படவரைகலையின் வரலாறு| History Of Cartography
படவரைகலையின்
தோற்றமானது வரலாற்று காலகட்டத்திற்கும்
முன்னயதாகும். எழுத்துக்கள் தோன்றிய காலத்திற்கு முன்னரே தேசப்படங்கள்(Maps) வரையப்பட தொடங்கியுள்ளன. ஆதிகாலத்தில் எழுதக் கற்றுக்கொள்ளாத மக்களும் தேசப்படங்களை வரையும் திறன் பெற்றிருந்தார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.
ஆரம்ப காலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட படவரைகலை(Cartography) காலத்துக்கு காலம் விருத்தியுற்றுள்ளது. படவரைகலை வளர்ச்சியினை காலகட்ட அடிப்படையில் நோக்கலாம். ஒவ்வொரு கால சூழ்நிலைகளுக்கும் ஏற்ப படவரைகலை வளர்ச்சியுற்றுள்ளது. அதனை பின்வருமாறு அடையாளப்படுத்த முடியும்.
•கிரேக்க காலத்திற்கு முன்னைய காலம் (கி.மு 09க்கு
முன்)
• கிரேக்கர் காலம் (கி.மு 09 – கி.மு 02)
•உரோமர் காலம். (கி.மு 2 – கி.பி 02)
•மத்திய காலம். (கி.பி 03 – கி.பி15)
•இடைக்காலம் (கி.பி 15 – கி.பி18)
•19
ஆம் நூற்றாண்டு.
•20 ஆம் நூற்றாண்டு.
இக்காலங்களினை இனி தனித்தனியாக நோக்குவோம்.
கிரேக்க காலத்திற்கு முன்னைய காலம்
இக்காலத்தில் ஒரு
நாட்டவரிடம் குறிப்பாக ஓரிடத்திற்குச் செல்வதற்கானப் பாதையைக் கேட்பின் ஒரு கோல் கொண்டு
தரைமீது வீதியின் வெளியுருவைக் கீறியும், சிப்பி, சோகி ஆகியவற்றைக் கொண்டு
இடங்களைக் குறித்துக் காட்டியும் வந்துள்ளனர்.
படவரைகலையின்
பழைமை வாய்ந்த காலமாக இக் காலம் கொள்ளப்படுகின்றது.
இது எக்காலத்தில் உருவானது என்பது தெளிவாக கூறமுடியாதுள்ளது. காரணம் புவியியலில் ஆரம்ப காலமாக கொள்ளப்படுவது கிரேக்க காலமே ஆகும். இக்காலத்திலே படவரைகலை தொழிநுட்ப பயன்பாட்டிற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இருப்பினும் கிரேக்க காலத்திற்கு முன்னைய காலத்திலிருந்தே அதாவது 30000 வருடங்களுக்கு முன்பிருந்தே படவரைகலைத் தொழிநுட்பம் காணப்பட்டுள்ளது.
தீவினர் காட்கோட்டுப்படம்,
இவ்வாதி
காலத்தேசப்படங்களின் கருத்தைக், கவருவன மாசல் தீவினர் அமைத்த கோட்பாடுப்படங்களினாலும் தால ஓலைகளின் நடுத்தண்டுகளைக்
கொண்டு செய்யப்பட்ட சட்டமொன்றில் சிப்பிகள் பொருத்தப்பட்டு இக் கோட்ப்பாட்டுப்படங்கள் அமைக்கப்பட்டன. இப்படங்கள்
கப்பல் ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
எசுக்கிமோத் தேசப்படங்கள்
தேசப்படவாக்கத்தில் எசுக்கிமோவருக்குள்ள ஆற்றல் பற்றிய பல நூல்கள் கூறுகின்றன.
இவர்கள் பென்சிலைக் கொண்டு படம் வரைந்துள்ளனர். அட்சன்,
குடாவிலுள்ள பெலுச்சர் தீவுகளினை படமாக்கியமை சிறப்புக்குறியது.
அசுறெக்குத் தேசப்படங்கள்
இங்கு வரலாற்றைப் பதிவு செய்யும் படங்களாக வரைந்தனர். ஆறுகள், காடுகள், வயல்கள், கோவில்கள், ஆகியன இயற்கை அமைப்பைத் தழுவிய குறியீடுகளால் காட்டப்பட்டன. இத் தேசப்படங்கள் அலங்கரிப்பு
வேலைப்பாடு நிறைந்தவை.
பபிலோனிய தேசப்படங்களானவை
6000 B.C க்கு முன்னரான காலமாகும். 6200 B.C க்கு முன் மண்ணில் உருவங்கள் கீறப்பட்டன. மேலும் CLAY மூலம் கடங்கள் கீறப்பட்டன. பபிலோனியன் காலத்தில் கீறப்பட்ட படங்கள் ROAD MAPS காட்டப்பட்டுள்ளன.
மேலும் இக்காலத்தில் POINT, LINE, POLIGAN போன்றன பயன்படுத்தப்பட்டும் படங்கள் வரையப்பட்டுள்ளன. பபிலோனியத் தேசப்படங்கள் ஆவாட்டுப் பல்கலைக் கழகத்துக் செமிற்றிக்கு நூதன சாலையில் வைக்கப்பட்டுள்ள மிகப் பழைய படமானது.
![]() |
| பபிலோனிய தேசப்படங்கள |
இது காசூர் நகரத்தில் அகல்வில் கிடைக்கப்பட்டது. இதில் களிமண் தகடொன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் ஓர் ஆற்றுப் பள்ளத்தாக்கும் ஆற்றின் இருமருங்கிளும் மீன் செதிள் அமைப்பில் மலைகளும் காட்டப்பட்டிருந்தன. அந்த ஆறானது இயூபிறற்றிசு நதியாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அவ் நதி ஓர் ஏரியினுள்ளோ, கடலினுள்ளோ பாய்கின்றது. இக்காலத்தில் திசைகள் காட்டப்பட்ட படங்களும் வரையப்பட்டன.
கிரேக்கர் காலம். (கிமு. 09 – கிமு. 02 வரை)
பபிலோனியன்
காலத்திற்கு அடுத்த காலமாக இவ் கிரேக்க காலம்
கொள்ளப்படுகின்றது. கிரேக்கர்கள் படவரைகலைத்துறையில் முக்கியமானவர்கள். கிரேக்கர் காலத்திலிருந்தே படவரைகலையின் ஆராய்ச்சிகள் தொடங்கின எனலாம். கிரேக்கம் ஒரு பரந்த பிரதேசமாக
காணப்படகின்றது. இவர்களது சிந்தனைகள் மூன்று மரபுகளை அடிப்படையாக கொண்டமைந்தன.
·
TOPOGRAPHICAL
·
MATHAMATICAL
·
THEOLOGICAL.
இக்
காலத்தில் படவரைகலையின் முக்கியமானவர்களாக HOMER, ANAXIMANDER,
HECATOEUS, ALEXANDER THE GRATE போன்றோர் இதனுடன் தொடர்புபடுத்தி ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இடவிளக்கப்படங்களாக இவர்களது வெளிப்பாடு அமைந்தன.
ஹோமர்- HOMER
கி.மு 08 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த இவர் துருக்கியை சொந்த இடமாகக் கொண்டவர். படவரைகலையில் கிரேக்கர் காலத்தில் முக்கியமானவர் ஆவார்.
![]() |
| HOMER |
இவரது படத்தில் மூன்று விடயங்களைப் பிரதானமாகக் கொண்டு உலகினை நோக்கியுள்ளார். அதாவது உயிரினம், வளிமண்டலம், பாறைமண்டலம் என்பனவாகும். இவர் உலகப்படம் ஒன்றினை
வரைந்துள்ளதோடு 'Odyssey' எனும் நூலில் படவரைகலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர் உலகம் உருண்டையானதென
கொண்டு உலகை வரைந்தார்.
ஏரோதோசுதீனசு இன் உலகம்.
சைரீனைச் சேர்ந்த ஏரோத்தோசுதீனிசு கி.மு 276 – 196 வாழ்ந்தவராவார். அக்காலத்துச் சிறந்த கல்லிக்கூடமாக விளங்கிய அலச்சாந்திரிய நூல்நிலையத்தின் தலைவராவார்.
ஆதி எகிப்தியரால் மேற்கொள்ளப்பட்ட
நிலவளவீடுகளின் பயனாக சீனுக்கும் அலச்சாந்திரியாவுக்குமிடையேயுள்ள
தூரம் 5000 சிதேயடியா அறியப்பட்டன. இவர் ஏழு சமாந்தரங்களும்
ஏழு நெடுங்கோடுகளும் கொண்ட மனிதர்வாழ் உலகப்படம் ஒன்றையும் வரைந்தார். இலங்கையை இடமாறிக் குறித்து அதனை தாமிரபரணித் தீவாகக்
காட்டினார்.
ஹீரோடோடஸின் உலகம்-HERODOTUES’S WORLD
கிரேக்கப்
படவரைகலை வரலாற்றில் இவரும் ஒரு முக்கியமானவர் ஆவார்.
இவர் கி.மு 444 இல்
வாழ்ந்தவர். இவரது HERODOTUES’S
WORLD எனும் நூலில் படவரைகலைத் தொழிநுட்பப் பிரிவு பயன்படுத்தி விளக்கப்படம் ஒன்றினை வரைந்துள்ளார். இவர் சைபிரீயன், எகிப்து,
நைல்நதி, பபிலோன் போன்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரைந்துள்ளார்.
உரோமர்
காலம்.
உரோமர்களும் கிரேக்கர்களைப் போலவே பல புவியியல் சிந்தனைகளை உருவாக்கனர். இவர்களது காலமாக கி.மு 02 – கி.பி 02 வரையான காலமாகக் காணப்படுகின்றது. உரோமருக்கும் கிரேக்கருக்கும் இடையே காணப்பட்ட ஆழமான கருத்து வேறுபாடுகள் அவர்களின் தேசப்படங்களிலிருந்து தெளிவாகப் புலனாகின்றன.
அகலக்கோட்டு நெடுங்கோட்டு முறைமையையும், வானியல் அளவீடுகளையும், எறியப் பிரச்சினைகளையும் கொண்ட கணிதவியல் புவியியல்மீது உரோமரின் கவனஞ் செல்லவில்லை. இராணுவத்தேவைக்கும், நிருவாகத்தேவைக்கும், செயல்முறையற் பயன்படத்தக்க தேசப்படமொன்றே அவர்களுக்குத் தேவைப்பட்டது.
உரோமர் காலத்தில் முக்கியம் பெற்றவர்களாக ஸ்ட்ராபோ (STRABO), தொலமி(PTOLEMY), ஆகியோர்கள் காணப்படுகின்றனர். எனவே இவர்கள் படவரைகலைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றி தெளிவுபடுத்துகையில்.
ஸ்ட்ராபோ -STRABO
இவர் B.C 64 தொடக்கம் B.C 20 வரையான காலப்பகுதியில் வாழ்ந்தவராவார் இவர் 17 Volumes தொகுப்புக்களைக் கொண்ட Geography of the known world ஐ விளக்கினார். ஹொமர் காலம் முதல் பின்னர் வரை வாழ்ந்த அறிஞர்கள் பற்றியும் அவரது தொகுப்புக்களில் காணப்படுவதோடு சொந்தக்கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
இவரினால் வரையப்பட்ட உலகப்படம் எரித்தோஸின் படத்தை ஒத்தது. இவர் மக்களினதும், இடத்தினதும்
வரலாற்றினை படத்தின் மூலம் தெளிவுப்படுத்தினார். இவரது உலகப்படத்தில் உலகம் பெரும் கடல்ப்பரப்பில் சூழப்பட்டிருந்தது எனவும், அதன் கிழக்கெல்லையில் கங்கைக்
கடலில் கலந்தது எனவும் கஸ்பியன் கடலும், பாரசீக வலை குடாவும் உள்நுழைந்த கடல் பகுதிகள் எனவும்
கருதி படம் வரைந்தார்.
தொலமி- PTOLEMY
தொலமி 75A.D தொடக்கம் 153A.D வரையான காலப்பகுதியில் வாழ்ந்தவராவார். இவர் 07 Volumes களைக் கொண்ட Guide of Geography எனும் நூலை உருவாக்கினார். முதலாம் Vollum வானிலை சம்பந்தமாகவும், இரண்டாம் Vollum படவரைகலைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]() |
| claudius-ptolemy |
இவரது உலகப்படத்தில் இதற்கு முன்னர் குறிப்பிடப்படாத பல புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 8000 க்கும் அதிகமான இடங்கள் சேர்க்கப்பட்டு ATLAS ஒன்றை இவரது உலகப்படம் ஒத்திருந்தது.
அகல நெடுங்கோடுகள் குறிப்பிடப்பட்டன.
புவி உருண்டை வடிவு எனக் குறிப்பிட்டு உலகப்பட
வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்.
மிகவும் திருத்தமான உலகப்பட்த்தை அவரே வரைந்தார். இவர்
கிழக்காசியப் பிரதேசங்களை ஒழுங்கான முறையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அனுராதபுரம், மலைநாடு போன்ற பிரதேசங்கள் தொலமியின் படத்தில் இடம் பெற்றுள்ளன.
மத்திய காலம்
மத்திய
காலம் எனக் கொள்ளப்படுவது 03 A.D தொடக்கம் 15 A.D வரையான காலமாகும்
மத்திய காலப்பகுதியினை மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றனர்.
- கிறிஸ்தவயுகம்.( 300 தொடக்கம் 800 A.D)
- முஸ்லீம் யுகம் (600 தொடக்கம் 15 A.D)
- புதிய போக்கை ஏற்படுத்திய காலம் (நாடுகாண் பயனங்களை ஏற்படுத்திய காலம்)
கிறிஸ்தவ யுகம்
இக்
காலமானது 300A.Dதொடக்கம்
800 A.D ஐக் கொண்ட
காலமாகக் கொள்ளப்படுகின்றது. முழு ஐரோப்பாவும் கிறிஸ்தவ
ஆட்சியாளர்களுக்கு உட்பட்ட காலமாகும். உரோமர் காலப்பகுதியின் பின்னர் கிறிஸ்தவர்களின் ஆட்சி ஆரம்பமாகின்றது. கிறிஸ்தவ பாதிரிமார்கள் மூலம் பள்ளிகளின் மூலமே சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பைபிலை அடிப்படையாகக் கொண்டு உலக அறிவை அறிமுகப்படுத்தினார்கள்.
கிறிஸ்தவ கால தேசப்படம்,தமது மனதில் உதித்த கற்பனை உலகை ஓவியத்திறன் கொண்டும் குறியீட்டு விளக்கம் கொண்டும் காட்டமுயன்றனர். உரோமரின் 'ஓர்பிசுதெராரம்' எனும் வட்டவடிவ உலகப்படத்திலிருந்தே படத்திற்கு தேவையான புவியியல் விபரங்கள் முழுவதையும் பெற்றனர். எட்டாம் நூற்றாண்டில் பியற்றசு எனும் சிபானிய மதகுரு பழைய உரோமப் படத்தின் கவர்ச்சிமிக்க மாதிரி ஒன்றை அமைத்ததார்.
முஸ்லீம் காலம்
முஸ்லீம் காலம் எனக் கொள்ளப்படுவது கி.பி600 தொடக்கம் கி.பி15 வரை. இது கிரேக்க உரோமக் காலத்தைத் தொடர்ந்து வந்த திருப்பு முனைக் காலம் 610 இல் இஸ்லாம் வரைத் தொடங்கி 700 இல் ஈரான்,ஈராக், துருக்கி. என்றும் 800 இல் இந்தியா அதன்பின் இந்தோனேசியா என செல்கின்றது.
படவரைகலையில் முக்கியம் பெற மதத்தின் சில கடமைகள் ' ஹஜ்' அதாவது நாடுகாண் பயணத்திற்கு வழிவகுத்தது. ஹிப்லா எல்லா மக்களுக்கும் ஒரே திசை நோக்கி தொழுதல் புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. பாக்தாத் இக்காலத்தில் முக்கியம் பெற்றது.
AL-IDRISI என்பரால் உலகப்படம் இக்காலத்தில் வரையப்பட்டது. புவியின் சுற்றளவு, நீளம், அகலம் மீண்டும் கணிக்கப்பட்டது. ABICENNA தின்னல் செயல்கள்,
பௌதீகவில்சார் புத்தகங்களை வெளியிட்டார். இக்கால படங்களில் வர்த்தக நோக்கம் கொண்ட துறைமுகங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு
படங்கள் வரையப்பட்டன.
புதிய போக்கை ஏற்படுத்திய காலம்
ஐரோப்பா 14 ஆம் நூற்றாண்டின் பின் எழுச்சிப் பெற்றது. போர்த்துக்கல், ஸ்பெயின், ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகள் வியாபாரம், மதம்பரப்புதல், வர்த்தக நோக்கில் நாடுகாண் பயணத்தில் ஈடுபட்டு புதிய நாடுகளைக் கண்டுப்பபிடித்தனர்.
![]() |
| நாடுகாண் பயணத்தில் |
அதனை படவரைகலையின் துணைகொண்டு
படமாக்கினர். இதில் முக்கியமானவர்களாக வஸ்கொட ஹாமா( 1497 -1577), பிறீன்ஸ் கென்றி (1394 -1460) ஆகிய போர்த்துகேய மாலுமிகள்
ஆசியா, ஆபிரிக்கா நாடுகளுக்கு பலமுறை பயணம் செய்தனர் இதனூடாக கப்பல் பாதைகளை வரைந்தனர்.
இடைக்காலம்.
புவியியலின் வளர்ச்சி இக்காலத்திலேயே ஏற்பட்டது. இக் காலத்தில் யப்பான், அமெரிகா, அலாஸ்கா, சைபீரியா, நியூசிலாந்து, பல தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகப்படம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.
பெரும்பாலான நாடுகளின் உட்பகுதிகள்கூட அதாவது நதிகள், கட்டிடம். குடியிருப்பு, விவசாய நடவடிக்கைகள், தரைத் தோற்றம் என்பன கூட படமாக்கப்பட்டது. பாரியளவில்
புவியியல் தரவுகள் ஆய்வுசெய்யப்பட்டது.
இக்காலத்தில் முக்கியமானவர்களாக E.KANT (1724 -1804), CARL RITTER (1779 -1859), ALEXANTER VON,UMBALDT அடையாளப்படுத்தப்பட்டனர். நாடுகாண் பயணங்கள் பலவற்றில் ஈடுபட்டனர். இதனூடாக 1700 களில் அநேகமான நாடுகள் தெளிவான நிலையில் வரையப்பட்டுவிட்டன. அப்படம் 1800 களில் மேலும் தெளிவுப்படுத்தப்பட்டு வரையப்பட்டமை குறிக்கிடத்தக்கது.
இக் காலப்பகுதியில் இடவிளக்கவியல் படங்களும் (1700) புள்ளிவிபரப்படங்கள் (1800) தோற்றம் கண்டு அவை ஐரோப்பிய பிரபல்ய பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்பட்டன. 1750 களில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி காலத்தில் இடவிளக்கவியல் படங்கள் உருவாக்கப்பட்டன.
E. KANT –
CRITIDESE OF PURE 1781 இல் வெளியிட்டார். இவர் SPACE முக்கிம் கொடுத்தார்.
ALEXANTER VON HUMBALDT தாவரவியலுக்கு முக்கியம் கொடுத்தார். அமெரிக்காவில் அதிகமான
ஆய்வுகளில் ஈடுபட்டார். அந்தீஸ், ஹம்போல்ட் பகுதிகளில் அதிகம் ஆய்வில் ஈடுபட்டார்.







கருத்துரையிடுக