உலகில் மாறிவரும் நிலத்தோற்றப் பாங்குகள் |The Changing Global Landscape
புவியானது
திடமான அல்லது உறுதியான(Solid or firm) பாறைகள் (Mountains), மலைகள்(Mountains),
பள்ளத்தாக்குகள்(Valleys), நதிகள்(Rivers),
ஏரிகள்(Lakes), பனி மலைகள்(Snow), பாலைவனங்கள்(Deserts), கடற்கரைகள்(Beaches) போன்ற புவியியல்
அம்சங்களைக் கொண்டு அதன் மூலமாக தனது நிலத்தோற்ற பாங்கினை வடிவமைத்துள்ளது.
அத்தோடு நிலமானது புறவிசை கருவிகளான (External force )
- காற்று (Wind)
- தரைக்கீழ் நீர் (Groundwater)
- பனி (Snow)
- ஓடும் நீர் (Water) போன்றவற்றினால் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு அதன் ஊடே பல புதிய நிலத்தோற்றங்கள் உருவாக்கமைடைவதனை அவதானிக்கலாம்.
கடந்த பல வருடங்களாக புவியின் நிலத்தோற்றம் படிப்படியாக மாறி வந்தாலும், 20ஆம் நூற்றாண்டுக்குப் பின் மனிதச் செயற்பாடுகள்(Human activities), தொழில்நுட்ப வளர்ச்சி(technological development), காலநிலை மாற்றங்கள்(climate change) போன்ற காரணிகளினால் இந்த மாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பௌதீக செயன்முறையால்(Physical process) உருவாகியிருக்கின்ற புவிப் பரப்பானது பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கைக்கும் புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கும் காரணமாகின்றது.
இவை சூழலியல் நிலத்தோற்றம் (Ecology Landscape) என்றவொரு புதிய நிலத்தோற்றத்தினை உருவாக்குவதற்கும் வழிவகுத்திருக்கின்றது.
பின்னராக உயிரின வாழ்க்கையில் மனிதனும் ஒரு பகுதியாக அமைத்துவிடுகின்றான். மனிதனின் இவ்வமைவானது, புவிமேற்பரப்பில் பண்பாட்டுச் சார் நிலத்தோற்றங்களின்(Cultural landscapes) உருவாக்கத்திற்கும் வழிவகுத்து விடுகின்றது.
இத்தகைய தன்மையில் பௌதீக, சூழலியல்
மற்றும் பண்பாடுச் சார் நிலத்தோற்றங்களின்(Physical, ecological and cultural
landscapes) உருவாக்கம் புவியில் அமைந்திருக்கின்ற அதேவேளை, இவை காலத்திற்குக் காலம்
இயற்கையாக மாற்றமுற்றும், மானிட நடவடிக்கையினால் மாற்றப்பட்டும் வருகின்றமையை அறிய
முடிகின்றது.
அதனடிப்படையில் உலக நிலத்தோற்றங்களின் உருவாக்கத்தில்
- பௌதீக செயன்முறைகள் மற்றும்
- மானிட காரணிகள் பங்கு கொள்கின்றமை தெளிவாகின்றது.நிலத்தோற்ற உருவாக்க விருத்தியில் பௌதீக செயன்முறையின் பங்களிப்பினை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
நிலத்தோற்ற உருவாக்கத்தில் பௌதீக காரணிகள். The role of Nature in
landscape development
புவியின் நிலத்தோற்ற உருவாக்கத்திலும் அதன் விருத்தியிலும் பங்களிப்பு செய்கின்ற காரணியாக இயற்கை செயன்முறைகள் விளக்குகின்றன. அத்தகைய இயற்கை செயன்முறைகளாக, பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
புவிவெளியுருவவியல் (Geomorphology)
நிலத்தோற்ற உருவாக்கத்தில் புவிவெளியுருவவியலே பிரதான கர்த்தாவாக காணப்படுகின்றது.
புவிவெளியுருவியலின் அமைப்பானது மிக நீண்ட கால அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற ஒன்றாகும். (Ruhe, 1975) அதேவேளை புவிவெளியுருவவியல் உருவாக்கத்தில் காலநிலையும் பங்குக் கொள்கின்றது. எனவேதான் புவிவெளியுருவியலை காலநிலையுடன் தொடர்புப்படுத்தி அவதானிக்க வேண்டியுள்ளது.
நிலவுருவங்களும் அவற்றின் உருவாக்க காரணிகளும்.
மிகவும் முக்கியமான 4 செயன்முறைகள் புவிமேற்பரப்பினுடைய இயற்கை புவிவெளியுருவவியல் அம்சங்களை(Geomorphological features) உருவாக்குகின்றன. அதனடிப்படையில்.
01.அகவிசைகளின் தொழிற்பாடு ( Internal Forces)
அகவிசைகளின் தொழிற்பாடு (Plate Tectonics) தகட்டோட்டசைவுக்கும்(Plate Tectonics and Continental Drift), புவிமேற்பரப்பில் மடிப்பு மலைகள் உருவாக்குவதற்கும், குறைகள் மற்றும் எரிமலைகள் தோற்றுவிப்புக்கும் காரணமாக அமைகின்றது.
நிலநடுக்க செயற்பாடுகளும் அதனை தொடர்ந்து இடம்பெறும் புவி வெளி உருவவியல் மாற்றங்களும் நிலத்தோற்ற உருவாக்கத்திற்கும் நிலத் தோற்றங்களை மாற்றியமைப்பதிலும் செல்வாக்கு செலுத்துகின்றன.
உலகளாவிய ரீதியில் பல்வேறு எடுத்துக்காட்டுகளை இதற்காக நாம் முன் வைக்கலாம் ஆசிய அமெரிக்க பகுதிகளில் புவி நடுக்கங்களால் புவி மேற்பரப்பிலும் சமுத்திர பரப்பிலும் பல்வேறு வகையான நிலத்தோற்ற மாறுப்பாடுகள் நிகழ்ந்துள்ளன.
எரிமலை வெடிப்புகள் புதிய தீவுகளையும் எரிமலை செயற்பாட்டு மலைகளையும் உருவாக்குகின்றன பசிபிக் பெருங்கடலில் பல உதாரணங்கள் உள்ளன. ஐஸ்லாந்து மற்றும் ஹவாய் தீவுகள் எரிமலைச் செயல்களால் உருவானவை குறிப்பிடத்தக்கது.
02.அரித்தல் (Erosion)
அரித்தல் (Erosion) செயற்பாடுகள் நிலத் தோற்றங்கள் உருவாக்கத்தில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன இங்கு அரித்தல் (Erosion) என்னும் போது
- கடலரிப்பு
- காற்றரிப்பு
- ஆற்றரிப்பு ஆகிய வகையில் அரித்தல் கருவிகள் காணப்படுகின்றன.
இவை பாலைவன பகுதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும், ஆற்றின் போக்கிலும் தனது அரைத்தல் கருவிகளைக் கொண்டு நிலத் தோற்றங்களை உருவாக்குகின்றன அந்தந்த பகுதிகளில் உருவாக்க பெரும் நிலத் தோற்றங்கள் பல்வேறு வகையான பெயர்களின் மூலம் அழைக்கப்படுகின்றன.
![]() |
கடலரிப்பு |
03.படிதல் (Lapping)
அரிப்பு கருவிகளான காற்று ,நீர் ,பனி போன்றவை மூலம் குறிப்பிட்ட பகுதியிலிருந்து அரிக்கப்பட்ட பருப் பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் படிய விடுவதன் மூலம் புதிய நிலத்தோற்றங்கள் உருவாக்கமடைகின்றன.
இவை கடற்கரை பிராந்தியங்கள் ,ஆற்றுப் படுக்கைகள் மற்றும் பாலைவனப் பகுதிகள் போன்றவற்றில் படிய விடப்படுகின்றன.
படியும் பொருட்களின் அமைப்புக்கேற்ற வகையில் அந்நிலவுருவங்கள் பெயர் கொள்ளப்படுகின்றன. இத்தகைய படிதல் மூலம் உலகளாவிய பகுதிகளில் பல புதிய நிலத்தோற்றங்கள் உருவாக்கம் பெற்றுள்ளன.
04.பனியரிப்பு(Periglacial Processes & Landforms)
புவிப் பரப்பில் பனியரிப்பு(Periglacial Processes &
Landforms) செயற்பாடுகள் வேறுபட்ட நிலத்தோற்றங்களை உருவாக்குவதில்
செல்வாக்கு செலுத்துகின்றன.
பனிக்கட்டிகளும் அவற்றுடன் இணைந்த பனியரிப்பு கருவிகளின் செயல் முறையும் இந்நிலத்தோற்ற உருவாக்கத்திற்கு காரணமாகின்றன. இத்தகைய நில உருவங்களை புவியின் முனைவுப் பகுதிகளில் நாம் அதிகமாக அவதானிக்க முடியும்.அத்துடன் கீழ்வரும் நிலவுருவங்களை இங்கு காணமுடியும்.
1. வட்டக்குகை
2. வட்டக்குகை
ஏரி
3. கூர்நுனி
உச்சி
4. கூம்பகச்
சிகரம்
5. U வடிவப்பள்ளத்தாக்கு
6. தொங்குபள்ளத்தாக்கு
7. செம்மறியுருப்பாறை
நிலத்தோற்ற உருவாக்கத்தில் காலநிலையின் பங்களிப்பு (The contribution of climate in the formation of landforms)
நிலத்தோற்றத்தினை அபிவிருத்தி செய்வதில் மாறுப்பட்ட காலநிலைக்கு கீழான புவிவெளியுருவவியல் செயன்முறைகள் பங்களிப்பு செய்கின்றன. அவற்றினை பின்வருமாறு நோக்கலாம்.
![]() |
| Climate Zone |
பூமத்தியகோட்டு புவிவெளியுருவவியல் (Equatorial Geomorphology)
பூ மத்தியக்கோட்டு காலநிலையானது, அந்த பிரதேசத்தினுடைய நிலவுருவத்தில் தாக்கத்தினை செலுத்துகின்றது. இங்கு வெப்பநிலையானது, எப்போதும் குறையாத வகையிலும் இரசாயன மாற்றம் அதிகளவு நடக்கின்ற பகுதியாகவும் பாறைகள் அதிகளவு வானிலையாலழிதலுக்கு உட்படுகின்ற வகையிலும் அமைந்துள்ளன.
இங்கு மார்ச் 21 (March 21) மற்றும் செப்டெம்பர் (September 21) காலப்பகுதியிலேயே சூரிய வெப்பம் அதிகரிக்கின்ற காலப்பகுதியாக கருதப்படுகின்றது. இந்த காலநிலையானது, இப்பிரதேசத்திலுள்ள தாவர போர்வைகளின் செரிவை அதிகரிக்கச் செய்துள்ளது. இத்தாவர போர்வையானது வண்டல் படிந்த பாறைகளை மூடியதாக காணப்படுகின்றது.
அயன காலநிலையில் புவிவெளியுருவவியல் (Geomorphology in Tropical Climates)
அயன வலய காலநிலையானது பூமத்திய ரேகைக்கு தெற்கே 23.5° மற்றும் வடக்கே 23.5° இடையே அமைந்துள்ளது.இருப்பினும் வடக்கு தெற்கு 23½ பாகையில் அமைந்த காலநிலையின் புவிவெளியுருவவியல் தன்மையே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அயனவலயத்தினுடைய நிலவுருவங்களின் தோற்றத்தில் பின்வரும் முக்கிய இரண்டு காலநிலை அம்சங்கள் பங்கு கொள்கின்றன.
1.வரண்ட காலநிலை
2.மழைவீழ்ச்சி
1.வரண்ட காலநிலை – தொடர்ச்சியாக அதிகரிக்கின்ற வரண்ட காலநிலையை இங்கு காணலாம். இதனால் இக்காலநிலையுள்ள அயன பிரதேசங்களில் இருக்கின்ற காடுகள் திறந்த அமைப்பில் காணப்படும். மேலும் மண் போர்வை பாதுகாக்கப்படுவது குறைவதோடு, நீரரிப்பு செயன்முறை குறைந்து காணப்படும்.
2.மழை – குறிப்பிட்ட சில காலப்பகுதியில் மாத்திரம் மழைவீழ்ச்சியின் தன்மை காணப்படும். இந்த மழையானது, அரித்தல் செயன்முறைக்கு உந்து சக்தியாக காணப்படுகின்றது. அத்தோடு மழைகாலத்தின் போது கழுவு நீரானது மேற்பரப்பின் மீது செல்வதோடு இவை 30% அல்லது 50% வரை மண்ணரித்தல் செயன்முறையை செய்விக்கின்றது. இவ்வாறான அரித்தல் செயன்முறையானது அப்பிரதேசத்திலுள்ள மேற்பரப்பு தரையை ஆழப்படுத்துவதோடு தாழ்வான இடங்களில் அடையல்களை படியவைக்கின்றது.
பாலைவனப் புவிவெளியுருவவியல் | Desert landforms
புவியில் மிகவும் வேறுப்பட்ட இடமாக பாலைவனம் காணப்படுகின்றது. தாவர போர்வை மிகவும் குறைந்த வகையிலும் குறைந்த ஈரப்பதனை கொண்டதாகவும் மிக அதிக வெப்பநிலையினையும் கொண்டு காணப்படுகின்றது.
பாலைவனப் பிரதேசத்தின் நிலத்தோற்றமானது பல்வேறு அம்சங்களுடன் வேறுப்பட்டு காணப்படுகின்றது.
- மணல் பாலைவனம் (Sandy Desert),
- பாறைகள் நிறைந்த பாலைவனம் (Rocky Desert)
- குளிர் பாலைவனம் (Cold Desert)
- சமதரையான பாலைவனம் (Flat Deserts)
- மலை பாலைவனம் (Mountain Deserts)
![]() |
| பாலைவனப் புவிவெளியுருவவியல் | Desert landforms |
- பாலைவனத்தினுடைய மிகவும் முக்கியமான தனிப்பட்ட வித்தியாசங்களில் ஒன்றாக காணப்படுவது உப்பு ஏரி அல்லது மட்டமான ஏரியாகும். இது அடிக்கடி கண் கூசும்படி பிரகாசமானதாக காணப்படுகின்றது.
- மற்றொரு பாலைவனப் பகுதி காற்றரிப்பினால் உட்குழிவுள்ள மணல் பாறைகளையும் தோற்றுவிக்கின்றது. எடுத்துக்காட்டாக தேன்கூட்டுப்பாறையை குறிப்பிடலாம்.
- பாலைவனப் பிரதேசத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக பாலைவனச்சோலை அல்லது
பாலைவனத்தின் பசுந்தரை அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பொதுவாக
துண்டுகள் (Patches) போன்ற
அமைப்பில் காணப்படுவதோடு. இவை ஒன்றில் ஒன்று நடைப்பாதைகள் (Corridors) மூலம் தொடர்பை ஏற்படுத்துகின்றன.
மெடிட்டேரியன் காலநிலையின் புவிவெளியுருவவியல் (Geomorphology in the Mediterranean Climate)
மெடிட்டேரியன் (Mediterranean) வகையான காலநிலை தெற்கு கலிப்போர்னியா (Southern California), தென்மேற்கு அவுஸ்த்திரேலியா(South West Australia), மற்றும் தென் ஆப்பிரிக்கா(South Africa) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
நீரரிப்பின் செயன்முறையானது குறித்த நிலத்தோற்றத்தில் அதிகரித்து காணப்படுகின்றது. மறுபுறத்தில் கணியங்களின் உடைவால் நிலத்தினை வளமாக்கும் தாவர மக்குகள் உருவாகுகின்றன. மண் உருவாக்கம் குறைந்த வகையில் காணப்படுகின்றது.
மிதமண்டல வலயத்தினுடைய புவிவெளியுருவவியல் (Geomorphology of
Temperate Zones)
இங்கு கோடைக்காலமே மழை நிறைந்த காலமாக விளங்குகின்றது. இந்த காலநிலைக்குள்
உள்ளடங்கும் நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கியம் பெறுகின்றன.
சில மிதமண்டல பிரதேசங்கள் தொடர் மற்றும் தாழ்வான நிலப்பரப்பானது வேறுப்பட்ட
அடையற் படிவுகளை கொண்டிருக்கின்றது. அத்தோடு சமதரையான நிலத்தோற்ற
அமைப்புடையதாகவும் இவை தாவர போர்வையினால் மூடப்பட்டதாகவும் காணப்படுகின்றது.
மேலும் நிலத்தோற்றத்தின் மேற்பரப்பானது, அதிகளவு அமிலத்தன்மை குறைந்த வளமுடையதாகவும் காணப்படுகின்றது. இதனை வாசிங்டன்
(Washington) ஆகிய பகுதிகளில் காணலாம். இவ்வாறான காலநிலை பிரதேசங்களோடு,
குளிர்வலய பிரதேசமும் (Cold Regions) புவிவெளியுருவவியலுடன்
இணைந்து நிலவுருவங்களை தோற்றுவிக்கின்றன.
இதனடிப்படையில் நிலத்தோற்ற உருவாக்கத்தில் புவிவெளியுருவவியல் காரணிகளான, நிலவுருவங்களும் அதனுடைய தாக்கங்களும் (Lands
forms and their effects) வண்டல்
படிந்த பாறை, காலநிலை
மற்றும்
சமநிலையிலுள்ள விசைகளின் செயற்பாடுகளும் (Bedrock,
Climate, and Static Processes), மாறுப்பட்ட காலநிலைக்கு கீழான புவிவெளியுருவவியல் செயன்முறைகள் (Geomorphology
Process under Different Climates.) போன்ற காரணிகள் முக்கியத்துவம் பெறுவதை அடையாளப்படுத்த முடிகின்றது.
மானிடச் செயற்பாடுகளும் நிலத்தோற்ற மாற்றங்களும்.
இன்றைய நாட்களில் மானிட நடவடிக்கைகள் நிலத்தோற்றத்தில் மிக வேகமான மற்றும் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன,பின்வரும் காரணிகள் அதற்கு ஏதுவாக அமைகின்றன.
- நகரமயமாதல் (Urbanization)
- தொழில் புரட்சி(Industrial Revolution)
- வன அழிப்பு(Deforestation)
- நகரமயமாதல் | Urbanization
- நிலத்தடி நீரின் அதிகப் பயன்பாடு | Overuse of groundwater
- சுரங்கத் தொழில் | Mining
- அணைக்கட்டமைப்பு | Dam construction
- விவசாய விரிவாக்கம் | Agricultural expansion
- தொழில்நுட்ப விருத்தி | Technological development
மேற்போன்ற மானிட காரணிகளின் விளைவாக மண் அரிப்பு, இயற்கை நீர்த் திசைகள் மாற்றம், புதுப் பள்ளத்தாக்குகள் உருவாகுதல் போன்ற மாற்றங்கள் இடம்பெற்று நிலத்தோற்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.





கருத்துரையிடுக