‘சூப்பர் எல் நினோ’ அல்லது ‘மெகா எல் நினோ’ என்றால் என்ன? | What is Super El Niño?
இன்றைய பூகோள காலநிலை மாற்றத்தில் அதிகளவான கவனத்தினை ஈர்த்துள்ள சொற்பதமாக எல் நினோ மற்றும் சூப்பர் எல் நினோ (El Niño’ and ‘Mega El Niño) காணப்படுகின்றன. இவை காலநிலை மாற்றத்தில் அதிகளவான மற்றும் தீவிர தாக்கத்தினை செலுத்துபவையாக உள்ளன, ஆகவே இப்பதிவில் எல் நினோ மற்றும் சூப்பர் எல் நினோ என்றால் என்ன அதனுடைய தாக்கம் மற்றும் அதற்கான பாதுகாப்பு முகாமைத்துவ நடவடிக்கைகள் என்ன என்பதனை ஆராயவுள்ளோம்.
சமுத்திர நீரோட்டத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது
சடுதியாக அதிகரிப்பதனை எல் நினோ குறித்து நிற்கின்றது. சாதாரண சீரான இடைவெளியின்றி
வேறுபட்ட கால அடிப்படையில் இது தோற்றுவிக்கப்படுகிறது.
இது இரண்டு வருடங்கள் முதல் ஏழு வருட இடைவெளிக்குள் தோற்றமடைந்து உலகின் வேறுபட்ட பிரதேசங்களில் பரவலடைந்து வேறுபட்ட காலநிலை சார்ந்த அசாதாரண நிலைமைகளை தோற்றுவிக்க கூடியதாக இது உள்ளது.
இது பசிபிக் பெருங்கடலின்(Pacific Ocean) மேற்பரப்பு நீரோட்டத்தில் இடம்பெறும் வெப்ப ஏற்றத்தாழ்வினை(Thermal imbalance) அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறுகின்றது. குறிப்பாக இக்கோடோர்(Ecuador), பேரு(Peru), சில்லி(Chile), ஸ்பெயின்(Spain), ஆஸ்திரேலியா(Australia) மற்றும் இந்தோனேஷியா(Indonesia) போன்ற நாடுகள் இதன் தாக்கத்தினை அதிகமாக அனுபவிக்கின்றன.
பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் தோற்றுவிக்கப்படும் இவ் வெப்பநிலை மாறுபாடானது டிசம்பர் மாத பகுதியில் குறிப்பாக கிறிஸ்மஸ் தினத்தினை ஒட்டி வருவதன் காரணமாக இந்நிகழ்வினை ஸ்பானிஷ் மொழியில் குழந்தை இயேசு(Baby Jesus), கிறிஸ்துவின் குழந்தை(Christ Child) மற்றும் சிறு பையன்(Little Boy) போன்ற சொற்பதங்களில் அழைக்கின்றனர்.,
சமுத்திர நீரின் உட்பரப்பு கூறுகள் மேற்பரப்பு
வளிமண்டள வெப்பத்தினை
உறிஞ்சி சேமிப்பதன்
ஊடாக சமுத்திர படுக்கை வெப்பநிலையினை பெற்று அதிக வெப்பத்தினை வெளியிடுகின்றது, இது சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையினை சடுதியாக அதிகரிக்க
உதவுகின்றது. இதன் காரணமாக சமுத்திர மேற்பரப்பில் வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டு அப்பிரதேச வளிமண்டல காற்றுகள் அசாதாரண வெப்பநிலையை பெற்று பரவலடைகின்றமையினை எல் நினோ-El Niño என்கின்றோம்.
இத்தகைய தீவிர வெப்பநிலையினை பெற்ற வளிமண்டல காற்றுகள்
சுமார் இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை குறித்த பிரதேசத்தில் நிலை கொண்டு
அப்பிரதேச காலநிலை மாறல் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
வளிமண்டல காற்றுகள்(Winds), சூறாவளி(cyclones), மொன்சூன்(monsoons) மற்றும் வியாபாரக்காற்றுகள்(trade winds).போன்றனவற்றில் இதன் தாக்கம் செல்வாக்கு செலுத்தும்.
எல் நினோ தோற்றம் பெரும் ஆண்டில் கிழக்கு பசிபிக்கின் சமுத்திர
பரப்பானது சாதாரண வெப்ப நிலையிலிருந்து தீவிர வெப்ப நிலைக்கு உயர்வடைகின்றது, இத்தகைய
உயர் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அமுக்கச் செயற்பாடுகள் கிழக்கு பசிபிக்கிலிருந்து
மேற்கு பசுபிக்கிற்கு நகர்கின்ற காற்றுக்கு நேர்மாறாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
திசை மாறுகிறது இத்தகைய மேற்பரப்பு நகர்விற்கு எல் நினோ தெற்கத்திய அலைவு ஊசலாட்டம்(El
Nino Southern Oscillation – ENSO) எனப்படுகின்றது.
'சூப்பர் எல் நினோ' அல்லது 'மெகா எல் நினோ'
"Super
El Nino" என்பது அதிகாரப்பூர்வமான வானிலை சொல் அல்ல, இதற்கான விளக்கமானது பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் கடல் நீர் வழக்கத்தை விட அசாதாரண விகிதத்தில் மிக தீவிரமாக அதிக வெப்பமடைவதை குறிக்கின்றது.
![]() |
| எல் நினோ |
சாதாரண எல் நினோ ஆண்டுகளில் சமுத்திர வெப்பநிலையானது 0.5°C முதல் 1.4°C வரை வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தும், ஆனால் சூப்பர் எல் நினோ அதைவிட மிகக் கடுமையான வெப்பத்தை உண்டாக்கும்
குறிப்பாக 'சூப்பர் எல் நினோ' காலப்பகுதியில் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையானது (Sea Surface Temperature) வழக்கத்தை விட 2°C க்கும் அதிகமாக உயரும் போது அது 'சூப்பர் எல் நினோ' அல்லது 'மெகா எல் நினோ' என்றழைக்கப்படுகிறது.
எல் நினோவின் வரலாற்றுப் பாதிப்புகள் | Historical Effects of El Niño on Climate
எல் நினோ மாற்றமானது உலகெங்கிலும் வெப்பநிலையை உயர்த்துவதோடு, பல நாடுகளில் கடுமையான வறட்சியையும், சில
நாடுகளில் அதீத மழையையும் தோற்றுவிக்கின்றது.
1877-1878 ஆம் ஆண்டுகளில்
நிலவிய 'எல் நினோ' தாக்கத்தினால்
கடுமையான வறட்சி
மற்றும் பஞ்சத்தால் உலக மக்கள் தொகையில்
சுமார் 4% பேர் உயிரிழந்தனர்.
1972 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் எல் நினோ தோற்றப்பட்டினால் ஈக்கோடோர் பேரு சிலி போன்ற நாடுகளின் கரையோர வெப்பநிலை அதிகரித்து மீன்பிடி முழுமையாக பாதிப்படைந்தது
1982 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் 'சூப்பர் எல் நினோ'
தோற்றுவிக்ககப்பட்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா,
பிலிப்பைன்ஸ் போன்றவற்றில் பெரும் வறட்சி, காட்டுத்தீ தோற்றுவிக்கப்பட்டு எழுபதிற்கும் மேற்பட்ட உயிரிழப்பும் பாரிய சொத்திழப்பும் நிகழ்ந்ததுடன் அதிகளவான கால்நடைகளும் உயிரிழந்தன.
ஆப்பிரிக்காவில் 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில்
நிலவிய மோசமான 'எல் நினோ' காரணமாக அதிகளவான வறட்சி ஏற்பட்டதுடன் சுமார் 80
மில்லியன் மக்கள் பாதிப்படைந்தனர்.
1990 மற்றும் 1995 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ஏற்பட்ட நீண்ட 'எல் நினோ'
காரணமாக மிகப்பெரும் வெள்ளம், புயல் மற்றும் காட்டுத் தீ போன்றன தோற்றுவிக்கப்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது.
உலகளாவிய ரீதியில் அதிகளவான பொருளாதார சேதத்தை 1997 மற்றும் 1998 ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்த நிகழ்வினை அடையாளப்படுத்த முடியும் இதனால் சுமார் 96 பில்லியன்அமெரிக்க டாலர் சேதம் நிகழ்ந்ததுடன் கடுமையான காட்டுத் தீயும் அதனுடன் பெருவெள்ளமும் ஏற்பட்டது.
தற்காலத்தில் மிகவும் வலுவான 'எல் நினோ'
பதிவாகிய ஆண்டாக 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியை குறிப்பிட முடியும் இது உலகளாவிய ரீதியில் வெப்பமான ஆண்டாக பதிவானதுடன் ஆப்பிரிக்காவில் 60 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்படைந்தனர் , இந்தியா போன்ற
நாடுகளிலும் பருவமழை பிந்தியதுடன் வறட்சி தோற்றுவிக்கப்பட்டது.
2026-ஆம் ஆண்டில் எல் நினோ ...
2026 ஆண்டு ஒரு வலுவான எல் நினோ ஆண்டாக இருக்கக்கூடும், இதனால் உலகெங்கும் பருவகால மாற்றங்கள் வழக்கத்திற்கு மாறாக இருக்க கூடும் என்று அறிஞர்கள் தமது கருத்தினை முன்வைக்கின்றனர். குறிப்பாக 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் மீண்டும் ஒரு எல்நினோ நிலை உருவாக வாய்ப்புள்ளதாக உலக வானிலையியல் அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
காலநிலை அறிஞரான ஜெக் ஹவுஸ்பாதர் (Zeke Hausfather) என்பவரின் எதிர்வுகூறலின் படி, 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய வெப்பநிலை 1.51 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எல் நினோ’ தாக்கங்கள் | Impacts of El Niño
தீவிர
'எல் நினோ காரணமாக தெற்கு மற்றும் தென்மேற்கு அமெரிக்க பகுதிகளில் தீவிர மழை பொழிவு ஏற்பட
வாய்ப்புள்ளதுடன் தென் கிழக்கு பகுதிகளில்
கடும் வரட்சியான வானிலை ஏற்படக்கூடும்.
இக்காலப்
பகுதியில் உலகளாவிய ரீதியில் வெப்பநிலை வழக்கத்தை விட தீவிரமாக
அதிகரிக்கக்கூடும்.
கடல்களில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்புகள், ஆவியாதல் விகிதங்களை அதிகரித்து, வளிமண்டல சுழற்சியை அசாதாரணமாகபாதிக்கின்றன.
வெப்ப அதிகரிப்புடன் தொடர்புடைய நோய்கள் தோற்றுவிக்கப்படும் தலைச்சுற்று, மயக்கம், குமட்டல், தலைவலி, இதயத்துடிப்பு அதிகரிப்பு மற்றும் வெப்ப மாரடைப்பு(Dizziness, fainting, nausea, headache, increased heart rate, and heat stroke) போன்றவை ஏற்படும்.
அதிகளவான
வெப்பம் காரணமாக சிறுநீர் கழிக்க வேண்டிய அளவு குறைவதுடன் சிறுநீர்
அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.
கடல்
மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கடல் சார் நில
உருவங்கள் பாதிப்படுவதுடன் மிக முக்கியமாக கடல்
வாழ் உயிரினங்களின் வளர்ச்சி பாதிப்படையும்.
கடல்
வாழ் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கம் பாதிப்படைவதனால் கடல் சார் தொழில்
மற்றும்
இதர தொழில்கள் அதிகளவு வீழ்ச்சியடையும்.
தீவிர
மற்றும் அசாதாரண வெப்ப உயர்வு வறட்சியினை தோற்றுவிக்கும்
குறிப்பாக ஆஸ்திரேலியா,பேரு,ஈக்வடோர் போன்றவற்றுடன
இந்தியா, இந்தோனேசியா , இலங்கை போன்ற தென்கிழக்காசிய நாடுகளும் ஆப்பிரிக்கா நாடுகளும் மழை குறைவடைந்து வரட்சியை
எதிர் நோக்குவதுடன் அப்பிரதேசங்களின் தாவர வளர்ச்சியும் பாதிப்படையும்.
பெளதீகச்சூழல் அதிகளவு பாதிப்படைதல் குறிப்பாக கடல்சார் வளங்களான பவளப்பாறைகள் மற்றும் முருங்கை கற்தொடர்கள் சேதமடைதல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடப்பகுதிகள் சேதப்படுத்தப்படல்.
எல் நினோ மற்றும் பேரிடர் தயார்நிலை | El Niño and Disaster Preparedness.
எல்
நினோ காலப்பகுதியில்
அதிக வறட்சி ஏற்படுவதால் முன்கூட்டியே குளங்கள், நீர் தேக்கங்கள் மற்றும் நீர் பரப்புகள்
என்பனவற்றினை முறையாக பராமரித்து நீர் சேமிப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட வேண்டும்.
நீரினை
சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்துவதுடன் பயன்படுத்திய பின் அதனை முறையாக பராமரித்தல்
வேண்டும்.
அதிக
நீர் தேவைப்பாடுடைய பயிர்களுக்கு பதிலாக வறட்சியை தாங்க கூடியதாகவும் நீண்ட கால பயன் தரு
தாவரங்களை பயிரிடல்.
எல்
நினோ தாக்கத்திலிருந்து
பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பயிர்களை
பயிரிடும் காலத்தை மாற்றியமைத்தல்.
நீரினை
சேமிக்கும் புதிய உத்திகளையும் சொட்டு நீர் பாசன முறைகளையும்
நடைமுறைப்படுத்துதல்.
அதிக
வெப்ப காலப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுப்பதற்காக
முன்கூட்டியே கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இடர் முகாமைத்துவ நுட்பங்களையும்
கையாளுதல்.
எல் நினோ நிலவும் காலப்பகுதியில் செயற்கையான முறையில் தீ வைத்தல் மற்றும் தீ மூட்டல் செயல்பாடுகளை தடை
செய்தல்.
சுகாதார முகாமைத்துவத்தினை உறுதிப்படுத்துதல் இதன் மூலம் அதிக வெப்பத்தினால் ஏற்படும் நீரிழப்பு மற்றும் ஹீட் ஸ்டாக் போன்றவற்றினை தடுத்துக் கொள்ள முடியும்.
உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகப்படியான தண்ணீரை அடிக்கடி எடுத்துக்கொள்வதுடன், இளநீர் மற்றும் பழச்சாறுகளை அருந்த வேண்டும்.
எல் நினோ தோற்றப்பாடு தொடர்பான முறையான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டும்.


கருத்துரையிடுக