Introduction of ecocentrism and Historical Background.

அறிமுகம்:சூழல்மையவாதமும் வரலாற்றுப் பின்னணியும் அறிமுகம்-Introduction of Ecocentrism and Historical Background.

மானிட மற்றும் இயற்கைச் சூழல் இடைத்தொடர்பினை ஆராயும் (Interaction Between Humans and The Natural Environment) புவியியற் கற்கைநெறி மனிதனையும் சூழலையும் முதன்மைப்படுத்தி அதனை ஆராயும் கோட்பாடுகளை அதிகளவு முன்வைத்து வருகின்றது.


புவியியல் கருதுக்கோள்களில் (Hypothesis) இயற்கையை மையப்படுத்தியும் (Focusing on nature) மறுபுறம் மனிதனை மையப்படுத்தியும்(Human-centered) இரு சாரார் தங்களுடைய வாத,பிரதிவாதங்களை(Arguments and counterarguments) முன்வைக்கின்றனர்.

இவற்றுள் சூழல்மைய வாதமும் மானிட மைய வாதமும் (Ecocentrism and anthropocentrism) பிரதான வாதப் பொருட்களாக உள்ளன.நாம் ஏலவே எமது முன்னைய பதிவில் சூழல் மையவாதம்(Ecocentrism) தொடர்பாக ஆராய்ந்துள்ளோம்.

சூழல்மையவாதக் கோட்பாடானது புவியியல் அறிஞர்களினால் (Geologists) வெவ்வேறு காலகட்டத்தில் பல்வேறு கோணங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

சூழல்மையவாதம்(Ecocentrism) தொடர்பாக சூழல் வாதிகளில்(Environmentalist) ஒருசாரார் சூழலில் எவ்வித மாற்றத்தையும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்இவர்கள் தீவிர சூழல்வாதிகள்(Radical Ecocentric) என அழைக்கப்படுகின்றனர்.

அதே சமயம் மற்றுமொரு பிரிவினரான கம்யூனிசவாதிகள்(Communists) என அழைக்கப்படுகின்றனவர்கள் சூழலில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்கின்றனர்.


சூழல்மையவாத கோட்பாட்டின் விருத்தி கட்டங்கள் -Developmental Phases of Ecocentrism 

சூழல்மையவாத (Ecocentrism) கோட்பாட்டின் விருத்தி கட்டமானது பல்வேறு உப பகுதிகளை ஒன்றிணைத்து விருத்திடைந்துள்ளது. புவியியலின் ஆரம்ப காலகட்டங்களிலிருந்து தோற்றம் பெற்று வளர்சியடைந்து, இன்று புவியியலின் அனைத்து பரப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் இக்கோட்பாட்டின் விருத்தி கட்டங்களை( Development stages) பின்வருமாறு அடையாளப்படுத்த முடியும்.


ஆரம்பத்தளம் -The Starting Point

Introduction of ecocentrism and Historical Background.

இயற்கை அம்சங்களையும் அதன் பௌதீக கூறுகளையும் (Natural features and physical properties) மையப்படுத்திய கோட்பாடாக இது காணப்பட்டது. இதனை ஆராய்யும் ஆய்வாலர்கள் இவ்வுலகின் அனைத்து இயற்கைப் பொருட்களும் இறைவனினால் உருவாக்கபட்டது (Nature was created by God) என்றனர்.

“பூமியில் வாழும் ஏனைய உயிரினங்கள் போன்று மனிதனும் ஓர் அங்கியாவான் (Man is an organism like any other living being on earth)”, இவன் இயற்கை சூழலை சார்ந்தே தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறான்.

மனிதன் இயற்கையுடன் சுமுகமாகவும்,ஒழுக்கமாகவும் மற்றும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும்.

இயற்கையை அதன் போக்கில் விட்டுவிடவேண்டும்.

இயற்கையை இயற்கையாகப் பேணினால் மாத்திரமே மனிதன் அச் சூழலில் வாழ முடியும்.என்கிறது


நம்பிக்கை முறைமைகள் -Belief Systems

நம்பிக்கை –(Belief ) அடிப்படையில் தமது கருத்தினை முன் வைப்பவர்கள், பழமைவாத பழக்க வழக்கங்களையும் நம்பிக்கை முறைமை அடிப்படையிலான எண்ணக்கருக்களையும் பின்பற்றுபவர்கள் ஆவர்.

குறிப்பாக இவர்கள் மரபு சார் முறைகளை(Conventional methods) ஆதரிப்பவர்களாகவும் மற்றும் நவீன தொழில்நுட்ப பாவனைக்கு எதிரானவர்களாகவும் காணப்படுபவர்கள்.

இயற்கையின் தோற்றப்பாடுகளையும்,செயற்பாடுகளையும் மற்றும் அதன் விருத்தியினையும் நம்பிக்கை சார் கண்ணோட்டத்தில் அவதானிக்க கூடியவர்கள். 

இயற்கையில் காணப்படும் வளங்களினை சம பங்கீடு செய்தல்(Equal distribution) வேண்டும் என்பதே இவர்களின் அடிப்படை நம்பிக்கை முறையாகும்


சுற்றாடல்  மரபு-Environmental legacy

சுற்றாடல் மரபின்-Environmental legacy பிரதான அம்சம் சூழல்(Environmental) ஆகும். இதுவே அடிப்படையானதாகவும் இதன் மையக்கருத்தாகவும் இங்கு அமையப்பெற்றுள்ளது.

மிகக்குறைந்தளவான அல்லது முற்றும் விலக்கப்பட்ட சூழல் மீதான தலையீட்டுடன் மனிதர்கள் உயிர் வாழலாம் என 'தாராளவியலாளர்கள்' (Liberal Eccentrics)  கூறும் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றனஇவர்கள் பழமைவாத சூழல் வாதிகள் (Conservative Eccentrics)  எனப்படுகின்றனர்


வரலாற்று அடித்தளம் -Historical foundation

வரலாற்று அடித்தளத்தை(Historical) நோக்கும் போது அங்கு முற்று முழுதாக மனிதர்கள் சூழல் நேசவாதிகளாக(environmentalists) அடையாளப்படுத்தப்பட்டனர்.

வரலாற்று அடித்தள காலத்தில் ஆதிவாசிகளும், வேட்டை தொழில் செய்வோரும் ,விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் சுதேசவாசிகளும் (hunters, agricultural activities and indigenous people) அதிகளவு இயற்கை நேய செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

இங்கு இயற்கை சார் பண்புகள் அதிகளவு கொண்டுள்ளதுடன், இயற்கைச் சார்ந்து அவர்களுடைய வாழ்வு கட்டமைக்கப்பட்டிருந்தது. இவர்கள் மூலம் சூழல் மிகவும் பாதுகாக்கப்பட்டது


நவீன பிரயோகவியலாளர்கள்-Modern environmentalists

19 ஆம் நூற்றாண்டில் அதிகப்படியான செயற்பாடுகள்,நவீன புவியியலாளர்களை(Modern geographers) சூழல்மையவாத கருத்துக்களை நோக்கி திசை திருப்பின.இத்தகைய காரணங்களினால் இவர்கள் சூழலையும் அதன் இயல்புகளையும் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினர்.

இக்காலப்பகுதியில் சூழல் மையவாதக்கருத்துக்கள் தீவிரமயமானதுடன் நவீன காலத்தில் இருக்கின்ற தீவிர சூழலியல் வாதிகள் சூழலியல் கருத்துக்களை பிரையோகிப்பவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறு சூழல்மையவாத கருத்துக்கள் காலத்திற்கு காலம் மாறுபாடான வழிகளில் சென்று இன்று அதன் உச்ச தன்மையை எட்டியுள்ளது எனலாம்.


இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் (The modern technological world) பல்வேறு நிறுவனங்களும், அமைப்புகளும்,அரசாங்கங்களும்,தனியார் நிறுவனங்களும் (Institutions, Organizations, Governments and Private Institutions) சூழல் மையவாத கருத்தை பிரதான எடுகோளாக கொண்டு பயணிக்கின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

சூழல்மையவாதிகளும்,தீவிர சூழலியல் வாதிகளும் இயற்கையினையும் சூழலையும் மையப்படுத்தி இவையே மனித வாழ்விற்கு பிரதானமானவை. மனிதன் இவற்றில் தங்கி இருக்கும் ஒரு அங்கியே என்கின்றனர்.


நவீன சூழலியவாதத்தின் பண்புகள்- Characteristics of modern environmentalism

இன்று புவியியலில் சூழல்மையவாத எண்ணக்கரு பாரியளவில் விருத்திடைந்துள்ளதுடன் பிரதான பேச்சு பொருளாகவும் மாறியுள்ளது. அதன் மிகப் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றினை பட்டியல் படுத்த முடியும்.

  •  இயற்கை சூழலே முதன்மையானது ஆகவே அதற்கு அனைவரும் முக்கியத்துவமளித்தல் வேண்டும்.
  • அபிவிருத்தி திட்டங்கள் நிலைப்பேண் அபிவிருத்தியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்.(sustainable development)

sustainable development
sustainable development


  • சூழலியல் ஒழுங்கு முறை (Ecological  system) அம்சங்களை அடையாளப்படுத்துதல்.
  • சூழல்நேய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம்(Environmental Development and Economy)
  • உயிரின பாதுகாப்பு சட்டங்கள் (Biodiversity laws)
  • மீளப்புதுப்பிக்கக்கூடிய வளங்களை பயன்படுத்துதல்(Use of renewable resources)
  • ஆபத்தை எதிர் நோக்கியுள்ள உயிரினங்களின்  பாதுகாப்பு(Conservation of endangered specie)
  • இயற்கை பாதுகாப்பில் மக்களின் பங்குபற்றுதலை அதிகரித்தல்(Increasing people's participation in nature conservation)
  • தகவல் மற்றும் கருத்து வெளியீடு(Publication and opinion)
  • குறைந்த மட்ட தொழிநுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி(Low level of technology and economic development)

மேற்போன்றன சூழல்மையவாதத்தில் குறிப்பிடத்தக்க சில பிரதான பண்புகளாகும்.


முடிவுரை

சூழல் மைய வாத கோட்பாடானது புவியியலில் தவிர்க்க முடியாத பங்கினை வழங்கி வருகின்றது. புவியியல் பாடப்பரப்பிலும்,புவியியல் ஆய்வுகளிலும் அதிகளவான செல்வாக்கினை கொண்டிருக்கும் இக்கோட்பாடு தொடர்பாக தெளிவான அறிவினை கொண்டிருத்தல் புவியியல் தொடர்பான அறிவினை மேலும் விருத்திக்குள்ளாக்கும்.

மேலும் இயற்கையினையும் ,புவிச் சூழலையும் நிலைப்பேன் தன்மையுடன் அணுகுவதற்கு எமக்கு சூழல்மையவாத எண்ணக்கரு எம்மை வழிப்படுத்துகின்றமையும் அவதானிக்கமுடிகின்றது.

நாம் இப்பதிவில் சூழல்மையவாதத்தின் வரலாற்றுப் பின்னணி கட்டங்களை அவதானித்துள்ளோம் எதிர் வரும் பதிவுகளிலும் நாம் சூழல்மையவாதத்துடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்வோம்.

Post by: Puvitips

Post a Comment

புதியது பழையவை