How to Define Projection in ArcGIS

வரைப்படத்திற்கு முறையான Projection வழங்குவது எவ்வாறு - How to Define Projection in ArcGIS

பூமியில்  ஒரு குறிப்பிட்ட பிரதேசம் எந்த அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளுக்கிடையே (Latitude and Longitude)  அமைந்துள்ளது என்பதனை கணினி மயப்படுத்தப்படும் (Computerized) போது அதே அகலாங்கு மற்றும் நெட்டாங்கு கட்டமைப்புக்குள் உள்ளடக்கக்க வேண்டியது கட்டாயமாகும்.


ArcMap இல் எம்மால் வரையப்படும் வரைபடத்திற்கும் அல்லது இயலவே உள்ள  Shape file க்கும் Geographic Coordinate System  வழங்குவது மிகவும் அடிப்படையாகும்.

ஒரு வரைபடம் புவியில் எந்த பகுதியில் அமைவிடம் கொண்டுள்ளது என்பதனையும் அதன் துல்லியமான பரப்பினையும் (Accurate distribution) அறிந்து கொள்வதற்கு நாம் Coordinate  முறையாகவும் சரியானதாகவும் வழங்க வேண்டும்.

அத்தன்மையில் வரைப்படவியலில் (Cartography) புவியின் இருப்பிடங்களை துல்லியமாக தெரிவு செய்வதற்கும் அதனை GIS  வரைப்படத்தில் சுட்டிகாட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு முறையே Coordinate Systems ஆகும்.

பிரதான Coordinate Systems இன் வகைகள்

Coordinate Systems பிரதானமாக  இரு வகைப்படும் அவையாவன,

1.Geographic Coordinate Systems
2.Project Coordinate System (PCS)

என்ற பிரதான இரு அடிப்படையில் புவியின் மேற்பரப்பில் உள்ள இடங்களை வரைவதற்கும் கணணியில் முப்பரிமான மேற்பரப்பினை உருவாக்குவதற்கும் (Create 3D Layers) பயன்படுத்தப்படுகின்றன.

Geographic Coordinate Systems 

இவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பௌதீக மற்றும் பண்பாட்டு (Physical and Cultural) நிலையங்களை தேர்வு செய்து அதன் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகையை வரையறுத்து அவை எங்கே இணைகின்றன. என்பதனை தெளிவாகிறது. இது எமது வரைபடத்தின் இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக வெளி கொண்டுவருகின்றது.

Geographic Coordinate System  புவியியல் ஒருங்கிணைப்பு என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள இடங்களை கண்டறிவதற்கான முறையாகும்.

புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்கள் எந்த மையத்தில் அமைந்துள்ளன என்பதனை இது குறிக்கின்றது .இவை புவியின் மேற்பரப்பில் கற்பனையாக வரையப்பட்டுள்ள(Imaginatively drawn) அகலாங்கு மற்றும்  நெட்டாங்குகளை அடிப்படையாகக் கொண்டமைந்தது.

Project Coordinate System (PCS)

Project Coordinate System (PCS)  எனப்படுவது புவியின் மேற்பரப்பில் தட்டையாக வரையப்பட்டிருக்கும் படங்களின் மேற்பரப்பின் இருப்பிடங்களை அடையாளம் காண மற்றும் அளவிடுவதற்கு பயன்படும் அமைப்பாகும்.

 இது புவியில் சில பல கற்பனை கட்டங்களை அமைத்து Coordinate களை உருவாக்கும்.இங்கு X அச்சு மற்றும்ல Y அச்சு என்ற அழகுகள் உள்ளதுடன் கணித மாற்றங்கள் எண் திட்ட வகைகளை இவை கொண்டுள்ளது.

சரியான Projection அமைப்பை எவ்வாறு வரையறுப்பது How to define right coordinate system

இங்கு நாம் இலங்கையின் யாழ்-Jaffna மாவட்டத்திற்கான Coordinate System எவ்வாறு வழங்குவது, என பார்ப்போம், இது முழு இலங்கைக்கும் பொருத்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு எம்மால் உள்ளீடு செய்யப்பட்ட வரைபடத்திற்கு அல்லது shape File க்கு Coordinate System வழங்கப்பட்டுள்ளதாஎன்பதனை அறிந்து கொள்வதற்காக Table Of Contents என்ற பகுதியில் எமது படத்தின் பெயர்கொண்ட லேயரினை(Jaffna) Right Click செய்து Properties என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

Project Coordinate System (PCS)- Coordinate System

Project Coordinate System (PCS)- Coordinate System

அதில் தோன்றும் Layer Properties என்பதில் கோர்டினேட் சிஸ்டம் என்பது Coordinate System: <Undefined> என காட்டப்பட்டுள்ளது. எனவே எம்மால் தெரிவு செய்யப்பட்ட வரைப்படத்தில் எந்தவிதமான கோர்டினேட் அமைப்பும் உட்பகுத்தப்படவில்லை ஆகவே, இது புவியில் எந்த ஒரு பகுதியினையும் சரியாக காட்டாது. ஆகவே இதற்கு நாம் கோடினேட் சிஸ்டத்தை வழங்குவது அத்தியாவசியமாகும்.

Coordinate System: <Undefined> Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS
Coordinate System: <Undefined>


ஆகவே எமது Shape File க்கு சரியான Coordinate System தேர்வு செய்வதற்கு ஆர்க் மெப்பில் Menu bar இல் அமைந்துள்ள Arc Toolbox  கிளிக் செய்ய வேண்டும்.

Arc Toolbox,Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS
Arc Toolbox


பின்பு திறக்கும் Dialog box ல் Data Management tools என்பதனை தேர்வு செய்ய வேண்டும் .

Data Management tools,Arc Toolbox,Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS

Data Management tools

பின்பு அதில் காட்சிப்படுத்தப்படும் தரவுகளில் Projections and Transformation என்பதனை கிளிக் செய்ய வேண்டும்


Data Management tools,Arc Toolbox,Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS,Data Management tools,Arc Toolbox,Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS

Projections and Transformation

பின் அதில் தோன்றும் அட்டவணையில் Define Projection என்பதனை தேர்வு செய்தல் வேண்டும்.

Define Projection,Data Management tools,Arc Toolbox,Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS,Data Management tools,Arc Toolbox,Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS
Define Projection

பின்பு தோன்றும் Define Projection கட்டமைப்பில் முதலாவதாக Input Dataset or Feature Class எனத் தோன்றும் மெனுவை கிளிக் செய்து நாம் Coordinate System வழங்க வேண்டிய படத்தினை தெரிவு செய்ய வேண்டும். இங்கு Jaffna என்பது என்னுடைய படத்தின் தலைப்பாக உள்ளது, ஆகவே அதனை கிளிக் செய்து தேர்வு செய்துக்காள்ள  வேண்டும்.

Define Projection- Input Dataset or Feature Class,Define Projection,Data Management tools,Arc Toolbox,Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS,Data Management tools,Arc Toolbox,Geographic Coordinate Systems 2.Project Coordinate System (PCS
Define Projection- Input Dataset or Feature Class


பின்பு Coordinate System என்பதனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு Coordinate System:(Unknown) என்ற அமைப்பில் எமது படத்திற்கு ஏற்ற கோர்டினட் சிஸ்டத்தினை நாம் வழங்க வேண்டும் உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் வெவ்வேறான கோர்டினேட் சிஸ்டம் உள்ளமையினை (Each part of the world has a different Coordinate System.) கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு Coordinate System என்பதை Click செய்யும் போது நமக்கு புதிதாக Spatial Reference Properties  என்பது தோன்றும்.

Projected Coordinate Systems எவ்வாறு அமைப்பது -How to set up Projected Coordinate Systems

இங்கு Projected Coordinate Systems என்பதில் National Grids என்பதனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு தோன்றும் வரிசையில் கண்டங்கள் ரீதியாகவும், நாடுகள் ரீதியாகவும் பலதரப்பட்ட தெரிவுகள் காணப்படும்.


Spatial Reference Properties ,
 Spatial Reference Properties 

இங்கு இலங்கை-Srilanka-Jaffna ஆசிய கண்டத்தில் அமைந்துள்ளமையினால் நாம் ஆசியா(Asia) என்பதனை கிளிக் செய்கிறோம்.


Spatial Reference Properties Define Projection- Input Dataset or Feature Class


பின்பு தோன்றும் படத்தில் நாம் இலங்கைக்கு மிகவும் பொருத்தமான கோடி நெட் சிஸ்டமான-Kandawala Sri Lanka Grid என்பதனை தேர்வு செய்து.

Spatial Reference Properties Define Projection- Input Dataset or Feature Class
Kandawala Sri Lanka Grid

இறுதியாக Ok என்பதனை அழுத்துகின்றேன்.

Kandawala Sri Lanka Grid என்பது இலங்கைக்கு மிக மிகப் பொருத்தமான Projected Coordinate Systems இது ஏனைய நாடுகளுக்கு பொருத்தமற்றது. எனவே அந்தந்த நாடுகளுக்கு எற்ற Coordinate Systems எது என தேர்வு செய்ய வேண்டியமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இங்கு நாம் எமது shapefile க்கு Coordinate Systems முறையாக வழங்கியுள்ளோம் எம்மால் வழங்கப்பட்ட Coordinate Systems ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதனை அறிந்துக் கொள்ள Table Of Contents என்ற பகுதியில் அமைந்துள்ள எமது படத்தினை Right Click செய்து Properties. பகுதிக்கு மறுபடியும் செல்ல வேண்டும்.


Layer Properties,gis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate system

Projected Coordinate System: 
 Kandawala_Sri Lanka_Grid

Geographic Coordinate System எவ்வாறு அமைப்பது

ArcMap இல் ஒரு வரைப்படத்திற்கு வழங்க வேண்டிய Geographic Coordinate System நாடுகள்,பிராந்தியம் மற்றும் வலய ரீதியாக உலகின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

பொதுவாக வரைப்படங்கள் பெரும்பாலனவற்றுக்கு WGS1984 என்ற Coordinate System புவியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

Geographic Coordinate System - World- WGS1984 என்ற முறையில் எமக்கான Geographic Coordinate System  அமைத்துக்கொள்ள முடியும்.

,gis,ArcMap,ArcGis,coordinate system,Geographic Coordinate Systems , Project Coordinate System (PCS) coordinate systemGeographic Coordinate System - World- WGS1984

Geographic Coordinate System - World- 
WGS1984

எனினும் எமது படத்திற்கு ஏற்ற பொருத்தமான Geographic Coordinate System  எது என தேர்வு செய்து வழங்கின்  எமது வரைப்படத்தினை நேர்த்தியானதாகும்.

நமக்கு தேவையான Coordinate System எமக்கு தெரியாது இருப்பின் அதற்கான சரியான அமைப்பினை இனையத்தளத்திலிருந்து (Internet), வரைப்படங்களிலிருந்து (Map and Shapefile) அல்லது Google earth போன்ற அமைப்புகளிலிருந்து  பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

முடிவுரை

எம்மிடம் உள்ள வரைபடத்திற்கு முறையான Projection அமைத்துக் கொள்வதின் மூலமாகவே எமது வரைபடத்தினை முறையான விதத்தில் கணினி மயமாக்கப்பட்டு அதிலிருந்து துல்லியமான வெளியீடுகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த வகையில் எம்மிடம் உள்ள வரைபடத்திற்கு எவ்வாறு முறையான கோடிடேட் அமைப்பது என்பது தொடர்பாக நாம் இப்பதிவில் அவதானித்தோம் மேலும் எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த கோடினேட் சிஸ்டம் முறையானது என்பதனை தெரிந்து அதற்கேற்ற வகையில் நாம் Coordinate system  அமைப்பதும் அவசியமானதாகும்

 

Post by: Puvistudy


Post a Comment

புதியது பழையவை