ஓசோன் படைத் தேய்வு:காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் | Ozone Layer Depletion Causes, Effects & Solutions
01.ஓசோன் படலம் என்றால் என்ன? | What is the ozone layer
ஓசோன் படலம் (Ozone Layer) என்பது பூமியின் வளிமண்டலத்தின் படைமண்டலத்தில் -(ஸ்டிராடோஸ்பியர் -Stratosphere) பகுதியை சுற்றியுள்ள ஒரு முக்கியமான வாயுப்படலமாகும்.
02.ஓசோன் படை வளிமண்டலத்தில்(Atmosphere) எவ்வாறு பரவியுள்ளது?| How is ozone distributed in the atmosphere?
ஓசோன் வாயுவில் ஏறத்தாழ 10 % ஆனது புவி மேற்பரப்பில் இருந்து 10 - 16 கிலோமீற்றர்கள் வரையில் காணப்படுகின்றது.
அதேவேளை 90 % ஆன ஓசோன் வாயு நில மட்டத்திலிருந்து 15 - 30 கிலோமீற்றர்கள் வரையான உயரத்தில் பூமியைச் சூழ ஒரு படைப் போன்ற அமைப்பில் காணப்படுகின்றது.
ஓசோன் அதிகமாக இருக்கும்பகுதியை Ozone Belt என்று அழைக்கிறார்கள்.
03.ஓசோன் படையின் பரதான செயற்பாடுகள் எவை? | What are the main functions of the ozone layer?
இதன் மிக முக்கிய பணி சூரியனிலிருந்து வெளிவரும் அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் புற ஊதாக் கதிர்கள்( infrared and ultraviolet rays) ஆகிய இரு வகையான கதிர்களில்,புற ஊதாக் கதிர்களிடமிருந்து(UV) வரும் உயிர்களுக்கு ஆபத்தான UV-B, UV-C கதிர்களை 99% ஈர்த்து, பூமியை பாதுகாப்பதுடன் எம்மை நோயிலிருந்து காப்பாற்றும் பணியை ஓசோன் படை செய்து வருகிறது.
04.ஓசோன் (O3) மூலக்கூறினை யார்? எப்போது கண்டுபிடித்தார்? | Who and When was O3 discovered?
1839 இல் இரு அணுநிலை ஆக்சிஜனும் ,ஒரு முழு ஆக்சிஜனும் இணைந்ததே ஓசோன் என ஜேர்மனிய அறிஞர் எப். ஸ்கோன்பின்(Christian Friedrich Schonbein) கண்டுபிடித்தார்
05.ஓசோன் படலத்தினை யார்? எப்போது கண்டுபிடித்தார்? | Who and When was Ozone Layer discovered?
பிரான்ஸ் நாட்டின் இயற்பியல் வல்லுனர்களான சார்லஸ் பேப்ரி (Challes Febry) மற்றும் ஹென்றி புய்சன் (Henri Buisson ) ஆகியோர்.1913 இல் ஓசோன் படலத்தை|Ozone Layer கண்டுபிடித்தனர்.
இவர்கள் இருவரும் மேல்நிலை வளிமண்டலத்தில் ஓசோன் அதிகமாக உள்ள ஒரு படலம் இருப்பதை முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தனர்.
ஸ்பெக்ட்ரோஸ்கோபி (Spectroscopy) என்ற முறையை பயன்படுத்தி ஓசோனின் அளவை இவர்கள்
கண்டறிந்தனர்.
அத்துடன் இது உயிர்களை பாதுகாக்கும் முக்கிய படலம் என்பதையும் உலகிற்கு முதல் முதலில் இவர்கள் தெரியப்படுத்தினார்கள்.
06.ஓசோனின் நிறம் என்ன? What is the color of O3?
வெளிர் நீலம்-Pale Blue
07.ஓசோனின் அடர்த்தியை அளவிடும் கருவி என்ன ? Which instrument is used to measure ozone?
டாப்சன் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர் (Dobson spectrophotometer)
![]() |
| Dobson spectrophotometer |
08.ஓசோனின் அடர்த்தி என்ன அலகில் அளவிடப்படுகின்றது? | What is the unit of measurement for ozone?
Dobson units (DU) அலகில் அளவிடப்படுகின்றது.
09.டாப்சன் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டரை கண்டுபிடித்தவர் யார்? Who invented the spectrophotometer ?
1924 ஆம் ஆண்டு G.M.B.டாப்சன்(G.M.B. Dobson) என்பவர் இதனை கண்டுபிடித்தார்.
10.ஓசோன் படைத்தேய்வு என்றால் என்ன? | what is ozone layer depletion?
ஓசோன் மூலக்கூறுகளின் சேர்வையானது முக்கியமாக குளோரோ ஃபுளோரோ கார்பன்கள் (CFCs)
போன்ற
வாயுக்களினால்
இரசாயண
முறையில்
அழிக்கப்படுவதனால்
ஓசோன்படையின்
தடிப்பினளவு
குறைவடைதலே
ஓசோன்
படைச்
சிதைவு
அல்லது
ஓசோன்
படைத் தேய்வு எனப்படுகின்றது.
![]() |
| ஓசோன் படைத் தேய்வு- Ozone Layer Depletion |
சூரியனிலிருந்து வெளிவரும் தீமை பயக்கும்
புற
ஊதாக்கதிர்கள் CFC அணுக்களை தாக்கி CL அணுக்களை வெளிவிடுகின்றது. பின்னர் CL அணுவானது ஓசோன் மூலக்கூறினை (O3) தாக்கி CLO ஆகவும் O2 ஆகவும் மாற்றுகின்து.
பின்னர் CLO மூலக்கூறு O உடன் இணைந்து CL ஆகவும், O2 ஆகவும் மாற்றமடைகின்றது. இத்தகைய இரசாயண மாற்றம் தொடர்சியாக நடைப்பெறுவதன் மூலமாக படைமண்டலத்தில் உள்ள ஓசோனின் அளவு வெகுவாகக் குறைந்து வருகின்றது இதனை ஒசோன் படலம் மெலிதல் எனவும் அழைக்கப்படும்.
11.ஓசோன் படைத் தேய்வு யாரால் ? எங்கே ? எப்போது முதன் முதலில் அடையாளப்படுத்தப்பட்டது? Who was the first to detect ozone layer depletion?
ஜே.போர்மன்
தலைமையிலான
ஆய்வுக்குழு
(Scientists at the British Antarctic
Survey Joe Farman,
Brian Gardiner, Jonathan
Shanklin) அண்டார்டிகாவின்
காலேபே என்ற
நிலையத்தில்
ஓசோன்
தேய்வினை
The first major ozone depletion
(“ozone hole”) முதன்
முதலில்
அடையாளப்படுத்தினர்.
ஓசோன் படலத் தேய்வு தொடர்பான முதலாவது தகவல் The scientific
journal Nature என்ற சஞ்சிகையில், 1985-ம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
12.ஓசோன் படைத் தேய்வுக்கு காரணமான பிரதான வாயு எது? | Which gas is mainly responsible for ozone layer depletion
குளோரோ புளோரோ காபன் (CFCs- Chlorofluorocarbons)
ஒரு குளோரோஃப்ளூரோ கார்பன் (Chlorofluorocarbons) மூலக்கூறிலிருந்து வெளிவரும் ஒரு குளோரின் அணு ஒரு லட்ச (100,000) ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கின்றது.
![]() |
| CFCs குளோரோஃப்ளூரோ கார்பன் |
13.ஓசோன் படை தேய்விற்கான காரணங்கள் எவை? |What are the causes of ozone layer depletion?
மானிட மற்றும் இயற்கை காரணிகளினால் ஓசோன் படலத்தில் தேய்வு ஏற்படுகின்றது.
மானிட காரணிகள்,
- மனித நடவடிக்கைகளினால் பெருமளவு வெளியிடப்படும் குளோரோ புளோரோ காபன் (CFC- Chlorofluorocarbon)
- குளிருட்டி பாவனை (CFC- Chlorofluorocarbon)
- தீயணைப்பான்களின் பயன்பாடு (புரோமைன்-bromide)
- படைமண்டலத்திலுள்ள ஓசோன் படைக்கூடாகச் செல்லும் அதிவேக விமானங்கள் கொன்கொட்,சுபர்சொனிக்,போயிங்- 2707 முதலிய விமானங்கள் நைதரசன் ஒட்சைட்டு (Nitrogen Oxide) வாயுவினை அதிகமாக வெளியேற்றும்.
- அணுகுண்டுப் பரிசோதனைகள்
- பூச்சிகொல்லியாக பயன்படுத்தப்படும் மெதில்புறோமைட்(methyl bromide) என்னும் வாயு.
- இரசாயண உரங்களில் பயன்படுத்தப்படும் நைதரசன் ஒட்சைட்(Nitrogen Oxide)
- பிளாஸ்டிக் தொழிற்சாலைகளின் வாயு வெளியேற்றம்.
- வாசனை திரவியங்களின் பாவனை
- நிறப்பூச்சிகளின் பாவனை
இயற்கை காரணிகளாக
- எரிமலை வெடிப்புக்களின் மூலம் வௌியேறும் சல்பர்டைஒக்சைட்(sulfur dioxide) மற்றும் காபனீரொட்சைட்(carbon dioxide) முதலிய வாயுக்களும் ஹைத்ரோகுளோரிக் அமிலம்(hydrochloric acid), சல்பூரிக் அமிலம்(sulfuric acid) ஆகியன ஓசோன் தேய்வுக்கு காரணமாகின்றன.
- தொடர்ச்சியானபருவ நிலை மாற்றம்.
- வானிலை மாற்றம்.
14.ஓசோன் படைத்தேய்வினால் ஏற்படும் விளைவுகள் | The effects of the ozone layer depletion
![]() |
| கண்ணில் சதை வளர்தல்| Pterygium |
- அதிகளவான சருமப் புற்றுநோய் ஏற்பட எதுவாக அமைகின்றது.
- கண்ணில் வெண்படலநோய்.
- கண்ணில் சதை வளர்தல்.
- கண் பார்வையிழப்பு ஏற்படுகின்றது.
- நோய் எதிர்ப்பு சக்தியினைப் பலவீனமடையச் செய்கின்றது.
- நோய்த் தடுப்பூசிகளின் செயற்பாடுகள் செயலற்றுப் போகின்றன.
- உடலின் ஒவ்வாமைத் தன்மை அதிகரிக்கின்றது.
- ஓசோன் தேய்வினால் வெப்பம் அதிகரித்து பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்கின்றது அதன் காரணமாக நில பரப்பு அழிகின்றது.
- அதிக வெப்பம் காரணமாக வறட்சி ஏற்படுகின்றது.
- விலங்குகளுக்கு கண் மற்றும் சருமப் புற்றுநோய் ஏற்படுகின்றது.
- விலங்குகளின் மீள் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைதல்.
- தாவரங்களின் ஒளித்தொகுப்பு பாதிப்படைதல்.(நெல், கோதுமை, பார்லி, ஒட்ஸ், சோளம், சோயா அவரை, நிலக்கடலை)
- தாவர விதைகளின் விருத்தி பாதிப்படைதல்.
- UV கதிர்கள்பருத்தி, கம்பளி போன்ற பொருட்களின் பாவனைக்காலத்தை குறைவடையச் செய்கின்றது.
- சக்திப்பய்ச்சல் பாதிப்படைதல்,
- உயிர்பல்வகைமை பாதிப்படைதல்.
- உயிர்புவி இரசாயண வட்டங்கள் குழப்படைதல்
- கடல்வாழ் உயிரினங்களின் விருத்தி பாதிப்படைதல்.(மீன்களிற்கான பிரதான உணவான பிளாங்டன் UV கதிர்வீசலினால் அழிவடைகின்றது)
15.ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பது எப்படி? | How to protect ozone layer ?
- குளுரோ புளுரோ கார்பன் பயன்படுத்துவதை தவிர்த்தல்.
- குளிரேற்றிகளில் குளோரோ புளோரோ காபனை முற்றாக தடை செய்தல் அல்லது அதற்கு மாற்றீடான பொருட்களை தயாரித்தல்.
- ஓசோனின்பயன்பாட்டு அளவினை குறைத்தல்.
- அழகுசாதன பொருட்கள் அல்லது கிருமி நாசினிகள் போன்றவற்றின் உற்பதியினை மட்டுப்படுத்த வேண்டும்.
- பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை குறைத்தல்.
- மரங்களை அதிகளவில் வளர்த்து பசுமை போர்வையினை அதிகரித்தல்.
- புவிவெப்பமயமாதலை தடுத்தல்.
- குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள், தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் பொருட்கள் போன்றவற்றின் பாவனையினை குறைத்தல்.
- ஓசோன் நட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
- ஓசோன் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல்.
- மொன்றியல் (Montreal Protocol) நெறிமுறையின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்றுதல்.
16.ஓசோன் படைத்தேய்வினை தவிர்பதற்காக சர்வதேச ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? | What international agreement was made to protect the ozone layer?
கனடா நாட்டில் உள்ள மொன்றியல் என்ற நகரில் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி ஓசோன் பாதுகாப்பிற்கான மொன்றியல் உடன்படிக்கை (Montreal Protocol) கைச்சாத்திடப்பட்டது.இது 1989 ஆம் ஆண்டு முதலாக அமல்படுத்தப்பட்டது.
![]() |
| மொன்றியல் உடன்படிக்கை (Montreal Protocol) |
1989ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டு நாடுகளுடன் 44 நாடுகள் இணைந்து ஓசோன் பாதுகாப்பினை அமூல்படுத்தின.
மொன்றியல் உடன்படிக்கை (Montreal Protocol) என்பது உலகளவில் ஓசோன் படலத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட மிக முக்கியமான சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்.
17.சர்வதேச ஓசோன் தினம் எத்தினத்தில் அனுஸ்டிக்கப்படுகின்றது? | When we celebrate world ozone day
1995 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 16 ஆம் திகதி சர்வதேச ஓசோன் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
18.எத்தனை நாடுகள் ஓசோன்(மொன்றியல்) பிரகடணத்தில் கைச்சாத்திட்டுள்ளன?
மொன்றியல் உடன்படிக்கையில் 180 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
19.மொன்றியல் உடன்படிக்கையில் நிறைவேற்றப்பட்ட பிரதான தீர்மானம் என்ன? | What is the main aim of the Montreal Protocol?
வளிமண்டலத்தில் ஓசோன் அடுக்கு குறைவதற்கு காரணமான குளோரோபுளோரோ காபன்கள் (CFCs- Chlorofluorocarbons) மற்றும் தீங்கு விளைவிக்கும் கூறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்காக அவர்கள் கையெழுத்திட்டு உறுதியளித்தனர்.
ஓசோன் படலத்தை அழிக்கும் ரசாயனங்களை உலகளவில் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், இறுதியில் முழுமையாக நிறுத்தவும் இது
உறுதிக்கொண்டது.
20. மொன்றியல் உடன்படிக்கையில் தடை செய்யப்பட்டன இரசாயனங்கள் எவை? | What chemicals are controlled by the Montreal Protocol?
ஓசோன் படையினை அதிகமாக அழிக்கும் பொருட்கள் (ODS – Ozone Depleting
Substances):
- குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள்|CFCs -Chloro Fluoro Carbons
- ஹாலோன்கள் | Halons
- கார்பன் டெட்ராகுளோரைடு | Carbon tetrachloride
- மெத்தில் குளோரோஃபார்ம் | Methyl chloroform
- ஹைட்ரோகுளோரோஃப்ளூரோகார்பன்கள் | HCFCs
- மெத்தில் புரோமைடு | Methyl
bromide
21.மொன்றியல் உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முக்கிய சிக்கல்கள் எவை? | What are the challenges in enforcing the Montreal Protocol?
1. மாற்று இரசாயனங்களை உருவாக்குவதில் சிக்கல்
CFC, Halon போன்றவற்றை தடை செய்தபோது,அதற்கு
பதிலாக பயன்படுத்த பாதுகாப்பான மற்றும் மலிவான மாற்று இரசாயனங்கள் உடனே கிடைக்கவில்லை.
2. வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் மாற்று தொழில்நுட்பங்களை வாங்குவதற்கான நிதி பற்றாக்குறை.
மாற்று தொழில்களை அமுல்படுத்த நேரமும் பொருளாதார சிரமமும் காணப்பட்டமை.
3. சட்டமுறை கண்காணிப்பு சிக்கல்
எந்த நாடு எந்த அளவு ODS (Ozone Depleting Substances) உற்பத்தி செய்கிறது
என்பதனை கண்காணிக்க
முடியாமை அத்துடன் சில நாடுகளில்
சட்டவிரோத CFC உற்பத்தியினையும் மெற்கொள்கின்றமை. இதனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம்
ஏற்பட்டது.
4. தொழில் துறையின் எதிர்ப்பு
வானூர்திகள்,குளிர்சாதனப் பெட்டிகள் ஏ.சிகள் போன்ற உற்பத்தி தொழில்கள் தமது உற்பத்தி முறையை மாற்ற வேண்டி வந்தது இதற்கு செலவு அதிகம்
எனவே ஆரம்பத்தில்
பல தொழில் துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
5. மாற்று வாயுக்கள் (HFCs) புதிய பிரச்சனை
CFC-க்கு மாற்றாக பயன்படுத்தப்பட்ட HFCs ஓசோனுக்கு தீங்கு செய்யவில்லை.
ஆனாலும் HFC-கள் ஒரு வலுவான பசுமைக் வீட்டு வாயு ஆகும் (Greenhouse Gas).
அதனால் உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும் புதிய சிக்கல் உருவானது
இதற்காக கிகாலி திருத்தம் (Kigali Amendment) கொண்டு வரப்பட்டது.
22.கிகாலி திருத்தம் (Kigali Amendment) என்பது என்ன?
கிகாலி
திருத்தம் (Kigali Amendment) என்பது ஓசோன் அடுக்கைப் பாதுகாக்கும் மாண்ட்ரீல்
நெறிமுறையின் ஒரு திருத்தமாகும்.
23.கிகாலி திருத்தம் (Kigali Amendment) எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
2016, ஒக்ரோபர் 15அன்று ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற 28வது கட்சிகளின் கூட்டத்தில் கிகாலி திருத்தம் (Kigali Amendment) எட்டப்பட்டது.
![]() |
| கிகாலி திருத்தம் | Kigali Amendment |
24.கிகாலி திருத்தத்தின் (Kigali Amendment) பிரதான நோககம் என்ன?
இது முற்று முழுதாக ஹைட்ரொகுளோரோகார்பன் (HFCs) உற்பத்தியையும், பாவனையும் தடைசெய்வதனை நோக்காகக் கொண்டுள்ளது.
197 சர்வதேச நாடுகள் இந்த திருத்தத்தை அங்கீகரித்து ஹைட்ரொகுளோரோகார்பன் (HFCs) பாவனையை எதிர்வரும் மூன்று தசாப்பதங்களுக்குள் 80%க்குள் குறைப்பதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
25..2023, 2024, 2025 ஆம் ஆண்டுகளுக்கான ஓசோன் தின கருப்பொருள் என்ன? What is the theme of Ozone Day?
2023-மொன்றியல் நெறிமுறைக்கிணங்க ஓசோன் அடுக்கை சரிசெய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல்.' "Montreal Protocol: fixing the ozone layer and reducing climate change"
2024 - "மாண்ட்ரீல் நெறிமுறை: காலநிலை நடவடிக்கைகளை மேம்படுத்துதல்" என்பதாகும். "Montreal Protocol: Advancing Climate Action"
2025 - அறிவியலில் இருந்து உலகளாவிய நடவடிக்கை வரை" (From Science to Global Action) என்பதாகும்
By:Puvutips


.webp)



.webp)


கருத்துரையிடுக