இணையத்தை ஆக்கிரமிக்கும் Nano Banana
இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில் (In the world of Artificial
intelligence) நாளுக்கு நாள் புதிய புதிய Ai கண்டுபிடிப்புகளும் தொடர்பாடல் கருவிகளும் (Artificial Intelligence innovations
and communication tools)அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
சுருங்கக் கூறின் இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவின் தீவிரத்தினை அனுபவித்துக்காண்டிருக்கின்றது (Today's world is experiencing the intensity of artificial intelligence) என்றே கூறலாம். செயற்கை நுண்ணறிவு இன்றேல் உலகின் இயக்கமும் நின்றுவிடக் கூடும் என்றே கூற முடியும் அதற்கேற்ப உலகில் சில நாடுகள் முழுமையாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினை ஏற்றுக்கொண்டு பயணிக்கின்றன.
அதற்கேற்ற வகையில் நாமும் அதன் பயன்பாட்டை அறிந்து அதனை பயன்படுத்தும் போது அவற்றின் ஊடாக பல்வேறு வகையான நன்மைகளையும் புதிய உபயோகங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
நாம் பயன்படுத்தும் முக்கிய Artificial Intelligence அமைபுக்கள் சில
- Deepseek-r1-click
- Llama-Click
- Gemini-Click
- Gpt-5-Click
- Claude-Click
- Mistral-Click
- Meta-Click
- OpenAI o1-Click
- Qwen-Click
- Claude 3 Opus-Click
- Cohere-Click
- Google DeepMind-Click
அந்த வகையில் இப்பதிவில் நாம் இன்றைய நாட்களில் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமிகத்துக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனத்தின் புதிய Artificial Intelligence படைப்பான NanoBanana என்றால் என்ன அதன்,சிறப்பியல்புகள் என்ன அதனை எவ்வாறு நாம் பயன்படுத்தலாம் (How To Use Nano Banana Ai) என்பது தொடர்பாக இப்பதிவில் ஆராய உள்ளோம்.
Nano Banana தோற்றம்-Origion of Nano Banana
Google நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai,CEO of Google) செப்டம்பர் முதலாம் தேதி உத்தியோகபூர்வமாக Nano Banana AI -நானோ பனானாவினை தங்களது AI model Gemini மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
![]() |
| Sundar Pichai,CEO of Google Introduce Nano Banana |
Google நிறுவனத்தினால் தன்னுடைய சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மையான AI தொழில்நுட்ப model Gemini ஆகும் இது பல்வேறு வகையான உபகருவிகளைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அத்தகைய
அமைப்புக்களின் ஒரு புதிய அம்சமே Nano Banana AI - நனோபனானா AI ஆகும். இதனை ஜெமினி
2.5 பிளஸ் இமேஜ் ஜெனரேட்டர்- Gemini
2.5 Flash Image எனவும் அழைக்கின்றனர்.
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Nano Banana AI இமேஜ் ஜெனரேட்டர் என்னென்ன விடயங்களை நமக்கு வழங்கும் என்பதனை இனி நோக்குவோம்.
Nano Banana வை எவ்வாறு பயன் படுத்துவது-How to use Nano Banana
- இதனை நாம் இலகுவாக எமது ஸ்மார்ட் தொலைபேசியில் உள்ள Gemini சாப்ட்வேரின் மூலம் இலகுவாக Open செய்து எமது படங்களை Generator செய்துக்கொள்ளலாம்.
- மற்றொரு முறையாக Google சென்று Google AI Studio என Type செய்து பின் தோன்றும் Google AI Studio Page ல் Try Nano Banana என்பதனை கிளிக் செய்வதன் மூலமாக நாம் இதனை இலகுவாக Operating செய்துக்கொள்ள முடியும்.
கூகுல் Nano Banana AI Image Generator இன் சிறப்புகள்-Features of Google Nano Banana AI Image Generator
Nano Banana AI Image
Generator ஆனது ஏனைய நிறுவனங்களில் பயன்படுத்தும் Open AI களை விடவும் துல்லியமாக படங்களை ஜெனரேட்டர் செய்கின்றது. நாம் எவ்வாறு எங்களுடைய புகைப்படத்தை அப்லோட் செய்கிறோமோ அதற்கேற்ற வகையிலான அவுட்புட் துல்லியமாக (Output accurately) தரவல்லது.
புகைப்படத்தின் முகபாவனை ,பின்னால் இருக்கும் பேக்ரவுண்ட், உடைகள் ஆடை, அணிகலன்கள் படத்தில் இருப்பவற்றை நீக்குதல், சேர்த்தல் மற்றும் , முப்பரிமாணம் போன்ற Removing facial expressions, background clothing, accessories, and other elements from the photo, and adding three-dimensionality பல்வேறு வகையான அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது.
ஒரு போட்டோ ஷாப்(Photo shop) செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் மிகவும் இலகுவாகவும் குறுகிய நேரத்திலும் (Easily and in a short time) நமக்கு செய்து கொடுக்கிறது.
கால விரயமின்றி மிகவும் நேர்த்தியாகவும்
AI மூலமாக செய்யப்பட்டது என்று தெரியாத அளவிற்கு (It's unknown that it was done through AI) நுணுக்கமாகவும் இது நமக்கு மாற்றம் செய்து தருகின்றது.
சில AI ளில் நாம் prompt வழங்கும்போது மிகவும் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் வழங்குவதன் மூலமாகவே எமக்கான Output கிடைக்கும் ஆனால் கூகுள் நானோ பனானாவை பொருத்த அளவு நமக்கு prompt இல் கூடிய அளவு கவனம் செலுத்த தேவையில்லை மிகவும் இலகுவான ஆங்கில வசனங்களை நாம் உள்ளீடு செய்வதன் மூலமாகவே(By entering
simple English sentences)
எமக்கான வெளியீட்டினை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பொழுது சமூக வலைத்தளங்களிலும் (Social Media) Nano Banana 3D Image Generator பாரியளவு பிரசித்தி பெற்றுள்ளது காலத்திற்கு காலம் ஒவ்வொரு தொழில்நுட்பம் சமூக வலைத்தளங்களுக்கு இடையே டிரெண்டாகும் அந்த வகையில் இப்போது 3D Image Generator எல்லோர் மத்தியிலும் பேச்சு பொருளாக மாறி உள்ளதுஇஅதனை நாம் இலகுவாக வடிவமைத்துக்கொள்ள முடியும். கீழே உள்ள prompt ஐ வழங்குவதன் மூலமாக இலகுவாக வடிவமைத்துக்கொள்ள முடியும்.
prompt:
"Create a 1/7 scale commercialized figure of the character from the illustration, designed in a realistic style within a natural environment. Place the figure on a computer desk, mounted on a circular transparent acrylic base with no text or labels. On the computer screen, show the ZBrush modeling process of the figure. Beside the screen, include a BANDAI-style toy packaging box featuring the original artwork as its printed design."
![]() |
| Nano Banana 3D Image Generator |
ஏனைய AI ளில் நாம் வழங்ககும் படத்தின் உண்மை தன்மையினை அவ்வாறே முன்வைப்பதில்லை
பல்வேறு வகையான வித்தியாசங்களை எம்மால் உணர முடியும் எமது முக பாவனை முழுவதுமாக மாற்றப்பட்டு
வழங்கும் ஆனால் இதில் எங்களின் முகத்தின் உண்மை தன்மை மாறால் அவ்வாறே உள்ளப்படி வழங்கும்
தன்மை கொண்து.இது இதன் முதன்மையான சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.
ஏனைய Image Generator களில் நாம் ஆங்கில மொழியை மாத்திரமே பயன்படுத்த முடியும் ஆனால் Nano Banana AI Image Generator AI நாம் எமக்கு தெரிந்த எம் மொழியையும் பயன்படுத்தலாம் Google Translate மூலமாக தானாகவே அதனை மொழிபெயர்த்துக் கொள்ளும் திறனை அது கொண்டுள்ளது இங்கு எடுத்துக்காட்டாக நாம் தமிழில் ஒரு prompt ஐ கொடுத்து அவதானிப்போம்.
”பூனையும் , நாயும் கடற்கரையில் பந்து விளையாடுகின்றன.அனைவரும் அதனை பார்த்து ரசிக்கின்றனர்.”
![]() |
Nanao Banana response in Tamil |
மேலும் Nano Banana Image Generator மூலமாக எங்களுடைய படங்கள் எண்ணற்றவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம் ஏனைய Image Generator களில் குறிப்பிட்ட அளவு படங்களிலேயே எம்மால் Generator செய்ய முடியும் குறிப்பாக நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரமே முடியும் அதற்கு மேல் என்றால் Subscribe செய்ய வேண்டும் அதற்கு பெரும் தொகை செலவிட வேண்டும் ஆனால் ஜெமினி மூலம் எண்ணற்ற படங்களை இலகுவாகவும் இலவசமாகவும் நாம் Generator செய்துக்கொள்ளலாம்.
நாம் எமக்கு தேவையான YouTube Thumbnail களை மிகவும் இலகுவாக இந்த Nano Banana AI Image Generator மூலமாக வடிவமைத்து கொள்ளலாம்.
prompt:
Create a bold and eye-catching YouTube thumbnail 9:16 ratio, featuring the iPhone 16 Pro. steve jops holding the iPhone 16 Pro, Show the phone in a large, centered view with its sleek design clearly visible (triple camera setup, premium finish). Add a modern tech background . “iPhone 16 Pro – First Look!” in a clean,futuristic font.
| YouTube Thumbnail created by Nanao Banana AI |
இத்தகைய AI Studio களின் வருகையின்
காரணமாக பல்வேறு வகையான நன்மைகள் காணப்படும் அதேவேளை Editors ,Graphic Designer,
Freelancer போன்றவர்களுக்கு பாதக விளைவுகளையும் தோற்றுவிக்கும் என்பதில் எந்த விதமான
மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால் அவர்களுடைய தொழில் வாய்ப்பும் பாதிப்படையும்.
எவ்வாறு இருப்பினும் நாம் செயற்கை
நுண்ணறிவு கருவிகளையும் அதன் சாதனங்களையும் எமது தேவைக்கு ஏற்ற வகையிலும் குறிப்பிட்ட
கால அளவு மாத்திரமே பயன்படுத்த வேண்டும் அத்துடன் அத்தகைய சாதனங்களுக்கு அடிமையாவதனையும்
தடுப்பதற்கான முறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.






கருத்துரையிடுக