள நாடாக கட்டார் (Qatar1.57%)உள்ளது. இதன் குடித்தொகை முதுமை அடைதல் வீதமானது மொத்த சனத்தொகையில் 1.57% வீதமாக உள்ளது. அதற்கு அதற்கு அடுத்ததாக
- நைகர்(Niger2.78%),
- மாலி(Mali 3.59%),
- கிழக்குத் தீமோர்(East Timor 3.72%) ,
- உகண்டா(Uganda 3.83%)
- அங்கோலா(Angola 3.80%) ஆகிய நாடுகள் உள்ளன.
இலங்கையில் குடித்தொகை முதுடையடைதல் -Population ageing in sri lanka
2025 ஆண்டின் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு” கணக்கெடுப்பின்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகும்.இதில் 60 வயதிற்கு மேற்பட்டோரின் சனத்தொகையானது 12.3 சதவீதமாக உள்ளது.
இத்தொகையானது 2050 ஆம் ஆண்டில் 21.5 வீத்தினால் உயர்வடையும் என எதிர்வுக்கூறப்படுகின்றது.
இலங்கையின் மக்களுக்கு வழங்கப்படும் இலவச சுகாதார வசதிகள் இலவச கொடுப்பணவுகள் மற்றும் பணக்கொடுப்பணவுகள் என்பனவற்றின் மேம்பாடுகளின் காரணமாக முதியோர் தொகை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குடித்தொகை முதுமையடைதலின் எதிர்கால போக்கு - the future of the aging population
குடித்தொகையில் வயது 65 க்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையானது 1965 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 129 மில்லியனாக காணப்பட்டது, அவ் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டு 750 மில்லியனாக உயர்வடைந்துள்ளது இவ்வெண்ணிக்கையானது 2100 ஆம் ஆண்டளவில் 3.1 பில்லியன் ஆக அதிகரிக்க கூடும் என உலக சனத்தொகை மையத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
முடிவுரை
மேலே நாம் சனத்தொகை முதுமையடைதல் என்றால் என்ன அதற்கான காரணிகள் உலகளாவிய ரீதியில் குடித்தொகையின் பண்பு என்பனவற்றினை அவதானித்துள்ளோம்.
மேலும் குடித்தொகை என்பது இன்றைய நாட்களில் உலகளாவிய ரீதியில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.
அதிகரித்த முதுமையினால் அரசாங்கங்களும் ஏனைய நிறுவனங்களும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன. அது எவ்வாறான சிக்கல் அவற்றிற்க்கான தீர்வுகள் என்ன என்பதனையும் நாம் அவதானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் அதனை எதிர்வரும் பதிவுகளில் நாம் ஆராய்வோம்.





கருத்துரையிடுக