அறிமுகம்:சுகாதார முகாமைத்துவத்தில் நோய்ப் பரவல் கோட்பாடு -Disease Diffusion Theory
மருத்துவப் புவியியல் (In Medical Geography) மனித சூழலையும் இயற்கையையும் (Human environment and nature) அவற்றில் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளையும் (Health problems) பல்வேறு வகையான கோட்பாடுகள் (Theories) மூலமாக ஆய்வுக்குற்படுத்துகின்றது.
சுகாதாரப் பிரச்சினைகளில் தொற்று நோய்கள் (Infectious diseases) மிக பிரதானவையாக உள்ளன இவை, குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தோற்றம் பெற்று இன்னோரிடத்திற்குப் பெருந்தொற்றுகளாக(Pandemic) பரவலடையும் தன்மை வாய்ந்தன.
இவ்வாறு பரவலடையும் தொற்றுநோய்களின் பரவல் தொடர்பாகவும் (Regarding the spread of infectious diseases),அதன் பாதக தன்மைகளையும்,அவை ஏற்படுத்தும் தாக்கத்தினையும் மதிப்பிட மருத்துவப் புவியியல் முன் நிற்கின்றது.
அத்தகைய தன்மையில் மருத்துவப் புவியியலில் பெருந் தொற்று நோய்களையும் அதன் பரவலையும் ஆராயும் கோட்பாடுளில் முதன்மையானதாக நோய் பரவல் கோட்பாடு (Disease Diffusion Theory) அடையாளப்படுத்தப்படுகின்றது.
இப்பதிவில் நோய் பரவல் கோட்பாடு (Disease Diffusion Theory) என்றால் என்ன அதன் முக்கியத்துவம் அது புவியியல் துறையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது தொடர்பாக நோக்கவுள்ளோம்.
நோய் பரவல் கோட்பாடு என்றால் என்ன -What is the Theory of Disease Diffusion
நோய் பரவல் கோட்பாடு (Disease Diffusion Theory) என்பது புவியியல் பகுதிகளில் மற்றும் மானிடப் பிரதேசங்களில் எவ்வாறு நோய் தொற்றுகள் பரவலடைகின்றன(How do diseases spread across geographic areas?) என்பதனை புரிந்து கொள்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு விஞ்ஞான ரீதியான கட்டமைப்பு (A scientific structural theory) கோட்பாடாகும்.
நோய் பரவலாக்க கோட்பாடு என்பது குறிப்பிட்ட புவியியல் பரப்பில் காணப்படும் மக்கள் தொகைக்குள் (Population) கொள்ளை நோய்கள் (Epidemic diseases) எவ்வாறு ஊடுருவி பரவுகின்றன என்பதனை புரிந்து கொள்வதற்கான கட்டமைப்பாகும்.
தொற்று நோய்கள் (Infectious diseases),சமூக நோய்கள் (social diseases), பாலியல் நோய்கள் (sexually transmitted diseases) மற்றும் பெருந் தொற்றுகள் (Pandemic) என்பனவற்றின் இயக்கம் மற்றும் விரிவாக்கம் (Movement and expansion) என்பனவற்றினை நோய் பரவலாக்க கோட்பாடு ஆராய்கின்றது.
நோய் தொற்றுக்கள் மற்றும் பெருந்தொற்றுக்கள் (Infections and Epidemics) என்பன எவ்வாறு தோற்றமடைந்து விரிவாக்கம் பெற்று பரவலடைகின்றன என்பதனை மாதிரியாக்க நோய்ப் பரவல் கோட்பாடு (Disease Diffusion Theory) வெளிகாட்டுகின்றது.
![]() |
நோய் பரவலின் வரலாற்று பின்னணி -Historical Background of Disease Diffusion |
நோய்பரவலினை புவியியலாளர்கள் இடரீதியான பரம்பலுடன் குறித்த இடத்தினுள் குறிப்பிட்ட நேரத்தினூடான ஒரு தோற்றப்பாடாகப் பரவலடைவதாக வரையறுக்கின்றனர். மேலும் இவற்றினை பரப்பியல், சமூக,அரசியல், கலாசார,பொருளாதார மற்றும் பௌதீகவியல் (Geography, Social, Political, Cultural, Economic and Physical Sciences) தோற்றப்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்றனர்.
நோய்ப் பரவல் கோட்பாட்டின் தோற்றம்- Origin of Disease Diffusion Theory
நோய்ப் பரவலாக்க கோட்பாட்டின் பிரதான காரண கர்த்தாவாக டார்ஸ்டன் ஹேகர்ஸ்ட்ராண்ட்- Torsten Hagerstrand உள்ளார். இவர் 1968 ஆம் ஆண்டில் தனது கோட்பாட்டு விளக்கத்தினை முதன் முதலாக முன்வைத்தார்.
இவர் 1968 ஆம் ஆண்டில் “Waves of Innovation” என்ற தனது எடுத்து வைப்பின் மூலமாக நோய்ப் பரவல் கோட்பாட்டிற்கு (Disease Diffusion Theory) அடித்தளமிட்டார்.
![]() |
டார்ஸ்டன் ஹேகர்ஸ்ட்ராண்ட்- Torsten Hagerstrand |
இவர் மருத்துவ துறையுடன் புவியியலாளர்களின் (Geographers and Medical field) தொடர்பினை ஒன்றிணைத்து மருத்துவ வரைபடவாக்கத்திற்கு (Medical Mapping) இடம் சார்ந்த பரவலை முன்வைப்பதற்கு வழி வகுத்தார்.
இவர் குறித்த புவியியல் மையப் பகுதியிலிருந்து (From the geographical core area) தோற்றம் பெரும் நோயானது ( Diseases) அதன் தீவிர தன்மையை அதிகரித்து எவ்வாறு திசை மற்றும் கட்டமைப்பு (direction and structure) ரீதியாக பரவல் அடைகின்றது என இக் கோட்பாட்டில் விளக்குகின்றார்.
Torsten Hagerstrand ஒவ்வொரு நிகழ்விலும் இடரீதியான தன்மை எவ்வாறு காலத்திற்கு காலம் மாற்றமடையும் என்பதுடன் அதனை விவரிக்க இடரீதியான பரவல் மாதிரியின்(Spatial Diffusion Model) கட்டமைப்பின் முக்கியத்துவத்தினை விளக்குகிறார்.
டார்ஸ்டன் ஹேகர்ஸ்ட்ராண்ட்- (Torsten Hagerstrand) தென் சுவீடன் ஊடாக காசநோயானது விலங்குகளின் ஊடாகப் பரவுகின்றமையை எடுத்துக்காட்டியுள்ளார்.
இதனை வரைபடத்தில் குறித்துக் காட்டுவதன் மூலம் இத்தகைய பரவலாக்கமானது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு செல்கின்றமை அலையை “Waves” ஒத்ததாகக் காணப்படுவதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதிய இடத்திற்கு நோய் பரவும் போது நோய் பரவல் ஏற்படுகிறது மேலும் ஒரு நோய் ஒரு மைய மூலத்திலிருந்து பல கோணங்களில் பரவுகிறது அல்லது வெளியேறுகிறது என்பதை இவர் வலியுருத்துகின்றார்.
இவ்வாறான பரவலமைப்பானது தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலோ அல்லது பிராந்திய, நகர குடியிருப்பு (Regional or Urban) ரீதியிலோ காணமுடியும் என்கிறார். இதற்கிணங்க புவியியலாளர்கள் தொற்றுநோய்ப் பரவலை “பரவல் கோட்பாடு” (Disease Diffusion Theory) மூலம் ஆய்வு செய்கின்றனர்.
டார்ஸ்டன் ஹேகர்ஸ்ட்ராண்ட்- (Torsten Hagerstrand) பரவல் வடிவ மாதிரி
பரவல் வடிவத்தைப் பயன்படுத்தி நோய் பரவுவதைக் காண்பிக்கும் டார்ஸ்டன் ஹேகர்ஸ்ட்ராண்ட்- (Torsten Hagerstrand) முன்வைப்பானது ஒப்பீட்டளவில் நவீனமானது, அத்துடன் முந்தைய முறைகளுடன் ஒப்பிடும்போது இது வினைத்திறனாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டார்ஸ்டன் ஹேகர்ஸ்ட்ராண்ட் கூற்றுப்படி குறிப்பிட்ட பகுதியில் பரவலடையும் நோய் தொடர்பான வரைப்படத்தினை உருவாக்கும் போது பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
- நோய் நிகழ்வுகளில் இடஞ்சார்ந்த மாறுபாட்டை விவரிக்க ஒரு காரணவியல் கருதுகோளை உருவாக்குதல்.
- அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் காணல்.
- தடுப்பு நடவடிக்கை முறைமையினை மேற்கொள்ளும் பரப்பு.
- சிறந்த இடர் தயாரிப்புக்காக ஒரு பிராந்தியத்திற்கான நோய் அபாயத்தின் வரைபடத்தை வழங்குதல்.
நோய் பரவலின் பிரதான வகைகள்-Main types Disease Diffusion
நோய் பரவலின் பிரதான நான்கு வகையாக பின்வருவன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
- வளர்ச்சி பரவல் (Growth Diffusion)
- தொற்று பரவல்(Contagious diffusion)
- தரப்படுத்தக்கூடிய பரவல் (Gradable diffusion)
- இடமாற்றம் பரவல்(Relocation diffusion)
மேலும் இவற்றினை தவிர்த்து
- வலையமைப்பு பரவல்(Network diffusion)
- கலப்பு பரவல் (Mixed diffusion) ஆகிய இரண்டினையும் குரோம்லி மற்றும் மக்லாபெர்டி (Cromley and McLafferty) ஆகியோர் முன்வைத்துள்ளனர்
இவ்வாறான வகைப்பாடுகள் நோய் பரவல் கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பவனாகவும் அவற்றின் பரவும் தன்மையினை இலகுவாக வகைப்படுத்துபவையாகவும் உள்ளன.
உலகில் பரவலடைந்த பெருந்தொற்று நோய்கள்-World's deadliest infectious diseases
- 1918 ஃப்லு (1918 Flu)
- ஜஸ்டினியன் பிளேக் (Plague of Justinian)
- எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றுநோய் (HIV/AIDS)
- கருப்பு மரணம் (Black Death)
- கோவிட்-19 (COVID-19 pandemic)
- ஹாங்காங் ஃப்லு (Hong Kong flu)
- நேபிள்ஸ் பிளேக் (Naples Plague)
- காலரா (Cholera)
- வயிற்றுப்போக்கு நோய்கள் (Diarrheal diseases)
- தட்டம்மை (Measles)
- மலேரியா (Malaria )
- டெங்கு காய்ச்சல் (Dengue fever)
நோய்ப் பரவல் காவிகள்-Methods of disease transmission
- ஒட்டுண்ணிகள் (Parasites)
- காற்று மற்றும் சுவாச மூலம் (Through air and breathing )
- உணவுப் பொருட்கள் வழியாக (Through food )
- நச்சுக்கள் நோய்கள் (Toxins)
- பால்வினை தொற்றுக்கள் (Sexual transmissions)
- பூஞ்சைகள் (fungi )
- நீர் (Water )
- காலநிலை (Climate)
- நுண்ணுயிர் (Microorganism)
நோய்ப் பரவல் கோட்பாட்டின் முக்கியத்துவம்-Importance of Disease Diffusion Theory
- புவியியலாளர்கள் மற்றும் மருத்துவ வரைப்படவியலாளர்கள்(Geographers and medical cartographers) இடஞ்சார்ந்த பரவலை(Spatial distribution) வரைபடமாக்குவதற்கு (Map) அடிப்படையினை நோய் பரவல் கோட்பாடு வழங்குகின்றது.
- நோய் பரவல் கோட்பாடானது தொற்று நோய்களின் தோற்றம்(Origin of diseases), பரவலடையும் வேகம்(speed of spread),அதனுடைய தாக்கம்(impact) மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றம்(change in society) தொடர்பான விடயங்களை வெளிப்படுத்துகின்றது.
- குறித்த நோய் தொற்றுக்கான காரணிகள் மற்றும் ஏதுக்கள்(Factors and causes) என்ன என்பதனை தெளிவாக பட்டியலிட உதவுகின்றது.
- நோய் தொற்றுக்கள் எவ்வாறு பௌதீக மானிட சூழலை பாதிக்கின்றன(how infectious diseases affect the physical human environment) என்பதனை ஆய்வு செய்வதற்கு பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.
- நோய் கண்காணிப்பு மையங்களை(Centers for disease surveillance) உருவாக்கி நோய் பரவலை கட்டுப்படுத்துகின்றது.
- இன்று பரவல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பெருமளவான புவியியலாளர்கள்(Geographers),சமூகவியலாளர்கள்(Sociologists ) மற்றும் உளவியலாளர்கள்(Psychologists) கருத்துப் பரவல்களையும் பழக்கவழக்கங்களையும் ஆய்வுக்குட்படுத்துகின்றனர்.
- நோய் தொற்று காரணமாக இடம்பெறும் மக்களது இடப்பெயர்வு கோலங்களையும் அதன் போக்குகளையும் (Migration and its Trends) எளிதாக அவதானித்துக்கொள்ள முடியும்.
- பரவல் கோட்பாட்டின் எண்ணக்கரு மாதிரியானது பரப்பியல்,கால மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் தொடர்பாக தொற்றுநோய் பரவலடைவதை விபரிக்கின்றது. குறிப்பாக கால,இட பங்களிப்பானது இங்கு முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது. சமூகத்தில் அலகுகளான பாடசாலை,குடும்பம்,சமய நிறுவனங்கள்,தொழில் மையங்கள்,வணிக மையங்கள் போன்றனவற்றை கண்காணித்து நோய் பரவலை தடுக்க முடியும்.
- தொற்றுநோய்களின் பரவலைக் குறைப்பதற்கு சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் மற்றும் தயார்நிலைகளை(Warnings and Precautions) நடைமுறைப்படுத்த உதவுகின்றது.
- நோய் பரவுதல் அதற்கான தடுப்பு மற்றும் தகுந்த சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை (Awareness) ஏற்படுத்துகின்றது.
- இந்தவகையில் பெறப்படுகின்ற அளவுசார் தரவு மூலங்கள் பொருத்தமான மென்பொருள் நுட்பங்களின் உதவியுடன் (e.g. Microfoft Package,GIS) ஆய்வறிக்கையில் பயன்படுத்தப்படகின்றன.
முடிவுரை
சுகாதார முகாமைத்துவத்தில் நோய் பரவல் கோட்பாடானது(Disease Diffusion Theory) மருத்துவப் புவியியலில் தவிர்க்க முடியாததொரு வகிப்பங்கினை வழங்குகின்றது. நோய்களின் தோற்றம், பரவல், அதன் தீவிரம் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பனவற்றை அட்டவணைப் படுத்துவதன் மூலமாக நோய் பரவல் கோட்பாடு மருத்துவப் புவியியலில் முதன்மையானதாக நோக்கப்படுகின்றது.
இன்றும் நோய் பரவல் கோட்பாடானது(Disease Diffusion Theory) தன்னை புதுப்பித்துக் கொண்டு உலகின் நிகழும் பெருந் தொற்றுக்களுக்கு முகாமைத்துவ நடவடிக்கைகளை முன் வைப்பதில் முன் நிற்கின்றது.
இவ்வாறு நாம் மேலே நோக்கிய வகையில் நோய் பரவல் கோட்பாடு அமையப் பெற்றுள்ளது.




கருத்துரையிடுக