புவியியலில் மானிட மையவாத கொள்கை | Human-Centric Ideology in Geography
புவியியல் பரப்பில் (In
the study of geography) மிக முக்கியத்துவடைய கோட்பாடுகளாக,
- சூழல்மையவாதமும் (Ecocentrism),
- மானிட மையவாதமும் (Anthropocentrism)
அடையாளப்படுத்தப்படுகின்றன.
புவியியல் ஆய்வாளர்கள்(Geographer)
இவ்விரு கோட்பாட்டின் துணையுடனேயே புவியியல் தொடர்பான தங்களுடைய வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கின்றனர்.
புவியியலில் சூழல்மையவாதம் எத்தகைய வகிப்பங்கினை கொண்டுள்ளதோ அதற்கு சமமான முக்கியத்துவத்தினை மானிட மைய வாதமும் கொண்டுள்ளது என்றால் அது மிகையில்லை.
அந்த வகையில் இன்று நாம் மானிட மையவாதம் என்றால் என்ன? அது எத்தகைய செல்வாக்கினை புவியியல் பரப்பில் செலுத்துகின்றது என்பதனை இங்கு ஆராய உள்ளோம்.
மானிட மையவாத கோட்பாட்டின் உருவாக்கம்-Formation of Anthropocentrism
மானிட மையவாத எண்ணக்கருவானது, இப் புவியில் மனிதனே முதன்மையானவன் அவனே அனைத்ததிற்கும்
மையமானவன். என்றும், இயற்கை வளங்கள் மனித தேவைகள் மற்றும் நலன்களுக்காகவே உள்ளன என்றும் கருதும் கொள்கையாகும்.
![]() |
Formation of Anthropocentrism |
இக் கொள்கையானது புவியியலில் மனிதனுக்கும்–இயற்கைக்கும் இடையிலான உறவை விளக்கும் முக்கிய அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த 'மானிட மையவாதமானது' சூழலியல் வாதிகளினாலே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.
இதனை Dave Foreman இன் “Confessions of an Eco Warrior” என்ற நூல் மற்றும் Christopher இன் Green Rase என்ற நூலிலும் "மனிதத்துவம் ஏன் ஆதிக்கம் செலுத்துகின்றது அதற்கான காரணங்கள் எவை? மற்றும் உலக அபிவிருத்திக்குத் தேவையான பார்வைகள்" என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தச் சூழலியல் வாதிகள் மானிட மையவாதக் கருத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
மானிட மையவாதம் மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களுள் Dave Foreman, Christopher என்போராலும் சூழலியல் நெருக்கடி, அதிகரித்த மனித சனத்தொகை மற்றும் மனித உயிர்களின் சேதம் தொடர்பாக பேசியோராலுமே முதலில் அடையாளம் காணப்பட்டது.
மானிட மையவாதமானது உரோமர் காலத்திலிருந்து மேற்கு நாடுகளை மையமாகக் கொண்ட யூதேயா கிறிஸ்தவ (Anthrop- Centric judaeo christain) மரபினைப் பின்பற்றி வந்தமையினால் சூழலை எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளுதல் என்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
மானிட மையவாதமானது தற்போதைய
உலகச்சூழல் மற்றும் அபிவிருத்தி எதிர்வு கூறல் பற்றிய கண்டனத்தையும் கொண்டிருந்தது
(White 1967) அதே வகையான ஒத்த கலாசார அடிநிலைகளிலிருந்து பெறப்பட்ட மாக்சிச வாதம் மற்றும்
இஸ்லாம் கூட மனிதனை மையமாகக் கொண்ட மரபினை கொண்டிருந்தது.
மானிட மையவாதம் என்றால் என்ன-What is Anthropocentrism?
மானிட மையவாதக் கொள்கையின் (Anthropocentrism in Geography) படி இயற்கை மனித தேவைகளுக்கு சேவை செய்யும் வளமாகக் கருதப்படுகிறது. இயற்கை வளங்களான நிலம், நீர், காடுகள், கனிமங்கள் போன்றவை மனித வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன என குறிப்பிடப்படுகின்றது.
![]() |
மானிட மையவாத கொள்கை |
இப் பிரபஞ்சத்தில் மனிதனை மையமாகக் கொண்டு அவனே முதன்மையானவன்(a human-centered) என்பதனை விவரிக்க மானிட மையவாதம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கிரகத்தில் மனிதனே முக்கியமானவன்(humans are the most important
beings) ஏனைய இயற்கை சூழலை மாற்றி அமைக்கும் அதிகாரத்தினை அவனே கொண்டுள்ளான் என இவ்வாதம் நம்புகிறது.
மனிதனை உயர்வாகவும் மையக் கருப்பொருளாகவும் (human beings as the central) கொண்டு ஏனைய உயிருள்ள உயிரற்ற அனைத்து அம்சங்களும் பயணிக்கின்றன என மனித நிறுவனங்களை முதன்மைப்படுத்தும் ஒரு தத்துவ கண்ணோட்டமாகும்
மானிட மையவாத | Human-Centric Ideology கோட்பாட்டின்படி மனிதர்கள் உலகில் உள்ள மற்ற அனைத்து உயிரினங்களையும் விட ஒழுக்க ரீதியாக உயர்ந்தவர்கள் (humans are morally superior) என்ற நம்பிக்கையை விதைக்கின்றது.
இயற்கையும் அதன் வளங்களும்(Nature and its resources) மனித நல்வாழ்வுக்காகவும் அவனது தேவைக்காகவும் படைக்கப்பட்டவை. அவனது நல்வாழ்வை மேம்படுத்த அவை உதவுகின்றன.
'மானிட மையவாதம் என்பது “மனித உயிர்கள் உலகத்தில் உள்ள மிகவும் முக்கியமான மூலாதாரப் பொருளாக தங்களைத் தாங்களே மதித்துக் கொள்ளும் ஒரு கருப்பொருளைக் கொண்ட கோட்பாடாக அமைகின்றது”.
அதாவது மனித தோற்றப்பாட்டின்
ஒரு தனித்துவத்தின் ஊடாக மனிதனே தன்னுடைய உண்மை நிலைவரத்தை மதித்துக் கொள்வதைக் குறிக்கின்றது.
இந்த மானிட மையவாதக் கோட்பாடானது 'மனித தலைமையதிகாரம்' (Human Supremacy) என்பதை வலியுறுத்தும் முதலாவது கருப்பொருளாக அமைகிறது. இந்த நோக்கங்கள் குறிப்பாக சில குறிப்பிட்ட சமய, கலாசாரங்களின் சம்பந்தப்பட்டதாகவே அமைந்தன.
மனிதனை சூழல் கட்டுப்படுத்தும் அதேவேளை மனிதன் சூழலை கட்டப்படுத்தக்கூடிய பகுத்தறிவு மானிடமையவாதத்தின் குறிப்பிடக்கூடிய ஒரு கருத்தாக அமைகின்றது
மனிதன் தனக்கு ஏற்றவகையில் சூழலை மாற்றியமைக்கின்ற நிலைப்பாட்டைக் குறிக்கும் மானிட மையவாதமானது மனிதனை மையமாகக் கொண்ட ஒரு கருத்தாகவும் அமைகின்றது.
மானிட மையவாதக் கொள்கை தொடர்பான அறிஞர்களின் கருத்துகள்.
- கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில் (Aristotle), இயற்கை மனிதனுக்காகவே உள்ளது என்றும் மனிதன் சமூகத்தின் மிக உயர்ந்த உயிரினம் எனக் கருத்து தெரிவித்தார்.
- ப்ரோடாகோரஸ் (Protagoras): மனிதனை மையமாகக் கொண்டு “மனிதனே அனைத்திற்கும் அளவுகோல்”என்னும் சிந்தனையை இவர் வலியுறுத்தினார்.
- மனிதன் இயற்கையை தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற மனித ஆதிக்கப் பார்வையை ரெனே டெஸ்கார்ட்ஸ் (Descartes) என்பவர் முன்வைத்தார்.
- கலாச்சார சூழலியலாளரான (Cultural Ecology) ஜூலியன் ஸ்டீவர்ட் (Julian Steward) மனித கலாச்சாரம் இயற்கையை மாற்றுகிறது எனக் கூறி, மனித –இயற்கை உறவில் மனிதப் பங்கை வலியுறுத்தினார்.
- உலக நெறிமுறைகளில் மனிதனே மையமானவன் அத்துடன் இங்கு மனித நலனே முதன்மை எனக் கூறினார் ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர் இம்யானுவல் காண்ட் (Immanuel Kant) இவரது 'விமர்சனப் பகுத்தறிவு' (Critique of Pure Reason) என்ற படைப்பின் மூலமாக, மனித அனுபவம் என்பது காலத்தையும் இடத்தையும் கட்டமைக்கின்றது என்றார்,
மேற்போன்ற தன்மையில் மானிட மையவாத கொள்கை | Human-Centric Ideology in Geography தொடர்பாக அறிஞர்கள் தங்களின் கருத்தினை முன்வைத்துள்ளனர்.
மானிட மையவாத கொள்கையின் போக்குகள் -Tendencies of Anthropocentric
இது சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஊக்கிவிக்க உதவுகிறது (Helps Motivate Environmental Action) சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் மனித ஆரோக்கியம்(human health) சூழல் பாதுகாப்பு ஏனைய உயிரின பாதுகாப்பு என்பனவற்றினை நேரடியாக பாதிக்கும் விடயங்களை ஆராய்ந்து அவற்றிற்க்கான மாற்று நடவடிக்கைகளை முன்வைக்க முயல்கின்றது.
இந்தப் பூமியிலுள்ள உயிரினங்களில் சிறப்பானதும் அதி சக்தி வாய்ந்த உயிரினமாக மனிதனே உள்ளான் என்பதை மானிட மையவாதம் கூறுகின்றது.
அவனால் விருப்பம்போல் உலகை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். புவியின் உருவாக்க காலம் தொட்டு மனிதனே எல்லா உயிர்களையும் ஆளுகின்றான். அவனுக்கு உகந்த ஆரோக்கியமான சுற்றாடலை ஏற்படுத்திக் கொள்வதில் முன்நிற்கின்றான்.
மனிதன் சூழலில் பரம்பிக் காணப்படும் வளங்களை மாற்றியமைப்பதோடு புதுப்பிக்கவும் செய்கின்றான்.
புதிய புதிய தொழில்நுட்பங்களை தம் அறிவு விருத்தியின் காரணமாக கண்டுபிடிப்பதுடன் அவற்றை பயன்பாட்டிற்கு உட்படுத்தியும் வருகின்றான்.
மனிதனின் அதீத வெற்றியை உச்சளவில் விருத்தியடைந்த சனத்தொகை தற்போது மனிதனால் கட்டுப்படுத்துவதன் மூலமும் மனித உயிர்களுக்கு நேசமான உயிரியல் மற்றும் சூழலியல் வளங்களின் தொகையை அதிகரித்துச் செல்வதன் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.
குறிப்பாக மானிடமையவாதத்தின் கருத்தின் படி மனிதன் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து தனக்குத் தேவையாக மாற்றத்தை ஏற்படுத்துகின்றான் குறிப்பாக மனிதன் ஒரு மாறா சக்தியாக இருக்கின்ற அதேவேளை ஏனையவற்றை மாற்றும் சக்தியாக மனிதன் காணப்படுகின்றான்
சட்டங்கள் மற்றும் கொள்கைகள்(Policy-Making and Law) உருவாக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவை மனித நல் வாழ்வை பாதுகாப்பதுடன்(are justified on the basis of protecting human well-being.) அவனுக்கு எதிரான வாதங்களை தடுப்பதற்கும் இது உதவுகின்றது.
குறிப்பாக சூழல் மையவாதிகளினால் முன்வைக்கப்படும் சுற்றுச்சூழல் சட்டங்களில் மனித வரம்பை தடுக்கும் அல்லது அவற்றினை நிர்ணயிக்கும் சட்டங்களுக்கு இது மாற்று திட்டங்களை முன்வைக்கின்றது எடுத்துக்காட்டாக கியாட்டோ பிரகடனத்தின் போது பல்வேறு வல்லரசு நாடுகள் அதிலிருந்து விலகியமையை இங்கு சுட்டிக்காட்ட முடியும். இவற்றினால் சாதக பாதக விளைவுகள் இரண்டும் ஏற்படும் என்பது சுட்டிக்காட்ட கூடிய விடயமாகும்
நிலைப்பேன் அபிவிருத்தியினை (Encourages Sustainable Development)அடிப்படையாக கொண்டு,அபிவிருத்தி திட்டங்களை ஊக்குவிக்கின்றது.மனிதர்களின் நீண்ட கால வளர்சியிணையும் உயிர் வாழ்க்கைக்கு ஏதுவான காரணிகளையும் நிர்ணயிக்கும் தன்மையில் மானிட மையவாத தன்மை முக்கியத்துவம் பெறுகிறது. நிகழ் கால வளப் பாவனையினை பூர்த்தி செய்வதுடன் எதிர்கால மனித வளப் பாவனையை வரையறுக்கும் பண்புகளையும் இது ஊக்குவிக்கிறது.
மானிட மையவாதக் கொள்கை மனித வளர்ச்சிக்கு வழிவகுத்தாலும், இயற்கை சமநிலையை புறக்கணிக்கும் அபாயம் உள்ளது. அதனால், இன்றைய புவியியல் ஆய்வுகள் சுற்றுச்சூழல் மையவாதம் (Ecocentrism) மற்றும் நிலைப்பேன் வளர்ச்சி (Sustainable Development) போன்ற சமநிலை அணுகுமுறைகளை அதிகமாக வலியுறுத்துகின்றன.
நவீன புவியியல் அறிஞர்கள் மானிட மையவாத கொள்கையின் பாதிப்புகளை சுட்டிக்காட்டி சுற்றுச்சூழல் மையவாதம் மற்றும் நிலைத்த வளர்ச்சியின் தேவையை வலியுறுத்துகின்றனர்.
முடிவுரை
புவியியல் பரப்பில் மானிட மையவாதமானது தவிர்க்க முடியாத கோட்பாடாக பரிணாமம் அடைந்துள்ளது.இந்தக் கொள்கையின்படிட உலகின் வளங்கள் அனைத்தும் மனித வளர்ச்சி, தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்கின்றது.
இருப்பினும், இன்று அதிகமான மனித தலையீடு சுற்றுச்சூழல் சேதம் மற்றும் உயிரின இழப்பிற்கு வழிவகுக்கும் போன்ற எதிர் கொள்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன.
ஒரு சாரார் இயற்கையை மனிதன் கட்டுப்படுத்த முடியாது இயற்கைக்கு பணிந்தே தனது வாழ்வை நடத்த வேண்டும் என ஆணித்தனமாக கூறுகின்றனர்.
மானிட மையவாதக் கொள்கை மனித வளர்ச்சிக்கு வழிவகுத்தாலும், இயற்கை சமநிலையை புறக்கணிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மனித நடத்தைகளை முற்றாக கட்டுப்படுத்தினால் அதுவும் பாரிய விளைவுகளை தோற்றுவிக்க கூடும் என்பதும் இன்று நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது ஆகவே புவியியல் கோட்பாடுகளிலும் அபிவிருத்தி திட்டங்களிலும் மானிட மைய வாதத்தின் பொருத்தப்பாட்டினை அறிந்து அதனை செயற்படுத்துவதே சாலச் சிறந்ததாகும்.




கருத்துரையிடுக