ArcMap-ல் Shapefile உருவாக்குவது எப்படி? | How to Create a Shapefile in ArcMap

அறிமுகம்:ஆக்மெப்பில் எவ்வாறு Shapefile உருவாக்குவது- How to Create Shapefile in ArcMap

ArcMap மென்பொருள் ஒரு பிரதேசத்தினை வரைபடமாக்கிக் கொள்வதற்கும் ஏற்கனவே வரைபடமாக்கப்பட்ட படங்களையும்(Map), புகைப்படங்களையும்(Photos) மற்றும் மாதிரி படங்களையும் Digital மயமாக்கிக்கொள்வதற்கு பல்வேறு வகைப்பட்ட  வடிவகோப்பு மாதிரிகளை(Shapefile) எமக்கு வழங்குகின்றது.

ஒரு படத்தினை Digital மயமாக்கிக் கொள்வதற்கு Shapefile கள் மிக முக்கியமானவையாக உள்ளன. 

எமது தேவைக்கருதி புவியின் பௌதீக மற்றும் பண்பாட்டு (Physical and Cultural)  அம்சங்களுக்கு ஏற்ற Shapefile (வடிவ கோப்பு மாதிரிகள்வடிவங்களை தேர்வு செய்து கொண்டு அவற்றின் மூலம் எமது படங்களை டிஜிட்டல் மயமாக்கிக் கொள்ள முடியும்.

 Shapefile என்றால் என்ன? What is a Shapefile?

Shapefile  என்பது புவியியல் அம்சங்களான பௌதீக மற்றும் பண்பாட்டு (Physical and Cultural) அம்சங்கள் என்ன வடிவில்(Shape) அமைந்துள்ளன. என்பதனையும் அதன் இருப்பிடம் மற்றும் பண்பு கூறு தகவல்களை வழங்குவதற்கான பிரதான அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

எமது புவிப்பரப்பில் காணப்படும் பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்களுக்கு பல்வேறு வகையான குறியீட்டு வடிவங்களையும்(Symbolic patterns), நிறங்களையும்(Colors) பயன்படுத்தியே எமது வரைபடத்தை நாம் உருவாக்குகின்றோம்.அத்தகைய வடிவங்களை கணினி மயப்படுத்தி(Computerized) அதனை Digital மயமாக்கப்பட்ட வடிவங்களாக உருவாக்க Shapefile கள் பயன்படுத்தப்படுகின்றன.

புவியின் பிரதான வடிவவியல் அம்சங்கள் -Main Geometric Features of the Earth

புவியின் வடிவவியல் அம்சங்களை-(Geometric features) இரு பிரதான பகுதிகளாக வகைப்படுத்த முடியும் ,அவையாவன .

  1. பௌதீக அம்சங்கள்-Physical features
  2. பண்பாட்டு அம்சங்கள்-Cultural features என்பனவாகும்

பௌதீக அம்சங்கள்-Physical features

மனித தலையீடுகள் ஏதுமின்றி (Without any human intervention) தானாக உருவாக்கம் பெற்ற அனைத்து அம்சங்களும் பௌதீக அம்சங்களுக்குள் உள்ளடங்கும்.(Natural features on the Earth's surface​). 

  • இயற்கை தாவரங்கள்(Natural plants), 
  • நதிகள்(Rivers)
  • சமுத்திரங்கள்(Oceans)
  • காடுகள்(Forests)
  • பாறை (Rock)
  • மண்(Soil)
  • கனியங்கள்(Minerals)

போன்றவற்றை பௌதீக அம்சங்களுக்கு உதாரணமாக குறிப்பிட முடியும்.

பண்பாட்டு அம்சங்கள்-Cultural features

பண்பாட்டு அம்சங்கள் என்னும் போது மனித தலையீட்டுடனும்,மனித உதவியுடனும் உருவாக்கப்பட்டவைகள்(Man made-Created with human intervention and human assistance) ஆகும். இவை மனிதனின் தேவைகளுக்காக உருவாக்கம் பெற்றவையாகும். எடுத்துக்காட்டாக

  • குடியிருப்புகள்(Settlements)
  • வணக்கஸ்தலங்கள்(Temples) 
  • போக்குவரத்து பாதைகள்(Traffic Roads)
  • விவசாய நிலங்கள்(Agricultural lands)
  • கட்டடங்கள்(Buildings)  
  • அரச நிறுவனங்கள்(Government Institutions) 

போன்றவற்றினை பண்பாட்டு அம்சங்களுக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட முடியும்.

ArcMap இல் பயன்படும் Shapefile வடிவங்கள்-Shapefile formats used in ArcMap

இடவிளக்கவியல் அம்சங்கள் ஒவ்வொன்றும் அதன் வடிவத்திலும் பரப்பிலும்(Shape and Surface) வெவ்வேறு வடிவத்தினை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய வடிவங்களை கணணியில் வடிவங்களாகவும்,உருக்களாகவும் வெளிப்படுத்த ArcMap பின்வரும் பிரதான வடிவங்களை பரிந்துரைக்கின்றது.

இவை புவியியலில் வரைப்பட உருவாக்கத்தில் மிகவும் பொதுவானதாகவும் அதிக பயன்பாடுடையதாகவும் அமைந்துள்ளன.

  • Point-பொயிண்ட்

  • Polyline-பொலிலைன்

  • Polygon-பொலிகோன்

  • MultiPoint-மல்டிபாயிண்ட்

  • MultiPatch-மல்டிபேட்ச்

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.
Shapefile formats used in ArcMap

இத்தகைய அம்சங்கள் புவிசார் உருவவியல் உருவாக்கத்தில் மிகப் பிரதான அடிப்படையினை வழங்குகின்றன.

Point-பொயிண்ட்

வரைப்பட  விபரணப்படுத்தலில் புள்ளிகள்(Points)  மூலம்  குறித்து  காட்டப்படும்  அம்சங்களை  Point  மூலமாக  அடையாளப்படுத்த  முடியும்.

  • மக்கள் குடியிருப்புகள்(Settlements)
  • கட்டடங்கள்(Buildings)
  • வணக்கஸ்தலங்கள்(Temples) போன்றன புள்ளிகள் மூலமாக குறித்துக்காட்டப்படும்.அத்துடன் இங்கு சில பயிர்ச்செய்கை (Cultivation) அம்சங்களையும் Point மூலமாக குறித்துக் காட்டலாம்.

Polyline-பொலிலைன்

Polyline என்ற பியூச்சர் மூலமாக புவியியல் வரைபடத்தில் கோடுகள்(Line) மூலமாக காட்டப்படும் அம்சங்கள் எடுத்துக்காட்டப்படும்.
  • வீதி (Street )
  • போக்குவரத்து வலை பின்னல்(Transportation)
  • ஆறு (River)
  • நதி போக்குகள் (River trends )
  • அதிவேக நெடுஞ்சாலைகள்  (Expressway)
  • எல்லைகள்(Boundaries) போன்றவற்றை கோடுகள் மூலமாக காட்ட முடியும் இங்கு கோடுகளை வேறுப்படுத்திக் காட்டுவதற்காக வெவ்வேறு நிறக் குறியீட்டுகளை பயன்படுத்துவோம்.

Poligun-பொலிகோன்

பொலிகன் ArcMap இல் அனைத்து பக்கங்களும் சூழப்பட்ட அம்சங்களினை அடையாளம் இட்டு காட்டுவதற்கு பொலிகன்(Poligun) என்பதனை பயன்படுத்துகின்றோம்.
  • விவசாய நிலங்கள்(Agricultural lands)
  • நெற் காணிகள்(Paddy fields)
  • குளம்(Pond)
  • கடல் (Sea)
  • சமுத்திரப் பரப்புக்கள்(Ocean) போன்ற பரப்புக்களை இதன் மூலம் அடையாளப்படுத்த முடியும்.

ஆக்மெப்பில்  Shapefile உருவாக்குதல்- Create Shapefile in ArcMap

முதலாவதாக ArcMap மென்பொருளில் Catalog window பகுதியில் Connect to Folder என்ற பகுதியின் ஊடாக எம்முடைய Folder  இணைத்துக் கொள்ள வேண்டும் இது மிகவும் அடிப்படையான செயற்பாடு ஆகும்.

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.
 Connect to Folder

பின்னர் நாம் தேர்வு செய்த போல்டரில் Right Click செய்து New என்ற பகுதியை தேர்வு செய்து அதில் பின்வரும் பட்டியலில் Shapefile என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

  • Right Click--New--Shapefile

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.
Create Shapefile

இப்பகுதியிலேயேதான் நாம் எமது படத்தில் பயன்படுத்த வேண்டிய Shapefile வடிவங்களை தேர்வு செய்துக்கொள்ள முடியும்.

பின்னர் ஓபன் ஆகும் Create New Shapefile என்ற Window இல் 

  • Name 
  • Feature Type 

என்ற இரண்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும்.

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.

Polyline- Shapefile உருவாக்குதல்-Creating a polyline-shape file

இவற்றுள் முதலாவதாக நாம் எத்தகைய அம்சத்தினை தேர்வு செய்கிறோம் என்பதற்கு அமைய அதன் Name  வழங்க வேண்டும். 

எடுத்துக்காட்டாக Road ,Settlement அல்லது River ஆக எதனையோ தேவை கருத்தி தேர்வு செய்து கொள்ளலாம் இங்கு நான் பாதை என்பதனை தேர்வு செய்கிறேன் அதற்காக Name என்ற பகுதியில் Road_A என டைப் செய்து கொள்கிறேன்.

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.
Future type
 
நாம்   Name   என்ற   பகுதியில்   எத்தகைய   பௌதீக,   பண்பாட்டு   அம்சத்தினை   தேர்வு   செய்கின்றோமோ   அதற்கேற்ற   பேரினை   குறித்துக்   கொள்ள   வேண்டும்   பின்பு   நாம்   ஏலவே   குறிப்பிட்ட   தன்மைகளுக்கு   ஏற்ப   Future   type   தேர்வு   செய்ய   வேண்டும்   என்பதனை   தீர்மானம்   செய்துக்கொள்ள   வேண்டும்,

இங்கு    Road_A    என்பது    நேர்கோடாகவோ,வளைக்கோடாகவோ    அமைந்து    காணப்படும்    அந்த    தன்மைக்கேட்ப    நான்வ    Future    type    என்பதில்    Polyline    என்பதனை    தெரிவு    செய்துக்கொண்டுள்ளேன்.

Name,Feature Type என்பதனை தேர்வு செய்ததன் பின் மிக அடிப்படையான அம்சமான edit என்பதை Click செய்து நாம் எமது Shapefile க்கு கொடுக்க வேண்டிய Project Coordinate System மற்றும் Geography Coordinate System என்பதனை முறையாக வழங்க வேண்டும். 

என்னுடைய படம் இலங்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளமையினால் நான் இலங்கைக்கு மிகவும் பொருத்தமான கோர்டினட் சிஸ்டமான கந்தவெல ஸ்ரீலங்கா கிரிட்-Name: Kandawala_Sri_Lanka_Grid என்பதனை தேர்வு செய்துள்ளேன்.

 நீங்களும் உங்களது படத்திற்கு பொருத்தமான கோர்டினேட் சிஸ்டத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.பின் OK வழங்க வேண்டும்.

Unknown Coordinate System,points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.
project coordinate system

நாம் எமக்கு தேவையான மற்றும் விருப்பமான Shapefile களை உருவாக்கிக் கொள்ள முடிவதுடன் எம்மிடம் இருக்கும் Scan மற்றும் Georeferenced செய்யப்பட்ட படங்களில் உள்ளவற்றிற்கும் Shapefile வரைந்துக்கொள்ள முடியும். 

Shapefile ஐ வரைதல்

இப்பொழுது எமது Taple of Contents பகுதியில் உள்ள Layer பகுதியில் எம்மால் பெயரிடப்பட்ட Road_A என்பது காட்சிப்படுத்தப்படும்.

அத்துடன் Catalog பகுதியில் Shapefile என்ற Folder க்கு கீழாக Road_A என்ற Shapefile காட்சிப்படுத்தப்படும்.

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.

Drawing a Shapefile

Start Editing

இனி நமக்கான Shapefile  இயக்குவதற்கு Editor என்ற பகுதியை Click செய்து அதில் Start Editing என்பதனை தேர்வு செய்ய வேண்டும் அப்போது தான் எம்மால் Shapefile  இயக்க முடியும்.

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.

Create Future

பின்னர் நமக்கு Create Future என்ற பகுதி திறக்கப்படும்இதில் நாம் பெயரிட்ட பாதையின் பெயர் காட்சிப்படுத்தப்படும் அதனை தேர்வு செய்த பின் Construction Tool என்ற பகுதியில் Line என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.(நமது தேவைக்கேற்ப)

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.

நமக்குத் தேவையான பாதையை வரைவதற்கு முன்னர் Editor பாரில் Start Editing தெரிவு செய்து Work Place இல் எமக்கான பாதையினை வரைய வேண்டும். வரைந்து முடித்தவுடன் பின் Editor என்ற பகுதியில் சென்று Stop Editing கொடுக்க வேண்டும்.

points, lines, or polygons (areas),ArcGIS, ArcGIS Overview, Mapping, ArcGIS Pro, ArcGIS Enterprise, ArcGIS Online, spatial data Analysis,  Geographic features in a shapefile,location, geometry, and attribution of point, line, and polygon features.
Draw a Road

Save செய்தல்

அதன் பின்னர் நாம் முழுமையாக வரைந்த Shapefile ஐ Save செய்வதற்கான பகுதி திறக்கப்படும் அதில் Yes என்பதனை தேர்வு செய்து தாம் வரைந்த படத்தினை எமது Folder இல் சேமித்துக்கொள்ள வேண்டும்

Save  Create Future

இதனைப் போலவே நமக்குத் தேவையான ஏனைய அம்சங்களான,

  • Point
  • Polyline
  • Polygon
  • MultiPoint
  • MultiPatch

போன்றவற்றினையும் மேற்குறிப்பிட்ட படிமுறைகளை பின்பற்றி முறையாக செயற்படுத்துவதன் மூலமாக எமக்கு தேவையான அம்சங்களினை Shapefile களாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

Post by: Puvistudy

Post a Comment

புதியது பழையவை